வடக்கில் தொடரும் மருத்துவசாலை ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம் – கவனத்தில் கொள்வார்களா வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள வைத்தியர்கள்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடமை நேரத்தில் மருந்து வழங்கும் ஊழியர்கள் இல்லாததால் மருத்தை பெறுவதற்கு நீண்டநேரமாக நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை தோன்றியுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு தினமும் வெளிநோயார்கள் பலர் வந்து செல்கின்றனர். அந்தவகையில் தூர தேச பிரதேசங்களில் இருந்தும் மக்கள் சிகிற்சை பெறுவதற்காக அங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் 07.12.2024 அதிகாலையில் வந்து காத்திருந்த நோயாளிகள் மருத்துவரிடம் மருந்து சீட்டை பெற்று மருந்து வாங்க மருத்துவமனை மருந்தகத்தில் அதிக நேரமாக தாம் காத்திருப்பதாகவும், எனினும் மருந்து வழங்கும் ஊழியர்கள் இதுவரை வரவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர். இதனை சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவேற்றியும் உள்ளார்.
இலங்கையின் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளுமே முறையாக செயற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. அவற்றின் இயங்குநிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. எனினும் மருத்துவசாலைகள் தொடங்கி பாடசாலைகள் வரை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கவனக்குறைவான ஊழியர்கள் நடவடிக்கைகள் என பல குறைபாடுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மருத்துவமாபியாக்களை கைநீட்டி பாராளுமன்றம் சென்ற வைத்தியர் ஊசி அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றம் சென்ற சிறீபவானந்தராஜா என இரண்டு மருத்துவர்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இந்த நிலையில் மருத்துவசாலைகள் முறையாக செயற்படவும் – அதிகாரிகள் ஊழியர்கள் ஊழல் இல்லாமல், வேலை மற்றும் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் செயற்படவும் என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்க போகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.facebook.com/share/v/s2hTYjDkECG7i9uc/