தமிழ்தேசியம்

தமிழ்தேசியம்

புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே !

புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே ! உள்ளுராட்சித் தேர்தலில் கிராமங்களும் சுத்தமாக்கப்பட வேண்டும் !

அரசியல் சமூக செயற்பாட்டாளர், ஆய்வாளர் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம்

 

மோடி – தமிழ் தேசியம் – ஜிஎஸ்பி பிளஸ் – உள்ளுராட்சித் தேர்தல் 2025: இந்தியாவுக்காக சீனாவை எதிர்க்கும் அரசியல் சரியானதா ?

மோடி – தமிழ் தேசியம் – ஜிஎஸ்பி பிளஸ் – உள்ளுராட்சித் தேர்தல் 2025: இந்தியாவுக்காக சீனாவை எதிர்க்கும் அரசியல் சரியானதா ?

தமிழீழ விடுதலை இயக்கத்தின் லண்டன் பிரதிநிதி சாம் சம்பந்தனுடன் ஒரு உரையாடல்

 

தமிழ்தேசியவாதமும் பெண் அடிமைத்தனமும்

தமிழ்தேசியவாதமும் பெண் அடிமைத்தனமும்

அரசியல் சமூக செயற்பாட்டாளர் யோகன் கண்ணமுத்துவுடனான நேர்காணல் !

 

விஜிதாவின் மரணத்துக்கு பின் நின்றவர்! பாலியல் லஞ்சம் கோருவோர்! விபச்சாரி என்று பட்டம் வழங்குபவர்! இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் தலைவர்கள் !

விஜிதாவின் மரணத்துக்கு பின் நின்றவர்! பாலியல் லஞ்சம் கோருவோர்! விபச்சாரி என்று பட்டம் வழங்குபவர்! இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் தலைவர்கள் !

 

தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டில் தீயில் எரிந்த விஜிதா மரணத்தில் இதுவரை துலங்காத நீதி. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை தலைவருமான சோ. சுகிர்தன் வீட்டிற்குள் தீ மூட்டி இளம் குடும்பப் பெண் ஒருவர் 16 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார். இறந்தவர் யாழ் குப்பிளானைச் சேர்ந்த 36 வயதுடைய விஜிதா என்றழைக்கப்படும் 10 வயது பெண் குழந்தையின் தாயார் ஆவார். விஜிதா யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என்றும் கூறப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று. தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டுக் சென்று விஜிதா சுகிர்தனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தன்னைத் தானே தீ மூட்டிக் கொண்டு எரிந்ததாகவும். தீயை அணைத்த பின்னர், அவர் கிணற்றினுள் குதித்ததாகவும் கூறப்பட்டது. தீக் காயங்களுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜிதா, சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

விஜிதா, சுகிர்தன் வீட்டில் தீ மூட்டிய போது சுகிர்தன் தனது வீட்டிற்குள் சென்று பூட்டிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. விஜிதா மரணத்திற்கான காரணம் இன்று வரை துலங்கவில்லை. குடும்பத்தைப் பிரிந்த தனியே வாழும் சுகிர்தன் , விஜிதா குடும்பத்துடன் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்பட்டது. விஜிதாவும் கணவரைப் பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுகிர்தன் விஜிதா இருவரும் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜிதா சுகிர்தனை தன்னை திருமணம் முடிக்கும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சுகிர்தன் வழமையாகவே விஜிதா வீட்டிலேயே உணவருந்தி வந்ததாகவும் கூறப்பட்டது. சுகிர்தன் திடீரென விஜிதாவுடனான தொடர்பை குறைக்கவும் விடையம் பெரிதானதாகவும் கூறப்பட்டது.

அதேநேரம் சுகிர்தாவின் மரணத்தில் சுகிர்தனின் 21 வயதான பொலிஸ் பயிற்சியில் இருக்கும் மகன் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. விஜிதாவின் பெற்றோர் தங்களுடைய மகள் சுகிர்தனின் வீட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டினர். விஜிதாவின் தற்கொலை அல்லது கொலை சுகிர்தன் வீட்டில் இடம்பெற்றதால் சுகிர்தன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் விஜிதாவின் மரணம் தற்கொலை எனத் தீர்மானிக்கப்பட்டு சுகிர்தன் வெளியில் வந்துவிட்டார்.

இந்தவிடயத்தில் தமிழரசுக் கட்சி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் இன்று வரை செயற்படும் சோ. சுகிர்தன் இந்தவிடயத்தில் விளக்கங்கள் எதுவும் மக்களுக்கு வழங்கவில்லை. சோ. சுகிர்தன் நடக்கவிருக்கிற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனின் வலதுகரமாக செயற்படுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் 2013 மேமாதம் 13 ஆம் திகதி ”பெண்கள் சந்திப்பு” என்ற சூம் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘ மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப்பேசுவோம்’ என்ற தலைப்பில் விஜிதாவிற்கு பணியிடத்தில் சுரண்டல் தொடர்பிலும் விஜிதாவின் மரணத்தின் பின்னணியில் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆண் தப்பிக்கவிடப்பட்டமை தொடர்பிலும் பேசப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் உள்ளூராட்சிசபை அலுவலகருமான சுரேகா பரமநாதன் விஜிதாவை மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு குரல் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதே சுரேகா பின்னர் எம். ஏ. சுமந்திரனின் சிபாரிசில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

ஒருபக்கம் வீட்டு வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்திரிக்கின்றன. யாழ் வேளாள ஆண்மைய அரசியலை முன்னெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளாலும் கூட பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்.

இதன் உச்சகட்டமாகத் தான் எம்பி இராமநாதன் அர்ச்சுனா கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சாளினியை, விபச்சாரி’ என பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிந்தமையை குறிப்பிடலாம். எம்பி அர்ச்சுனா அத்தோடு நிற்கவில்லை தன்னை விமர்சித்த சங்கவி என்னும் பெண் ஊடகவியலாளரையும் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான ஸ்வதிகா அருளிங்கம் என்ற இன்னுமொரு பெண்ணையும் மிகக் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்தார். இந்த விடயங்களுக்காக எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற சாபாநாயகரின் கண்டனைங்களையும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த விடயத்தில் எம்பி அர்ச்சுனாவை கண்டித்து பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. அதேநேரம் எம்பி சிவஞானம் சிறிதரன் கூட தனது சொந்த ஊர்ப் பெண்ணான வட்டக்கச்சி சாளினியின் பக்கம் நிற்கவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் எம்பி அர்ச்சுனா இராமநாதனை சபாநாயகர் மன்னித்து, அர்ச்சுனா மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை வாபஸ் பெற கோரிக்கை விடுத்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவக்கு போட்டியிடும் இருவரில் ஒருவரான எம். ஏ சுமந்திரன் விஜிதாவின் மரணத்திற்கு காரணமான சோ. சுகிர்தனை தனது வலதுகரமாக வைத்துள்ளார். மற்றையவர் சி. சிறிதரன் உதவி கேட்டு கட்சி அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் வேழமாலிகிதனை வலதுகரமாக வைத்துள்ளார். அப்படியிருக்க எம்பி சிறிதரன் எம்பி அர்ச்சுனாவிற்கு வக்கலாத்துக்கு போனதில் ஆச்சரியமில்லை.

இதெல்லாம் ஒருபுறம்மிருக்க உள்ளூராட்ச்சித் தேர்தலில் எம்பி அர்ச்சுனாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எம்பி அர்ச்சுனாவோ தங்களுடைய வாக்குகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கு அளிக்கும்படி கேட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அர்ச்சுனாவோடு கூட்டணிக்கு தயார் என சமிக்ஞை காட்டுகிறார். கஜேந்திரகுமாருக்கு மட்டும் ஏன் தமிழ்ப் பெண்கள் விடயத்தில் அக்கறை இருக்கப் போகிறது. எல்லோரும் ”யாழ்ப்பாண வெள்ளாள ஆண்மைய “குட்டையில் ஊறிய மட்டைகளே” ஆகும்.

உள்ளூராட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 25 % பெண்களுக்கு வேட்புமனுக்களில் இடம் அளிக்க வேண்டும் சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த பிரதான தமிழ்க்கட்சிகள் பெண்கள் யாரையும் கூட்டிவந்ததாகத் தெரியவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பெண்கள் அரசியலில் காலடி எடுத்து வைக்கவும் , பயிற்சி பெறவும் சிறந்த சந்தர்ப்பம். தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஆண்மைய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய இடம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான பெண்களை இழிவுசெய்யும் இசைப்பிரியா போன்ற இராணுவத்தால் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண்களுக்கு எப்படி நீதி பெற்றுக் கொடுப்பார்கள்?

அந்த வகையில் பெண் வாக்காளர்கள் தமக்காக குரல் கொடுக்க கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். அதேநேரம் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுடன் சமரச அரசியலில் ஈடுபடும் மற்றும் துணை போகும் ஐக்கிய மக்கள் சக்தி உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண் அரசியல்வாதிகளையும் ஆதரிக்க கூடாது.

தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

வரும் உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் தேசியக் கட்சிகளின் வேர்களையே பிடுங்கிவிடுமா ? என்ற அச்சத்தில் தமிழ் தேசியம் தனது இருத்தலுக்கான அச்சுறுத்தலை உணர ஆரம்பித்துள்ளது. மக்களோடு அந்நியப்பட்டுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளனர் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.

தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளாத தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் நிகழும் தங்களுக்கொரு எதிர்காலம் அமையும் என்று முட்டாள்தனமாக நம்பி மிக மோசமான முடிவைச் சந்தித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளாத தமிழ் தேசியம் அவர்களின் பிணங்களில் ஒட்டுண்ணிகளாக வளர்ந்தது. கடந்த 15 வருடங்களாக புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு முந்திய மிதவாதத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எவ்வாறு குறும்தமிழ் தேசியவாத அரசியல் பேசினார்களோ அதேபோல் இன்றைய அரசியல் தலைவர்களும் அதனையே பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றைக்கு எதற்காக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களைச் சுட்டுக்கொன்றார்களோ அதனையே தான் அல்லது அதற்கும் மேல் மோசமான அரசியலையே தமிழீழ விடுதலைப் புலிகளினதும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பெயரிலும் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்கின்றனர். இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அன்றைய சிந்தனையோடு இருந்திருந்தால் பா உறுப்பினர்கள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களை வாயால் வடைசுட்டு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற கருதும் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதம் கடந்த காலத்திலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மக்கள் கிளிநொச்சியில் விவசாய இரசாயணங்கள் கலந்த தண்ணீரை குடிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மலசலம் கலந்த கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கின்றனர். அவர்களுக்கு குழாய்நீர் வழங்க நிதி; ஒதுக்கப்பட்டது. பா உ சிறிதரனுக்கு வாக்களித்தவர்களுக்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை. ஆனால் பா உ சிறிதரனுக்கு யாழ் நகரில் ஒரு வீடு கொழும்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். தமிழ் மக்கள் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதிகளின் ஏமாற்று வித்தைகளை நன்கு படித்துவிட்டார்கள்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தாங்கள் கைகாட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று கனவு கண்டனர். அதற்குப் பின் நடந்த பொதுத் தேர்தலின் போது கூட தாங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதைக் கூட அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. 10 ஆசனங்கள் தருவார்கள் தாங்கள் தான் தமிழ் பெரும் தேசியக் கட்சி என்று கற்பனைக் கோட்டையில் மிதந்தனர்.

இவர்கள் மீதான நம்பிக்கையீனம் தேசிய மக்கள் சக்தியின் பெரும் முதலீடானது. தேர்தலுக்கு முன்பிருந்தே தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியது. தமிழ் தேசியம் அவழ்த்துவிட்ட வலதுவாரி குறும் தேசியவாத கருத்துகளுக்கு மக்கள் செவிசாயக்கவில்லை. அவர்களின் பாரம்பரிய ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். தேசம்நெற் எதிர்வு கூறியது போல் தேசிய மக்கள் சக்தி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதுடன் வடக்கு கிழக்கில் ஏழுஆசனங்களைப் பெற்றது. தற்போது தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கின் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது.

ஒன்பது கட்சிக் கூட்டணி ஆரம்பத்திலேயே சில்லு சகதிக்குள் சிக்குண்ட நிலையில் நின்ற இடத்திலேயே சில்லுச் சுற்றுகின்றது. அதனைத் தூக்கிவிடக் கூடியவர்கள் யாரும் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, முகவரியற்ற ஆய்வாளர் வி சிவலிங்கத்தின் மொழியில் சொன்னால் உதிரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த ஒன்பது கட்சிக் கூட்டமைப்பில் தனித்துவமும் வாங்கு வங்கியும் உள்ள ஒரே கட்சி சமத்துவக் கட்சி. ஒற்றுமைக்காக அழைக்கும் போது தனித்து நிற்கமுடியாததால் வேறு வழியில்லாமல் இணைந்துள்ளனர். ஏனைய எட்டுக் கட்சிகளின் பாவ மூட்டைகள் கடந்த அரசியல் காலத்தில் செய்த ஊழல் மோசடிகளால் நிறைந்துள்ளது. இதனைத் தனித் தனியாக எழுதினால் அதற்கு தனிக்கட்டுரை எழுத வேண்டும். அதனால் ஏற்கனவே சங்கு களவாடப்பட்டு விட்டது, லைக்கா சுபாஸ்கரன் சங்கூதுகின்றார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் உண்டு. இந்த நிலையில் கொள்கையற்ற உதிரிகள் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உள்ளுராட்சித் தேர்தலில் ஊதுகின்ற சங்கிங்கு மக்கள் காதுகொடுப்பார்களா?

போகின்ற போக்கி உள்ளுராட்சித் தேர்தல் வலதுசாரி குறும்தேசியவாதிகளாகிப் போன தமிழ் தேசியவாதிகளுக்கு ஊதப்படும் கடைச்சிச் சங்காக அமையப் போகின்றது. தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் உள்ளுராட்சி சபைகளை வென்றெடுப்பதைக் காட்டிலும் வடக்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மக்கள் மத்தியில் அதிக பிரசன்னத்தைக் கொண்டிராத தமிழ் தேசியவாதம் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் அதீத பிரசன்னத்தை கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளத்திலும் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை கொண்டிருக்கவில்லை.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் இருந்து தூரமாகவே உள்ளனர். அவர்ளை மக்கள் அணுகக் கூடிய அளவுக்கு ஊடகங்களால் அணுக முடியாத நிலையொன்றுள்ளது. துரதிஸ்டவசமாக தற்போது பாரம்பரிய ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் சொல்லிக் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அதனால் உள்ளுராட்சி சபையில் தேசிய மக்கள் சக்தி அலை வாக்குகளை அள்ளிச் செல்லவே வாய்ப்புள்ளது.

ஆனால் அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நீண்டகாலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் அணுகவும் கேள்வி கேட்கவும் வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிராந்திய ஊடகங்களும் அணுகும் வழிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

 சீமான் – ஹிட்லர் குஞ்சுகள் மயூரன் தலைமையில் லண்டன் கூட்;டத்தில் காடைத்தனம் ! அனந்தி சசிதரனின் நகைகளும் அடங்கிய தமிழீழ வைப்பக நிதியைச் சுருட்டிய சீமான் – பாலா மாஸ்டர் !

சீமான் – ஹிட்லர் குஞ்சுகள் மயூரன் தலைமையில் லண்டன் கூட்;டத்தில் காடைத்தனம் ! அனந்தி சசிதரனின் நகைகளும் அடங்கிய தமிழீழ வைப்பக நிதியைச் சுருட்டிய சீமான் – பாலா மாஸ்டர் !

நேற்று தமிழகம் ஈரோட்டில் சீமானின் அரசியல் மீண்டுமொருமுறை மண் கவ்வியது. மண் கவ்விய ஹிட்லரின் சீமானின் லண்டன் குஞ்சுகளுக்கு தலைமை தாங்கிய மயூரன் கும்பல் லண்டன் ஈஸ்ற்ஹாமில் அடாவடித்தனத்தில் இறங்கினர். ஈ வே ரா பெரியார் என அறியப்படும் மிகப்பெரும் தமிழ் ஆளுமையான பெரியாரை தமிழ் மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் எனக் கனவு காணும் ஹிட்லர் விசுவாசிகள், ஈரோடு இடைத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். தந்தை பெரியாரின் மண்ணில் ஹிட்லரின் கனவுகள் தவிடுபொடியாக்கப்பட்டது.

அதேசமயம் நேற்றைய தினம் தமிழ் மக்களின் கோட்டையாக விளங்கும் கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தந்தை பெரியார் பற்றிய சிறிய கலந்துரையாடல் ஒன்று வழமையாக கலந்துரையாடல் இடம்பெறும் ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில்; உள்ள மஃருப் பௌஸரின் புத்தக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சனிக்கிழமை மாலை 3:15 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகியது. வழமையாக ஒரு பத்துப்பேர் கூடி உரையாடல் நடாத்தும் அப்புத்தக நிலையத்திற்கு ஹிட்லர் – சீமானின் நாம் தமிழர் கட்சியின் லண்டன் அமைப்பாளர் மயூரன் தலைமையிலான 25 பேர் கொண்டகும்பல் அங்கிருந்த பனர் மற்றும் விளம்பரங்களைக் கிழித்துப் போட்டு ‘நீ தமிழனுக்குப் பிறந்தினியா?’, ‘உன் கொம்மா தமிழனுக்கா உன்னைப் பெத்தா’, ‘நீ சோனி’ என்று சீமானின் பாணியில் நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை, பேச வந்தவர்களை தரக்குறைவாகப் பேசி அவர்களை இழிவுபடுத்தினர்.

ஆய்வாளர் மு நித்தியானந்தனிடமும் முண்டிய போது அக்கும்பலை நோக்கி ‘உங்களுடைய தலைவன் சீமானும் ஒரு மலையாளி சைமன்’ எனச் சூடாகவே பதிலளித்த போது, மு நித்தியானந்தனை அக்கும்பல் தாக்க முயன்றுள்ளது. மயூரன் தலைமையில் வந்த காடையர் கும்பல் அங்கிருந்த பெண்களையும் அவமதித்து இழிவுபடுத்தினர். இவர்கள் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் விசுவாசிகளாகவும், பிரபாகரனைத் தங்கள் தலைவர் என்றும் அங்கு முழங்கி ஹிட்லர் சீமானுக்கு புலிச்சாயம் பூசினர். தந்தை பெரியார் பற்றிய கலந்துரையாடலில் புலிவேசத்துடன் வந்து குழப்பத்தை உண்டு பண்ணி புலிகள் திராவிடத்துக்கு, தந்தை பெரியாருக்கு எதிரானவர்கள், நாம் தமிழர் தான் – ஹிட்லர் சீமான் தான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு என ஒரே கல்லில் பல மங்காய்களை வீழ்த்தத் திட்டம் இட்டிருந்தனர்.

இதனை ‘தமிழ் குரல்’ தொலைக்காட்சியில் இளமாறன் என்பவர் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். 2009 யுத்தம் முடிவில் தமிழீழ வைப்பகத்தின் பாலா மாஸ்டர் தலைமையில், போராளிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பெறுமதியான தங்கப் பாலங்களோடு தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இவர்களை குருமூர்த்தி – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்தகாலத்தில் தேவையான பொருட்களை தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு கடத்துவதில் முதன்மையாக உதவியவர், தடா சந்திரசேகர் ஆகியோர் சீமானுடன் கோர்த்து விடுகின்றனர். இச்சந்திப்பில் தந்தி தொலைக்காட்சி நிறுவனரும் ஈடுபட்டுள்ளார். பாலா மாஸ்டரிடம் பெற்ற தங்கப் பாலங்களை சீமான் கோயம்புத்தூரில் உள்ள நகைக்கடையூடாக விற்று பணமாக்குகிறார்கள். அதேசமயம் சீமானுக்கும் ரோவுக்கும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு ரோவின் உதவியுடன் தமிழீழ வைப்பக பாலா மாஸ்டரையும் அவருடன் தொடர்புடைய சிலரையும் சீமான் இந்தியக் கடவுச் சீட்டோடு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் இளமாறன்.

அத்தோடு துவாரகா வருகிறாள், மதிவதனி வருகிறார், தலைவர் வருகிறார் என்ற கும்பலின் பின்னாலும் சீமான் செயற்பட்டதும் அவர் மதிவதனியுடைய சகோதரி அருணாவை வைத்து பிரபாகரன் குடும்பம் உயிரோடு இருப்பதாக பொய் சொல்ல வைத்ததை அண்மையில் பிரபாகரனின் சகோதரரின் மகன் கார்த்திக் மனோகரன் அம்பலப்படுத்தி இருந்ததும் தெரிந்ததே.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டத்தில் மிக இலாபமீட்டியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புகளில் அவர்களின் அசையும் – நிதி மற்றும் அசையாத சொத்துக்களை வைத்திருந்தவர்களும் சீமானும். சீமான் தமிழீழ வைப்பகத்திலிருந்த கோடிக்கணக்கான தங்கப் பாலங்களை அமுக்கிய போதும் புலிகளின் முன்னாள் போராளிகளை வெளிநாடுகளுக்கு கூடுதலாக குறைந்த கட்டணத்திலும் அனுப்பியது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய பிரமுகரான வள்ளியூர் வீரக்குமார் என்பவரே. இவர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சிறிபெரம்புத்தூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் பாலா மாஸ்டர் இலங்கையில் இருந்து கொண்டு வந்த தங்கப் பாலங்களில், தன் கணவன் வலிந்து காணாமலாக்கப்பட்டவரான அனந்தி சசிதரனின் குடும்ப நகைகளும் இருந்ததாக தமிழ் குரல் காணொலியில் இளமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி தமிழ் குரலில் கருத்துத் தெரிவித்த இளமாறன், விடுதலைப் புலிகளான தமிழர்களின் பணத்தை எடுத்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய திராவிடத் தமிழ் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி தமிழர்களை அழிக்கின்றது, பார்ப்பணியத்தின் கைக்கூலியான ஹிட்லர் சீமான் என்கிறார் இளமாறன்.

சீமானின் பரைப்புரகள் அன்று தமிழ் மக்களைக் கட்டிப் போட்டிருந்தது. ஆனால் சீமான் நேரடியாக இலங்கைக்கு வந்திருந்த போது நான் அவரைச் சந்தித்தேன், அதோடு அவர்கள் மீதிருந்த மதிப்பும் போய்விட்டது என்று குறிப்பிடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சென்று கதைத்து கருத்துக் கூறுகின்ற ஆளுமையாக இருந்த, மாவீரர்களின் தாயாகவும், போராளியாகவும் இருந்த தமிழ்கவி, தலைவர் பிரபாகரன் இருக்கும் போதே இவர்களைக் கழுவி ஊத்தியாச்சு எனத் தெரிவித்தார்.

“சீமானின் செயற்பாடுகள் அவர் இந்திய புலனாய்வுத் துறைக்கு சேவகம் செய்பவராகவே கருத வேண்டியுள்ளது” என்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வேர்கள் புலனாய்வு அமைபின் பகுப்பாய்வாளர் முல்லை மதி. அவர் மேலும் குறிப்பிடுகையில் சீமானின் தற்போதைய செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த சர்ச்சைக்குள் செல்லக்கூடாது எனவு தெரிவித்தார்.

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பா.உ க்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதியை கரிநாளாக கூறி தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைக்கு தனித்தேசம் தான் தீர்வு என்ற தோரணையில் பேரணி நடாத்தியிருந்தனர் பா.உக்களான் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர். அடுத்த நாளே கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் என தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய வழி வந்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயற்பட மந்திராலோசனை நடாத்துகின்றனர் என சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்.பி.பி அரசை எதிர்கொள்ள இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

2009ற்கு பின்னர் தமிழ்தேசியம் என்ற பெயரில் உலா வரும் போலி ஆசாமிகள் – முல்லை மதி காட்டம் !

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயற்பட்டுக்கொண்டு திலீபனுக்கு பேரணியும் செய்கிறார் கஜேந்திரகுமார் – தமிழ்தேசிய அரசியலை 2009இன் பின்னர் எவரும் உண்மையாக மேற்கொள்ளவில்லை – புலிகளை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தமிழரசுக்கட்சியினர் – அர்ச்சுனாஇயக்கப்படுகிறார் – இலங்கை தமிழரசுக்கட்சியின் பின்னால் இலங்கை உளவுத்துறை ‘ –

 

புலிகளின் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளருடன் ஒர் உரையாடல்

முன்னாள் போராளிகள் அடிப்படை தேவைகளுக்கே திண்டாடிக் கொண்டிருக்க – அவர்களின் பெயரால் வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகள்!

மாவீரர் தின வாரம் கடந்த 21ஆம் திகதி தமிழர் பகுதிகளில் ஆரம்பித்திருந்த நிலையில் இன்று கார்த்திகை 27 மாவீரர் தின இறுதி நாளாகும். உண்மையிலேயே மாவீரர் தினம் என்பது யுத்தம் முடிவடைந்த பின்னர் அதனுடைய வெற்றி தோல்வி என்பவற்றுக்கு அப்பால் வெறுமனே அரசியல் லாபமீட்டும் ஓர் தொழிலாக அல்லது செயலாக மாறிப்போன சோகம் தான் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து வீரச்சாவு அடைந்தவர்களின் நினைவாக தமிழர்கள் மத்தியில் தன்னியக்கமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு தமிழ்தேசிய அரசியல்வாதிகளால் தமது சொந்த நலன்களுக்காகவும் – சொகுசு வாழ்க்கைக்காகவும் பயன்படுத்தப்படுவது வேதனையாகும்.

மாவீரர்களின் பெயரை சொல்லி அரசியல் செய்யும் சிறீதரன் எம்பி தொடங்கி சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லோருமே ஆடம்பரமான செல்வந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் போர்க்காலத்தில் மாவீரர்கள் ஆனவர்களின் குடும்பங்களோ, போர்க்காலத்தில் அங்கவீனர்களானவர்களோ இன்று வாழும் வாழ்க்கை அத்தனை வறுமையானதாகிப்போயுள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தேசத்து நிதியை சேர்த்து அதனை வழங்க ஓர் நிதியத்தை கூட இன்று வரை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் லண்டன், பாரிஸ், கனடா என சென்று இந்த தமிழ்தேசியம் பேசிய அரசியல்வாதிகள் தங்களது கட்சிக்காக நிதி சேர்த்து  கொள்கின்றனர். மாறாக இந்த யுத்ததத்துக்காக தன் குடும்பத்தை இழந்தவர்களுக்காகவோ – போரினால் அங்கவீனர்ளாக்கப்பட்டோருக்காகவோ நிலையை பார்த்தால் படு மோசமாக உள்ளது. அண்மையில் ஊசி அர்ச்சுனா வெளிநாட்டு மக்களிடம் தமிழ்தேசியம் என்ற பெயரில் காசு புடுங்கி வயிறு வளர்ப்பது இதற்கான அண்மைய கால ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு போட்டியாக அண்மைய காலங்களில் யூடியுப்பர்களும் மாவீரர்களின் பெயரால் வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாவீரர் குடும்பம் வறுமையால் வாடுகிறது என வீடியோ செய்து அதில் பெரும் தொகையை களவெடுத்து விட்டு சிறுதொகையை பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கிறார்கள். வெளிநாட்டு பணம்படைத்த வித்துவான்களும் ஏதோ உயிர் மீட்க உதவி செய்து விட்டதாக பெருமைப்பட்டு கொள்கிறார்கள். உண்மையிலேயே வெளிநாட்டில் ஈழத்தின் பொருளாதார உதவிகளுக்காக பணம் அனுப்புவோர் இன்று வரை ஓர் பொதுவான நிதியத்தை உருவாக்கி பணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பாதிக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது மாவீரர்களுக்கும் வழங்குவதற்கு இதுவரையும் சிறிய அளவிலான நடவடிக்கையை கூட அவர்கள் எடுத்தது கிடையாது. புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகின்ற உதவிகள் கூட கடந்த 15 ஆண்டுகளாக கண்துடைப்புக்கான அல்லது தங்களுடைய பகட்டு ஆடம்பரத்தை காட்டுவதற்கான உதவிகளாகவே அமைந்திருக்கின்றன.

அண்மையில் லைக்கா குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒருவன் பத்திரிகை, ஐ பி சி பாஸ்கரனுடைய இணைய பக்கங்கள் எல்லாமே மாவீரர் வாரத்தில் தமிழர்களை மீள ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளுவது போல வெடித்து சிதறுகின்றன. நடைமுறையில் லைக்கா குழுவினர் அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழிக்கின்ற காசுகளை கூட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற செலவழித்தது கிடையாது. ஐ பி சி பாஸ்கரன் ரீச்சா  என்கின்ற பெயரில் விடுதி வருகிறாரே தவிர இந்த நிலத்தில் முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்தை புனரமைக்க நிலையான அபிவிருத்தி திட்டங்கள் எதயுமே இதுவரை முன்னெடுக்கவில்லை.

சுசுருக்கமாக சொல்வதாயின் இந்த நிலத்துக்காக போராடியவர்கள் , இந்தப் போராட்டத்தினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டவர்கள் ஒரு நேர சோற்றுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் அன்றாடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்களும், ஊடகங்களை நடத்திக் கொண்டிருப்பவர்களும் தமிழ் தேசியம் என்கின்ற தீயை மேலும் வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்றைக்கு முன்னாள் போராளிகளின் வறுமை நிலை இல்லாதாக்கப்படுகிறதோ..? என்றைக்கு போரால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களினுடைய அடிப்படை தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுகிறதோ..? அப்போது தான் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் அர்த்தமுள்ளவையாக மாற்றமடையும்.

“சிங்களவனை காட்டி தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” – சிவனேசதுரை சந்திரகாந்தன் 

“பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(31) மாலை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்திலும், உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய திட்டங்களிலும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே நாம் அடைய நினைக்கும் இலக்காகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிக்கலான சூழ்நிலை இருந்தபோது எமது கட்சியை மட்டக்களப்பு மக்கள் மீட்டெடுத்தார்கள். அதன் பெறுமதியை நாம் அரசாங்கத்துடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் மக்களுக்கு நாம் முன்வைத்த கோரிக்கைகயை நிறைவேற்றுவதில் பல தடைகள் உள்ளன. ஆனாலும் சற்றுக்காலம் தாழ்த்தியாவது அவற்றை நிறைவேற்றிக் கொடுப்போம் என நாம் நம்புகின்றோம். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பட்டிருப்பு பாலத்தை நாம் பார்வையிட்டோம். அப்பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட பாலமாகும். அதனை செப்பனிடுவதற்கு 1300 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது.

 

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள். பின்னர் பட்டிருப்புத் தொகுதியிலே சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் நாடாளுமன்றத்திலே இருந்தார். தமிழரசுக் கட்சியின் நூற்றாண்டு வரலாறு தோற்றுப்போன வரலாறாகும். இரண்டு தலைமுறைகள் அழித்துவிட்ட வரலாறாகும். அழிந்துள்ள இந்த வரலாற்றிலேயேதான் நாம் நிற்கப்போகின்றோமா என சிந்திக்க வேண்டும்.

இராசமாணிக்கம் ஐயா பிறந்த இடம் மண்டூர் அவர் மண்டூருக்கு கட்டிக் கொடுத்த பாலம் எங்கே? அவரது காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் எங்கே? அவர் மக்களுக்காக செய்த பணி ஒன்றுமே இல்லை. மாறாக பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என சாதாரண மக்களை உசுப்பேற்றி விட்டார்கள்.

தற்போது 2 தலைமுறைகள் கடந்து தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொலிஸில்  சேரமுடியாது, சிங்களவர்களுடன் சேர்ந்து நிர்வாகம் செய்ய முடியாது, ஏனைய பணிகளைச் செய்யமுடியாது, போன்ற நிலமைகளை களுவாஞ்சிகுடி மக்கள் இன்னமும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை.

இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துப்பாக்கிகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல் என“ அவர் இதன்போது தெரிவித்தார்.