ஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்

ஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்

மொஸ்கோ இசைநிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு – உக்ரைனை சாடும் புடின் !

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கி;ல் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது. அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கி;ல் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை  ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலைதான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

ஐஎஸ் அமைப்பு ரஸ்யாவில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல்கள் நவம்பர் மாதம் முதல் கிடைத்தன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் பாதி;க்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஐஎஸ்தாக்குதல் குறித்த எச்சரிக்கையை ரஸ்யாவிடம் பகிர்ந்துகொண்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கி தப்பிச்சென்றுகொண்டிருந்தவேளை கைதுசெய்யபட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உக்ரைன் புட்டின் தெரிவித்திருப்பதை  தகவலை நிராகரித்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரைனிற்கு சென்றுகொண்டிருந்தார்கள் என தெரிவிப்பது அவர்கள் முட்டாள்கள் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிப்பதை போன்றது என உக்ரைனின் புலனாய்வு பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலிற்கு உக்ரைன் காரணம் என தெரிவி;ப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி முயல்வதை உக்ரைன ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.