அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

Wanni_IDPs_Barbed_Wire_Fenceநரகலோகத்திற்கு செல்பவர்களுக்கு யமனின் ஆட்சியில் என்னென்ன கொடிய தண்டனைகள் வழங்கப்படும் என்ற கற்பனைக் கதைகள் பல பள்ளியில் படித்ததுண்டு. ஆனால் அந்தக் கதையிலும் கெட்டவர்களுக்குத்தான் அந்தத் தண்டனை என்றே கூறப்பட்டது. ஆனால் இவ்வாண்டு ஜனவரி முதல் முல்லைத்தீவு நரகலோகம் ஆக்கப்பட்டுவிட்டது. 250 000 வரையான அப்பாவித் தமிழ் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். கற்பனைக் கதையிலேயே நரகலோகத்தில் ஒரு யமனின் ஆட்சி தான் இருக்கும். ஆனால் வன்னி மக்களோ இரு யமன்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் நிலை:

முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இலங்கைப் படைகள் நெருங்க மோதல்கள் மேலும் தீவிரமடைந்து உள்ளது. 5 சதுர கி மீ பரப்பளவேயுள்ள இப்பிரதேசத்தில் 40 செல்சியஸ் வரை அனல் வீசும் வெப்பத்தில் தாகத்திற்கு தண்ணீரும் இன்றி பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழுகின்ற கொடுமை நினைத்துப் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.

அதற்குள் கர்பிணித் தாய்மார் குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். கைக் குழந்தைகள் பாலின்றித் தவிக்கின்றன. தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை குழந்தைகளுக்காவது ஏதாவது கொடுக்க முடியாதா, அவர்களது பசியாற்ற முடியாதா என்று அந்த அம்மாக்களும் அப்பாக்களும் தவிக்கின்ற தவிப்பு மரணத்தை விடக் கொடுமையானது. குடிப்பதற்கே தண்ணீரில்லாத போது குளிப்பது எப்படி? ஏப்ரல் 20 – 21ல் 100 000ற்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய போது அவர்களது அவலங்களை விபரிக்க வார்த்தைகள் இல்லையென சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வந்த மக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு அனுப்ப்படுகின்ற போது பஸ்வண்டிகளிலேயே உயிர் பிரிந்துள்ளனர்.

இப்போது இன்னும் மூன்று வாரங்கள் கடந்துவிட்டது. இன்னமும் புலிகளின் அரண்களாகப் பாவிக்கப்படும் அந்த மக்கள் தங்கள் உயிரைத் தாங்கி வருவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அந்த மக்கள் தவிட்டை தண்ணீரில் கரைத்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இலங்கை அரசு உலக உணவுத்திட்டம் மூலம் அனுப்புகின்ற உணவு அவர்களுடைய தேவைக்கு மிகமிகக் குறைவானது. அதனையும் புலிகள் மக்களுக்கு விற்பனை செய்கின்ற நிலைதான் அங்கு உள்ளது. அந்த உச்சவிலைக்கு தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அன்று வெளியேறியவர்கள் தம் இயலாமையை விபரித்து இருந்தனர்.

வன்னி முகாம்கள் பற்றிய வாக்கு மூலங்கள்:

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமை இவ்வாறு மரணப் போராட்டமாக இருந்தால், அங்கிருந்து தப்பி வருகின்ற மக்களுக்கு இலங்கை அரசு அடிப்படைத் தேவைகளைக் கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை. Hurricane Katrina -ஹரிக்கேன் கத்ரீனா அமெரிக்காவின் நியூஓர்லினைத் தாக்கிய போது அங்கு நிவாரணப் பணிகள் எதனையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிபிசி செய்தியாளர் மக் பிரைட், மூன்றாம் உலக நாடான இலங்கை சுனாமி நடந்த 48 மணி நேரத்தில் உதவிகள் மக்களைச் சென்றடைய ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படியான எதிர்பாராத சுனாமி அவலத்தின் போதே மக்களை உதவிகள் சென்றடைந்தன. ஆனால் இலங்கை அரசால் நன்கு திட்டமிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட மனித வெளியேற்றம் ஒன்று இடம்பெற்ற போது அரசு தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.

இது தொடர்பாக வன்னி முகாம்களுடன் தொடர்புடையவர்கள் தேசம்நெற்றுக்கு அளித்த வாக்குமூலங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. தகவல்களை வெளியிட்டவர்களது விபரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.

அரசு தயார் நிலையில் இருக்கத் தவறிவிட்டது. – வைத்தியர்:

”இந்த யுத்தத்தின் போது மக்கள் யாரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை என்பது அரசுக்கு நன்கு தெரியும். அப்படி என்றால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எல்லாம் எங்கு போனார்கள்? அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தான் இருந்திருப்பார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா? அவ்வளவு மக்களும் வெளியேறி வந்தால் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கவனிக்க வேண்டியது அரசினுடைய பொறுப்பு. என்ஜிஓக்களை முன்னரேயே அங்கு அனுமதித்து தயார்நிலையில் அல்லவா வைத்திருந்திருக்க வேண்டும்.

மக்கள் வெளியேறி வந்தபோது அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு என்பனவற்றுக்கு மணித்தியாலக் கணக்கில் தவிக்கவிடப்பட்டனர். உடனடி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கான போக்குவரத்துகள் ஒழுங்கற்று இருந்தது. பல மணிநேரம் மக்கள் பஸ் வண்டிகளிலேயே விடப்பட்டனர். சில சமயங்களில் அம்மக்கள் வாகனங்களிலேயே இரவைக் கழித்துள்ளனர்.

ஏற்கனவே வந்தவர்கள் ஓரளவு அங்கு பரவாயில்லாமல் உள்ளனர். ஆனால் புதிதாக முகாம்களில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உடல் பலவீனப்பட்டு இறந்துள்ளனர். இவர்களது உடல்கள் கொழுத்தும் வெய்யிலில் பல மணிநேரமும் சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே விடப்படுகின்றது. அதனால் உடல் பழுதடைந்து துர்நாற்றம், தொற்று கிருமிகள் என பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.

புலிகளும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். தங்களது பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடாமல் இன்று தமிழ் மக்களை பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். எல்லா இடங்களையும் கைவிட்ட அவர்கள் இந்த துண்டு நிலத்தில் என்னத்தை சாதிப்பதற்காக மக்களை இப்படிப் பலிகொடுக்கின்றனர். நாம் இவ்வளவு இழந்து இவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்து கண்டது தான் என்ன?”

மக்கள் விலங்குகளாக நடத்தப்படுகிறார்கள். – வங்கி அலுவலர்:

”நான் மக்களுடைய வங்கித் தேவைகளுக்காக இந்த முகாம்களில் பணியாற்றினேன். அங்கு மக்கள் படும் அவலங்கள் நெஞ்சைப் பிழிகின்றது. வெப்பநிலை காரணமாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் சில சமயம் பழுதடைந்த நிலையில் வந்தடைகின்றது. அதனை உண்டாவது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனையும் நெருக்குவாரப்பட்டு மிதிபட்டு வாங்க வேண்டி உள்ளது. சிலர் அதனை வாங்காமலேயே சென்று விடுகின்றனர். நான் சந்தித்த ஒருவர் இரு நாட்களாக தனக்கு உணவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

நான் சென்ற முகாம் மிகவும் பரந்த பிரதேசம் அதனைச் சுற்றிவர மூன்று மணிநேரம் எடுக்கும். காடுகள் அழிக்கப்பட்டு வெட்ட வெளியிலே கொளுத்தும் வெய்யிலைத் தடுக்க ஒரு ரென்ற் கூட அவர்களுக்கு இல்லை. கிழிந்து கந்தலான ஆடைகளுடன் தான் வந்துள்ளனர். ”

பாலியல் வல்லூறவுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளது. – உதவிகள் மேற்கொள்ளும் அரச அலுவலர்:

”நான் அடிக்கடி முகாம்களுக்கு சென்று வருவேன். ஒரளவு தொடர்புகளை ஏற்படுத்தி சில உதவிகளையும் வழங்கி வருகிறேன். முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. பெண்கள் மீதான கொடுமைகள் சில இடம்பெற்று உள்ளதை நான் அறிந்திருக்கிறேன்.

குறிப்பாக செட்டிகுளம் முகாம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றில் பொழுதுசாய குளிக்கச் சென்ற சில பெண்களின் (1 – 9) உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் குளிப்பதற்கு மறைவிடம் இல்லாததால் பொழுதுசாய இருட்டில் குளிப்பதற்குச் சென்று உள்ளனர். அவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடந்தது என்று தெரியவில்லை ஆனால் பத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு இவ்வாறு நடந்திருக்கலாம்.

இதனைச் சென்று முறையிடுவதற்கோ விசாரிப்பதற்கோ மக்கள் பயப்படுகின்றனர். இச்சம்பவங்கள் பரவலாக நடக்கின்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இச்சம்பவத்தையடுத்து அம்முகாம்களின் கட்டுப்பாடு இராணுவத்திடம் இருந்து பொலிசாரிற்கும், STF ற்கும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பொழுதுசாய்ந்த பின் ஆற்றுப் பக்கம் செல்ல வேண்டாம் என அவர்களுக்கச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நூற்றுக் கணக்காணவர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டாலும் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது இன்னமும் தெரியவரவில்லை. புலிகளைக் களையெடுக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் முகாம்களில் உள்ளவர்களும் அது பற்றிய சில தகவல்களை வழங்கியும் வருகின்றனர்.”

சுதந்திரமாக செயற்பட முடிவதில்லை. – மற்றுமொரு வைத்தியர்;

”நான் பணியாற்றும் முகாமிலும் பல்வேறு குறைபாடுகளுடன் மக்கள் வருகின்றனர். அவர்கள் அங்குள் சிங்கள மருத்தவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் மொழிப் பிரச்சினை காரணமாக முழுமையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் என்னிடம் வந்து முறையிடும் போது பல பிரச்சினைகளையும் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாமல் உள்ளது. எந்நேரமும் இராணுவ வீரர் ஒருவர் அருகில் இருப்பார். நோயாளியுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி எல்லாம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் அருகில் நிற்கும் போது அவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது. அது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இயலுமானவரை முகாமிற்கு சென்று கடமையைச் செய்துவிட்டு வருவதையே செய்கிறேன். இவ்வாறு தகவல்களைப் பரிமாறுவது ஆபத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் யுவதிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சில மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஆராய முடியாது.”

பொம்பிளைப் பிள்ளைகளின் நிலைதான் மிகவும் மோசம் – உதவிகள் வழங்கிவரும் வயதான தாயார்:

”நான் இந்த யுத்தத்தில் ஆரம்பத்திலேயே வந்துவிட்டதால் முகாமில் இல்லை. ஆனால் வவுனியா வைத்தியசாலைக்கு தினமும் சென்று வருகிறேன். அங்கு தான் மிகவும் காயப்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டவர்களைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பஸ்நிறைய நோயாளிகள் கொண்டு வந்து இறக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார். அவர்கள் குளித்து பல் விளக்கி பல நாட்களாக இருக்கும். கிழிந்த அழுக்கான உடைகளுடன் வருவார்கள். அவர்களுக்கான சோப், பற்பசை, ஆடைகளை கொண்டு சென்று கொடுத்து வருகிறேன்.

பொம்பிளைப் பிள்ளைகளுடைய நிலைதான் மிகவும் கஸ்ரமானது. அவர்களுடைய இயற்கை உபாதைகள் ஒருபுறம். வன்னியில் புலிகள் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால் சின்னஞ் சிறுசுகளுக்கெல்லாம் கலியாணம் செய்து வைத்திடுவினம். பதினைந்து பதினாறு வயசிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு கைக் குழந்தையும் வந்திடும். முந்தி கலியாணம் கட்டின பெடியளை பிடிக்காயினம். இப்ப என்னென்றால் கடைசி நேரத்தில கலியாணம் கட்டினவையையும் பிடித்துக் கொண்டு போய் அதுகளும் செத்துப் போக இந்தப் பிள்ளையள் கைக்குழந்தையோட முகாம்களில தவிக்குதுகள். (முகாம்களில் 350 பெண்கள் அடுத்த மாதம் குழந்தைப் பேற்றிக்கு தயாராக இருக்கிறார்கள் என அரசாங்க அதிபரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.)

புலிகளோடு தொடர்புடையவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள். சிலர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தாய் தகப்பன் இருந்தால் அவர்களிடம் கூறிவிட்டே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் விசேட முகாம்களில் வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

முதலில் வந்து தங்க வைக்கப்பட்டவர்களின் நிலைகள் பரவாயில்லை. அவர்களுக்கு அடிப்படையான விடயங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20லும் அதற்குப் பிறகும் வந்தவர்களுடைய வசதிகள் சரியான மோசமாக உள்ளது.”

இந்த நேரடிச் சாட்சியங்கள் வன்னி முகாம்களின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. விலங்குகளைக் கூட இவ்வளவு மோசமான சூழலில் வைத்திருக்க முடியாத நிலையில் வன்னி மக்களை அரசு இவ்வாறு வைத்திருப்பது வன்மையான கண்டணத்திற்கு உரியது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் கீழ்மைப்படுத்தும் வகையிலேயே அரசு நடந்து கொள்கிறது.

ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்படவில்லை. இந்நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்காண மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பான முன் ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம் அதற்கான பரவலான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும் கீழுள்ள விடயங்களை மேற்கொள்வதற்கான அழுத்தக் குழுவொன்று குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்டு அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனை ஒரு பொது வேலைத்திட்டமாக பரவலாக முன்னெடுப்பது மிக அவசியம்.

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Comments

  • vasakan
    vasakan

    “புலிகள் ஆயுதத்தை கீழே போடவேண்டும். மக்கள் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வருவதற்கு புலிகள் அனுமதிக்கவேண்டும்” என்றெல்லாம் எழுதிய தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் அந்த மை காயுமுன்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை அரசு எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை எழுதவேண்டியேற்பட்டுள்ளது. இது அவரின் அரசியல் அறிவின் வறுமையையே காட்டுகிறது. சரி. பரவாயில்லை. இப்பவாவது அரசு பற்றி எழுத முன்வந்தமைக்கு பாராட்டுக்கள். ஆனால் மக்களை அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வர புலிகள் அனுமதிக்கவேண்டும் என்று கூறிய இந்தியஅரசு இப்போது அந்த மக்களுக்கு இலங்கை அரசு செய்யும் கொடுமைகள் குறித்து எதுவும் கூறாமல் மெளனம் சாதிப்பது பற்றி தேசம் ஆசிரியர் எதுவும் கண்டனம் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.

    Reply
  • valarmathi
    valarmathi

    ஜெயபாலன்,

    வேதனையை இயலாமையை எங்ஙனம் வெளிப்படுத்துவது
    ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் “இலங்கையில் நடப்பதை இனப்படுகொலை என்று சொல்ல இயலாது” என்ற பொருள்பட நண்பர் சுசீந்திரன் தனது பேட்டியில் (சத்திய கடதாசி – யில்) மொழிந்திருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?!

    ஏன்! சேனன் தமிழகம் வந்திருந்த போதில் இங்கிருந்து உருவாக்கிய ‘சர்வதேசிய’ (அஃது என்னவோ!) இயக்கத்திற்கு Campaign against Genocide of Tamils என்றல்லாமல் Stop the Slaughter against Tamils என்ற நாமகரணம் வலிந்து சூட்டப்பட்டது ஏன்?

    What is the problem about ‘naming’ the ongoing events in Sri Lanka as “Genocide” rather than “Slaughter of Tamils”?

    What is the historicity of Genocide?

    What is Genocide?

    Is there any Euro-Centric bias in ‘naming’ certain events as Genocide and not naming some events as such that are beyond the purview of the West?

    I am plagued by such questions

    But people who dont have any questions and who opt for easy actions would perhaps finally end up in what Susheendran and Shoba Sakthi and finally what Senan did … not targeting upon an obvious ongoing phenomenon in Sri Lanka … perhaps one that has already been “staged” in 1983 … the Genocide … perhaps a residual ongoing process … but end up denying such a process … a Genocidal Process … but end up at ‘peace’ at any cost

    kudos for the revolutionary ethos …
    valar …
    http://vinaiaanathogai.blogspot.com

    Reply
  • மாயா
    மாயா

    கண்டனம் தெரிவித்து ஆகப் போவது ஒன்றுமில்லை. புலிகள் முடிந்த பின் இவை தானாகவே நிற்கும். அதுவரை முகாம்களுக்கள் இருக்கும் மக்களை அரசு வெளியேற்றாது. 1.5 லட்சம் மக்கள் என்பது ஒரு நகரத்தில் இருக்கும் மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.

    வெளியிலேயே கடத்தல்களும் கற்பழிப்புகளும் கொலை கொள்ளை ஆகியனவும் நடைபெறும் போது இங்கும் அது போன்ற நிகழ்வுகள் நடவாது என்பதை உறுதி செய்ய முடியாது.

    புலிகளோடு இருந்த மக்களை புலிகள் பலாத்காரமாக இழுத்துச் சென்று கொலைக் களத்துக்கு அனுப்பியதும் , தப்பி வர முயன்ற மக்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்றதையும் நாம் கண்டனம் செய்ய வேண்டும்.

    இவையல்ல முக்கியம். இப்போது எஞ்சியுள்ள மக்களை நிரந்தர அமைதியோடு வெளியேற வாழ வழி அமைப்பதே முக்கியமானது. அதுவரை தமிழர்களது தலைவிதியை நோவதைத் தவிர வேறு வழியில்லை.

    புலிகளின் இறுதி முடிவுக்குப் பின்னரே, வடக்கே வசந்தமோ அல்லது வடக்கே வாழ்வோ நடைபெறும். அதுவரை ………….

    Reply
  • kammal
    kammal

    போராட்டம் ஆரம்பித்து சுமார் 25 வருடங்கள் சென்ற பின்பும் அந்த போராட்டம் வெற்றி பெறாதது ஆச்சரியம் இல்லை. மாறாக இத்தனை வருடம் கழிந்த பின்பும் நாம் எமது நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?என்று இனங்காணாமல் இருப்பதே மிகவும் வருத்தத்திற்குரியதாகும். இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்காகவே தியாகம் செய்து போராடுவதாக கூறும் நபர்கள் எம் மத்தியில் இருக்கிறார்களே? இத்தனை அழிவுகளுக்கும் துணை நிற்கும் இந்திய அரசை தமிழ்மக்களின் நலனில் உண்மையான அக்கறை உடையவர்கள் என்று வாய் கூசாமல் சொல்பவர்கள் எம் மத்தியில் இருக்கின்றனரே? என்ன செய்வது? தமிழ் மக்கள் எவ்வளவு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினாலும் இவ்வாறான நபர்களின் தொடர்ச்சியான துரோகங்களினால் தொடர்ந்தும் தோல்வியையே சந்திக்கின்றனர்.

    Reply
  • mathan
    mathan

    /கண்டனம் தெரிவித்து ஆகப் போவது ஒன்றுமில்லை. புலிகள் முடிந்த பின் இவை தானாகவே நிற்கும். /மாயா
    அரசின் தவறுகளை சுட்டிக்காட்டத் தேவையில்லை என்பது அரச ஆதரவாளர்களின் நிலை. அதுபோல் புலிகளின் பகுதிக்குள் நடக்கும் தவறுகளை பெரிதுபடுத்த தேவையில்லை என்பது புலி ஆதரவாளர்களின் நிலை. ஆனால் யாராவது இந்த இருவரின் தவறுகளை கொடுமைகளை மக்கள் நலன் சார்ந்து சுட்டிக்காட்டினால் உடனே இந்த இரு பிரிவினரும் ஒன்றுசேர்ந்து அவரை நடைமுறையற்ற தத்துவவாதி என பட்டம் சூட்டுகின்றனர்.

    இவர்களிடம் நான் கேட்கிறேன்
    இரண்டையும் இரண்டையும் கூட்டினால் ஜந்து என்பது இலங்கை அரச ஆதரவாளர்களின் நிலை.இரண்டையும் இரண்டையும் கூட்டினால் மூன்று என்பது புலி ஆதரவாளர்களின் நிலை. ஆனால் இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நாலு என்பது சரியான நிலை. இந்த சரியான நிலையை நாம் கூறினால் ஜந்து என்றும் மூன்று என்றும் தவறான நிலை கொண்டவர்களுக்கு கோபம் வருகிறது.

    Reply
  • sivam
    sivam

    அரசு தவறு இழைக்கும் போது எவ்வித தயக்கமும் இன்றி அதைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்திருக்கும் தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் உண்மையிலே பாராட்டப்படவேண்டியவரே. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தன்னால் இயன்ற உதவிகளை அந்த அகதி மக்களுக்கு செய்து வருகிறார். எனவே இந்த அகதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கருத்து சொல்ல அவருக்கு முழு தகுதி உண்டு. அவருடைய பணிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //“புலிகள் ஆயுதத்தை கீழே போடவேண்டும். மக்கள் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வருவதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும்” என்றெல்லாம் எழுதிய தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் அந்த மை காயுமுன்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை அரசு எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை எழுதவேண்டியேற்பட்டுள்ளது. இது அவரின் அரசியல் அறிவின் வறுமையையே காட்டுகிறது. சரி. பரவாயில்லை. இப்பவாவது அரசு பற்றி எழுத முன்வந்தமைக்கு பாராட்டுக்கள்.// வாசகன்

    நண்பர் வாசகன் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் அளிக்காத ஆயுதங்களைப் புலிகள் வைத்திருப்பதிலும் கிழே போடுவதே மேல். என்ற எனது கருத்தை எழுதுவதற்கு முன்னும் இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதம் பற்றி மிகத் தெளிவாக எழுதியுள்ளேன். தவறுகள் எந்தத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டாலும் அவை சுட்டிக்காட்டப்பட வேண்டும். செலக்டிவ் அம்னிசியாவால் பாதிக்கப்பட்டது போன்று புலியென்றோ அரசு என்றோ சலாம் போட்டால் தான் அரசியல் அறிவைக் காட்ட முடியும் என்றால் அந்த அறிவு வராமல் இருப்பதையிட்டு மகிழ்ச்சியே.

    //அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை அரசு எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை எழுதவேண்டியேற்பட்டுள்ளது.//
    அரச கட்டுப்பாட்டிற்குள் வந்த மக்களை அரசு கொடுமைப்படுத்துகிறது என்பதற்காக வன்னி மண் வணங்காமண் அங்கு போய் புலிகளுக்கு மண்முட்டையாக பாதுகாப்பு அரணாக இருங்கள் என்று என்னால் மை காயுமுன்னரோ மை காய்ந்த பின்னரோ எழுத முடியாது.

    ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு உள்ளேன் வன்னி மக்கள் இரு யமன்களின் கையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று. அதில் ஒப்பீட்டு அளவில் அரச யமனின் பக்கம் வந்தால் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் தான் மக்கள் அந்த யமனிடம் இருந்து இந்த யமனிடம் வருகிறார்கள்.

    மக்கள் எப்போதும் தெளிவாகவே சிந்திக்கிறார்கள். அந்த அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். அவர்களது அரசியல் அறிவு பற்றி நீங்கள் மதிப்பீடு செய்வதிலும் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.

    மீண்டும் குறிப்பிடுகிறேன் இன்னும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களும் போராளிகளும் காப்பாற்றுப்படுவதாக இருந்தால் அந்த மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காத மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டு உள்ள ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைப்பதே யதார்த்தமான வழி.

    தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    வளர்மதி இலங்கை அரசு இனப்படுகொலை செய்கிறது என்று குற்றம்சாட்டுவதற்கு எல்ரிரிஈ மிகப்பெரும் தடையாக உள்ளது. இன்றைய இனப்படுகொலையை இலங்கை அரசு எல்ரிரிஈ இன் அணுசரணையுடனேயெ மேற்கொள்கிறது. இலங்கை அரசின் கைகளில் எல்ரிரிஈ செயற்படுகிறது. இலங்கை அரசு இனப்படுகொலையை நடத்துகின்றது. எல்ரிரிஈ அதற்கு களத்தை அமைத்துக் கொடுத்து உள்ளது. வன்னியில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரின் இழப்பிற்கும் இலங்கை அரசும் எல்ரிரிஈயும் காரணமாக உள்ளனர். அதனால் சிங்கள பேரினவாத அரசும் யாழ் மையவாத எல்ரிரிஈ யும் வன்னி மக்களை இனப்படுகொலை செய்வதாக ஒருவர் குற்றம்சாட்டினால் அது நியாயமானதே.

    //இப்போது எஞ்சியுள்ள மக்களை நிரந்தர அமைதியோடு வெளியேற வாழ வழி அமைப்பதே முக்கியமானது.//
    மாயாவின் இந்தக் கூற்று யதார்த்தமானது. அந்த மக்களை அமைதியொடு வாழ வழிசெய்ய வேண்டும்.

    //இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்காகவே தியாகம் செய்து போராடுவதாக கூறும் நபர்கள் எம் மத்தியில் இருக்கிறார்களே? இத்தனை அழிவுகளுக்கும் துணை நிற்கும் இந்திய அரசை தமிழ்மக்களின் நலனில் உண்மையான அக்கறை உடையவர்கள் என்று வாய் கூசாமல் சொல்பவர்கள் எம் மத்தியில் இருக்கின்றனரே? என்ன செய்வது?// கம்மல்
    இலங்கை இராணுவமோ இந்திய அரசோ தமிழ் மக்களுக்கு தியாகம் செய்வதாகக் கூறுவது சுத்த அபத்தம். ஆனால் இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கை அரசு இந்திய அரசு டக்ளஸ் கருணா புலி புளொட் என்று இருக்கிற அத்தனையையும் வைத்துத்தான் தீர்வு காண முடியும். இருக்க்கிறதை வைத்துக் கொண்டு தான் தீர்வை உருவாக்க முடியும்.

    //தமிழ் மக்கள் எவ்வளவு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினாலும்//
    நூறாயிரம் மக்களை பலியிட்டு போராட்டம் நடத்தினால் வீரம் செறிந்த போராட்டமா? ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு பிணக்குவியலின் மீது நின்று வீரம்செறிந்த போராட்டம் என்று மார்பு தட்டவா இவ்வளவு அழிவும்.

    ஏன் நேபாளில் மாவோயிஸ்ட்டுக்கள் இப்படி நூறு ஆயிரம் என்று பலிகொடுத்தா போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் ஒரு அரசியல் தெளிவு இருந்ததே. அதனால் அவர்கள் மக்களை வகைதொகையின்றிப் பலிகொடுக்கவில்லை.

    தமிழ் மக்களுடைய போராட்டம் முளையிலேயே கிள்ளப்பட்டு விட்டது. அதன் பின் நடப்பதெல்லாம் வெறும் அதிகாரத்திற்கான போட்டி. அதற்கு மக்கள் பலியிடப்படுகின்றனர். வீரம் செறிந்த> மறத் தமிழன் வணங்காமண் அடங்காப்பற்று எல்லாம் வெறும் றீல் தான்.

    சிவம் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த உதவிகளை நான் மட்டும் மேற்கொள்ளவில்லை தேசம் ஆசிரியர் குழுவினரும் தேசம் நண்பர்களும் முழுமையான ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

    தொடர்ந்தும் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • ஜீவகன்
    ஜீவகன்

    கட்டுரை நேர்மையானதாகவே தோன்றுகிறது. இந்தக்கட்டுரை படிக்கப்படாமலே பின்னூட்டங்கள் பின்னூட்டங்களை மறுவாசிப்புச் செய்வதாய், மூலக்கட்டுரையுடன் எந்தத் தகவல் சம்பந்தமுமின்றி ஆராயப்படும். ஏதோ ஒரு சுதந்திரத்தின் அடிப்படையில் அவையும் அனுமதிக்கப்படும். சரி புறணி தமிழனுக்குப் புதுசில்லைத்தானே விட்டுவிடுவோம். நண்பர் மதனின் கருத்தில் உள்ள நியாயத்தை நானும் வழிமொழிகிறேன். மேலும் அநியாயத்தை யார் செய்தாலும் பாதிக்கப்படுபவர்கள் சார்பில் உண்மைகளை அம்பலப்படுத்த ஊடகத்தில் இருப்பவர்கள் மை காயவோ, குருதி காயவோ காத்திருக்கவேண்டியதல்ல என்பதும் என் தாழ்மையான கருத்து.

    தொண்ணுறுகளின் மத்தியில் யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது தென்மராட்சியில் புத்தூர் சந்திப் பகுதியூடாகத் திரும்பிய மிகபெரும்பாலான தென்மராட்சி மற்றும் வலிகாம மக்களும் அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுமதிக்கப்பட்டனர் முழு மக்களையும் எந்தவொரு முகாம்களிலும் அடைத்து வைக்கவில்லை (கைது,கடத்தல், கற்பழிப்பு, காணமல்போதல் மற்றும் மனித படுகுழிகளை மறுக்கவில்லை அனால் உள்ளூர் புலம்பெயர்வு(IDP) முகாம்கள் அன்று இருக்கவில்லை.) அத்தனைக்கும் வலிகாமம் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகள் அப்போது படையினரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கவில்லை. தட்டார் தெருசந்தி, ஓட்டுமடம் சந்தி மற்றும் திண்ணைவேலிச் சந்தியை ஊடறுத்த மண் அணையின் வெளிப்புறமான வலிகாமம் பகுதிகள் மக்கள் குடியேற்றத்தின் பின்னரே ராணுவ முகாம்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

    இப்போது மட்டும் எல்லோரையும் ஏன் 3 வருடகாலம் கொண்ட IDP முகாம்களில் அடைக்கவேண்டும்? களைஎடுப்போ சுத்திகரிப்போ அல்ல நோக்கம் அதை எங்கு வேணுமானாலும் வைத்து செய்யலாம். உண்மையில் வவுனியாவை விட கிளிநொச்சி இப்போது முழுதும் படையினர் வசம் உள்ளதும்,மிககுறைந்த உலகதொடர்பு கொண்டதும் நீர்வளம் பொருந்தியதுமான நிலப்பரப்பு. எனவே இதற்கு பின்னான அரசியல் மீள் குடியேற்ற நோக்கம் கொண்டது. அது ஆளும் ஆளப் போகின்ற கட்சிகளின் அரசியல் சுக துக்கங்களை தீர்மானிக்கின்ற விஷயம். மீள்குடியேற்றம் தனியே தமிழர்களை மட்டுமன்றி வேறு இனத்தவர்களையும் கொண்டுவரப்போகிறது. சரி அரசியல் இல்லாத உலகும் கொடுமையானதுதான். யாரோடு யார் இணைந்து வாழுவது, இணக்கமின்றிப்போவது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தீர்மானிக்கட்டும். அனால் பிரச்சினை இதுபோன்ற மனித அவலங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டியதும் அடிப்படை தேவைகள் சவாலாகும் சூழலுக்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டியதும் தான்.

    அதைத்தான் சகலரும் செய்ய வேண்டிய கட்டாயத்தில், வந்திருக்கின்ற உங்களின் குரலையும் வரவேற்கிறேன். மக்களின் நலன்களுக்கான உங்களின் குரல் தொடரட்டும்.

    Reply
  • Thirumalaivasan
    Thirumalaivasan

    நண்பர் வாசகன் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் அளிக்காத ஆயுதங்களைப் புலிகள் வைத்திருப்பதிலும் கிழே போடுவதே மேல். என்ற எனது கருத்தை எழுதுவதற்கு முன்னும் இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதம் பற்றி மிகத் தெளிவாக எழுதியுள்ளேன். தவறுகள் எந்தத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டாலும் அவை சுட்டிக்காட்டப்பட வேண்டும். செலக்டிவ் அம்னிசியாவால் பாதிக்கப்பட்டது போன்று புலியென்றோ அரசு என்றோ சலாம் போட்டால் தான் அரசியல் அறிவைக் காட்ட முடியும் என்றால் அந்த அறிவு வராமல் இருப்பதையிட்டு மகிழ்ச்சியே./
    ஜெயபாலன்

    ஒரு ஊடகவியலாளனான ஜெயபாலனைத் தயவுசெய்து பக்கச்சார்புகொண்ட அரசியல்வாதியாக்கி நடுத்தெருவில் விடாதீர்கள். உங்கள் கருத்துகளை மட்டும்தான்> அல்லது உங்கள் ஒவ்வொருவருக்கும் சாதகமான கருத்துகளுக்க மட்டும்தான் செவிசாய்க்கவேண்டும் என்று ஒரு சுதந்திரமான ஊடகவியலாளனை வலிந்து கொச்சைப்படுத்தாதீர்கள். உங்கள் இத்தகைய நிலையால் தான் இன்று ஈழத்தமிழர்களுக்கென்று துணிந்து பேசும் ஒரு பத்திரிகையாளனையும் எமது சமூகத்தால் உருவாக்கமுடியவில்லை. அத்தகைய சூழலில் வளரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமான தேசம் ஜெயபாலனை சுதந்திரமாக இயங்கவிடுங்கள் பிளீஸ்

    Reply
  • மாயா
    மாயா

    //இதற்கு பின்னான அரசியல் மீள் குடியேற்ற நோக்கம் கொண்டது. அது ஆளும் ஆளப் போகின்ற கட்சிகளின் அரசியல் சுக துக்கங்களை தீர்மானிக்கின்ற விஷயம். மீள்குடியேற்றம் தனியே தமிழர்களை மட்டுமன்றி வேறு இனத்தவர்களையும் கொண்டுவரப்போகிறது. சரி அரசியல் இல்லாத உலகும் கொடுமையானதுதான்.- ஜீவகன் //

    முன்னர் இது தவறு என்று நான் நினைத்ததுண்டு. இன்று இது சரியென்றே படுகிறது. இலங்கை முழுவதும் அனைத்து மக்களும் கலந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதுவே பல்லின மக்கள் கலாச்சாரத்தின் சிறப்பு. இது வன்னிப் பரப்பில் நிச்சயம் நடக்கும். இது ஒரு நிரந்தர அமைதிக்கு மட்டுமல்ல சுடுகாடாக இருக்கும் வன்னியின் செழிப்புக்கும் வழி செய்யும்.

    இது மண் மீட்போருக்கு கசப்பாக இருக்கலாம். சமாதான விரும்பிகளுக்கு இது சரி என்று படும். உதாரணத்துக்கு சிங்கப்பூரைத்தான் எடுத்துக் கொள்ளலாம்.

    சிங்கப்பூரில் சீனர்களும் – மலாயர்களும் – இந்தியர்களும் வாழ்கிறார்கள். சிங்கப்பூரின் மக்கள் ஒரு இனமாக ஒரே இடத்தில் வாழ்வதை தடுத்து அனைவரோடும் இணைந்து வாழும் நிலையை லீகுவான்யூ சிங்கப்பூரை திட்டமிடும் போதே நடைமுறைப்படுத்தினார்.

    சிராங்கூன் நகரில் மட்டுமே சீனர் – மலாயர் – இந்தியர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தனிப் பகுதிகள் சரித்திர ரீதியாக விடப்பட்டுள்ளது. அடுத்த பகுதிகளில் அன்றைய மக்கள் தொகை விகிதாசாரத்தின்படி கலந்து வாழ குடியிருப்புகளை லீ உருவாக்கினார். அது பல்லின மக்களின் புரிந்துணர்வுக்கு மட்டுமல்ல. அப் பகுதியின் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிந்தது.

    அங்கே இன வாதி சண்டைகள் ஏற்படவேயில்லை. கடுமையான சட்டங்கள் இல்லாமல் மக்களை கட்டுப்படுத்த முடியாது. அதை லீ அவர்கள் தேசத்தின் நலன் கருதி செய்தார். அதே நிலை இலங்கை முழுவதும் உருவாக வேண்டும். அது நிரந்தர அமைதிக்கு மட்டுமல்ல, அப்பகுதியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாகும். அரசு கூட அது தமிழ் பகுதிக்கு செய்யும் சேவை என தட்டிக் கழிக்க முடியாது.

    இலங்கையில் புத்தளம் மாவட்டத்தை பார்க்கலாம். அங்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. அனைத்து மக்களும் கலந்துவிட்டதால் இனப்பிரச்சனைகள் குறைந்து காணப்படுகின்றன. அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடியதாக அல்லது கருத்துப் பரிமாற்றங்களை செய்யக் கூடியதாக இருக்கிறது. தமிழீழ பிரச்சனையின் தாக்கம் புத்தளம் மாவட்டத்தின் உடப்பு மற்றும் புத்தளம் நகருக்குள் இருந்ததால் பாதிப்புகள் இருப்பது மட்டுமே அங்கே உள்ள பிரச்சனை. இவை இனிவரும் காலங்களில் மாறும்.

    யாழ்பாணத்து படித்தவர்கள் வன்னியில் தேர்தலில் நின்று வென்றதால், அவர்கள் தேர்தலுக்கு பின்னர் அடுத்த தேர்தலுக்கே வன்னி சென்றார்கள். கூட்டணியினர் தம்மை செழுமைப்படுத்திக் கொண்டனரே தவிர வன்னியை காயவே வைத்து சிங்கள அரசு மீதே குற்றப்பத்திரிகை வாசித்தனர். வன்னிக்கு எதையுமே இவர்கள் செய்ததில்லை. மக்களை மடையர்களாகவே வைத்து வாழ்ந்த புத்திசாலிகள் . இப்போதும் அவர்கள் பெயர்களில் TNA ஆனாலும், அவர்கள் தமிழ் பத்திரிகைகளில் மட்டும் போராடுவோர்களாகவே இருக்கிறார்கள். பத்திரிகை செய்திகளில் அவர்கள் போராடுவதாக மக்கள் நினைக்கின்றனர். பாராளுமன்றத்தில் இவர்கள் அதிகம் செய்தது வெளிநடப்பு செய்தது மாத்திரமே? முதலில் இவர்களையும் புலிகளோடு புதைக்க வேண்டும். இவர்களால் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. அண்மையில் ஆரம்பித்த மலைக தமிழ் கட்சிகள் அளவாவது சேவை செய்யாதவர்கள் இவர்கள். ஆகக் குறைந்தது கைதான ஒருவரை மீட்கக் கூட வக்கில்லாதவர்கள். வெட்கக் கேடு. இலங்கையில் பேச வேண்டியதை வெளிநாடுகளில் பேசி , இலங்கையில் மெளன விரதம் இருப்பவர்கள். இவர்களை தூக்கி எறிவோம். அது தவிர்க்க முடியாதது. டக்ளஸ் கூட புலிகளில் இருந்து விலகி வந்தவர்களுக்கு இயக்க சார்பில்லாமல் உதவிகளை மட்டுமல்ல , வேலை வாய்ப்பகளையும் பெற்றுக் கொடுத்தமை எனக்குத் தெரியும். அந்த பெருந்தன்மை கூட TNA யிடம் இல்லை.

    போர் முடிவுக்கு வந்ததும் இன்னொரு தனி ராஜ்யக் கனவோடு மிகுதியாக இருப்போரையும் சாகடிக்காமல் , மிஞ்சும் மக்களை வாழ வைப்பது என்பதையே நாம் குறியாகக் கொள்ள வேண்டும். இனியும் தனி நாடு என உளறுவது தேவையற்ற உயிர் இழப்புகளையே உருவாக்கும். இது போதும். இனியும் வேண்டாம். வன்னியில் பிறந்த மக்களின் தலைமையின் கீழ் , அந்த மக்கள் அரசோடு இணைந்து முட்டாள்கள் பின் செல்லலாது அந்த மக்களும் அந்த மண்ணும் சுபீட்சம் பெற வேண்டும். அதுவே எமது எண்ணமாகவும் பிராத்தனையாகவும் இனி இருக்க வேண்டும்.

    Reply
  • Rohan
    Rohan

    நீ எங்களுடன் இல்லை என்றால் எதிரியுடன் இருக்கிறாய் என்ற வாட்கம் மீண்டும நாற்றம் எடுப்பதை நாம் இங்கும் பார்க்கிறோம்.

    ஜெயபாலன் புலியை எதிர்த்து எழுதும் போது தகவல்களின் நேர்த்தி பற்றி அக்கறை கொள்ளாத புலி வசை நாயகர்கள் புலி பற்றி அல்லாது அரசின் கயமைத் தனம் பற்றி எழுதுகிற் ஜெயபாலனுக்கு புழுதி வீச வருகிறார்கள்.

    யூ ரி எச் ஆர் போன்ற அமைப்புகளின் சேவையைத் தன் பிரசாரத்துக்குப் பயன்படுத்திய அரசு இப்போது அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஏதோ மனித உரிமைக்குச் சேவை செய்வதாக ஒரு புல்லரிப்புடன் புலி எதிர்ப்புச் செய்த இவர்கள் மனித் உரிமை முறிப்பு தாராளமாக நடக்கும் இப்போது முகவரி அற்றுக் கிடக்கிறார்கள்.

    புலி ஆட்சி செய்த போது தமிழன் செத்தான. அப்போது புலி பிழை. புலி அழிப்பின் பெயரில் தமிழன் சாகிறான். இப்போதும் புலி பிழை. புலியின் பிரதேசத்தில் அரைப் பட்டினி கிடந்த தமிழன் அரசின் வதை முகாமில் பட்டினிப் பிணமாக்கப் படுவது சாலவும் சரி என்று வாதம் செய்யும் சில அரை வேக்காட்டு அறிவாளிகளுக்கு மாற்றுக் கருத்து என்ற லேபல் ஒரு கேடு!

    மகிந்த ஒரு சரியான ஆளாக இருந்திருந்தால் இத்தனை கொலைகள் நடந்திருக்குமா? ஒரு கொலைக்கு(திருகோணமலை மாணவர்கள்) நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னொரு கொலைக்கு (மூதூர்) எவன் துணிவான்? இத்தனை ஊடகவியலாளர்கள் யார் கையினால் வதைக்கப் பட்டனர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கலாகாது.

    மகிந்தவிடமிருந்து தமிழருக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்காது என்று எனது தேட்டம் எல்லாவற்றையும் பந்தயம் வைக்க நான் தயார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எந்த கொத்தால் அளந்தாயோ! அப்படியே திருப்பி அளக்கப்படும்.
    பசியாய்யிருந்தேன் நீங்கள் எனக்கு போஷனம் கொடுக்கவில்லை.
    தாகமாய்யிருந்தேன் நீங்கள் எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை.
    இது புலிகளா? சிங்கள அரசா?
    முடிவு வாசகர்களின் கையில்.

    Reply
  • மாயா
    மாயா

    //chandran.raja எந்த………….. முடிவு வாசகர்களின் கையில்.//
    புலிகள் செய்ததும் அரசு செய்ததாக வந்தது.
    அரசு செய்வது அரசு செய்வதாகவே வருகிறது.
    புலிகள் கொடுத்த தண்டனை துரோகிகளுக்கு
    அரசு கொடுத்த தண்டனை மக்களுக்கு

    தராசை றெடியா வச்சிருக்கோ
    தலைவர் முடிந்ததும் மக்கள் கொண்டு வந்து கொட்டுவாங்கள்.
    அப்ப நிலுவை புரியும்?
    நிறுக்கத்தான் முடியாமல் போகும்?

    Reply
  • Rohan
    Rohan

    //தலைவர் முடிந்ததும் மக்கள் கொண்டு வந்து கொட்டுவாங்கள்// என்ப்து மாயா வாதம். புலி மீது கொண்ட கிலி பல தமிழர்கள் இலங்கையிலிருந்து துடைத்து எறியப்படுவதிலிருந்து காத்து வைத்திருந்தது. புலி முடிந்ததும் தேசபக்தி மிக்க உடன்பிறப்புகள் உபயத்தில் கடலிலும் புதைகுழிகளிலும் கொட்டபபடப் போகும் தமிழ் அப்பாவிகள் பற்றிய நடுக்கம் தூக்கத்திலும் என்னை விதிர்க்க வைக்கிறது.

    புலம் பெயர்ந்த பாதுகாப்பில் மற்றவர்கள் துன்பம் தெரியாது தீர்ப்பு வழங்கும் சிலருக்குப் படி அளக்க யாரோ ஒருவன் தராசுடன் காத்திருக்கிறான் என்று நானும் நம்ப விரும்புகிறேன்.

    Reply
  • sus
    sus

    //மீண்டும் குறிப்பிடுகிறேன் இன்னும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களும் போராளிகளும் காப்பாற்றுப்படுவதாக இருந்தால் அந்த மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காத மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டு உள்ள ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைப்பதே யதார்த்தமான வழி.//

    ஜெயபாலன் நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீங்களா புலிகள் ஆயுதங்களை விட்டு சரணடைந்தால் அரசு பிரச்சனை தீர்ந்து விட்டது புலியை அழித்து விட்டோம் இனி மேல் மக்கள் எல்லாம் நிம்மதியாக வாழலாம் எனச் சொல்லி அவர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்புவார்களா?[அதாவது அவர்களை மீள் குடியேற்றம் செய்வார்களா?] இப்படித் தான் மக்களை வவுனியா வா வா எனக் கூப்பிட்டு அவர்களின் மானமும் போய்,உயிரும் போய் சிறையில் இருக்குறார்கள். எல்லாம் நடந்து முடிந்த பின் கவலைப்படுகிறது தான் உங்கட வேலை போல அதே போல தான் இதுவும் புலிகள் சரணடைந்தால் அல்லது அந்த இடத்தை விட்டு காட்டுக்குள் பின் வாங்கினால்;

    1)அந்த இடம் முழுக்க சிங்கள குடியேற்றம் நடக்கும் அதை உங்களால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மட்டுமே முடியும் அந் நேரம் சில வேளை யோசிப்பீங்கள் புலி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என.

    2)அதற்கு பிறகு தான் வன்னியில் இருக்கும் தமிழருக்கும் மட்டும் இல்லை முழு இலங்கையில் உள்ள தமிழருக்குமே ஆபத்து தான் வேனுமெண்டால் சர்வதேசத்திற்காக கொஞ்ச நாள் அரசு அமைதியாக நல்ல அரசு போல இருக்கும்.

    3)ஓரே ஒரு சந்தோசமான விடயம் நடக்கும் அது என்னவென்றால் அரசோடு சேர்ந்திருப்பவர்களுக்கு அரசு வைக்கும் ஆப்பு. அப்ப தெரியும் அவர்களுக்கு புலி இருக்கும் வரை தான் தங்களுக்கு மதிப்பு இருக்கும் என.

    4)எல்லாவற்றுக்கும் மேலாக அரசு புலிகளை சர்வதேசத்திடம் சரணடைய விடுமா?

    Reply
  • gobi
    gobi

    sus முன்பு கேட்டதையே கேட்பதால் பார்த்திபனின் இப்பதிலை மீளபதிவிடுகிறேன். நன்றி பார்த்திபன்.

    //எனக்கொரு சந்தேகம் பிரபாகரன் செத்து புலிகள் அழிந்தால் அதற்கு பிறகு தமிழருக்கு இலங்கையில் பிரச்சனையே இருக்காதா? இல்லையாயின் – sus//

    உங்கள் கேள்விகளுக்கு தெளிவாக விடை தந்தாலும் அவை உங்களுக்கு விளங்கினாலும் விளங்காத மாதிரித் தான் காட்டிக் கொள்வீர்கள். காரணம் உங்களைப் போன்றவர்களுக்கு அங்கு அல்லறுரும் மக்களை விட புலிகள் தப்பிப் பிழைப்பது தான் முக்கியம். புலிகள் தப்பிப் பிழைத்தால் தான் புலிகளைச் சாட்டி பலர் சுனாமிச் சுருட்டல், வன்னிமக்களுக்கு உடனடி நிவாரணச் சுருட்டல், வணங்கா மண் சுருட்டல் என்று தொடர்ந்து கொண்டே போகலாம். புலிகள் அழிந்து விட்டால் பின் எவரை சாட்டி சுருட்டுவது?? சரி இனி உங்கள் கேள்விகளுக்கு வருவோம்.

    //1)ஏன் கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு முன் மீட்கப் பட்ட யாழ்ப்பாணமும், தற்போது மீட்கப்பட்ட கிழக்கும் ஏன் இன்னும் அவிவிருத்தி அடையாமல் இருக்கு? – sus//

    ஒரு தகவலைக் கூட உங்களால் சரியாக அறிய முடியவில்லை. யாழ்ப்பாணம் சந்தரிகா ஆட்சியின் போது தான் மீட்கப்பட்டது. அது நடந்து கிட்டத்தட்ட 14 வருடங்கள். அதே போல் கிழக்கு தற்போதைய மகிந்தவின் ஆட்சியின் போது மீட்கப்பட்டது. இவை இரண்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததை விட தற்போது அபிவிருத்தி அடைந்து தான் உள்ளன. ஆனால் முழுமையாக இன்னும் அடையவில்லை என்பதே உண்மை. அரசாங்கத்துடன் சமீபத்தில் சந்தித்த தமிழர்களுக்கு அரசு சுட்டிக் காட்டிய உண்மை ஒன்று. கிழக்கில் சிவில் நிர்வாகத்தை திறைமையாக எடுத்தச் செல்லக் கூடிய தமிழ் நிர்வாகிகள் இன்று கிழக்கில் இல்லை. இதற்கு யார் காரணம். புலிகள் நாட்டிலிருந்த புத்திசாலிகளைப் போட்டுத் தள்ளினார்கள். தப்பியவர்கள் நாட்டை விட்டே சென்று விட்டார்கள். இளைய சமுதாயத்தை போராட்டடமென்ற போர்வையில் படிப்பறிவில்லாத முட்டாள்களாக்கி 2 தலைமுறையைப் பாழடித்தார்கள். ஆனால் பிரபாகரன் தனது பிள்ளைகளுக்கு மாத்திரம் அடல் பாலசிங்கம் மூலமும் வெளிநாட்டிலிருந்த சில புத்திசாலி மாணவர்களை வரவழைத்தும் கல்வியறிவு ஊட்டினார். அப்படி வந்த புத்திசாலி மாணவர்களையும் மூளைச்சலவை செய்து தற்கொலைப் போராளிகளாக மாற்றியே திருப்பியனுப்பட்டனர். அவர்கள் தான் பின்னாளில் தீக்குளிப்பு உண்ணாவிரதமென்று ஆரம்பித்து வைத்தவர்கள். இதே நிலைதான் இன்று யாழிலும் தொடருகின்றது.

    //2)பிரபாகரன் பிறப்பதற்கு முன்னர் தமிழருக்கு பிரச்சனையே இல்லையா? இனப் படுகொலையே நடக்கவில்லையா? சிங்கள இட ஆக்கிரமிப்பு நடக்கவில்லையா? – sus//

    இனப்பிரைச்சினை இருந்தது அதை சிங்கள அரசியல்வாதிகள் வளர்த்து விட்டது அனைத்தும் உண்மை. ஆனால் ஆரம்பித்திலிருந்த நிலையை விட ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்பு தான் அது விசுபரூபம் எடுத்தது. மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் மூர்க்கத் தனமான தாக்குதல்களையும் ஆரம்பித்தார்கள். அதற்காக புலிகளோ மற்றைய இயக்கங்களோ ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது தப்பு என்று நான் சொல்ல வரவில்லை. அந்த ஆயுதப் போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தாமல் மற்றைய இயக்கங்களை அழிக்க சகோதரப் படுகொலைகளை புலிகள் என்று ஆரம்பித்தார்களோ அன்று போராட்டத்தின் திசையே மாற ஆரம்பித்து விட்டது. அதன் பின் நடந்தவற்றைத் தானே நீங்களும் நானும் மற்றவர்களும் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

    //3)புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பிறகு அரசு தமிழருக்கு எல்லா உரிமையும் தந்து விடுமா? அதன் பின்னர் இனப் படுகொலையோ, நில ஆக்கிரமிப்போ நடக்காதா? – sus//

    25 வருடகாலமாக அரசியல்க் கட்சிகள் ஒன்றும் கிளிக்கவில்லையெனக் கூறியே இளைஞர்கள் கையில் ஆயுதமெடுத்தார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் இன்று 30 வருடங்களைக் கடந்தும் என்ன கிளித்தார்கள். தமிழ் அரசியல்க் கட்சிகள் அகிம்சைரீதியாக போராடி போது சிங்கள அரசு செய்த அட்டுழியத்தை விட இளைஞர்கள் ஆயுதமேந்திய பின் செய்தவை தான் அதிகம். அதுபோல் முன்பு சிங்கள அரசுகள் குடியேற்றமென்ற போர்வையில் ஆக்கிரமித்ததை விட போராட்ட காலத்தில் ஆக்கிரமித்தவை தான் அதிகம். இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் சிங்கள அரசால் கொல்லப்பட்ட மொத்த தமிழர்களை விட ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின் குறுகிய காலத்தினுள்ளேயே புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதிகம். பின் யாருக்காக போராட்டம்?? எதற்காக போராட்டம்?? ஆயுதமேந்தியதால் அழிவுகள் தான் அதிகம் என்ற பின் அந்த ஆயுதங்களைக் கீழே போடுவது தானே முறை. சரி புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டால் உரிமை கிடைத்து விடுமா என்கின்றீர்கள். நிச்சயம் சிங்கள அரசு ஒரு நல்ல தீர்வை எட்டியே ஆகவேண்டிய சூழ்நிலை தான் தற்போது உள்ளது. காரணம் சிங்கள மக்களும் தொடரும் யுத்தங்களினால் பொருளாதாரச் சுமைகளை தாங்க முடியாமலும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டும் உள்ளார்கள். இதனால் அவர்களும் ஒரு தீர்வை எட்ட அரசிற்கு உதவும் நிலையிலேயே உள்ளார்கள். இவையெல்லாவற்றையும் விட மேலாக அரசிற்கு வெளிநாட்டு அழுத்தங்கள் இது விடயத்தில் கூடியுள்ளன. எனவே எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் அரசு ஒரு தீர்வுக்கு வந்தேயாக வேண்டும். அப்போதும் அரசு தவறு செய்ய முனைந்தால் இன்று வெளிநாட்டில் போராட்டம் நடந்தும் நாம் அந்தப் போராட்டத்தை மீண்டும் தொடரலாம். ஆனால் புலிக்கோசங்களையோ புலிப்பதாதைகளையோ விட்டுவிட்டு தமிழ் மக்களாக மக்களுக்காக குரல் கொடுப்போம். இன்று இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடாத்தியும் எந்த அரசும் காணா முகமாக இருப்பதற்கு இந்தப் புலிக்கொடியும் புலிக் கோசமும் தான் காரணம் என்று உண்மை ஏன் உங்களைப் போன்றவர்களுக்கு உறைக்கவில்லை??

    //4)கடைசியாக புலிகள் ஆயுதங்கள் வைத்திருந்தும் ஒன்றும் சாதிக்கவில்லை எனச் சொன்னீர்கள் சாதித்திருந்தால் பேசாமல் இருந்திருப்பீங்களா?
    தயவு செய்து பதில் தரவும் நன்றி. – sus//

    நிச்சயமாக சாதித்திருந்தால் இன்று சரித்திரமே மாறியிருக்கும். ஒவ்வொரு தமிழனும் புலிகளை தலைமேல் வைத்து கூத்தாடியிருப்பார்கள். ஆனால் இன்று நடந்தது என்ன?? சாதித்திருந்தால் பேசாமலிருந்திருப்பீர்களா என்ற உங்களின் கேள்வியே புலிகள் சாதிக்கவில்லையென நீங்கள் ஒப்புக் கொண்டதை காட்டுகின்றது. சாதிக்க முடியாதவர்கள் அந்த நிலையிலிருந்து இறங்குவதே தானே முறையானது.
    புலிகளுக்கு பல சந்தர்பங்கள் சாதிப்பதற்கு கிடைத்திருந்தும் அவற்றை அவர்கள் தமது சுயநலத்திற்காக மட்டுமே பாவித்தார்கள். உதாரணமாக.

    1)இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த போது அதை நிறைவேற விடாது செய்ததில் புலிகளின் பங்கும் பெரிதானது. அதை நிறைவேற்ற இந்திய அரசிற்கு உதவியிருந்தால் பின்னாளில் படிப்படியாக எமது அதிகாரங்களைப் பெற்றுத் தர இந்திய அரசும் உதவியிருக்கும். இவ்விடயத்தை அப்போது இந்திய அரசுடன் தொடர்பிலிருந்த அமிர்தலிங்கம் அவர்களே அன்றைய இந்திய அரசின் நோக்கத்தை பின்னாளில் சுட்டிக் காட்டியுமிருந்தார்.

    2)பினபு இந்திய இராணுவத்தை எதிர்க்க பிரமேதாசா அரசுடன் கைகோர்த்து நாங்கள் சகோதரர்கள் இன்று அடித்து கொள்வோம் நாளை அணைத்துக் கொள்வோம் எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூடிக் குலாவினர் புலிகள். இந்தச் சந்தர்ப்த்தைப் பாவித்து பிரேமதாசா அரசுடன் ஏதாவது பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு பெற்றார்களா புலிகள்?? மாறாக தமது அரசியல் எதிரிகளை போட்டுத் தள்ள பிரேமதாசா அரசின் மறைமுக உதவிகளையும் ஆயுதங்களையும் கோடிக்கணக்காக பணத்தையும் பெற்றுக் கொள்ளவே புலிகள் முயன்றனர்.

    3)ரணில் அரசுடன் போர் நிறுத்த ஒப்பத்தம் செய்யப்பட்ட போது கூட புலிகள் தம்மை வளப்படுத்தவே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கருணா புலிகளிலிருந்து பிரிந்த பின் கருணாவிடமிருந்து ஆயுதக் களைவைச் செய்யச் சொல்லியே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரணில் அரசுடன் சுவிசில் பலமுறை பேச்சு வார்த்தை நடாத்திய புலிகள் ஒருமுறையாவது தமிழ்மக்களுக்கான தீர்வைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்களா?? மாறாக வரி என்ற பெயரில் பகல் கொள்ளை அடித்ததும் வெளிநாட்டுத் தமிழர்களிடமும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களிடமும் தமிழ் மக்களுக்கு நிவாரணமளிக்க என்று சுருட்டிய பணத்தில் தமகு்கு ஆடம்பர பங்களாக்களும் நீச்சல் தடாகங்களும் கட்டி சொகுசு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் வன்னியில் புலிகளின் பிடியில் மாட்டுப்பட்ட மக்கள் வழமைபோல் அன்றும் இன்றும் மரங்களின் கீழ் வாழ்க்கையெனும் கற்கால வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்களே புலிகள். இவர்களை நம்பி எனியும் நம் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையையும் அழித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா??///—–பார்த்திபன் on April 17, 2009-

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    சுஸ்: ஜெயபாலன் நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீங்களா புலிகள் ஆயுதங்களை விட்டு சரணடைந்தால் அரசு பிரச்சனை தீர்ந்து விட்டது புலியை அழித்து விட்டோம் இனி மேல் மக்கள் எல்லாம் நிம்மதியாக வாழலாம் எனச் சொல்லி அவர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்புவார்களா?

    ஜெயபாலன்: சுஸ் நீங்கள் நான் எதற்காக ஆயுதத்தை போடும்படி கூறினேன் என்பதைத் தவறாக புரிந்து உள்ளீர்கள். புலிகள் இப்போது ஆயுதத்தை வைத்திருந்து எதனையும் சாதித்துவிடவில்லை. இன்னும் சில நாட்களில் இரு எமன்களுக்கிடையேயான அதிகார மோதல் மிகப் பெரிய மனித அவலத்தை ஏற்படுத்தப் போகின்றது. அப்பாவி மக்கள் கொல்லப்படப்போகிறார்கள். இறுதிவரை அடிபட்டு வீரத் தமிழனாய் மறத் தமிழனாய் வணங்காமண்ணில் பிறந்த தமிழனாய் சாவோம் என்று சொல்லிக்கொண்டு கைக் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் வனோதிபர்கள் இளம் போராளிகள் என ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்குள்ள ஒரேவழி புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைப்பதே.

    மற்றும்படி புலிகள் ஆயுதத்தை ஒப்படைத்ததும் சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு தீர்வை முன் வைக்கும் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. முள்ளியவளையில் நடப்பது ஒன்றும் தர்ம யுத்தமல்ல. மக்களுக்கான யுத்தமுமல்ல. அதிகாரத்திற்கான யுத்தம்.

    அதில் ஏன் அப்பாவிப் பொதுமக்கள் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்ட போராளிகள் பலியிடப்பட வேண்டும்.

    சுஸ்: அந்த இடம் முழுக்க சிங்கள குடியேற்றம் நடக்கும் அதை உங்களால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மட்டுமே முடியும் அந் நேரம் சில வேளை யோசிப்பீங்கள் புலி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என.

    ஜெயபாலன்: இது உங்களுடைய ஊகம். அரச ஆதரவாளர்கள் மகிந்த அரசு தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்று நம்புவது போல் நீங்கள் மகிந்த அரசு அவ்வாறு செய்யாது. ஆனந்தசங்கரி ஐயாவின் காணியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்று நம்புகிறீர்கள். ஊகங்களுக்கு பதிலளிப்பது மிகவும் கடினம்.

    ஆனால் ஒரு உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றிலொரு விதத்திலும் அதிகமான தமிழர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றிலொரு வீதத்திலும் குறைந்த தமிழர்களே உள்ளனர். அதனால் இந்த நிலை தொடருமானால் தமிழர்கள் தங்கள் தாயக பூமியைத் தாங்களாகவே கைவிட்டுச் செல்வார்கள் என்பதே யதார்த்தம்.

    அதற்குப் பின் அமெரிக்காவில் இருந்து கொண்டு தான் முள்ளிவாய்க்கால் வன்னி மக்களிணன் பூர்வீக மண் என்று அறிக்கை விடலாம். இல்லாவிட்டால் 1976ம் ஆண்டு தமிமீழப் பிரகடனத்திற்கு ஒஸலோவிலும் லண்டனிலும் இருந்து கொண்டு வாக்களித்து சிற்றின்பம் காணலாம்.

    சுஸ்: அதற்கு பிறகு தான் வன்னியில் இருக்கும் தமிழருக்கும் மட்டும் இல்லை முழு இலங்கையில் உள்ள தமிழருக்குமே ஆபத்து தான் வேனுமெண்டால் சர்வதேசத்திற்காக கொஞ்ச நாள் அரசு அமைதியாக நல்ல அரசு போல இருக்கும்.

    ஜெயபாலன்: தமிழருக்கு ஆபத்து இன்று நேற்றல்ல 60 ஆண்டுகளுக்கு முன்னரே வந்தாச்சு. உண்ணாவிரதம் இருந்து போராடி பிறகு உண்ணாவிரத்ம் இருந்தவைக்கு சாப்பாடு தீத்தி. உலகத்து ஆயுதங்களை எல்லாம் கொண்டு வந்து தாங்கள் நினைத்தவர்களை எல்லாம் சுட்டு. பிறகு திருப்பியும் உண்ணாவிரதம் இருந்து ஜீஸ் குடிச்சு போராட்டம் பிறேக் டவுனாகி நிக்குது. மக்கள் அங்கவீனர்களாகி ஊன்று தடி கூட இல்லாமல் விடப்பட்டு உள்ளார்கள்.

    நான் தெரிந்து கொண்டது தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்றவர்கள் பாரிய தவறுவிட்டுவிட்டார்கள். அவர்கள் போராட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களை பாங்க்கிறப்ற் ஆக்கிவிட்டார்கள். எப்போதும் எதிரி மீது குற்றம் காண்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எமது பக்கத்தில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு போராட்டத்திற்கான புதிய உத்திகள் புதிய வழிமுறைகள் பற்றி ஆராய்வதே பொருத்தமானது. சாவதற்கும் சாவு கொடுப்பதற்கும் போராட்டம் என்றால் தமிழ் மக்களுக்கு அப்படி ஒரு போராட்டம் அவசியமில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.

    சுஸ்: ஓரே ஒரு சந்தோசமான விடயம் நடக்கும் அது என்னவென்றால் அரசோடு சேர்ந்திருப்பவர்களுக்கு அரசு வைக்கும் ஆப்பு. அப்ப தெரியும் அவர்களுக்கு புலி இருக்கும் வரை தான் தங்களுக்கு மதிப்பு இருக்கும் என.

    ஜெயபாலன்: நிச்சயமான உண்மை. பார்க்க: ‘சொறிப்பிள்ளைக்கொரு பொம்பிளை தேவையோ?’

    சுஸ்: எல்லாவற்றுக்கும் மேலாக அரசு புலிகளை சர்வதேசத்திடம் சரணடைய விடுமா?

    ஜெயபாலன்: வேறு வழியில்லை. தற்போது எமக்கான தெரிவுகள் ஒவ்வொன்றாக இழக்கப்பட்டு விட்டது. மரண வாயிலில் நிற்கிறோம் என்றால் அதனைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டியது தான்.

    கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். அனைத்து கருத்தாளர்களுக்கும் நன்றி.

    Reply
  • thevi
    thevi

    இந்த நரகத்தை உருவாக்கியவர்கள் தமது சொந்த வாழ்கையை நன்கு வாழ்ந்து விட்டார்கள். இந்த நரகத்தை உருவாக்கவும் தொடரவும் உதவிய “புலன்” பெயர் தமிழர் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள்.

    Reply
  • thevi
    thevi

    புலி முடிந்ததும் தேசபக்தி மிக்க உடன்பிறப்புகள் உபயத்தில் கடலிலும் புதைகுழிகளிலும் கொட்டபபடப் போகும் தமிழ் அப்பாவிகள் பற்றிய நடுக்கம் தூக்கத்திலும் என்னை விதிர்க்க வைக்கிறது.”

    இதை ஓரளவு நான் ஏற்றுக் கொள்கிறேன். உடன்பிறப்புக்கள் உபயமெல்லாம் உங்கள் கற்பனை. புலி பிரேமதாசவுடன் சேர்ந்து தமிழ் சிங்கள இளைஞர்களை வேட்டையாடிய புலிக்குணத்தில் சொல்கிறீர்கள். மேலும் இந்த விதியை தமிழர்கள் தாமாகவே தேடிக் கொண்டார்கள். செய்த ஒவ்வொரு பிழைகளுக்கும் தண்டனை கிடைக்கிறது.உதாரணம்- புலிகளின் சகோதரப் படுகொலை. அறம் பிழைப்போருக்கு அது மகிந்தவானாலும் பிரபாகரனானாலும் அறமே எமனாகும்.

    Reply
  • arasa aatharavaalan
    arasa aatharavaalan

    தொடர்ந்தும் புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி வெளியேறிய பொதுமக்கள் சிலர் நேற்றிரவு புலிகளின் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காமயடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை தந்த மேற்படி பொதுமக்கள் உடனடியாக இராணுவ ஹெலிகப்டர் மூலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.”

    அன்று புலிகளுக்கு வைத்தியம் பார்த்த ஹெலிகள் இன்று மக்களையும் காவிச் செல்லுகின்றது.

    Reply
  • arasa aathauavaalan
    arasa aathauavaalan

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் பலரின் தகவல்கள் அடங்கிய ஆவணங்களைப் புலிகளிடமிருந்து படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விபரம் அடங்கிய ஆவணமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகளினதும் ஏனைய அமைச்சர்களினதும் விபரங்களும் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களும் அந்த ஆவணங்களில் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    அந்த ஆவணங்கள் மக்கள் பாதுகாப்பு வலயத்தை அண்மித்த வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

    ஆட்களை கொல்லுவதற்கு செலவிட்ட நேரத்தையும் பணத்தையும் மூளையையும் தமிழருக்கான அரசியல் தீர்வை காண செலவிட்டிருந்தால் குட்டிக் குழந்தைகளில் இருந்து தாத்தாவரைக்கும் எத்தனை பேரின் வாழ்வை காப்பாற்றி இருக்கலாம்!

    Reply
  • wanni
    wanni

    எல்லாத்துக்கும் காரணம், யாழ்ப்பாணிதான்,
    நீங்கள் எல்லாம் தொடங்கிற்று போட்டியள், இப்ப வன்னியான் கிடந்து சாகிறான்.
    உங்கள முதல்ல ஒளிக்கோணும்டா?
    அப்பத்தான் எல்லருக்கும் நிம்மதி

    Reply
  • வாசுதேவ
    வாசுதேவ

    /இறுதிவரை அடிபட்டு வீரத் தமிழனாய் மறத் தமிழனாய் வணங்காமண்ணில் பிறந்த தமிழனாய் சாவோம் என்று சொல்லிக்கொண்டு கைக் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் வனோதிபர்கள் இளம் போராளிகள் என ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்குள்ள ஒரேவழி புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைப்பதே. நான் தெரிந்து கொண்டது தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்றவர்கள் பாரிய தவறுவிட்டுவிட்டார்கள். அவர்கள் போராட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களை பாங்க்கிறப்ற் ஆக்கிவிட்டார்கள்./–ஜெயபாலன்.

    மேற்கு வங்கத்தை சேர்ந்த “திரு.பாகா ஜெட்டின்(டைகர் முகர்ஜி)”, பிபாகரன் பரம்பரை, வெளிநாடுகளைப் பற்றி கனவில் காணுவதற்கு முன்னமே, பல மேற்குலக நாடுகளுக்கு விஜயம் செய்த ஒரு அமைப்பின் தலைவர். “மைசூர் மன்னன் திப்பு சுல்தான்”, பிரான்ஸின் நெப்போலிய்ன் உதவியுடன் தமிழகத்து “திண்டுக்கல்லில்”,”ராக்கெட் தொழிற்சாலை” வைத்து பிரிட்டனுக்கு எதிராக அதை பயன்படுத்தினார். இவருக்கும் “மைசூர் புலி” என்ற பட்டம் உண்டு.- இவ்விருவரும் கடைசி களத்தில், சாதாரண வீரர்களுடன் நின்றுதான் களத்திலேயே மரணமடைந்தார்கள். இதிலிருந்து தெரியவில்லையா, நம்மவர் “நகல் போலி(அன்டி கிளைமாக்ஸ்)” என்று. “அன்டி கிளைமாக்ஸுக்கு” ஒரு நல்ல உதாரண்ம் கீழே:
    Was Prabakaran taken for a ride by the Tamil ‘Diaspora’?
    (By: Shenali Waduge)—should we now assume that the ‘Eelam’ for Prabakaran(jayalalitha tamileelam) may not have been what the ‘Diaspora’ had in mind! What an anti-climax this thought would be! —– defence.lk/new.asp?fname=20090430_17

    Reply
  • மாயா
    மாயா

    புலிகள் (பிரபாகரன்) ஒரு போதும் அரசியல் ரீதியாக இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு எண்ணவே இல்லை. தலைவர்களை கொலை செய்வதூடாக ஒரு சிங்களத் தலைமையில் பலகீனம் ஏற்படும் , அதை வைத்து தனி நாட்டை அல்லது முழு இலங்கையையும் தன் வசப்படுத்தலாம் என்பதே புலிகளின் கொள்கையாக இருந்தது.

    இங்கு நடக்கும் போராட்டங்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமான போராட்டமாக இருந்து , அது பிரபாகரனுக்கும் சிங்களவருக்குமான போராட்டமாக மாறியது.

    பிரபாகரன் மற்றும் புலிகள் தமது பலத்தை மட்டுமே நம்பினார்கள். அடுத்தவன் பலத்தை நினைக்கவே இல்லை. தம்மை பலப்படுத்த புதிய சிங்கள தலைமைகளை உருவாக்க வழியமைத்து தலைவர்களைக் சாகடித்தால் அது தமக்கு சாதகமாக இருக்கும் என்றே நம்பினர். இதையே ராஜீவ் கொலையூடாகவும் செய்தனர்.

    இதற்கு இவர்கள் ஏனைய தமிழ் இயக்க குழுக்களின் தலைமைகளை அழித்ததை முன் உதாரணமாகக் கொண்டிருக்கலாம். இயக்க முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதும் அவ் இயக்கங்கள் சிதறிப் போயின. அவை அழியவில்லை. அந்த நேரத்துக்காக காத்திருக்கின்றன.

    புளொட் செயலதிபர் தோழர். உமா மகேஸ்வரனின் (முகுந்தன்) எண்ணங்களை இங்கே பதிக்க இது சரியான நேரம் என நினைக்கிறேன். அவர் தனி நாட்டு கோரிக்கை சரி வராது சுவிஸ் மாகாண ஆட்சிக் கொள்கையே இலங்கைக்கு சரியானது என எதிர்வு கூறினார். அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம். அடுத்து தமிழீழ போராட்டம் நீண்டதொரு போராட்டம். அது உடனடியாக முடிவுக்கு வராது. புலிகளின் தாக்குதல்களால் தமிழர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அது அரச படைகளை பலப்படுத்த உதவப் போகிறது. நாம் நமது பலத்தை பெற்ற பின்னர் , சிங்கள மக்களோடு இணைந்த ஒட்டு மொத்த நாட்டிலும் ஒரே நேரத்திலான புரட்சியொன்றைக் கொண்டு வந்து அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிந்து சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். புலிகளோடு கைகோர்ப்பதை கூட அவர் சம்மதிக்காமல் இணைந்தவர்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்பதை சூசமாக சொன்னார். இவை என்னதான் இருந்தாலும் இந்தியாவை நாம் நம்பவே கூடாது. இந்தியாதான் எமக்கு எதிரியாக இருக்கப் போகிறது என்பது அவரது தீர்கதரிசனமாக இருந்தது.

    உண்மையிலேயே அவரது தீர்க்கதரிசனம் இன்று கண்கூடாகத் தெரிகிறது. இருந்தாலும் இயக்கத்தில் இருந்த மத்திய குழு உறுப்பினர்கள் சிலரது தவறான செயல்பாடுகள் , உட் கொலைகள் ஆகியவற்றோடு இந்தியாவின் சூழ்ச்சியால் தோழர். உமா மாலைதீவு தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்து இறுதியில் கொல்லப்பட்டது அநியாயமான ஒரு இழப்பு. இவற்றை அவர் தடுக்காதது அவரது தவறும் கூட…. ஆனாலும் அவரது எண்ணங்கள் தவறவில்லை என்பதே என் கணிப்பு. தோழர். உமா, தமது தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சியை மட்டுமல்ல அரசியல் ஞானத்தையும் வளர்க்க T3S எனும் கல்வி நிலையம் ஊடாக அரசியல் அறிவுக்கான பயிற்சிகளையும் வழங்கினார். எந்த ஒரு போராளியும் தற்கொலை செய்து கொள்வதைக் கூட எதிர்த்தவர் அவர். போராட்டம் தமிழர்கள் வாழ்வதற்கேயன்றி சாவதற்காக அல்ல என்பதே அவரது தியரி.

    ஆனால் புலிகளின் தியரி, சாகடி அல்லது செத்து மடி என்பதேயாகும். இவற்றை வைத்துப் பார்த்தால் , அன்றும் – இன்றும் புலிகளிடம் அரசியல் ரீதியான எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லை.

    புலிகள் மாத்தையா தலைமையில் ஆரம்பித்த அரசியல் கட்சியைக் கூட அழித்தது அவர்களது அரசியல் ஞானமற்ற தன்மையையே காட்டுகிறது. ஆகக் குறைந்தது வெளிநாடுகளில் இருக்கும் கல்விமான்களையாவது அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதைக் கூட நம்பவில்லை. இங்கு பேசுவோர் எல்லாம் வரையறை மீற முடியாது.அட்வைஸ் பண்ண முடியாது. உலக நீரோட்டம் குறித்த எந்த தேவையுமிருக்கவில்லை. ஆயுத பலத்தைத் தவிர அவர்களிடம் வேறு எந்த ஞானமும் இருந்ததில்லை.

    இன்றும் புலிகளிடம் நாம் காண்பது சிறு பிள்ளைத்தனத்தைத்தான். சிறு பிள்ளைகள் அடம் பிடிக்கும், முரண்டு பிடிக்கும் அல்லது அழும். இப்போதும் புலிகள் ஒரு புறம் ஆயுதங்களை கீழே வைப்பதையோ அல்லது சரணடைவதையோ விட்டு விட்டு கடைசி வரை போராடுவோம் என அடம் பிடிக்கின்றன. அத்தோடு மறுபுறம் ஐயோ இத்தனை அழிவுகள் நடக்கின்றன, யாரும் பார்க்க மாட்டீங்களோ என அழகையும் , ஓலமும்தான் கேட்கிறது.

    இரண்டு சண்டியர்கள் இப்போது கோதாவில் பிரபாகரனும் – மகிந்தவும் (பலம், கோத்தாபய + சரத்). இங்கே பலம் பெற்றவன் வெல்வான். பலமிழந்தவன் வீழ்வான். இடையில் அகப்பட்ட அப்பாவிகள் நசிகின்றனர். ரசிகர்கள் கை கொட்டி ஆரவாரம் செய்கின்றனர். உலக நாடுகள் கோதாவில் இருப்பவர்களுக்கு விட்டமின் கொடுக்கிறது.போர் முடிந்தால் ஆயுத வியாபாரம் தடைப்பட்டுவிடும்.எனவே சமாதானத்துக்காக அவர்கள் சார்பாக ஏதோ செய்வதாகவும் பாசாங்கு செய்கிறது. புலி ஆதரவாளர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் போல கத்தி ஊரைக் கூட்டுகிறார்கள். மோட சிங்களவன் ஒருபுறம் மண்டையையும் பாவித்து, மறுபுறம் செவிடனாக தன் போக்கில் நடந்து கொண்டேயிருக்கிறான்.

    புலிகளின் பரப்புரைகளின் படி அரசால் கொல்லப்பட்ட இளைஞர்களை புளொட்டும் ஈபீஆர்எல்பும் சந்தித்து வந்திருக்கிறார்கள். பிரித்தானிய அமைச்சர் புறூஸ் புலிகளின் அகதி முகாமை பார்த்த பின் இடைத் தங்கல் முகாம் குறித்த பரப்புரைகள் பொய்யானது என தெரிவித்துள்ளார். இவை எல்லாம் அவரோகனமாக நடக்க , புலி ஆதரவாளர்களோ சிறைப்பட்டு இருக்கும் புலித் தேவனும் இளந்திரையனும் உயிரோடிருக்கிறார்கள் என்பதை பேச வைத்து வானோலி பேட்டி எடுத்து போட்டு காட்டி மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்? ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட, புலித்தேவனும் இளந்திரையனும் இருக்கிறார்கள் எனும் ஒரு சிறு விடயத்தை காட்டி சைக்கிள் கேட்ட குழந்தைக்கு ஐஸ்கிறீம் கிடைத்தது மாதிரி சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் இவர்கள் செய்வது சிறுபிள்ளைத்தனம் என்பது உண்மைதானே?

    Reply
  • BC
    BC

    தொடங்கிவிட்டு போனது மட்டுமா? போன இடத்திலிருந்தும் அழிவுக்கான முயற்ச்சி தான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வாணி யாழ்ப்பாணி என்று சொல்வதிலும் பார்க யாழ்ப்பாணி-சிந்தனை. சகபோராளிகளை தெருவில்போட்டு கொளுத்தும் போது “சோடா உடைச்சுகுடுத்த சிந்தனை” என்று சொன்னால் ஏற்புடையதே! நானும் யாழ்பாணி தான். ஏதோ ஒரு வகையில் வன்னிமக்களும் சிங்களமக்களும் வந்தேறு குடிகள் தான். முட்டை முதல் வந்ததா? கோழி முதல்வந்ததா? என்ற கேள்வியைப் போன்றே.

    Reply