எஸ்.எம். சார்ள்ஸ்

எஸ்.எம். சார்ள்ஸ்

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண  ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண  ஆளுநருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று மாலை சந்தித்தார்.

 

அதன் போது, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

 

அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

 

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர், ஆளுநரிடம் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன் !

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய ஆளுநராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முதல் தடவையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.