ஜோபைடன்

ஜோபைடன்

ஜனாதிபதியின் அதிகாரங்களை பெறுகிறார் கமலாஹாரிஸ் !

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக   கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலா ஹாரிசிடம் அதிபர் ஜோ பைடன் ஒப்படைக்க  உள்ளார் என்ற தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

சந்திப்புக்கு தயாராகும் உலகின் இரு பொருளாதார வல்லரசுகளின் தலைவர்கள் !

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிட்ர்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் கடந்த மாதம் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேசுவது என முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 15ம் திகதி காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளனர் என வெள்ளை மாளிகையின் செயலாளர் தெரிவித்துள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

“பைடன் நிர்வாகம் தொடர்ந்தும் மனிதஉரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும்” – இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்

“அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனிதஉரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும்” என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீது திணிக்காது – அமெரிக்க தூதுவர் அலைனா  | Tamil First

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்து கொள்ளுமா? என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள தூதுவர் எனினும் ஏனைய நாடுகள் மூலமாக இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதிசெய்வதற்காக பாடுபடும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் கீழும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தகதியிலே காணப்படுகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைக்கு ஆதரவளிப்பதை இலங்கையுடன் வலிந்துமோதலில் ஈடுபடுவதாக கருதக்கூடாது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

ட்ரம்பின் கொள்கைகளுக்கான முடிவுக்கட்டளையுடன் பதவியேற்கிறார் புதிய ஜனாதிபதி ஜோபைடன் !

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தே

ிகதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

அமெரிக்க ஜனதாதிபதியாக க ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் நமது நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதும் உடனடியாக முதல்நாளே டொனால்டு டிரம்ப் எடுத்த சில முடிவுகளை மாற்றியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்ற முதல்நாளே ஜோ பைடன் மாற்றியமைக்கும் முடிவுகளாக ,

* டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது. ஜோ பைடன் அதிபரான உடன் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைய உள்ளது.

* டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. ஜோ பைடன் அதிபரான உடன் அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட உள்ளது. அமெரிக்கர்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற திட்டத்தை ஜோ பைடன் தொடங்கி வைக்கிறார்.

* கல்வி கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

* டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியது. ஜோ பைடன் ஜனாதிபதியானவுடன்  பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் அமெரிக்கா சேர உள்ளது.

* அமெரிக்கா-கனடா இடையேயான எரிவாயு இணைப்பு திட்டத்திற்க்கு டிரம்ப் அனுமதி அளித்திருந்தார். இந்த எரிவாயு இணைப்பு திட்டத்தை ஜோ பைடன் ரத்து செய்ய உள்ளார்.

* பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சில இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய பயணத்தடையை டிரம்ப் விதித்திருந்தார். இந்த தடையை ஜோ பைடன் நீக்குகிறார்.

“ஜோபைடன் அரசு சீன – அமெரிக்க நட்பை இயல்பு நிகை்கு கொண்டு வரும்” – சீனா நம்பிக்கை !

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதி வருகின்றன. ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. வர்த்தகம், மனித உரிமை மீறல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருகிறது.

Joe Biden remporte la primaire démocrate de l'Alaska - Le Point

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன்  வருகிற 20-ந் திகதி பதவியேற்கிறார். அவர் பதவிக்கு வந்ததும் டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறியதாவது:-

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா- சீனா உறவுகள் முன்னோடி இல்லாத வகையில் சிக்கல்களில் சிக்கியுள்ளன. அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. புதிய நிர்வாகம் விவேகமான அணுகுமுறைக்கு திரும்பும்; சீனாவுடனான உரையாடலை மீண்டும் தொடங்கும்; இருதரப்பு உறவுகளுக்கு இயல்பு நிலையை மீட்டெடுக்கும்; ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

“சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்” – ஜோபைடன் 

கடந்த 3ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் சீனா-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அமெரிக்கா-சீனா இடையிலான வலுவான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அமையும் என சீன வல்லுனர்கள் கருதினர்.
அதே போல் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி மாதம் பதவியேற்கிறார்.
இந்த நிலையில் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சீனாவுடனான உறவு குறித்தும் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணையுமா என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜோ பைடன் பதில் அளித்து பேசியதாவது:-
சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவது உறுதி. நான் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேர போகிறோம். அதேசமயம் அதில் சில சீர்திருத்தங்களும், ஒப்புதல்களும் தேவைப்படுகிறது. அதேபோல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மீண்டும் இணையும்” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.