இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வரலாற்றில் ஒரு இனப்படுகொலையாளன் என பதிவுசெய்யப்படுவார் என கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அப்பாவி சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளை வீசுகின்றார் இதன் காரணமாக அவர் கதாநாயகனாக மாற முடியாது. என அவர் பதிவிட்டுள்ளார்.
மில்லியன் கணக்கில் யூதர்களை கொலை செய்த நாஜிகளுடன் இஸ்ரேலிய ஜனாதிபதியை ஒப்பிட்டுள்ள அவர் எந்த மதத்தினரையும் நீங்கள் கொலை செய்தாலும் இனப்படுகொலை இனப்படுகொலைதான் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொலம்பிய ஜனாதிபதியை இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் ஆதரவாளர் என குறிப்பிட்டிருந்தார்.