வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

Pirabakaran_V விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்  உடல் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோக பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளார். இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உடல் காண்ப்பிக்கப்பட்டு உள்ளது. தலையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் உடல் பாகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.

தேசம்நெற் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.

மரபனு பரிசோதணைகளும் (DNA Test) உடல் பிரபாகரனது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவைச் சந்தித்து உள்ளார்.

பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. அதே போன்று இலங்கையின் ஒப்பிரேசன் புளுஸ்ரார் ஆக அமைந்துள்ளது  புரொஜக்ற் பீக்கன். அதில் பிரபாகரனின் மரணம் புலிகளுடைய அனுதாபிகளால் ஜீரணிக்க முடியாததாக என்றும் இருக்கப் போகின்றது.

புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். புலிகளை மீளக் கட்டமைக்கவும் போராடும் சக்தியாக வைத்திருக்கவும் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே செல்வராஜா பத்மநாதனின் கூற்று தெரிவிப்பதாக உள்ளது.

அடுத்து வரும் நாட்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அமையலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • BC
    BC

    இவர் புலத்தில் உள்ள தமிழீழ வியாபாரிகளின் தொடர்ந்து பால் கறக்கும் திட்டத்தில் மண்ணை போடுகிறாரே!

    Reply
  • X and Y
    X and Y

    Body of Mr. Prapaharan was identified and the video was telecasted. In my research (video) he was not killed in fighting in Wanni but he was already arrested by forces thereafter he was executed.

    Reply
  • tax
    tax

    சரி பிரபா உயிருடன் இருப்பதாக அனுதாபம் தேடுவதாகவே இருக்கட்டும். அப்படியானால் நேற்று அம்புலன்ஸ்சில் தப்பியோடிய பிரபா, பொட்டு, சூசை சுட்டுக்கொலை என்ற வாழைப்பழக்கதை என்னாச்சு. இப்ப பிரபாவை காட்டியாச்சு சூசையும் பொட்டுவும் எங்கே….,அப்ப இந்த பிரபா …..பிரபாகரன் போல் இருந்த முன்னர் புகைப்படங்களில் வெளிவந்த பிரபா போலான இருவரில் ஒருவரோ…. கமலகாசனின் என்னைப்போல் ஒருவன் திரைப்படம் வெளியாகும் போது எல்லாம் தெரியவரும். சிறிலங்கா இந்திய கூட்டுநடவடிக்கையில் பிரபாகரனை உயிரோடு பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டதை பலரும் மறந்து விட்டனர்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    அவர் உயிருடன் இருந்தாலும் கூட அதை வெளியே தெரியப்படுத்தாமல் இருப்பது போராட்ட ரீதியில் நன்மை பயக்கும் என்பது ஏனைய கெரில்லாப் போராட்டங்கள் தரும் பாடம்..
    உயிருடன் இல்லாத ஒருவரை “நலமாக இருக்கிறார்” என்று அடம் பிடிப்பது மக்கள் நலனைவிட ஏனைய பொருளாதார, குடும்ப நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக இருக்கலாம். தனது போராளிகளை தவிக்க விட்டு அவர் தப்பிவிட்டார் என்றால் அது அவர் இறந்ததற்கு சமம் என்பதில் வேறு விவாதம் இருக்க முடியாது. தமிழீழ தாகத்தை விட உலகம் முழுவதும் பதுக்கப் பட்டிருக்கும் பணத்தின் மீதான ஆசையே அவரை இந்த நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியிருக்கும்….

    Reply
  • BC
    BC

    நடேசண்ணாவுடனன் நேற்று முக்கியமான ஒருவர் போனில் கதைத்துள்ளார், அப்படியிருக்க நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு தெரிந்தவரிடம் சற்று முன் தான் போனில் வாங்கி கட்டி கொண்டேன்.நடேசனின் செய்தியே இப்படி என்றால் தலையின் செய்தி எப்படி? மொத்தத்தில் தொடர்ந்து பால் கறக்கும் திட்டம் வெற்றி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    BC, நீங்கள் நினைத்தால் நடேசனுடன் மட்டுமல்ல எனி மாத்தையா , தமிழ்ச்செல்வன் போன்றவர்களுடனும் கதைப்பீர்கள். முடிந்தால் DAN தொலைக்காட்சியைப் பார்த்து தெளிவு பெறுங்கள்.

    Reply
  • Rohan
    Rohan

    அந்தப் படம் பிரபாகரனுடையதா இல்லையா என்பது ஒரு சிக்கலான கேள்வி.

    அம்புலன்சில் போனவரை இராணுவத்தின் பகுதிக்குள் வைத்து சுட்ட்தாகவும் அவரது எரிந்த் உடல் கிடைத்ததாகவும் இராணுவம் சொன்னது.

    அப்படி ஓடித் தப்ப முயன்ற அவர் ஒழுங்காக முகச் சவரம் செய்து புலிச் சீருடையில் போயிருப்பாரா? எரிந்த உடல் என்றார்களே, என்ன நடந்தது?

    தம் தப்பும் ஆற்ற்லில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கையா? அல்லது அவர்தம் புலி மிடுக்கு வேறு உடை அணிய அவரை விடவில்லையா?

    Reply
  • palli.
    palli.

    கண்டிப்பாக பிரபாவின் உடல் அது அல்ல. இது பல்லிக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் உள்ள சந்தேகம். அதனால் மருத்துவ சோதனை செய்யும்படி இந்தியா உளவுதுறை அரசுடம் கேட்டுள்ளது. இருப்பினும் பல்லியை பொறுத்த மட்டில் பிரபாகரன் மடிந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் உறுதியாக சொல்ல முடியும் டன் தொலைகாட்ச்சியில் காட்டிய படம் தலையுடையது அல்ல. அத்துடன் சாள்ஸ் அன்ரனியின் முகமும் அதுவல்ல. ஆக அரசு தனது வெற்றியை சிங்கள மக்கள் வெறியாக கொண்டாட சில உடல்கள் தேவைபட்டது. அதுக்கு இப்படி ஒரு நாடகமே.

    Reply
  • palli.
    palli.

    அம்மான் கருணா என்ன சொல்லுகிறார். அவருக்கு தெரியாததா என்ன.??

    Reply
  • thurai
    thurai

    இப்படியான் கதைகள் வருமென்றுதான் முதலே தலவரை முருகனிற்கு அடுத்ததாக புலத்தில் சிலர் வணங்குகிறார்கள். இனி அவ்ர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன புலியின் உண்டியல் உலகமெங்கும் தொடர்ந்தும் வலம் வரும். பக்த்தர்களே பணத்துடன் ஆயத்தமாக இருங்கள்.

    புலியின் புலத்துப் பக்த்தர்களே உங்கள் போராட்டட்தை புலத்துடன் வைத்துக்கொள்ழுங்கள். உங்களிற்கும் இலங்கை வாழ் மக்களிற்கும் எந்த உற்வுமில்லை. முதலில் தலவரைத் தேடுங்கோ. பின்னர் உஙளால் இராணுவத்திற்கு பலிகொடுக்க்கப்பட்ட வன்னி மக்களைப் பற்ரி சிந்தியுங்கள்.

    அதன் பினனர் தமிழரைப்பற்ரிப் பேசவாருங்கள்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Rohan, உங்களைப் போன்றவர்கள் வன்னியில் இறந்த மக்களின் பிணங்களைக் காட்டி பணங்களைச் சம்பாதித்தவர்கள். இன்று சம்பாதித்த அந்த பணங்களைக் காக்கவும், தொடர்நந்தும் பணம் சுருட்டவும் உங்கள் சூரியத் தேவனின் உடலையே உதாசீனப்படுத்த எதை வேண்டுமானாலும் கூறுவீர்கள். நீங்கள் ஏமாற்ற நினைப்பது மக்களை மட்டுமல்ல உங்களையும் சேர்த்துத் தான்.

    Reply
  • Rohan
    Rohan

    தாமிரா மீனாஷி //அவர் உயிருடன் இருந்தாலும் கூட அதை வெளியே தெரியப்படுத்தாமல் இருப்பது போராட்ட ரீதியில் நன்மை பயக்கும் என்பது ஏனைய கெரில்லாப் போராட்டங்கள் தரும் பாடம்..//

    எந்தப் போராட்டத்தை வைத்துச் சொல்கிறீர்கள் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.

    //உயிருடன் இல்லாத ஒருவரை “நலமாக இருக்கிறார்” என்று அடம் பிடிப்பது மக்கள் நலனைவிட ஏனைய பொருளாதார, குடும்ப நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக இருக்கலாம். //

    இதுவும் லொஜிக் உதைக்கிறதே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஆனால் உறுதியாக சொல்ல முடியும் டன் தொலைகாட்ச்சியில் காட்டிய படம் தலையுடையது அல்ல. அத்துடன் சாள்ஸ் அன்ரனியின் முகமும் அதுவல்ல. ஆக அரசு தனது வெற்றியை சிங்கள மக்கள் வெறியாக கொண்டாட சில உடல்கள் தேவைபட்டது. அதுக்கு இப்படி ஒரு நாடகமே. – Palli //

    நீங்கள் குளம்பியதற்காக மற்றவர்களையும் குளப்ப முனைகின்றீர்கள். இந்தியா சந்தேகப்பட்டு மரபணுச் சோதனை நடாத்தச் சொல்லவில்லை. ராஜீவ் கொலை வழக்கை முடிவிற்குக் கொண்டு வர வேண்டுமென்றால் அதனை சட்டபூர்வமான ஆதாரங்களுடன் தான் முடிவிற்கு கொண்டு வரலாம். அதற்காகவே மரபணுப் பரிசோதனைச் சான்றிதழை தம்மிடம் ஒப்படைக்கும் படி இந்தியா கேட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனியின் பழைய படங்களை வைத்து தற்பொதைய நிலையை உறுதிப்படுத்தவது கடினம். ஆயினும் முகத்தில் அடர்ந்த மீசை தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் முகம் காட்டிக் கொடுக்கினறது அவர் தான் சாள்ஸ் அன்ரனியின் உடலம் என்று. நாளை சூசையின் மனைவியே இவர்களது உடலங்களை உறுதிப்படுத்தினாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் போலுள்ளது.

    Reply
  • X and Y
    X and Y

    Mr. Palli writes a good joke.
    The government of Sri Lanka contains not only uneducated politicians to talk about untruth stories but also there are high profiles (scientists) in the government departments like as western countries. You believe or fear in your mind that Mr. Prapaharan is undefeatable that is why, you write such comments.

    Reply
  • Rohan
    Rohan

    பார்த்திபன் //றொகன், உங்களைப் போன்றவர்கள் வன்னியில் இறந்த மக்களின் பிணங்களைக் காட்டி பணங்களைச் சம்பாதித்தவர்கள். இன்று சம்பாதித்த அந்த பணங்களைக் காக்கவும், தொடர்நந்தும் பணம் சுருட்டவும் உங்கள் சூரியத் தேவனின் உடலையே உதாசீனப்படுத்த எதை வேண்டுமானாலும் கூறுவீர்கள். நீங்கள் ஏமாற்ற நினைப்பது மக்களை மட்டுமல்ல உங்களையும் சேர்த்துத் தான்.?//

    பதில் சொல்லி உங்கள் கருத்துக்கு ஒரு பெறுமதியைக் கொடுத்து விடுவேனோ என்ற தயக்கத்துடன் தான் எழுதுகிறேன். உங்களை பார்த்து பரிதாபப் படத்தான் முடிகிறது. ஒரு தடவை கூட, வேடிக்கைக்கும் நான் புலியை ஆதரித்தது கிடையாது. அவர்கள் செய்த சில நல்ல விடங்களை அங்கீகரித்திருக்கிறேன்.

    புலி பொய் சொன்ன போது எனக்கு எரிச்சல் வந்தது. மாற்றுக் கருத்து தோழர்களின் பொய் எரிச்சல் மூட்டியது. அரசின் பொய்யும் எரிச்சல் மூட்டியது. இரண்டு கண்களாலும் பார்த்து இரண்டு காதுகளாலும் கேட்பதால் எனக்குக் குழப்பம் ஏதும் கிடையாது. மற்றவரைத் தப்பாகப் புரிந்த்து கொள்ளவோ அவர் மீது அவதூறு செய்யவோ தேவை கிடையாது.

    கருத்துகளுடன் மோட்க முடிந்தால் மோதுங்கள் நண்பரே – கருத்து சொன்னவருடன் அல்ல்!! யார் இஙுகு ஏமாற்றப் பார்க்கிறாரகள் என்றும் யோசித்துப் பாருஙகள்.

    வழியில் யாரும் கேட்டால் காட்டலாம் என்றா பிரபாகரன் அடையாள அட்டை புலி அங்கத்துவ தகடு என்பவற்றுடன் புறப்பட்டிருப்பார்?

    Reply
  • Rohan
    Rohan

    //Mr. Palli writes a good joke.
    The government of Sri Lanka contains not only uneducated politicians to talk about untruth stories but also there are high profiles (scientists) in the government departments like as western countries. You believe or fear in your mind that Mr. Prapaharan is undefeatable that is why, you write such comments.//

    Thanks X and Y.

    But, do you remember the Murders in Muthur and the bullet/s taken from the bodies? Sri Lanka even conned the international experts. I don’t say anything about the killing of the LTTE boss. But, when the government needs to hold a line it knows well how to do that.

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் நான் பிரபா இறக்கவில்லை என தற்ப்போது உங்களுடன் வாதிட வரவில்லை. ஆனால் இந்தியா எதுக்கு கேட்டது என்பது இங்கு பிரச்சனை இல்லை அது கேட்ட மருத்துவ பரிசோதனை கிடைக்கட்டும். அதன் பின் அது ஏன் என வாதிடுவோம். எந்த விதமான சோதனையும்
    தேவையில்லை .அமான்னுக்கு தெரியுமே இது தலையின் உடலா என. எந்த ஒரு பிரச்சனையையும் இடையில் இருந்து பார்த்தாலோ அல்லது திடீரென பார்த்தாலோ குளப்பம் வரலாம்.ஆனால் தலைவர் பிரச்சனை அப்படியல்ல நாள்தோறும் பேசபடும் இப்படி நடக்கும் என எதிர் பார்த்த பிரச்சனை. எதிர்பார்க்கும் பிரச்சனையை கண்டு குளம்பும் அளவுக்கு பல்லிக்கு புத்தி இதுவரை கெட்டு போகவில்லை. பொறுப்போம் பல்லி
    சொல்லியது தவறாயின் அப்போது ஏற்று கொள்கிறேன். அது வரை பல்லியின் கருத்து அது தலைவரின் உடல் அல்ல அல்ல.

    x&Y பல்லிக்கு பிடித்த விடயமே நகைசுவைதான். அதைதான் தாங்கள் பிறந்த மொழியில் சொல்லியுள்ளீர்கள். இருப்பினும் ஒரு நாட்டு
    ஜனாதிபதியே தனது நாட்டு மக்களுக்கு ஒரு பிணத்தை வைத்து தாங்கள் சொன்னது செய்யும் போது இந்த பல்லி அதை செய்வது தப்பில்லை கண்ணா.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வழியில் யாரும் கேட்டால் காட்டலாம் என்றா பிரபாகரன் அடையாள அட்டை புலி அங்கத்துவ தகடு என்பவற்றுடன் புறப்பட்டிருப்பார்?- Rohan //

    உங்களால் தேசம்நெற்றில் பலதடவை கேட்கப்பட்ட கேள்விகளே புலிகளை நியாயப்படுத்தவதாகவே அமைந்திருந்ததை நீங்களே மறந்து விட்டீர்கள் போலும். கேள்வி கேட்பது தவறல்ல அதற்காக விதாண்டவாதமாக கேள்விகள் கேட்பதையே நீங்கள் தொடருகின்றீர்கள்.

    இராணுவம் காட்டும் பிரபாகரனின் அடையாள அட்டை மற்றும் புலி அங்கத்துவ தகடு என்பன அவரது உடலத்துடன் கண்டெடுக்கப்பட்டதாக யார் சொல்கின்றார்கள். பிரபாகரன் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கே பிரபாகரனின் முகத்துடன் அவற்றை அருகில் பிடித்துக் காட்டுகின்றார்கள். அடையாள அட்டை அங்கத்துவத் தகடு என்பன ஏற்கனவே பிரபாகரனின் புகைப்பட ஆல்பம் மற்றும் பிள்ளைகளின் சான்றிதழ்கள் கிடைத்தபோதும் கிடைத்திருக்கலாமல்லவா??

    இப்படித்ததான் பிரபாகரனின் மகளின் படத்தை இராணுவம் வெளியிட்டபோதும், அது பிரபாகரனின் மகளேயல்ல டென்மார்க்கிலிருக்கும் பிரபாகரனின் மனைவியின் சகோதரி மகள் என சிலர் புரளி கிளப்பினார்கள். ஆனால் பின்பும் இராணுவம் குறிப்பிட்ட அந்த மகளுடன் பிரபாகரன் குடும்பமாகவுள்ள பல படங்களை வெளியிட்ட பின் மெளனமானார்கள்.

    எமக்குள் வீண் விவாதம் நடாத்துவதை விட, மரபணுச்சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டால் நீங்களோ, பல்லியோ நம்புவீர்கள் தானே?? எனி வெளிநாடுகளும் சில ஆதாரங்களை அரசிடம் கேட்கும். அப்போது அரசும் ஏமாற்ற முடியாது. அதுவரை நாம் பொறுத்திருப்போம். மற்றும்படி தனிப்பட்ட முறையில் உங்களைத் தாக்க வேண்டுமென்ற எண்ணமெதுவும் எனக்கில்லை. ஏற்கனவே நான் எழுதிய கருத்து தங்களுக்கு அப்படியொரு வருத்தத்தை தந்திருந்தால் மன்னிக்கவும்.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளின் அங்கத்துவ தகடு , புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில், எப்போதும் புலிகளின் கைகளில் கட்டப்பட்டிருக்கும். இது இராணுவ கட்டமைப்புக்கான விதி. இது புலிப் போராளிகளுக்குத் தெரியும். அடையாள அட்டை அவர் இருந்த பகுதியில் இருந்து கிடைத்திருக்கலாம். பிரபாகரனின் , நெருங்கிய சகாவாக இருந்த கருணா அம்மான் இறந்த உடலம் பிரபாகரனுடையது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    Reply
  • palli.
    palli.

    //மற்றும்படி தனிப்பட்ட முறையில் உங்களைத் தாக்க வேண்டுமென்ற எண்ணமெதுவும் எனக்கில்லை. ஏற்கனவே நான் எழுதிய கருத்து தங்களுக்கு அப்படியொரு வருத்தத்தை தந்திருந்தால் மன்னிக்கவும்//
    கருத்து சொல்லுவதால் பல்லி யார் மீதும் கோபம் கொள்ளாது. இருப்பினும் உங்கள் புரிந்துனர்வுக்கு நன்றி. மனதில் பட்டதை தயஙாமல் எழுதுங்கள் .விவாதித்தால் தான் பல உன்மைகள் வெளி வரும்.எது எப்படியோ எமது எண்ணம் அனைத்தும் அந்த மக்கள்

    Reply
  • X and Y
    X and Y

    If you do not mind

    I can tell you that Mr. K. P is the main person who killed whole LTTE including Mr. Prabaharan and his family. The government of Sri Lanka is always sensitive about Diaspora Tamils because the Diaspora Tamils have got enormous ability that Sri Lanka never ever seen. The mistake Mr. K. P did was his latest comment via channel 4 to Diaspora Tamils.

    Now the LTTE structure is totally demolished. In the future the supporters of LTTE could not do any think in Sri Lankan internal politics, so the Diaspora Tamils should realize themselves whether they want to live in Sri Lanka with harmony or they want to live as slaves in western countries?

    Reply