கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

 

யாழ்ப்பாணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாழ் பல்கலைக்கழக திட்டமிடல் துறை விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் அறிவிக்கப்பட்டுள்ளார். கபிலன் ஏற்கனவே யாழ் மாநகரின் வடிகாலமைப்புத் தொடர்பில் ஆய்வுகளைச் செய்து வந்தவர். அவை தொடர்பில் முன்னைய அரசாங்கங்களிடம் அவற்றை சமர்ப்பித்தும் அவை கருத்திலெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திட்டமிடல் தொடர்பில் புலமை மிகுந்த ஒருவரை என்.பி.பி முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளமை சாலப் பொருத்தமானது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் வேட்பாளர் கபிலன், என்.பி.பியின் வேட்புமனுக்கள் யாழில் அனைத்து இடங்களிலும் எவ்வித விலக்கலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாங்கள் எங்களுடைய மக்களுக்காக எவ்வளவு பொறுப்புணர்வோடு இவற்றைத் தயாரித்துள்ளோம் என்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர் வடக்குக்கு அரசாங்கம் பெரும் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் நாங்கள் கிராமம் கிராமமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் காணிகள் விடுவிப்பு மற்றும் மக்களுக்கு வழங்கிய விரைவில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர் 

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர்

 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தையும் இன்றைய தினம் என்.பி.பி செலுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !

பா உ அர்ச்சுனாவுக்கும் சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற முடிவுக்கு வர அமைச்சர் சந்திரசேகரன் நிர்ப்பந்திக்கப்பட்டார். டிசம்பர் 26 நேற்று, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, இனிமேல் பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அமைச்சர் உங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் எம்.பி, வைத்தியர் அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு கொண்டு வாருங்கள் என குறிப்பிட்டு பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

கிளி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. வழமை போல கல்வித் தகமை உள்ளதா..?, நீங்கள் மக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி, எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள்? தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து, அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசாவை பா.உ அரச்சுனா பேச, தம்பி தம்பிராசாவும் எதிர்த்துப்பேசவே கூட்டம் அமைதியையிழந்ததது.

வலுவடையும் வடக்கு மீனவர்கள் பிரச்சினை -இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கிறார் கடற்தொழில் அமைச்சர்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது.

விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்கு கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கிறார். இதேநேரம், கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும் இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவிடம் பேசியதும் இல்லை அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சமும் முன்னெடுத்தது இல்லை. இந்தியா தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் –  இலங்கை தமிழருக்கு இந்தியா தான் உற்ற நண்பன் என கூறி இந்தியாவின் காலில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் பிரச்சினை பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில் கடந்த காலங்களில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இந்த தமிழ்தேசிய தரப்பு எந்த ஒத்துழைப்பையும் வழங்கியது கிடையாது. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் தமிழ்தேசிய தலைமைகள் ஒத்துழைப்பு வழக்கம்போவதில்லை என்பது கண்கூடு. இதேவேளை அமைச்சர் சந்திரசேகர் , அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ள நிலையில் இந்தியத்தூதுவருடனான இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.