விவசாயத்துறை அமைச்சர்

விவசாயத்துறை அமைச்சர்

“எனது கொடும்பாவிகளை எரித்தாலும் நான் அஞ்சமாட்டேன்.” – விவசாயத்துறை அமைச்சர்

“எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடெங்கும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் எதிர்காலம், மக்களின் நலன்கருதியே இரசாயன உரப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. பசுமை விவசாயத்துக்கான அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இரசாயன உரம் கோருவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. நாம் எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளமாட்டோம். எனது கொடும்பாவிகளை எரிக்கட்டும். இதற்கெல்லாம் அஞ்சி பின்வாங்கத் தயாரில்லை” என்றார்.