EXIM வங்கி

EXIM வங்கி

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் EXIM வங்கி இணக்கம் !

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் EXIM வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன.

நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொதுக்கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சீன EXIM வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கடன் பெறுநர்கள்,வணிகக் கடன் வழங்குநர் குழுவுடன் சீன EXIM வங்கி தொடர்ந்தும் உறவைப் பேணுமென இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் சீன EXIM வங்கிக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.

அந்த ஒப்புதலின் பின்னர், இரண்டாவது தவணைக் கொடுப்பனவான 334 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையும் ன EXIM வங்கியும் அடுத்த சில வாரங்களுக்கு இதற்காக தீவிரமாக செயற்படுமென நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்த வேலைத்திட்டம் !

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்ட, இலங்கையில் உள்ள துறைமுகங்களில் மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, மேலும் இந்த திட்டேத்தினை செயல்படுத்தும் முகவர் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகும்.

இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும், மேலும் இது உள்நாட்டு துறைமுகங்களுக்கிடையில் போருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை திறம்பட செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி, இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39 மாதங்கள் ஆகும். அவற்றில், திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள், மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்கள். ஆகும்.

தற்போதுள்ள பிரேக்வாட்டரின் மறுசீரமைப்பு (1,400 மீ), தற்போதுள்ள பியர் எண். 1 (அளவு 96 மீ x 24 மீ) மறுசீரமைப்பு, பியர் எண். 2 (தற்போதுள்ள கம்பம் எண். 1 நீட்டிப்பு, அளவு 85 மீ x 24 மீ); மேலும் கடைசியாக, இந்த துறைமுகத்தின் முக்கிய அபிவிருத்திப் பணியானது பிரேக்வாட்டரில் கான்கிரீட் சாலை போன்ற உள்கட்டமைப்பை நிறைவு செய்தல் போன்ற 5 முக்கிய நடவடிக்கைளை ஆகும்.

மேலும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அணமித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணயை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.