ஜூலி சங்

ஜூலி சங்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மலையகத்திற்கு விஜயம் !

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அங்கு மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.

இன்று நான் மலையகத்தில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் இடையூறுகள் , சிறந்த வீடு கல்வி தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிவதற்காக அந்த பகுதி  குடும்பங்களைசந்தித்தேன் (இவர்களில் பலருக்கு 200 வருடகாலவரலாற்றை அந்தபகுதியுடன் தொடர்புள்ளது) என ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மகளிர் அமைப்புகளை சேர்ந்த சிறியளவு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தேன், அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சிகள் குறித்து தெரிவித்தார்கள் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

“இலங்கையர்களின் குரல்களை செவிமடுங்கள்.”- ஜூலி சங்

இலங்கையில் மற்றொரு முறை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று காலை தனது உத்தியோகபூா்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையர்கள் தற்போது எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை மீண்டும் செழிப்பானதாக கட்டியெழுப்ப வேண்டும். அவசர காலச் சட்டங்கள் போன்றவை இதற்கு உதவாது எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுதலுக்கே முன்னுரிமை.” – இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்

“மனித உரிமைகள் சமூகங்களிற்கு இடையில் நல்லிணக்கம் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுதல் ஆகிய விடயங்களே எனது முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படும்.”  என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான மெய்நிகர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.11ம்திகதி இடம்பெற்ற இந்த மெய்நிகர் சந்திப்பினை அமெரிக்க இரஜாங்க திணைக்களமும் இலங்கைக்கான புதிய தூதுவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மேலம் பேசியிருந்த அவர்,

இதன்போது இரு நாடுகளிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள புதிய தூதுவர் தனது பதவிக்காலத்தில் கொழும்பில் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றும் போது மனித உரிமைகள் சமூகங்களிற்கு இடையில் நல்லிணக்கம் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுதல் ஆகிய விடயங்களே தனது முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டுறவை உருவாக்கும் விவகாரங்கள் இவை என புதிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜெனீவாவில் மனித உரிமை பேரவையில் மீண்டும் இணைந்துகொண்டுள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ள அவர் எதிர்வரும் அமர்வில் இலங்கை நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் உறுதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.