கீதா குமாரசிங்க

கீதா குமாரசிங்க

“காலி முகத்திடலில் உள்ள இளைஞர்களை சிலர், விற்று பிழைக்கின்றனர்.” – இளைஞர்களை எச்சரித்த அமைச்சர் கீதா குமாரசிங்க !

“கோட்டா கோ ஹோம்“ எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள் என போராட்டக்காரர்களுக்கு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

1971ல் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர் வீட செல்லவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் ஜேஆரை எதிர்த்தனர். அவரும் வீடு செல்லவில்லை. எனவே, கோட்டா கோ ஹோம் என்ற பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காலம் வரும்போது ஜனாதிபதி நிச்சயம் செல்வார். அவர் வீடு செல்ல வேண்டுமா என்பதை தேர்தல் தீர்மானிக்கப்படும். காலி முகத்திடலில் உள்ள இளைஞர்களை சிலர், விற்று பிழைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன்.” – ஆளுங்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க

எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று எரிபொருள் பிரச்சினை முழு இலங்கையையும் பாதித்துள்ளது. நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன். நான் ஓட்டுனரை விரைவாக செல்லச் சொல்கிறேன். அப்படியொரு நிலை உருவாகியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கசப்புடன் உள்ளனர். நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், விரக்திதான் மிச்சம் எனத் தெரிவித்துள்ளார்.