ராஜபக்ஷ அரசாங்கம்

ராஜபக்ஷ அரசாங்கம்

பாராளுமன்றம் இன்னமும் ராஜபக்ஷக்களின் பிடியிலே உள்ளது – சுமந்திரன் விசனம் !

பாராளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது. அதனைக் கலைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் நாடாளுமன்றம்
வெளிப்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கின்றேன்.

டலஸுக்கு வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டவர்களின் எண்ணிக்கை 113ஐ விட அதிகம் அவர்களுக்கு என்ன நடந்தது
என வே.வி.பியின் தலைவர் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அரச பதவிகளில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது.” – முருத்தெட்டுவே ஆனந்ததேரர் காட்டம் !

“நிதியமைச்சர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டமாகும். மக்களுக்காகவே அரசுடன் நிற்கிறோம். அதற்காக பதவிகளில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது.” என எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய வண.ஆனந்த தேரர்,

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்ப டுவதற்கு முன்னரே சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களைப் பெற மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சியின் கீழ் நாடு மீண்டும் சிறிமாவோ காலத்தின் வரிசை யுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே அரசாங்கத்தின் மீது மக்கள் சலிப்படைந்து விட்டனர். இப்படியே போனால் அரசாங்கம் கிராமத்திற்கு வந்து செல்ல மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ள பங்காளிக் கட்சி !

லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ விதாரண   தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்கள் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பத்தை கோரிய போதிலும் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் அதற்கு எந்த பதிலையும் வழங்கவில்லை.

இப்படியான நிலைமையில், அரசாங்கத்தின் கீழ் கூட்டணியில் இருக்க கூடாது என்பது தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், லங்கா சமசமாஜக் கட்சியின் அடுத்த அரசியல் சபைக் கூட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான யோசனையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.