நாமல் ராஜபக்ஷ
நாமல் ராஜபக்ஷ
நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று எடுத்துகொள்ளப்பட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த விசாரணை தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுpன பெரமுவின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
எங்களுடைய நாடு ஒற்றையாட்சி நாடாகும். கிராமம் மற்றும் நாட்டுள்ள தாய் தந்தையரின் குழந்தைகளும் இந்த ஒருமித்த நாட்டை பாதுகாப்பதற்கே போராடினர். இந்த பௌத்த நாட்டுக்குள் அனைத்து மதத்துக்கு கௌரவத்தை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதனை தற்போது செய்கின்றோம்.
அதேபோன்று, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்க முடியாது என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தாய் தந்தை மற்றும் இளையோரை தேர்தரல் காலத்தில் மாத்திரம் ஏமாற்றுவதற்கு விரும்பவில்லை. ஏமாற்றுவதால் எவ்வித பயனுமில்லை.
எங்களுக்கு முடியும் என்பதை முடியும் என்றும் முடியாது என்பதை முடியாது எனவும் கூறிவிட வேண்டும். நாங்கள் தமிழ் கலாசாரத்தை பாதுகாப்போம். மொழி உரிமையையும் பாதுகாப்போம்.
ஆனால், பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்க முடியாது என்பதுடன், வடக்கு கிழக்கையும் நாங்கள் ஒருபோதும் இணைக்க மாட்டோம் என்பதையும் தெளிவாக அறிவிக்கின்றோம்”
என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அந்த மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயார் என சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ச தெரிவித்ததாக காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை பொருட்படுத்தாது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்தவும் விரும்புவதாக நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் சந்தித்து குறைகளை விரிவாக கலந்துரையாடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்” என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் தேவை என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (07) , ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியினர் எந்த செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், எந்த பிரச்சினையும் இல்லை.
அவர்கள் 10 கூட்டணிகளை அமைத்தாலும் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
My heartfelt congratulations to @actorvijay for entering politics. All the best for your new chapter.
#ThalapathyVijay𓃵— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 2, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பதாக நடத்தப்படுமென தாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விங்கிரமசிங்கவும் ஒருவர். எமது கட்சியின் ஆதரவுடனே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
எனவே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது என்பதை கூறிக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர் என்றார்.
அரகலயவின் போது மஹிந்த ராஜபக்ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாகவும், இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு.“என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தியாவின் தந்தி டி.வி.க்கு வழங்கிய நேர்காணலிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலையப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா? என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல்,
அது தவறானது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை.
நாங்கள் நாட்டை பொறுபேற்ற போது நாடு மிகவும் நெருக்கடியான சூழலிலேயே இருந்தது. துரதிஷ்டவசமான பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, வேலையில்லாப் பிரச்சினை, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, டொலர் கையிருப்பில்லாத காலப்பகுதியிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றோம் என்று பதிலளித்தார்.
ராஜபக்ஷர்களின் ஆட்சியை கவிழ்க்க சர்வதேச ஆதரவுடன் சதி நடைபெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாமல் போனதைப்போல்தான் எம்மாலும் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை பெறமுடியாமல் போனது. எப்போது பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறுமோ அப்போது நான் நமது கட்சியை வடகிழக்கில் வெற்றிபெற செய்வேன் என்று சொல்லியுள்ளேன். என்றும் கூறியுள்ளார்.
மேலும், என்னுடைய தந்தை சொல்வார் இந்தியாவும் இலங்கையும் உறவினர் என்று. உறவினர் என்பதால் ஏற்றம் இறக்கம் இருக்கத்தானே செய்யும். மோடியின் தமிழ் பேசும் விதமும் அப்பாவின் தமிழ் பேசும் விதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
இதேவேளை எனக்கு டென்டுல்க்கரை எப்பவும் பிடிக்கும் யுவராஜையும் பிடிக்கும் இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா, அதேபோல் சினிமாவில் விஜய்யை மிகவும் பிடிக்கும் ஆனால் என்னுடைய அப்பாவுக்கு ரஜினியை பிடிக்கும் என்றும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:
டி.எம்.ராஜபக்ஷவுடன் நாங்கள் அரசியலைத் தொடங்கினோம். அதன்படி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எமது அரசியலுக்கு 98 வருடங்கள் ஆகின்றன. மகிந்த ராஜபக்ச 55 வருடங்கள் அரசியலில் இருந்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி பேசி நேரத்தை செலவிட மாட்டேன். 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் நிலையும் இன்றைய மாவட்டத்தின் நிலையும் மக்களுக்குத் தெரியும். அப்போது, இம்மாவட்ட குழந்தைகள், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மட்டுமே நினைத்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பல்கலைக்கழக அனுமதி பற்றி பேசுகிறார்கள்.
கடந்த காலத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தவில்லை. இதனால், உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இரண்டாம் தடவை பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பிள்ளைகளுக்கும் ஏதாவது நீதி கிடைக்க வேண்டும். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பரீட்சைக்குத் தோற்றுவது இலகுவான காரியம் அல்ல. உயர்தரப் பரீட்சையே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கான ஒரே வழியாக மாறியுள்ளது. இந்த கல்வி முறை மாற வேண்டும். பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தின் நோக்கத்தை கற்பிக்காமல், உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையை மறுசீரமைக்கும் அதிகாரத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும், மூன்று இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் போது அவர்களில் நாற்பதாயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்கின்றனர். அந்த பிள்ளைகளை அரச சேவையில் சேர்க்க முடியாது. ஏனெனில் ஆறு லட்சமாக இருந்த அரச சேவை பதினான்கு லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு இயந்திரத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவில்லை என்றால், புதிய அரசு ஊழியர்களை சேர்ப்பது நடைமுறையில் இருக்காது. எனவே எதிர்கால குழந்தைகளுக்காக நாம் என்ன செய்வோம்? அவர்கள் தனியார் பல்கலைக் கழகக் கல்வி அல்லது தொழிற்பயிற்சி பெற இடம் வழங்க வேண்டும். பயிற்சி நிலையங்களில் அந்த படிப்புகளுக்கு இடம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
இந்த சவாலை பார்த்த மஹிந்த ராஜபக்ஷ பசுமை பல்கலைக்கழகத்தை கட்டினார். கோத்தபாய ராஜபக்சவும் நகர பல்கலைக்கழகங்களை நிறுவ முயற்சித்தார் ஆனால் அது வெற்றியடையவில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தொழில் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நாங்கள் அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கிறோம். அண்மையில், நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை குறித்து விவாதம் நடந்தது. நாடாளுமன்றத்தில் எவ்வளவோ விவாதம் செய்தாலும் கிராம மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கிடைப்பதில்லை. நம் நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்யாத வரை, சர்வதேச நிறுவனங்களை நம்பியே இருக்க வேண்டும். இதனால்தான் அம்பாந்தோட்டை, அனுராதபுரம், ஒயாமடுவ ஆகிய இடங்களில் மருந்துக் கிராமங்களை அமைக்க ஆரம்பித்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களாக விவாதித்து வருகிறோம். இந்த நாட்களில் சனல் 4 ஒரு திரைப்படம் காட்டப்படுகிறது. அந்த சனலுக்கு ராஜபக்சக்களுடன், குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் பரம்பரை பிரச்சினை உள்ளது. 2009-ம் ஆண்டு இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் பற்றிய திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கம். அதனை ஓரளவு ஏற்றுக்கொண்டன. புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இராணுவம் பலவீனமடைந்தது. போர் வீரன் சிப்பாயாக மாறினான். இதனால், புலனாய்வு அமைப்புகள் வீழ்ந்தன. அவர்களின் தன்னம்பிக்கை குறைந்தது. அதன் முடிவைப் பார்த்தோம். போராட்டம் உருவாகும் போது அதைப் பற்றி அறிய உளவுத்துறை அமைப்புகள் இல்லை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் தகவல்கள் வழங்கப்பட்ட போதும் நல்லாட்சி அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. இன்றும் அந்த செனல் ராஜபக்சவுக்கு சேறுபூசுவதை விட நமது நாட்டின் புலனாய்வு அமைப்புகளை அழிக்கும் சதியை செய்து வருகிறது. இதனால் சிலர் அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மேடையில் சஹ்ரான் என்ற நபர் இருந்தார். தன்னைக் கொன்றவர்களின் தந்தை இப்ராஹிம் ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் உள்ளார். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்துவார்கள் என்று நினைக்க முடியாது.
எங்களிடம் ஒரு கொள்கை உள்ளது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமுறை அந்தக் கொள்கைகளை நவீனமயமாக்கி முன்னேற வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். தேசிய வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் நாம் அந்நியமாதலுக்கு எதிரானவர்கள். இந்த நாடு நவீன உலகத்தை சமாளிக்க வேண்டும். போராடியவர்களுடன் எங்களுக்கு பிரச்சினை உள்ளது. வீடுகளை எரித்தும், மக்களைக் கொன்றும் போராட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி அன்றைய தினம் 60000 இளைஞர்களைக் கொன்றது. 71,88,89 இளைஞர்களின் போராட்டம் தோல்வியடைந்தது. தனிநாடு உருவாக்க விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. நவீன உலகில் டிஜிட்டல் இளைஞர்கள் நடத்திய போராட்டம் கடைசியில் பலனை இழந்துவிட்டது. இந்த நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.