யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்டசண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (03) பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கீரியான் தோட்டம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும்பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீதியில் சென்ற மோட்டார் வாகனம் ஒன்று திரும்புவதற்கு சமிக்ஞை காண்பித்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த குறித்த இளைஞனது மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த தொலைபேசி தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரதுசடலம் தற்போது சங்கானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
இதேவேளை இலங்கையின் வடக்கில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் தொடர்பில் ஏதேனும் ஒரு விபத்து மரணம் சரி பதிவாகும் துர்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது. ஒன்றில் பேருந்து விபத்து அல்லது புகையிரத கடவையை கடக்கும் போது விபத்து , அல்லது மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து என இது தொடர்கதையாகி வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.