வனிந்து ஹசரங்க

வனிந்து ஹசரங்க

இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பும் வனிந்து ஹசரங்க !

2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியடைந்தமைக்காக மிகவும் வருந்துவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், எல்லா நேரங்களிலும் நாட்டுக்காக தான் விளையாடியதாக ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

 

எல்பிஎல் போட்டிக்குப் பிறகு, தனது காயம் ஓரளவுக்கு குணமடைந்ததாகவும், ஆனால் பயிற்சி தொடங்கிய பிறகு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சத்திரசிகிச்சையின் பின்னர் 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தற்போது சத்திரசிகிச்சை முடிந்து 05 வாரங்கள் கடந்துள்ளதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய அளவில் தனது பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வனிந்து குறிப்பிட்டுள்ளார்.

 

12 வாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாட முடியும் என, வனிந்து ஹசரங்க நம்பிக்கை வெளியிட்டார்.

T20 பந்துவீச்சாளர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க முதலிடம் !

ஐசிசி ரி 20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவர் 695 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும், டி20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.

வனிந்து 175 புள்ளிகளுடன் அந்த நிலையில் நீடிக்கிறார்.

இதேவேளை, வனிந்து ஹசரங்க ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் 240 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரி20 சுழற்பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை – வனிந்து ஹசரங்க முன்னேற்றம் !

இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

அதன்படி, அவர் 697 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

வனிந்து ஹசரங்க இதற்கு முன்னர் ஐசிசி டி20 தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த நிலையில் மூன்று இடங்கள் முன்னேறி இவ்வாறு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் ஐசிசி ரி20 உலகக்கிண்ண தொடரில் வனிந்து ஹசரங்க 13 விக்கெட்டுக்களை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் வனிந்து ஹசரங்கவை விட 3 புள்ளிகள் அதிகமாக 700 புள்ளிகளை பெற்றுள்ளார்.

டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்ஷனா 9வது இடத்தில் நீடிக்கிறார்.

அத்துடன், இருபதுக்கு 20 சகலதுறை ஆட்டக்காரர்களின் தரவரிசையில் வனிந்து ஹசரங்க 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனிந்து ஹசரங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலி – முத்தையா முரளிதரன்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டியில் வனிந்து ஹசரங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முத்தையா முரளிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில், இந்தியாவில் இடம்பெறும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் இணைந்து கொண்டதுடன், போட்டிக்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

எனினும் அவரது பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமலும் இல்லை என முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சாளர்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும் எனவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.