ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது – ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக சாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோக்கெர் டேர்க்கிற்கு அறிக்கை குறித்து கடிதமொன்றை எழுதியுள்ள அவர் அந்த கடிதத்தில் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணை எதுவும் இல்லாத நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை தேவையற்ற ஒரு தலைப்பட்சமான முயற்சி என  இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைப்பாட்டினை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என தெரிவித்துள்ள இலங்கை தூதுவர் இந்த அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டமைக்கான நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை தவறானது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக பக்கச்சார்பின்மை புறநிலை மற்றும் தேர்ந்துஎடுக்காமை ஆகிய கொள்கைகளின் அடிப்படைகளிற்கு இந்த அறிக்கை முரணாணது என் தெரிவித்துள்ளார் என விடயமறிந்த வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம்நல்லிணக்கத்திற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த அறிக்கை பக்கச்சார்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டது சுயமாக உருவாக்கப்பட்டது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் சாடியுள்ளார்.

இலங்கையின் ஆயுதமோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகிய தருணத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது எனது தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடுமையான குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்கள் – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டு !

உக்ரைன் – ரஷ்ய போரால் 19,000 பொதுமக்கள் பாதிப்பு !

உக்ரைனில் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து கிட்டத்தட்ட 19,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் 7,199 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,756 பேர் காயமடைந்தனர்.

கனரக பீரங்கிகளின் ஷெல் தாக்குதல்கள், பல ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் உட்பட வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதே நேரம இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் சர்வதேச அரசியலாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த நாடு, ரஷ்யாவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் எதையும் வழங்கும் திட்டமில்லை என மறுத்துள்ளது.

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐ.நாவுக்கு வலியுறுத்துகிறது சர்வதேச மன்னிப்புச் சபை !

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான தற்போதைய பொறுப்புக்கூறல் திட்டத்தை வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கு இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பொறிமுறைகளின் அவசியத்தை உணர்ந்து, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளைசர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.