கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணம்

கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வசதிகளை வழங்கிய ஆளுநர் செந்தில் தொண்டமான்!

பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டது.

Brandix ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து சுற்றறிக்கை!

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார் கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரையிலும், மழை பெய்யும் நாட்களில் முழு நாட்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இவ்விடயம் தொடர்பில் ஆராய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கில் இருந்து சிங்களவர்களை வெளியேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் முயற்சி..?

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களாக பௌத்த குருமார்கள் தன்னையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் குறை கூறி கொண்டு செயற்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்ளை கைப்பற்றினால் அது எந்த இனத்தவர்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

நாட்டில் மீண்டும் ஒருமுறை இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.