மருத்துவர் சமதி ராஜபக்ஷ

மருத்துவர் சமதி ராஜபக்ஷ

“புகை பிடிப்போருக்கும் மது அருந்துவோருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவது பணத்தையும் வளங்களையும் வீணாக்குவதாகவே அமையும்” – மருத்துவர் சமதி ராஜபக்ஷ

மது மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவது பணத்தையும் வளங்களையும் வீணாக்குவதாகவே அமையும் என புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமதி ராஜபக்ஷ நேற்று(12.02.2021) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புகை பிடிப்பவர்கள் மற்றும் மதுப் பாவனையாளர்கள் இரு வகையினரும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். இவை அவர்களுக்கு வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றார்.

புகை பிடிப்போர் பலவீனமான சுவாச அமைப்பைக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி வைரஸின் முதல் நிலையாக பாதிக்கப்படுகிறது.

எனவே அல்கஹோல் அல்லது புகையிலை பயன்படுத்தாதோருக்கு இந்தத் தடுப்பூசிகளை வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். ஏனெனில் ஊசி போட்டுக்கொண்ட பின் அவர்களை வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவாகும்.

இந்தத் தடுப்பூசியைப் பெற்ற பின் குறைந்தது 06 மாதங்களாவது மது மற்றும் புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.