பந்துல குணவர்தன

பந்துல குணவர்தன

VAT செலுத்த வேண்டிய அனைவரும் VAT செலுத்துவதற்கு பங்களிக்க வேண்டும். –

VAT செலுத்த வேண்டிய அனைவரும் முறையாக அந்த கொடுப்பனவுகளை செய்தால், செலுத்தப்படும் VAT சதவீதத்தை குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

VAT வரி செலுத்துதல்களை முறையாகச் செய்தால் வருமானம் பெருகும் என்றும், அதன் விளைவாக VAT வரியை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

எனவே VAT செலுத்த வேண்டிய அனைவரும் VAT செலுத்துவதற்கு பங்களிக்க வேண்டும். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் VAT செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் VAT சதவீதத்தைக் குறைக்க முடியும் என்றும், VAT செலுத்தாத வர்த்தகர் வாடிக்கையாளர்களிடமிருந்து VAT வசூலித்தால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அது தொடர்பான அறிவிப்பை வழங்கும் முறையை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் மயமாக்கப்படவுள்ள இலங்கை போக்குவரத்து சபை..? – போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன !

2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை(SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இதனை தவிர்க்க வேண்டுமாயின், இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும். இலங்கை போக்குவரத்து சபையின் பல டிஜிட்டல் திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

‘தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.’ – பந்துல குணவர்தன

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய தினம்(30) அனுராதபுரத்திற்கு வந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

‘தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவது தான் தமிழ் கட்சியினரின் அன்றாட தொழில். இதன் ஊடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். ஹர்த்தால், போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது.

தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களை தமிழ் கட்சியினர் நடத்துகின்றனர். ஆனால், அவர்களின் ஆட்டத்திற்கு ஆட முடியாது’ – என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைகள் !

கடந்த ஆண்டு (2021) 521 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனினும் இவ்வாண்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைகள் பதிவாகியுள்ளன.  எனவே இதனைக் கருத்திற் கொண்டு குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையில் திருத்தத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு :

உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் சட்டம், நடவடிக்கை முறை மற்றும் பிரயோகங்கள் தொடர்பாகப் பொருத்தமான திருத்தங்களை அடையாளங்கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்காக குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமராகிறாரா பசில்ராஜபக்ச..? – பந்துல குணவர்தன வெளியிட்டுள்ள தகவல் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவி வழங்குவதற்கு தயாரா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறான விடயம் அமைச்சரவையில் பேசப்படவில்லை என தெரிவித்தார்.

“வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது” – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன

“வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை நாட்டில் எந்தவொரு பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையில் இலங்கை மத்திய வருமானம் பெறும் நாடாக மாறியது, ஆனால் 2014 ஆம் ஆண்டின் பின்னர் நிலைமை மாற்றம் கண்டது. 2014 ஆம் ஆண்டு நாட்டின் தலா வருமானம் 7.4 வீதமாக இருந்தது. ஆனால் இதுவே 2019 ஆம் ஆண்டு 2.3 வீதத்திற்கு குறைவடைந்தது. இதேபோல் சகல துறைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டுள்ளது.

எமக்கு நாட்டை ஒப்படைக்கும் போது மிக மோசமான நாடாகவே காணப்பட்டது. ஆனால் 2015 தொடக்கம் நல்லாட்சி அரசாங்கம் எந்தவித சவால்களும் இல்லாத நாட்டையே பொறுப்பேற்றனர். ஆனால் மீண்டும் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டினை நாசமாக்கியே கொடுத்தனர் என்றார்.

நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம், சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தோம். இவற்றையெல்லாம் வெற்றிகொண்டு மிகச்சிறந்த நாடாக மாற்றப்பட்டது. விரைவான அபிவிருத்தி கண்டது. இப்போது நாடாக பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியில் மிக்கபெரிய இரண்டு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஒன்று ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சி, அதேபோல் இப்போது தாக்கத்தை செலுத்தி வருகின்ற கொவிட் -19 வைரஸ் தாக்கம். இந்த இரண்டும் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நாம் கடன்களை செலுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே வருகின்றோம். இலங்கை கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள போதிலும் அவற்றில் இருந்து விடுபடும் மாற்று வேலைத்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் இருககின்றது.வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் பற்றி இரா.சம்பந்தன் அவர்கள் குறிப்பிடும் போது “இந்த வரவு – செலவுத் திட்டம் நாட்டையும் மக்களையும் மேலும் கடன் பொறிக்குள் சிக்கவைத்துள்ளது. ஏற்கனவே நாடு பாரிய கடன் பொறிக்குள் அகப்பட்டு சர்வதேசத்திடம் தொடர்ந்து கையேந்தும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மிகவும் மோசமான வரவு – செலவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.