தர்மலிங்கம் சித்தார்த்தன்

தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

 

நாற்பத்தைந்தாண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் பின்னான 15 ஆண்டுகளுமாக ஒரு மூன்று தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாறு. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் உயிர் தப்பியவர்கள் தற்போது தங்களுடைய இயற்கையான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் உடல்போல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று சாட்சியங்களும் எம் கண் முன்னே சாம்பலாகின்றது அல்லது மண்ணோடு மண்ணாகிப் போகின்றது. இவ்வாறு தனது இயற்கையான முடிவை இன்று சந்தித்தவர் ஆர் ஆர் எனப் பரவலாக அறியப்பட்ட ஆர் ராகவன் என்ற வேலாயுதம் நல்லநாதர். இவர் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர். இக்கட்சியின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவருமான இவர், இக்கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எல்லாமே ஆர் ஆர் தான். இவர் புளொட் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாவார். இவர் தன்னுடைய அறுபதுகளில் உயிரிழந்துள்ளார்.

 

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

இலங்கையில் நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்கள் !

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்காக நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் வாக்களிப்பதைக் கண்காணிக்க முடியும், அதே நேரத்தில் வாக்காளர் செல்வாக்கு இல்லாமல் வாக்களிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள் பணிபுரிபவர்கள் மற்றும் விசேட வசதிகள் தேவைப்படுபவர்களுக்கும் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவு சட்ட வரைவு ஆசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அத்தகைய விதிமுறைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நம்புவதாகவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை தெரிவில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பெயர் நிராகரிக்கப்பட்டது இனவாதத்தாலா..?

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர், எதிர்க்கட்சி, தரப்பில் தவிர்க்கப்பட்டமை இனப்புறக்கணிப்பு என்ற அடிப்படையிலும் சிங்களவர்களின் பெரும்பான்மைவாதம் என்ற அடிப்படையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, நேற்று கருத்து வெளியிட்டதாக தெரிவித்தே, உதய கம்மன்பில தமது கருத்தை வெளியிட்டார்.

அதிகாரப்பரவலாக்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாதீட்டுக்கான வாக்கெடுப்பின்போது, அதனை தவிர்த்தது.

இது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். இந்தநிலையில் அவர்களின் பெயர் அரசியல் அமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவர்கள் அந்த பேரவையையும் அதிகாரப்பரவலாக்கல் விடயத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்காகவே, சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதற்கு எதிராக தமது பெயரை பரிந்துரைத்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது ஒரு விளையாட்டுத் தனமான விடயமல்ல” – எச்சரிக்கின்றார் சித்தார்த்தன்.

“அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் துணிச்சல் அரசாங்கத்திற்கு இல்லை. இது ஒரு விளையாட்டுத்தமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

“13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் முயற்சிகள் ஏதும் திறைமறைவில் முன்னெடுக்கப்டுக்கப்பட்டால் அதனை முறியடிக்க உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் பலவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் தமிழ் செய்தி ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “13வது திருத்தச் சட்டம் தமிழ்த் மக்களுக்கான முழுமையான தீர்வு இல்லை என்பதை தமிழ் மக்கள் அதனை அறிமுகப்படுத்திய போதே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இது இருந்தபோதிலும் இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப அதிகாரங்களை பகிரக் கூடிய ஒரு தீர்வுத்திட்டமாக இது உள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென பலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் 13வது திருத்தச் சட்டம் குறித்து எவ்வித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

13வது திருத்தச் சட்டத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. இது ஒரு விளையாட்டுத்தனமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா இந்த விடயத்தை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்காது. 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்காதென்றே கருதுகிறோம். அதற்கான துணிவு அரசாங்கத்திடம் இல்லை.

இந்தியாவில் தற்போது மோடி அரசாங்கம் உள்ளதால் அவர்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்களென சிலர் கூறுகின்றனர். அவ்வாறில்லை. மோடி அரசாங்கமோ அல்லது ராஜீவ் அரசாங்கமோ அல்ல இதில் முக்கியம். இந்திய அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அரசாங்கங்கள் மாறினால் கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது போன்று இதனை அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாது. இந்தியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் அதன் வெளிவுறவுக் கொள்கை மாறாது. இதுதான் ஆரம்பகாலம் முதல் இந்தியா கடைப்பிடிக்கும் வரலாறு.

நாம் இந்தியாவுடன் இராஜந்திர பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சந்திப்புகளை தற்போது மேற்கொள்வது கடினம். என்றாலும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதும் நகர்வுகளில் ஈடுபட்டால் நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.” என்றுள்ளார்.