Gotabaya Rajapaksa

Gotabaya Rajapaksa

பாகிஸ்தானில் தங்கம் வென்ற தமிழ் யுவதியை கௌரவித்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ !

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா – பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்.

தந்தையை இழந்த நிலையில் சாதித்த குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (11) குறித்த யுவதியை ஜனாதிபதி கௌரவித்தோடு அவருக்கு நினைவு பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து யுவதி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவால் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அண்மையில்  இந்துகாதேவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச  தனிமையான பயணத்தை மேற்கொள்வார் என்றால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

நாட்டின் அபிவிருத்திக்கு அமைச்சரவையை கோட்டாபய நியமிக்க வேண்டும். அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சரியான அரச உத்தியோகத்தர்களை நியமித்து அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசதலைவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் அரசாங்கம், வீழ்ச்சியடையும் என நம்புகிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்.

இதேவேளை, எல்என்ஜி விநியோகம் மற்றும் எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.