தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். ஆனால் கூட்டமைப்புக்கு ஒரு நிபந்தனை.” – அமைச்சர் மஹிந்த அமரவீர

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் அவநம்பிக்கையை துறந்து ஒருசில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.

நாட்டின் தேசிய பிரச்சினையாகவுள்ள தமிழ் மக்களின் பிரச்சசினைகளுக்கு இந்த அரசில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

“பதவிகளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.” – சிவஞானம் ஸ்ரீதரன்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் குறிப்பாக விக்னேஸ்வரன் ஐயா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளி வந்திருக்கின்றன அது தொடர்பிலே பல்வேறுப்பட்ட கருத்துக்கள் நியாயங்கள் எங்களிடம் கேட்கப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட பிரச்சினைகளாக பல விடயங்களை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள் அது தொடர்பில் நாங்கள் டலஸ் அழக பெரும அவர்களுக்கு எழுதிக் கொடுத்த விடயங்களையே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்தபோதும் இந்த விடயங்களை அவருக்கு கூறி இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் அன்றாடம் சந்தித்து வருகிற முக்கியமான பிரச்சனைகளான அரசியல் கைதிகளுடைய விடுதலை முதற்கட்டமாக ஒரு சிறு தொகையினரை யாவது விடுதலை செய்ய வேண்டும்
அத்தோடு அந்த காணி விடயங்களில் அதிக அக்கறை இந்த அரசாங்க செலுத்த வேண்டும் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்பது தொடர்பில் பரிசீலிக்கலாம்.

கடந்த ஆட்சியின் போது அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களாக பலரை இணைத்து அதில் ஒரு முடிவெடுக்கக்கூடிய நிலை இருக்கவில்லை.

இன்று வடக்கு ஆளுநருடைய செயற்பாடு மிகவும் பாரதூரமாக காணப்படுகின்றது ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் எடுத்த தீர்மானத்தை நிராகரித்து வடக்கு ஆளுநர் அலுவலகத்தினால் கடிதம் அனுப்பும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன ஏன்? இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும் இது ஒரு கண் துடைப்புக்கு மக்களை ஏமாற்றுவதற்காக வேண்டி அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும்.

இலங்கையினுடைய பொருளாதாரம் என்பது அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும் பொருளாதார பிரச்சனை என்பது வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம்.

ஆனால் அபிவிருத்தி குழு தலைவர் பதவிகளை நாங்கள் ஏற்பதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றோம் இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் அனைவருடனும் பேசி ஒரு தீர்வினை எடுப்போம்.” என தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து 5 வாக்குகள் – பகிரங்கப்படுத்தினார் ஹரின் பெர்ணான்டோ!

முழுப் பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்காக பிரதான எதிர்க்கட்சிக்கு புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். அதனால் எதிர்க்கட்சி தலைவர் நாடு தொடர்பில் தீர்மானிப்பாரா..? அல்லது எதிர்கால தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பாரா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரசிங்கவின் தைரியத்தில் எழுதப்பட்டதே தற்போது இடம்பெற்றிருக்கின்றது. என்றாலும் இந்த விடயம் பெரும் சவாலுக்கு உரியதாகும். இலங்கை மக்களுக்கு இதன்மூலம் பெரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நினைக்கின்றோம். முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்போது எங்களுக்கு பதவிகள் அவசியமில்லை. சரியாக இதனை செய்வார்கள் என்று நினைக்கின்றோம்.

இதற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டோரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம். தற்போது அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார். அவர் ஊடாக தேவையானவற்றை செய்யலாம் என்று நம்புகின்றோம். சர்வகட்சி அரசாங்க அமைப்பதே ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். அதற்காகவே அவர் பிரதான எதிர்க்கட்சி உட்டபட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுததார்.

அதனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது நாடு தொடர்பில் சிந்தித்து செயற்பாடுவாரா அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல் தொடர்பில் செயற்படுவாரா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் இந்த தேரதலில் ஐக்கிய மக்கள் சக்தி 14உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் 4அல்லது5 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம் என தெரிவித்தார்.

…….

கடந்த காலங்களிலும் 21 ஆம் திருத்தம் தொடர்பான பிரேரணை, கொழும்பு ஃபோர்ட் சிட்டி தொடர்பான பிரேரணைகள் கொண்டு வரப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தலைமையின் முடிவை எதிர்த்து ராஜபக்ஷ அரசின் முடிவுகளுக்கு ஏற்றாற் போல வாக்களித்தனர். அதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இம்முறையும் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனால் தமிழர் உரிமை , கோரிக்கை , ஜனநாயகம் என்றெல்லாம் இரவோடு இரவாக டலஸ் அழகப்பெரும குழுவினருடன் பேசிமுடித்துவிட்டு டலசுக்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பு ஒரு முடிவை அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து 5 பேர் வரை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பதாக ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளதானது தமிழர் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டலஸ் அழகப்பெருமவுக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதில் எம்.ஏ. சுமந்திரனுடைய பங்களிப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில் கட்சிக்குள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இழுபறி காணப்பட்டதை நேற்றைய தினம் எம்.ஏ.சுமந்திரனின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த பதிவுகள் தெளிவாக காட்டின. “நான் முதுகெலும்பு உள்ளவன். ஒரு முடிவை சரியாக எடுப்பேன் . உறுதியான நிற்பேன்” என்பது போல அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வியை விட ஆக கவலையான உண்மையை இந்த ஜனாதிபதி தெரிவு க்கான தேர்தல் தெரியப்படுத்தியுள்ளது.

அதாவது;

இந்த தமிழ்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் இம்மியளவும் ஒற்றுமை இல்லை. கூட்டாக இணைந்து ஒரு முடிவை கூட இவர்களால் எடுக்க முடியவில்லை.

இங்கு பரிதாபத்துக்குறியவர்கள் தமிழ் மக்களே.

போலித்தேசியம் பேசி – கிடைக்காத தனிநாடு பற்றி பேசிக்கொண்டிருக்கும் – தங்குளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத  இந்த தமிழ்தேசிய அரசியல்வாதிகளினை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குள்ளானவர்கள் தான்.

“புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள்..”- எம்.ஏ.சுமந்திரன் வழங்கியுள்ள பதில் !

“தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் எனவும் புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை.” எனவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி ஊடக சந்திப்பின் முழு விடயங்கள் வருமாறு,
கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில முக்கிய சந்திப்புகள் கலந்துகொண்டிருந்தோம். அத்துடன் பல இராஜதந்திரிகளின் விஜயங்கள் கூட இடம்பெற்றன. அந்தவகையில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் அமெரிக்க ராஜதந்திரிகள் சிலர் விக்டோரியா நூலன் என்கின்ற துணை இராஜாங்க செயலாளர் உட்பட மூன்று இராஜதந்திரிகள் விஜயம் செய்து ஜனாதிபதி உள்ளிட்டோரைச் சந்தித்துச் சென்றிருக்கின்றார்கள்.
கடந்த நவம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலே நடத்திய சந்திப்பின் போது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதிச் செயலாளர் டொனால்ட் டு அவர்கள் இவ்வாறான உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு வரும் என்று சொல்லியிருந்தவர். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடனும் சந்திப்பை நடத்தியிருந்தோம். அவர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் சந்திப்பை நடாத்தியிருகின்றார். தமிழ்த் தரப்பில் மiலையகத் தரப்பு சார்பில் மனோகணேசன் தலைமையிலான குழுவையும முஸ்லீம் கட்சிகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து கலந்துரையாடினார்.
எங்களுடன் நேற்றைய தினம் நடாத்திய உரையாடலிலே மிக முக்கியமாக கடந்த 25ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை சம்மந்தமாக பேசப்பட்டது. இது சம்மந்தமாக எங்களுக்கு முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும், நாங்கள் தெரிவித்த விடயத்தை ஜனாதிபதி எற்கனவே சொல்லியிருப்பதாகவும் உடனடி விடயங்கள் சம்மந்தமாக ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடு அல்லது வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இந்தியாவிற்கு உறுதியளித்ததாகவும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.
அந்த உடனடி விடயங்களில் நீண்டகால தமிழ் அரசியற் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நீதியமைச்சரும் நானும் இது சம்மந்தமாக ஒவ்வொருவர் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எங்களின் சிபாரிசினைச் செய்வோம். அதுபோல் அண்மையல் கைது செய்து விசாரணை இல்லாமல் இருப்பவர்களை ஏற்கனவே விடுவிப்பதாகச் சொன்னார்கள் அந்த விடயத்தை மிகத் துரிதமாகச் செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படாவிட்டால் அவர்கள் தெடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
நில அபகரிப்பு தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் இணங்கினார்கள். அதற்கப்பால் நிருவாக எல்லைகளை மாற்றுகின்ற முயற்சி நடைபெறுகின்றது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தாம் உடனடியாக வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இராணுவத் தேவைக்காகப் புதிய சுவீகரிப்புகள் செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. அது எவ்வாறு என்ற விடயங்கள் இன்னும் பேசப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேசி முதலீட்டாளர்களை எவ்வாறு வருவிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடுவோம். இந்த நான்கு விடயங்கள் சம்மந்தமாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இத்துடன் மேலும் முக்கிய விடயங்கள் குறித்தும் பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அதிலே பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சில உதாரணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. விரிவான பேச்சுக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும்.
நிருவாக எல்லைகள் சம்மந்;தமாகவும் நாங்கள் பேசியிருக்கின்றோம். அதிலே கல்முனை வடக்கு சம்மந்தமான விடயம் உள்ளிட்டவையும் பேசப்பட்டன. அவை தொடர்பில் விவரமாகச் சொல்லப்படாவிட்;டாலும் இனிவரும் நாட்களில் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் பேசும் போது அந்த விடயத்தைப் பற்றியும் பேசுவோம். மகாவவலி இடங்கள், மாவட்ட, பிரதேச செயலக எல்லைகள் மாற்றியமைக்கின்ற விடயங்கள் பற்றியும் இனிவரும் காலங்களில் பேசுவோம். ஆனால் அவையெல்லாம் உடனடியாக நிறுத்தப்படும் என்கிற வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிக்கும் போது இது நல்ல விடயங்கள் உடனடி விடயங்களுக்கான தீர்வை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியை நாங்களும் எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை எங்களுக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் புதிய அரசிலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்தவுடன் அரசியற் தீர்வு விடயம் பற்றிப் பேசலாம் என்ற விடயம் சொல்லப்பட்டிருந்தது. அந்த அறிக்கை வந்து அதற்கு அவர்கள் பேசுவதற்குத் தயாராகின்ற போது நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் இறுக்கமாக இருந்து பேசுங்கள். அதற்கு முன்னதாக அவர்கள் இணங்கிய விடயங்களைச் செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்புகள் தேவையான இடங்களில் உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என்றும் சொல்லியிருக்கின்றார்.
இதற்கு மேலதிகமாக அனைத்துக் கட்சிகள் தொடர்பான கூட்டமொன்றும் நடைபெற்றது. நாட்டின் தற்போயை பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயும் முகமாக அது கூட்டப்பட்டது. பல எதிர்க்கட்சிகள் அதனைப் பகிஸ்கரித்தன. அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு கட்சிகள் கூட இதனைப் பகிஸ்கரித்தன. ஆனால் இது அரசாங்கத்தைப் பொருத்த ஒரு விடயம் அல்ல. முழு நாட்டையும் நாட்டு மக்களையும் தமிழ் மக்கள் உட்பட அனைவரையும் மிக மோசமாகப் பாதிக்கும் ஒரு விடயம். அந்த விடயத்தை அரசாங்கம் பாhத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி இருக்க முடியாது. பொறுப்பான ஒரு அரசியற் கட்சியாக பொறுப்பான மக்கள் பிரதிநிதிகளாக இந்த விடயம் குறித்தும் அரசாங்கத்தோடு பேச வேண்டிய அத்தியாவசியத் தேவை இருந்தது. எனவே நாங்கள் அதில் கலந்து கொண்டு எங்கள் முன்மொழிவுகளை, சிபாரிசுகளைச் சொல்லியிருக்கின்றோம். இனிவரும் நாட்களிலே தொடர்ச்சியாக நடைபெறுகின்ற அந்தக் கூட்டங்களிலும் நாங்கள் பங்குபற்றுவோம்.
வடமாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை உற்பத்தி செயற்பாடொன்றுக்காக இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம். இந்தியத் திட்டங்கள், இந்திய முதலீட்டுத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் வருவதை நாங்கள் முற்றமுழுதாக வரவேற்கின்றோம். அது எங்களுக்குப் பலமாக இருக்கும். ஆகையினாலே இந்தியாவிற்கு இந்தத் திட்டங்கள் கொடுக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என்றறு தான் சொல்லியிருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேச நிபுனர்களும் பங்குபெறாலம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. எனவே அந்த அலுவலகத்தினூடாக நடத்தப்படுகின்ற விசாரணையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பொறிமுறையாக இருக்கலாம் அல்லது இந்த விசாரணை சம்மந்தமாக அவர்களுக்குள்ளேயே இரு நிலைப்பாடு வந்தது நீதியமைச்சர் சொன்னார் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினூடாக விசாரணைகளை மேற்காள்ளலாம் என்று அமைச்சர் பீரிஸ் சொன்னார் தென்னாபிரிக்காவின் உதவியோடு நாங்கள் உண்மை கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குகின்றோம் அதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று சொன்னார்கள். இந்த இரண்டிலும் சர்வதேச ஈடுபாடு இருக்கின்றது. ஆகையினால் விசாரணை வேண்டும் என்று நாங்கள் கோரியதற்கு அரசாங்கம் அதற்கு இணங்கியமையை வைத்துக் கொண்டு உள்ளக விசாரணைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமான கூற்று அல்ல.
நான் சென்னைக்குச் சென்ற போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரோடு நீண்ட பேச்சுவார்ததைகளை நடத்தியிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. அதிலொன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு வருகின்ற திட்டமும் இருக்கின்றது. அந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த நாங்கள் முயல்கின்றோம். அதிலே நேரடியாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பாத இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தினர் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து வர விரும்பினால் அதற்கான ஒரு வழியையும் நாங்கள் ஏற்படுத்துகின்றோம். ஆனால் இது எல்லாவற்றிற்கும் முன்னர் சர்வ கட்சி மாநாட்டிலே இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நான் சொன்ன ஒரே ஒரு விடயம் இந்த நாட்டிலே தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் சொல்லியிருந்தேன். அதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இன்னுமொரு விடயத்தையும் நான் கூறியிருந்தேன். புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. ஆகையால் இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது. அரசியற் தீர்வொன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் தான் அதைப்பற்றி நாங்கள் பேச முடியும்.” என தெரிவித்துள்ளார்.

“புலிகள் பெயரை சொல்லி இனிமேலும் அரசியல் செய்யாதீர்கள்.”- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச

“சர்வகட்சி மாநாட்டிலும், ஜனாதிபதியுடனான பேச்சிலும் கூட்டமைப்பினர் பங்கேற்றமையை வரவேற்கின்றேன்.” என  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அரசின் அதிருப்திக் குழு கட்சிகளின் தலைவர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, “விடுதலைப் புலிகள் ஆயுதத்தால் பெற முடியாததை கூட்டமைப்பு டொலரை முன்னிறுத்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நிதியமைச்சர், “கம்மன்பில, விமல் வீரவங்ச ஆகியோர் இனவாதத்தை முன்வைத்துத்தான் தமது அரசியலை நடத்தி வருகின்றார்கள்.

அரசுக்குள்ளிருந்தும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார்கள். இதனால் அரசு பெரும் அவப்பெயரைச் சந்தித்தது. தற்போது அரசுக்கு வெளியில் சென்றும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இவர்களின் இந்தக் கருத்துக்கள் அரச தலைவர் ஆரம்பித்துள்ள கூட்டமைப்புடனான பேச்சுக்கு எந்த விதத்திலும் தடங்கலை ஏற்படுத்தாது. அதேவேளை, தமிழ் – சிங்கள உறவிலும் பாதிப்பு ஏற்படுத்தாது.

அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை முன்வைத்து கம்மன்பில முன்வைத்து எத்தனை நாளைக்குத்தான் அரசியலை முன்னெடுக்கப்போகின்றார்கள்? சர்வகட்சி மாநாட்டிலும், ஜனாதிபதியுடனான பேச்சிலும் கூட்டமைப்பினர் பங்கேற்றமையை வரவேற்கின்றேன்.

அரச தலைவர் தலைமையிலான அரசு கூட்டமைப்புடனான பேச்சுக்களை தொடர்ந்து முன்னெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.” – சிறிதரன் விசனம் !

இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.”   எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பூநகரியில் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்து இருக்கிறார்கள்.

இலங்கையில் மக்கள் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள். எரிவாயுவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்,அத்தியாவசிய பொருட்களை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது. பொருளாதார நிலையில் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.

இப்படி இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்களில் கொரோனாக்காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகளின் போது முளைத்த இராணுவ சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

வனவளத்திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றன தமிழர்களின் நிலங்களை பறித்து விவசாயம் செய்வதற்கு தடையாக இருக்கிறார்கள். முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால்த்தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது” தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தில் இன்னும் அக்கறையுடன் இருக்கிறார் !

ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தில் இன்னும் அக்கறையுடன் இருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(30) காலை இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, பயங்கரவாத தடை சட்டத்துக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ள சுமந்திரன், இந்த திருத்தங்கள் புதியனவல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தை ஒத்திவைப்பது குறித்தும் இதன்போது சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீக்கப்படுகிறதா மாகாணசபை முறைமை..? – சுமந்திரன் கூறியுள்ள பதில் !

தற்போதைய நிலைமைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்தயகுழு கூட்டம் இன்று (30) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவிகரிக்கப்படும் பிரச்சனை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொதுஅமைப்புக்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தினை உடனடியாக அமுல்ப்படுத்தவேண்டும் என கலந்துரையாடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும். மார்ச் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும் இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை மறுநாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சரையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது சிங்கள பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியான மாகாண சபை முறைமை புதிய அரசியல் அமைப்பில் இல்லை என்கின்ற விடயம் தொடர்பாக கேட்டேன். அவர்கள் அதனை அடியோடு மறுக்கின்றார்கள். அவ்வாறான பிரேரனை வரவில்லை எனவும் தெரிவித்தனர். அத்துடன் அந்த செய்தி தவறானது என அமைச்சர்கள் எனக்கு கூறினார்கள். இதில் பத்திரிகை சொல்வது உண்மையா அமைச்சர்கள் சொல்வது உண்மையாக என்பது எனக்கு தெரியாது.

அத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படுகின்றது என ஒரு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கண்துடைப்பு நாடகம் என்றுகூட சொல்ல முடியாது. ஏனெனில் அதில் எதுவுமே இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு விடயத்தினையும் எடுத்து பார்த்தால் அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம் ‘ரிபோம்’ (Reform) என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் புதிய விளக்கம் கொடுக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்திருந்தேன். அவர் சிரித்து விட்டு எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்திற்கு நான் அறிவித்துள்ளேன் என்பதை அவருக்கு தெரிவித்தேன். இது தொடர்பாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன்.  இலங்கை அரசாங்கம் இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதனையும் அவருக்கு தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இரா. சும்பந்தன் மற்றும் சாணக்கியன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்காத நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றிருந்தது.

‘நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது.” – சுமந்திரன்

“நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்புள்ளது. நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது. எவ்வாறாயினும், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை சில முக்கிய கேள்விகளை எழுப்புகின்றது.

அரசாங்கம், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்துகின்றது. நாட்டு மக்களுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலரை இது மட்டுப்படுத்துகின்றது. அத்துடன், வெளிநாட்டு கடன்களை வழங்குவதில் மாத்திரம் ஒரு நாடு பெருமையடைந்து விடாது. நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது .

இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து நாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர் மூடிய அறையில் கடந்த தினத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.மக்கள் வழங்கிய பொறுப்புக்கு அமைய, நெருக்கடி சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கான மூலோபாயங்களை ஆராய்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாகவும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் தானும், இந்த சந்திப்பில் பங்கேற்றதாகவும் குறித்த அறிக்கையில்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

13 ஐ எதிர்த்துக்கொண்டு ஏன் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? – முன்னணியிடம் அடைக்கலநாதன் கேள்வி !

இந்தியாவின் தலையீட்டால் தான் தமிழை பிரதான மொழியாக ஏற்றுக் கொண்டனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஏனைய நாடுகள் வர்த்தக உடன்படுக்கையை மட்டுமே எமது நாட்டுடன் செய்கிறார்கள். இந்தியா மட்டும் தான் அன்று தொடக்கம் எம்முடன் இன பிரச்சினை,தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

அவர்களின் தலையீட்டை அடுத்து தான் தமிழ் மொழியும் பிரதான மொழியாக ஏற்றுக்கொண்டனர்.

நாம் 6 கட்சிகள் முட்டாள்கள்,கஜேந்திக்குமார் அணி அறிவாளிகள் அப்படியா?.அப்படியென்றால் ஏன் மாகாண சபைகளின் அதிகாரங்களை கேள்வி குறியாக்கும் திருத்தங்களை நீங்கள் எதிர்த்துக்கொண்டு ,மாகாண சபை தேர்தலில் போட்டியிட போகின்றீர்கள் என்று சொல்கிறீர்கள்.

இந்தியாவின் உரித்து எங்கள் சார்பில் அரசிடம் அவர்கள் பேச வேண்டும் என்றார்