பாகிஸ்தான் குண்டு வெடிப்பு

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு

பள்ளிவாசலில் தொழுகையின் போது வெடித்த குண்டு – 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி ! 

பாகிஸ்தானின் பெஷவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் முழுமையாக பாகிஸ்தானிலும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதே நேரம் ,

தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக அதிகாரிகள் தெரித்தனர்.
மேலும் துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளே, பிரதான மண்டபத்தில் நிரம்பியிருந்த வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அறிய முடிகின்றது.

எனினும், எந்த குழுவும் உடனடியாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

மத்திய பெஷாவரில் உள்ள மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு அதிகாரி உயிரிழந்ததாகவும், மற்றொரு அதிகாரி படுகாயமடைந்ததாகவும் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.