மிக்ஜாம் புயல்

மிக்ஜாம் புயல்

சென்னையில் தொடரும் மிக்ஜாம் புயலின் தாக்கம் – ஐவர் பலி !

புயல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(04) முதல் நிலவிய கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையினால் சென்னை முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் சென்னையிலிருந்து 130 கிலோமீட்டர் வடக்கு திசை நோக்கி பயணிப்பதுடன் இன்று(05) காலை தெற்கு ஆந்திராவை அடைந்து, காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் நெல்லூர் – காவாலி இடையே தீவிர புயலாக மாறக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வௌ்ள அனர்த்தம் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் சுமார் 150 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.