ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன

“திருடர்கள் கையில் சாவி” – திருடர்களுக்கு தீனி போட்டு வளர்க்கும் தேசிய கட்சிகளின் தலைமைகள் !

இம்முறை உள்ளூராட்சிமன்ற  தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன சார்பில் சிலாபம்  உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நேற்று (12)  மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர். உடலவெல பிரதேசத்தில் வீதித் தடையில் அவர் பயணித்த சிறிய லொறியை பொலஜஸார் சோதனையிட்டபோதே கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன்  அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முறுவ பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக லொறியில் மாதம்பேயிலிருந்து இந்தக் காசிப்பு போத்தல்களை கொண்டு சென்று கொண்டிருந்தபோதே இவை  கைப்பற்றப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு “தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் மக்களை லாவோஸுக்கு அழைத்துச் சென்று, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் அம்பலாந்தோட்டை உள்ளூராட்சி மன்றத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.”

https://www.thesamnet.co.uk//?p=94737

இதே நேரம் இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்களை தேசம்நெட் வெளியிட்டும் கூட இது தொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை.

https://www.thesamnet.co.uk//?p=94268

இப்படியாக இலங்கையின் தேசிய கட்சிகள் என குறிப்பிடப்படும் பொதுஜனபெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி போன்ற கட்சிகளின் அடிப்படை உறுப்பினர்களும் – வேட்பாளர்களும் கூட திருடர்களாகவும், மோசடிகாரர்களாகவும், குற்றவாளிகளாகவும் காணப்படும் நிலையில் இந்த கட்சிகளின் தலைமைகள் இது தொடர்பில் எந்த வித நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு மேடைகளிலும் ஊழலை ஒழிப்போம் – திருடர்களை சிறையிலடைப்போம் என வீரவசனம் பேசிக்கொண்டு தங்களுடைய கட்சிகளிலேயே திருடர்களை வைத்துககொண்டிருக்கிறார்கள். இதில் இன்னமும் வேதனையான விடயம் இந்த குற்றங்களை செய்ததாக நாம் மேலே குறிப்பிட்டுள்ள கட்சி வேட்பாளர்கள் அல்லது அங்கத்தவர்கள் இன்னமும் ஆட்சி தொடர்பான மன்றங்களில் அதிகாரத்துக்கு வரவில்லை. அதிகாரம் இல்லாத போதே இந்த உள்ளுராட்சி மற்றும் மாவட்ட மட்ட பிரதிநிதிகள் இவ்வவு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்து உயர் பதவிகளை பெற்றால் நாட்டின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். சாதாரணமாக கட்சிக்குள் நடக்கும் ஊழலையே ஒழிக்க திராணியற்ற இந்த தலைவர்கள் தான் நாட்டை மீட்கப்போகிறோம் என கூவித்திரிகிறார்கள்.