பெஃப்ரல் அமைப்பு

பெஃப்ரல் அமைப்பு

தேர்தல் பிரச்சாரத்தின் போது பணம் வழங்கினால் பதவி பறிபோகும் – எச்சரிக்கிறது பெஃப்ரல் !

தேர்தல் பிரச்சாரத்தின் போது பணம் வழங்கினால் பதவி பறிபோகும் – எச்சரிக்கிறது பெஃப்ரல் !

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தைப் பின்பற்றி தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட வேண்டியது சகல வேட்பாளர்களினதும் பொறுப்பாகும் என பெஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், தங்களது பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாம் தகுதியானவர் என வேட்பாளர் நிரூபிக்க வேண்டும். அத்துடன், ஊழல் இன்றி பொது சொத்துக்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படக்கூடியவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தநிலையில் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவான ஒருவர், பிரசாரத்தின்போது, பொதுமக்களுக்குப் பணம் வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்படுமாயின் அவர் தமது பதவியை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் – பெஃப்ரல் அமைப்பு

தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக ஆணைக்குழுவின் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, தேர்தல் காலப்பகுதியில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றமை தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.