புடின்

புடின்

தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் ட்ரம்ப் – புடின் வாழ்த்து !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு தைரியசாலி என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் ஒரு வணிகர் ஆவார். அவர் அரசியலில் போதியளவு அனுபவத்தை கொண்டவர் அல்ல என்பதால் சில தவறுகளை அவர் விடலாம்.

எனினும், அவர் மீது உயிரை பறிக்கும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவர் அதை எதிர்கொண்ட விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக புடின் கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் எனவும் புடின் விளக்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் டொனால்ட் ட்ரம்ப்பை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியாக புடின் சாதனை வெற்றி !

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஸ்டாலினுக்கு பின்னர்  பிறகு மீண்டும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வென்று ரஷ்யாவின் நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

1999 இல் முதன்முதலில் பதவிக்கு வந்த முன்னாள் புலனாய்வுத்துறை தலைவரான லெப்டினன்ட் கேணல் புடின் இன்றுவரை ஆட்சியில் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.

இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம் என்றும், இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது என்றும் புடின் கூறியுள்ளார்.