மகிந்த யாப்பா அபேயவர்த்தன

மகிந்த யாப்பா அபேயவர்த்தன

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் சுமந்திரன் கோரிக்கை!

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலைப் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் சதாரண பெரும்பான்மையுடன் அச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதாக இருந்தால் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது.

ஆனால், பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது எமக்கு அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக குழு நிலையில் தெளிவாக வழங்கப்படவில்லை.

அத்தோடு அத்த திருத்தங்கள் 12 மணிக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முறைமையும் உள்ளது.

ஆகவே உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நான் 13 விடயங்களை உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிட்டும் அவை உள்ளீர்க்கப்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளேன்.

அதன்பின்னர் அதனை சபையில் சுட்டிக்காட்டி சபாநாயகரிடத்தில் எழுத்துமூலமாக வழங்கினேன். அதனை சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடத்தில் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அத்திருத்தங்களை அமைச்சர் குழுநிலையில் இணைத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் குழுநிலையில் அவை இணைத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தற்போதைக்கு தெளிவாக இல்லை.

ஆகவே முழுமையாக ஆராயாத வரையில் குறித்த சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு நாம் சபாநாயகரைக் கோருவதற்கு உள்ளோம் என்றார்.

ஜனாதிபதி இலங்கையில் இல்லை என தவறுதலாக கூறி விட்டேன் – சபாநாயகர் மகிந்த யாப்பா அந்தர்பல்டி !

நாட்டு மக்களால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தற்போது தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திற்குச் சென்ற கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்று, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

இதேநேரம் இந்திய ஊடகம் ஒன்றில் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் போது  சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தன  “கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும்  எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கோட்டபாய மீண்டும் நாடு திரும்புவார் எனவும் தெரிவித்திருந்தார்.  எனினும் இன்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ‘கோட்டாபய ராஜபக்ச இன்னும் இலங்கையில் தான் இருக்கின்றார் எனவும் மேலும், தவறுதலாக கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியதாகவும் அவர் இன்னும் இலங்கையில் தான் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிரிவரும் 13ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக சபாநாயகர்  மகிந்த யாப்பா அபேயவர்த்தனவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.