‘கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா?” என்போர் பாலஸ்தீனியர்களைக் கொல்பவர்களிடம் நீதி கேட்கின்றனர் !
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியையும் பொறுப்புக் கூறலையும் வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? கொடுப்பனவை கொடுப்போம் என சொல்வது கொலையை மறைக்கவே, சர்வதேச நீதி கிடைக்குமா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாசாவில் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கின்ற இனப்படுகொலையை நிறுத்த முடியாத மற்றும் பாலஸ்தீன படுகொலை பங்காளர்களாகிய சர்வதேசத்திடம் ஈழத்தமிழர்கள் நீதி பெற்றுத் தரும்படி கோருவது அறிவீனம் என அவதானிகள் கூறுகின்றனர்.