சி.வி.கே.சிவஞானம்

சி.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்கு – சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்காக செயற்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பாக கருத்துரைக்கும் போதும் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது

ஆனால் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் ஊடாக தற்போது காற்றுக் கூட வருகிறதோ தெரியவில்லை. அரசியல்வாதிகள் யாரும் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தொடர்பில் கதைத்ததாக இல்லை.

அண்மையில் நான் புதிதாக கடமையேற்ற ஆளுநரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளேன். எனவே குடிநீரை கொண்டு வருவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே நாங்கள் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தீர்மானத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தோம்.

அந்த கிடப்பில் கிடக்கின்ற அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்” தெரிவித்தார்.

வடக்கின் புதிய ஆளுநராக பதவியேற்றார் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் – வழங்கியுள்ள உறுதிமொழிகள் என்ன..?

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத்தர முயல்வேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் (22) உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று என்னை வாழ்த்துவதற்கு வருகைதந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத் தருமாறு கூறியிருக்கின்றார்கள். எனவே, அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி, அதற்கு தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பேன்.

இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்குமான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில், அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிக்கின்றேன்.

அதேபோல அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம் அவர்களால் மாகாண மக்களின் குறிப்பாக, யாழ். மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.

ஏற்கனவே, பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும், அதை முன்னெடுத்து செல்லும்படியும் கூறியிருக்கிறார். அது தொடர்பாகவும் நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியில் ஒரு பெரும் பிரச்சினையாக உணர்ந்திருக்கின்றேன். எனவே, அந்த பிரச்சினையை தீர்க்க நிச்சயமாக முக்கிய கவனம் எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

“கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” – சி.வி.கே சிவஞானம்

நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் “விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று (04.01.2021)) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவஞானம், கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்வது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட ஒன்றே மாகாண சபை முறைமை , மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.! – சி.வி.கே.சிவஞானம்

மத்தியில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதனாலேயே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் மாகாண சபைகளுக்கு கூட முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் கருத்துக்களை அரசாங்கம் கூட கணக்கில் எடுக்காது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று  (25.08.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை முறைமை என்பது ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட ஒன்று. தனியே அது வடக்கு கிழக்குக்கு மட்டுமன்று உருவாக்கப்படவில்லை.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்றே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் அந்த மாகாண சபை முறைமை கூட போதாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நாம் கூறி வருகின்றோம். ஏனெனில் மத்தியில் மட்டும் அதிகாரங்கள் இருத்தல் நாட்டுக்கு நல்லதல்ல நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்திற்கும்  நல்லது அல்ல.

மத்தியில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதனாலேயே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் மாகாண சபைகளை கூட முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற சரத் வீரசேகர என்பவர் படு இனவாதி. ஐநாவிற்கு பல தடவைகள் சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்ற கருத்தைக் கூறி வருபவர்.

கோட்டபாய அரசில் தற்போது அங்கம் வகிக்கின்ற சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரது கருத்துக்களை அரசாங்கம் கூட கணக்கில் எடுக்காது என்றே நான் கருதுகின்றேன்.

எனவே இவர்களின் விஷமத் தனமான கருத்துக்களை நாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை. மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே இந்த நாட்டில் மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் முழு அதிகாரங்களும் மத்தியில் குவிந்தால் ஏனைய இனத்தவர்களின் உரிமைகள் கேள்விக்குறியாகவே இருக்கும். எனவே சரத் வீரசேகர போன்றவர்களின் கருத்துக்கள் நாட்டின் ஐனநாயகதரதிற்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என்றார்.