நளிந்த ஜயதிஸ்ஸ

நளிந்த ஜயதிஸ்ஸ

வைத்தியசாலைகளில் ஊழல் மோசடிகளை தடுக்க புதிய திட்டம் : சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி !

வைத்தியசாலைகளில் ஊழல் மோசடிகளை தடுக்க புதிய திட்டம் : சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி !

நேற்றைய தினம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்தக்கசிவு உயிரணு மாற்று சிகிச்சைப் பிரிவானது சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியசாலையொன்றில் முதலாவதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பிரிவானது ருஹூணு கதிர்காம மகாதேவாலயத்தின் நிதியுதவியானால் கட்டப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைகளின் அனைத்துவிதமான அபிவிருத்திப்பணிகளும் தேசிய திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சால் ஒதுக்கப்படும் நிதிமூலம் மட்டுமே செய்யப்படும். இனிவரும் காலங்களில் அரசியல் நலன்சார்ந்து அல்லது வைத்தியசாலைகளின் குறைபாடுகளைக் கண்டு எழுகின்ற உணர்வெழுச்சியினால் தூண்டப்பட்டோ வைத்தியசாலைகளில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிடும் போது எந்தவொரு கடவுள்களை விடவும் ஏன் கதிர்காம கடவுளின் கருவூலத்தில் இருக்கும் பணத்தை விடவும் அதிக பணம் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 33 கோடிகள் ஒதுக்கப்படுகிறது. மேலும் அமைச்சர் குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் சுகாதார அமைச்சுக்கு அதிகூடிய தொகை தொகுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுவாக எந்த அரசாங்கம் கேட்டாலும் சுகாதார அமைச்சு பணம் கொடுக்கும். சுகாதார அமைச்சானது காலத்திற்கு காலம் வெளிநாட்டு சர்வதேச அமைப்புக்களின் ஆதரவை உள்ளூர் ஆளுநர்கள் மூலமாகவும் நேரடியாகவும் குறிப்பிட்ட காலங்களில் பெறுகிறது. அந்தவகையில் எதிர்காலத்தில் இவை அனைத்தும் ஒரு முறையான திட்டமிடலின் கீழ் செயற்படுத்தப்படும். அடுத்த 20 ஆண்டுகளை நோக்காக கொண்டு இத்திட்டமானது வடிவமைக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் இந்த முடிவு ஊழலை ஏற்படாமல் தடுக்கும் ஓரு பொறிமுறையாக அவதானிகள் கருதுகின்றனர். தன்னிற்ச்சையாக வைத்தியசாலைகள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றபோது இடம்பெற வாய்ப்புள்ள மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் இதன் மூலம் தவிர்க்கப்படும்.

கடந்த வருடம் பெரும் சர்ச்சையாக வெடித்த சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் கூட இவ்விடயம் கவனத்திற்கு வந்திருந்தது. தென்மராட்சி அஅபிவிருத்திக் கழகத்தால் சாவகச்சேரி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவை இயங்க வைக்கவென உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தென்மராட்சி மக்களிடம் பணம் சேகரிகப்பட்டிருந்தது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பணத்தில் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்தமை போக மிகுதி 23 மில்லியன்களுக்கு என்ன நடந்தது என்ற சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அவசர விபத்துப்பிரிவு சத்திரசிகிச்சை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருந்தமையும் பல ஆண்டுகளாக அப்பிரிவு இயங்காமை தொடர்பான முறைப்பாடுகளை முன்னாள் பதில் சாவகச்சேரி பணிப்பாள் வைத்தியர் அர்ச்சனா இராமநாதன் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காத என்.பி.பி அமைச்சர்கள் – மௌனம் களைத்த என்.பி.பி அமைச்சர் !

ஐந்து வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காத என்.பி.பி அமைச்சர்கள் – மௌனம் களைத்த என்.பி.பி அமைச்சர் !

அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஓர் சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சரவை அயராது உழைத்து வருவதை நான் பொறுப்புடன் கூற கடமைப்பட்டுள்ளேன். என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவு பெற்றுள்ளது. கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு அர்ப்பணிப்பின்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தரவுகள் மற்றும் தகவல்கள் இன்றி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் பதவிவகித்தமையாலும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டமையாலும் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டை முன்னேற்றாமல் ஏனைய அரசாங்கத்தைப் போல வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தால் முன்னேறிச் செல்வது எளிதான விடயம். எனினும் நாடு ஒருபோதும் முன்னேறாது. நாம் அடித்தளத்திலிருந்து மேல் எழுந்து கொண்டிருக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.