வானவில் நடைபயணம்

வானவில் நடைபயணம்

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் பெருமைமிகு வானவில் நடைபவனி !

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்தி, அவர்களையும் மனிதர்களாக எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்து நடைபவனி ஒன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை இந்த நடைபவனி சென்றடைந்து அங்கு நிறைவு பெற்றிருந்தது.

சுமார் 50 பேர் வரையில் இந்த நடைபவனியில் கலந்து கொண்டனர்.

யாழ் சங்கம் என்கின்ற இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பணியாற்றுகின்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இவ் ஊர்வலத்தில் திருநங்கைகள் அதிக அளவில் கலந்து கொண்டதோடு தமது உரிமைகளை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகளை உடைய மனிதப் பிறப்புகளை என்ற கருத்துக்களையும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு ஆதரவாக நடைபயண பேரணி !

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது.

ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணம்! - GTN

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.