நேபாளம், ஒரு நம்பிக்கையூட்டும் புரட்சிகரமான முன்னெடுப்பு. : சமிர் அமின்

Nepal_Maoistஉண்மையான புரட்சிகர முன்னேற்றம்.

விவசாயிகளின் பொதுவான புரட்சியை ஆதரித்து வரும் ஒரு விடுதலை இராணுவம் தலைநகரத்தின் வாயிலை எட்டுவதாகவும், நகர்ப்புற மக்கள் தம்பங்கிற்கு கிளர்ந்தெழுந்து மன்னராட்சியை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, தமது மீட்பர்களாக இந்த புரட்சிகர இராணுவத்தை வரவேற்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் (மாவோ) புரட்சிகர மூலோபாயத்தின் திறமைக்கு வேறு சான்றுகள் தேவையிருக்காது. எமது சகாப்தத்தின் மிகவும் தீவிரமான, வெற்றிகரமான புரட்சிகர முன்னெடுப்பை இது வெளிப்படுத்துவதனால், இது மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் இந்த வெற்றியானது நேபாளத்தில் தேசிய மற்றும் மக்கள் ஜனநாயக புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதுடன், நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி வரையறுத்திருப்பது போல, இந்த புரட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு பண்புகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நகர்ப்புறத்தின் இந்த பொது எழுச்சியானது, வறிய வர்க்கங்களை நடுத்தர வர்கங்களுடன் இணைத்ததானது, ஏனைய நேபாள அரசியற் கட்சிகளை, தம்மைத்தாமே “குடியரசுப் புரட்சியாளர்கள்” என்று பிரகடனப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்தித்துள்ளது. புரட்சியாளர்களின் இந்த வெற்றிக்கு முன்னதாக, ஏனைய அரசியற் கட்சிகள் யாவும் சீர்திருத்த பாதையில் நம்பிக்கை வைத்து, பாராளுமன்ற தேர்தல்களில் இறங்கி, “அமைதிவழி” போராட்டங்களின் மூலமாக தமது இலக்குகளை அடைபவர்களாக, தம்மை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மற்றய கொம்யூனிஸ்ட்டுக் கட்சியான நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி ( ஐக்கிய மார்க்சிச லெனினிஸ்ட்டுகள்) 2004 இல் முடியரசுவாத அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு மாவோயிஸ்ட்டுகளின் “சாகசவாதத்ததை” கண்டிப்பவர்களாக இருந்தார்கள்.

இந்த புரட்சியுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டதன் மூலமாக நேபாளி கொங்கிரஸ், ஐக்கிய மார்க்சிய லெனினிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட குறைந்தபட்ச அங்கிகாரத்தை மறுத்துவிட முடியாது என்பதை புரிந்து கொண்ட கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது இந்த கட்சிகளுடன் தானாக முன்வந்து ஒரு சமரச உடன்பாட்டை செய்து கொண்டது.

“சமாதான உடன்படிக்கை” என ஐ.நா அதிகாரிகளால அழைக்கப்பட்டு புரட்சியாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த சமரச உடன்படிக்கையானது, புதிய ஜனநாயக மக்கள் குடியரசின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு அரசியலமைப்புச் சபையை நிறுவுவதை கோருகிறது. ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது, பலகட்சிகள் கலந்துகொண்ட தேர்தலில் வெற்றி பெற்று முதன்மையான இடத்தைப் பெற்றதுடன், இதன் தலைவர் பிரசந்திரா பிரதம மந்திரியாக ஆனார். இந்த நாட்டின் வரலாற்றிலேயே முதல் தடவையாக (ஏன் ஆசிய உபகண்டத்தின் வரலாற்றிலேயே முதல் தடவையாக) ஏழை விவசாயிகளும், ஒழுங்கமைக்கப்படாத நகர்ப்புற தொழிலாளர்களும், தலித்துக்களும், மற்றும் வெகுஜன வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களும் விகிதாசார எண்ணிக்கையில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

எதிர்காலத்திற்கான ஐந்து பெரும் சவால்கள்.

கொம்யூனிஸ்ட்டுக் கட்சி செய்து கொண்ட சமரச உடன்படிக்கையானது எல்லா எதிர்கால பிரச்சனைகளையும் தீர்த்துவிடவில்லை. மாறாக, அது இந்த முரண்பாடுகளின் பரப்பெல்லையை வெளிப்படுத்திக் காட்டியது. இந்த கோணத்தில் பார்த்தால், புரட்சிகர மக்கள் சக்திகளை எதிர்கொள்ளும் சவால்கள் மிகப்பெரியவையாகும். இவற்றை நாம் அடுத்துவரும் ஐந்து பகுதிகளில் பரிசீலனை செய்வோம்.

1. நிலச்சீர்திருத்தம்

கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது செயற்பாடுகளின் மூலமாக உருவான விவசாயிகளின் எழுச்சியானது, நிலப்பிரச்சனை தொடர்பாக கட்சி மேற்கொண்ட சரியான ஆய்வுகள் மற்றும் இந்த ஆய்வுகளின் அடிப்படையிலிருந்து புரட்சியாளர்கள் வந்தடைந்த சரியான மூலோபாயரிதியான முடிவுகள் ஆகியவற்றின் விளைவாகும். இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான விவசாயிகளை ஐக்கிய முன்னணியில் ஒழுங்கமைப்பதும், இதனூடாக ஆயுத போராட்டத்தை நோக்கி முன்னேறுவதும் சாத்தியமாயிற்று. நிலங்களை கையகப்படுத்துவது, நில வாடகையை குறைப்பது அல்லது ஒழிப்பது, கந்துவட்டிக்காரர்களை கிராமங்களை விட்டு வெளியேற்றுவது போன்றவை அனைத்துமே இந்த ஆய்வுகளிலிருந்து தொடங்கியதால் மட்டுமே சாத்தியமாயிற்று. இதன் மூலமாக மட்டுமே இந்த கிளர்ச்சியானது நாடுதழுவிய அளவிலும், அதன் படையினுள்ளும் படிப்படியாக பரவத் தொடங்கியது. கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டமானது அரச படைகளை தோற்கடித்தது. தலைநகரத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியானது கொம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கு கதவுகளை திறந்துவிட்டபோது, புரட்சிகர இராணுவமானது இந்திய அரசினாலும் ஏனைய ஏகாதிபத்தியங்களினாலும் பலமாக ஆதரிக்கப்பட்ட அரச இராணுவத்தை முற்றாக அழித்திருக்கவில்லை என்பது உண்மைதான்.

“சமரசத்தின் உடன்படிக்கையில்” கையெழுத்திட்டுள்ள அரசியல் சக்திகள், தம்மை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் மூலமாக இண்டுவிதமான போக்குகளை முன்வைக்கப்படுகின்றன. கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினால் முன்மொழியப்படுவதானது தீவிரமான, புரட்சிகரமான நிலச்சீர்திருத்தம் ஆகும். இது நாட்டில் பெரும்பான்மையாக உள்ள அனைத்து வறிய விவசாயிகளுக்கும் நிலமும், அதில் உழைப்பதற்கு அவசியமான சாதனங்களும் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் அதேசமயம், நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகளது நிலங்கள் அப்படியே அவர்கள் கரங்களியே தொடர்ந்தும் இருப்பதை உத்தரவாதப் படுத்துகிறது.

நேபாளி கொங்கிரஸ் கட்சியோ ஒரு திட்டவட்ட மற்ற, மிதவாத நிலச்சீர்திருத்தை முன்வைக்கிறது. இதன்படி, எந்த புதிய நிலச்சீர்திருத்த முன்னெடுப்புகளும் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த காலத்தில் விவசாயிகளால் புரட்சியின் மூலமாக வெளியேற்றப்பட்ட நிலப்பிரபுத்துவ, கந்துவட்டி முறைமைகள் அந்த பகுதியில் மீண்டும் நிலைநாட்டப்படுவது அவசியம் என்று வலியுறுத்துகிறது. அதன் பின்பே நிலச்சீர்திருத்தம் பற்றிய எந்த பேச்சுக்களையும் தொடங்களாம் என்கிறது. இது விவசாய புரட்சியின் பலன்களை மீண்டும் அதே அக்கிரமக்காரர்களிடத்தில் திருப்பி ஒப்படைத்துவிட்டு மீண்டும் பழையபடி வேண்டிக் கேட்டுக் கொள்ளம் நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும்.

2. ஆயுத படைகளின் எதிர்காலம்

தற்போது இரண்டு ஆயுத படைகள் அருகருகே இருக்கின்றன. இப்படிப்பட்ட இருப்பானது தொடர்ந்து நீடித்திருப்பது சாத்தியமற்றது. இந்த இரண்டு படைகளும் ஒன்றிணைக்கப்படுவதை கொம்யூனிஸ்ட்டுக் கட்சி வலியுறுத்துகிறது. ஆனால் எதிர்தரப்பாரோ இதனைக் கண்டு வெளிப்படையாகவே பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு செயல் அரச படைகளின் அணிகள் மாவோயிச சித்தாந்தத்தின் “தொற்றுதலுக்கான” நிலைமைக்கு இட்டுச் செல்லும் என்று பகிரங்கமாகவே குறிப்பிடும் இவர்கள், மக்கள் படையின் அங்கத்தவர்களுக்கு “புனர்வாழ்வு கொடுப்பது” என்பதற்கு மேலாக அர்த்தமுள்ள எதனையும் முன்வைக்க முடியவில்லை.

3. முதலாளித்துவ ஜனநாயகமா அல்லது மக்கள் ஜனநாயகமும்

இந்த பிரச்சனைதான் எல்லா விவாதங்களையும் உசுப்புகிறது. நேபாள சமுதாயத்தில் ஜனநாயகத்தின் சம்பிரதாயமான சூத்திரங்களை நியாயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இவர்களது கருத்துப்படி ஜனநாயகம் என்பது, பலகட்சி கலந்துகொள்ளும் பாரளுமன்ற தேர்தல் முறைகள்: அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதை தடுப்பதாக கூறப்படும் சட்டவாக்கம், நிர்வாகம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றை பிரித்துவைக்கும் முதலாளித்துவ பொறிமுறைகள்: மனித உரிமை மற்றும் அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றிய பிரகடனங்கள் என்பவற்றுடன் இந்த ஜனநாயகம் குறுகிவிடுகிறது. மேற்கு நாடுகளில் இருந்து உலகளாவியரீதியாக அவர்களது தொடர்பு சாதனங்கள் மூலமாக பரப்பப்படும் இந்த மேலாதிக்க கருத்தானது இந்த விவாதத்திலும் தலையெடுக்கிறது.

ஜனநாயகம் பற்றிய இந்த சம்பிரதாயபூர்வமான வரையறுப்பை விமர்சிக்கும் புரட்சியாளர்கள், முதலாளித்துவ ஜனநாயகத்தை வலியுறுத்துபவர்களது “ஜனநாயக” சொல்லாடல்களில் தனிச்சொத்துடமை என்பது தலையாய அம்சமாக முதன்நிலைப்படுத்தப்படுதை சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கு எதிர்மறையாக, புரட்சியாளர்கள் சமூக உரிமைகளை வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு மனிதரும் சாதாரணமாக தமது அன்றாட வாழ்வை நடத்துவதற்கு அவசியமாக உணவு, உடை, இருப்பிடம், வேலை, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்விற்கான உரிமைகள் என்பவை இந்த சமூக உரிமைகளில் அடிப்படையானவை என்கிறார்கள். தனிச்சொத்துடமை என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அதன் எல்லை என்பது சமூக உரிமைகளினால் வரையறுக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பிரிவினர் சமூக முன்னேற்றம் பற்றிய அக்கறையில்லாத, தனிச்சொத்துடமை என்பதனால் வழிநடத்தப்படும், ஜனநாயகம் பற்றிய முதலாளித்துவ, ஆதிக்க கருத்தாக்கத்தை நியாயப்படுத்துகிறார்கள். மறுதரப்பினரோ, சமூக முன்னேற்றம் என்பதுடன் இணைந்துதான் ஜனநாயகத்தைப் பற்றி வாதிடுகிறார்கள்.

நேபாளத்தைப் பொறுத்தவரையில் இந்த விவாதத்தில் மயக்கத்திற்கு இடமில்லை, ஆனால் இந்த விடயமே அடிக்கடி காரசாரமான விவாதப் பொருளாக அமைந்துவிடுகிறது. “மேற்கத்தைய ஜனநாயகத்தின்” ஆதரவாளர்கள், அசலான பிற்போக்காளர்களை மட்டுமன்றி, வெகுஜன வர்க்கங்கள் பற்றியும் படும் துயர்கள் பற்றியும் போதிய விழிப்புணர்வற்ற, ஆனால் ஜனநாயகத்தின் பால் உண்மையான அக்கறையுள்ள நடுத்தரவர்க்க ஜனநாயக சக்திகளையும் கூட தம்பக்கத்திற்கு இழுக்க முயல்கிறார்கள். இந்த “ஜனநாயக உரிமைகளை காப்பதற்காக” தன்னார்வக் குழுக்களுக்கு பல வெளிநாட்டு சக்திகள் அதிகளவிலான நிதிவளங்கள் மற்றும் பெருமளவிலான அமைப்பாக்கல் வளங்களையும் கொடுத்து இந்த தன்னார்வ குழுக்கள் மூலமாக இந்த அந்நிய சக்திகள் பெருமளவில் செயலாற்றுகிறார்கள்: தம்மால் இயன்றவரையில் மிதவாத போக்கிற்காக அறைகூவல் விடுக்கிறார்கள். அந்நிய சக்திகளால் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவரப்படும் இந்த அரைகுறை ஜனநாயகத்திற்கு மேலாக எதுவுமே செய்ய இயலாது என்பது போல சிலரோ. எதுவுமே இல்லாமல் இருப்பதிலும் பார்க்க, மரபார்ந்த வரையறுக்கப்பட்ட ஜனநாயகமே போதும் என்பது போல வாதிடுகிறார்கள். இன்னும் சிலரோ கொம்யூனிஸ்ட்டு கட்சிக் கெதிராக குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். “இறுகிப்போன கொம்யூனிஸ்ட்டுக்கள்” , ஸ்டாலினிஸ்ட்டுகள், எதேச்சாதிகாரிகள், சீன அதிகாரவர்க்க முறைமைகளை அப்படியே பின்பற்றுபவர்கள் என்று பட்டஞ் சூட்டுகிறார்கள்.

தங்களது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதில் கொம்யூனிஸ்ட்டுகள் சிறப்பானதொரு பணியை செய்கிறார்கள். தாம் விவசாயிகளது தனிச்சொத்துடமையையோ, அல்லது முதலாளித்துவ சொத்துடமையையோ -அவை தேசிய மற்றும் வெளிநாட்டவரது சொத்துடமைகளாக இருப்பினுங்கூட – கூட கேள்விக்குள்ளாக்கவில்லை என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறார்கள். ஆனால் தேசிய நலன்களுக்கு அவசியமாக இருக்கும் பட்சத்தில் தாம் சொத்துக்களை தேசியமயப்படுத்த தயங்கமாட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, அந்நிய வங்கிகள் தமது நாட்டை உலகலாவிய நிதிச்சந்தையுடன் கட்டிப்போட முயல்வதை தடைசெய்வதை குறிப்பிடுகிறார்கள். அடுத்ததாக வருவது நிலப்பிரபுத்துவ சக்திகளது உடமைகள் பற்றிய பிரச்சனையாகும். அடுத்தடுத்து வந்த மன்னர்களால் தமது பரிவாரங்களுக்கு அள்ளிக் கொடுத்த, விவசாயிகளை உடமையிழக்கச் செய்யக் காரணமாக அமைந்த நிலப்பிரபுத்துவ அதிகாரத்ததை இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இந்த அதிகாரங்கள் மூலமாக அரசரது பரிவாரங்கள் அபகரித்துக் கொண்ட “நிலப்பிரபுத்துவ” நிலங்களையும், கட்டிடங்கள் பற்றிய பிரச்சனை பற்றியே கொம்யூனிஸ்ட்டுகள் பேசுகிறார்கள். தனிமனித உரிமைகளையும், அதனை உத்தரவாதப்படுத்தக் கூடிய நீதித்துறையின் சுயாதீன தன்மையையும் இவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்த உரிமைகளை குறைக்காமல், இன்னும் கூடுதலாக, உயர்ந்தபட்ச சமூக உரிமைகளையும், அதனை நடைமுறைப்படுத்த அவசியமாகும் சமூக சீரமைப்புக்களையும் உருவாக்குமாறு இவர்கள் அரசியலமைப்புச் சபையை கோருகிறார்கள். இப்படியாக மக்கள் ஜனநாயகத்தை வரையறுக்கும் இவர்கள், அரசியலும் வெகுஜன வர்க்கங்களின் சுய-ஒழுங்கமைப்பிலும் இடையீடு செய்வதன் மூலமாக இதனை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார்கள்.

கொம்யூனிஸ்ட்டுக் கட்சியின் நடைமுறைகள் எதிர்காலத்தில் நேபாளம் பின்னோக்கி சறுக்கிச் செல்லவே மாட்டாது என்பதை உத்தரவாதப்படுத்திவிட முடியாது என்பது உண்மைதான். உதாரணமாக, எதேச்சாதிகார அதிகாரவர்க்க அரசை நோக்கியோ, அல்லது ஏனைய மிதவாத சந்தர்ப்பவாத சக்தியளுடனான கூட்டணிகளில் மூழ்கிவிடுவதையோ எதிர்காலத்தில் சாத்தியமற்றதென இப்போதே நாம் அடித்துக் கூறிவிட முடியாது. இங்கே எழுப்பப்படும் பிரச்சனைகள் கட்சிக்குள் தீவிரமான விவாதத்திற்கும், அக்கறை கூடிய ஆய்விற்கும் உரிய விடயங்கள் என்பதை காணும் ஒருவர் இந்த பரீட்சார்த்த முயற்சிகளை கண்டிக்க தனக்கு உரிமை உள்ளதாக கருதத்தலைப்பட மாட்டார். இப்படிப்பட்ட பலதரப்பட்ட சிந்தனைகளும் கட்சிக்குள் இருக்கின்றன.

நேபாள புரட்சியாளர்களின் இந்த விதமான ஆய்வுகளும், மூலோபாயங்களும் கடந்தகால தேசிய விடுதலை பற்றிய ஜனரஞ்சக சித்தாந்தங்களை (1955 இல் தொடங்கிய பாண்டுங் மாநாட்டுகால சிந்தனைகளை) கடந்த செல்லும் நோக்கில் போராட்டத்தை முன்னோக்கி தள்ளுகிறது. அந்த காலகட்டத்தில் ஆசிய, ஆபிக்க மக்களது நியாயமான, வெகுஜன போராட்டங்களில் இருந்து எழுந்த அரசுகள் மிகவும் குறைந்தளவு முற்போக்கானவையாகவே இருந்தன. தமது அதிகாரத்திற்கான நியாயாதிக்கத்தை எந்த சித்தாந்தங்களிலிருந்து பெற்றுக்கொண்டனவோ, அந்த சித்தாந்தங்கள் புரட்சிகர கோட்பாடாகிய மார்க்சியத்தை அடிப்படையாக கொண்டனவாக இருக்கவில்லை. அப்போது கொலனித்துவ ஆட்சியிலிருந்து புதிதாக விடுதலை பெற்றிருந்த இந்த நாடுகள் அங்கொண்றும் இங்கொண்றுமாக பல்வேறு சிந்தனை முறைகளிலிருந்து துண்டுகளை எடுத்து ஒட்டுப் போட்ட, ஒருவித கதம்பவாதத்தையே தமது சித்தாந்தமாக வரித்துக் கொண்டன. தமது வரலாற்றின் பொற்காலங்களாக தாம் கருதிய பகுதிகளை மறுவாசிப்பு செய்து, அவற்றை நவீன காலத்தின் முற்போக்கான கொள்கையாக முன்வைக்கப்பட்டது: புராதன சமூகத்தின் ஜனநாயக வடிவங்களை மீளமைப்பது மற்றும் ஒப்பீட்ளவிலான மதரீதியான வியாக்கீனங்களுடன் கூடிய தேசியவாத கற்பனை உள்ளடக்கியதாக இது கட்டமைக்கப்பட்டதாக இருந்தது. நவீன யுகத்தின் தேவைகளுக்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் அரசியல் நவீனமயப்படுத்தல்களின் அவசியம் பற்றிய விமர்சன பார்வையற்ற ஒருவித காரியவாதமாக இது இருந்தது. பாண்டுங் மாநாட்டுகால அரசுகளால் முன்வைக்கப்பட்ட “சோசலிசமானது” மிகவும் தெளிவற்றதொன்றாகவே இருந்தது. மறுவிநியோகம் மூலமாக “சமூக நீதியை” உத்தரவாதப்படுத்தப் போவதாக கூறும் ஜனரஞ்சக அரச கட்டுப்பாடு என்பதிலிருந்து வித்தியாசப்படுத்தப்பட முடியாததாக இருந்தது.

நேபாள கொம்யூனிஸ்ட்டுகள் சோசலிசம் தொடர்பாக மிகவும் வேறுபட்ட கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். தீவிர நிலச்சீர்திருத்தம், மக்கள் இராணுவம் மற்றும் மக்கள் ஜனநாயம் போன்றவற்றை உள்ளடக்கிய தற்போதய உயர்ந்தபட்ச திட்டம் நிறைவுபெறுவது என்பதுடன் இவர்கள் தமது “சோசலிச நிர்மாணம்” நிறைவுபெறுவதாக குறுக்கிக் கொள்வதை இவர்கள் தவிர்த்துவிட்டுள்ளார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் “தேசிய ஜனநாயக வெகுஜன” திட்டமானது சோசலிசத்திற்கான நீண்ட பயணத்தின் வெறும் தொடங்கு புள்ளியாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

4. சமஷ்டி பற்றிய பிரச்சனை

நேபாள சமூகத்தின் மிகவும் வித்தியாசமான பல்தரப்பட்டட விவசாய சுமூகங்களின் வெளிப்பாடாக இமாலயத்தின் சமவெளிகளின் பௌதீக மற்றும் மனித புவியியல் அமைகிறது. இது வெறுமனே இரண்டு, மூன்று அல்லது நான்கு இனக்குழுமங்கள் பற்றிய பிரச்சனை அல்ல. மாறாக நூற்றுக்கணக்கான சமூகங்கள் பற்றிய பிரச்சனையாகும். வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு இராணுவ தலைவர்கள், வெவ்வேறு மன்னர்களின் பெயரால் இந்த பகுதிகளை வெற்றி கொண்டுள்ளார்கள். வெற்றி கொண்ட இராணுவத் தலைமைகளின் விசுவாசிகளால், தாம் மன்னருக்கு ஆற்றிய சேவையின் பரிசாக இந்த சமூகளிடமிருந்து பறித்தெடுக்கட்ட நிலங்களை பயன்படுத்திக் கொள்வதற்கான தமது உரிமையை மீடடெடுபது எவ்வாறு என்பதே இவர்களது பிரச்சனையாகும். அத்தோடு அவர்கள் தாம் கௌரவமாகவும், சமத்துவமாகவும் நடத்தப்படுவதையும் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு மேலாக இவர்கள் அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். இந்தியாவை அண்டியுள்ள சமவெளிகளில் வசிக்கும் பல்வேறு சமூகங்களின் நிலைமையும் இதுதான். இவர்களே அண்மைக் காலங்களில் அந்நிய தலையீடுகளின் பிரதான இலக்காகவும் இருந்திருக்கிறார்கள்.

புரட்சியாளர்களால் முன்வைக்கப்படும் சமஷ்டிக் குடியரசு எனும் நிலைப்பாடானது இந்த நேபாளிய மக்களை நிச்சயமாக திருப்பதிப் படுத்தக் கூடியதாகும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு ஏற்பாடானது, மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தை எதிர்ப்பவர்களால் சூழ்ச்சித்திரத்துடன் கையாளப்பட மாட்டாது என்பதை உத்தரவாதப்படுத்திவிடவும் முடியாது.

5. நாட்டின் பொருளாதார சுதந்திரம் குறித்து

ஐ.நா. நேபாளத்தை வளர்ச்சி குறைந்த நாடாகவே வகைப்படுத்தியிருக்கிறது. அரசின் நவீன நிர்வாக முறைமைகள், சமூக சேவைகள், மற்றும் நவீன உள்ளக கட்டுமானங்களை உருவாக்குவது போன்றவை அனைத்தும் வெளியாரது உதவிகளிலேயே தங்கியுள்ளது. இப்போது பொறுப்பிலுள்ள அரசாங்கமானது, இந்தவிதமாக நாடு அந்நிய சக்திகளில் முற்றாக தங்கியிருப்பதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் பிரக்ஞையுடன் இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் இவ்விதமாக விடுவித்துக் கொள்வதானது மெதுவாகவும் படிப்படியாகவுமே சாத்தியப்படும் என்பது குறித்தும் அறிந்திருக்கிறது. உணவில் தன்னிறைவு காண்பது என்பது நேபாளத்தின் பிரதான பிரச்சனையா இப்போது இல்லாதபோதிலும், இந்த தன்னிறைவானது மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்பளில் வருந்தத்தக்க அளவிற்கு மக்கள் குறைந்நதளவு உணவையே உட்கொண்டு வருகின்றனர் என்ற உண்மையுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய தொண்றாகும். மிகவும் திறமையானதும், அதிக செலவில்லாததுமான ஒரு சந்தை வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலமாக கிராமப்புற உற்பத்தியாளர்களும், நகர்ப்புற நுகர்வோரும் பயன் பெறுவது என்பதில் முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. ஏனெனில் இங்கு இடைத்தரகர்களது நலன்களும் சம்பந்தப்பட்டுள்ளன. பகுதியளவில் கைத்தொழிலாகவும், பகுதியளவில் தொழில்துறை சார்ந்ததாகவும் இருக்கும ஒரு சிறு பண்ட உற்பத்தி முறையை வளர்த்தெடுப்பதற்கு அதிக அளவிலான உழைப்பையும், காலத்தையும் தேவைப்படும்.

20 சதவீத மக்களுக்கு சுபீட்சத்தையும் 80 சதவீத மக்களை வறுமையில் என்று கூறாவிடடாலும் தேக்கத்தில் வைத்திருக்கும் இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் பிரத்தியே சமூக முன்மாதிரித் திட்டத்திற்கு மாறாக, அனைவத்து மக்களையும், உள்ளடக்கும் வகையிலான ஒரு பொருளாதார அபிவிருத்தி முன்மாதிரித் திட்டத்தை புரட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். இந்திய திட்டத்திற்கு நேரெதிரான வகையில் நேபாள புரட்சியாளர்களது திட்டமானது ஒவ்வொரு கட்டத்திலும், அனைத்து வெகுஜன வர்க்கங்களுக்கும் நேரடியாக பலனளிப்பதாக இருக்கும். கொள்கைப்பற்றுள்ள எவருமே இந்த விதமான ஒரு திட்டத்தையே ஆதரிக்க முடியும். ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது இன்னும் செய்து முடிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

இவற்றை செய்து முடிக்கப் போவது யார்?

நேபாளத்தின் பிரதான அண்டை நாடான இந்தியாவுடன் நேபாள புரட்சியாளர்கள் தீவிரமான பகைமையுடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள்: நேபாளத்தின் புரட்சியானது இந்தியாவுக்குள்ளும் பரவிவிடும் அபாயம் பற்றிய பயம் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நக்சலைட்டுகளது புரட்சியானது, அதன் ஆரம்ப படிப்பினைகளை நேபாளத்தில் கிடைத்த வெற்றியிலிருந்து பெற்றுக் கொண்டாலும், இந்திய உப கண்டத்தில் நடப்பிலுள்ள சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளையும், அதன் ஸ்திர தன்மையையும் தீவிரமாக கேள்விக்குள்ளாக்க வல்லது.

இந்த பகைமையை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தோன்றியுள்ள இராணுவ நல்லிணக்கத்திற்று இது ஒரு முக்கியமான காரணமாகும். கணிசமான அளவில் அரசியல் மற்றும் பொருள்வகை வளங்களை இந்தியா இந்த நோக்கில் நகர்த்தியுள்ளது. இவற்றுள் முக்கியமான அம்சம் ஒன்றுதான் ஒரு மாற்று இந்து அரசியல் கட்சியை, இந்து மதவாத பாரதிய ஜனதா கட்சியின் பாணியில், பாகிஸ்தானிய இஸ்லாமிய அரசியல் கட்சிகளை ஒத்த, தலாய் லாமாவின் பௌத்த அரசியலின் சாயலில், அமைப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகும். அமெரிக்காவினதும் ஏனைய மேற்கத்திய நாடுகளதும் – குறிப்பாக பிரித்தானியாவினதும் – ஆரதவானது இப்படிப்பட்ட பிற்போக்கான வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நேபாளத்தின் புரட்சியின் பயன்கள் கைகூடுவது நீண்ட காலத்திற்கு இழுபட்டுப் போனால் இப்படிப்பட்டதொரு பலமான இந்துத்துவ அரசியல் சக்தியொன்று உருவாக்கும் முயற்சியானது வெற்றி பெறுவது தவிர்க்க முடியாததாகியும் விடலாம். முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவிலாவது. இத்தகைய அந்நிய தலையீடுகள் நேபாளத்ததின் பிற்போக்கு சக்திகளை உரமூட்டி, பிரிவினைவாத இயக்கங்களின் தோற்றங்களுக்கு தூண்டுகோளாய் அமைந்துவிடலாம். வெளிச்சக்திகளின் உதவிகளை பெறுவது என்பது எப்போதுமே நிபந்தனைகளுடன் கூடியவைதாம்: ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது பகிரங்கமாக பேசப்படுவதில்லை. தன்னார்வ குழுக்களின் வலைப்பின்னல்களால் (NGOக்கள்) முன்வைக்கப்படும் மனித உரிமைகள் , மற்றும் ஜனநாயகம் பற்றிய ஆரவாரமான பேச்சுக்கள் எதிரியின் மூலோபாயத்தில் அவற்றிற்கே உரிய இடத்தை பெற்றுக்கொள்கின்றன.

புரட்சியாளர்களது மக்கள் செல்வாக்கிற்கு ஆதாரமாக விளங்கும் தீவிரமான சீர்திருத்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதானது, தற்போது அமுலிலுள்ள சமரச உடன்பாடுகளின் இழுபறிகளினால் கால தாமதங்களுக்குள்ளாகிறது. இந்த சூழ்நிலையானது அரசியல் தலைமையின் ஒரு பகுதியினரிடத்திலேயே குறிப்பிடத்தக்க சில போக்குகளை உருவாக்குகிறது: எதிர்தரப்பினர் தொடுக்கும் ஆரோக்சமான தாக்குதல்களினால் தடுமாறும் சிலர், சமரச உடன்பாடிக்கை எந்தளவிற்கு அனுமதிக்கிறதோ, அந்தளவிற்குள்ளேயே சீர்திருத்த நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் வலியுறுத்துகிறது: மாறாக இந்த பின்வாங்கள்கள், பிற்போக்கு சக்திகள் தமது எதிர் தாக்குதலை நடத்துவதற்கான தயாரிப்புக்களை செய்து கொடுத்துவிடுகிறது.

ஆனால் இது தொடர்பாக நாம் நம்பிக்கையிழக்கத் தேலையில்லை. மக்கள் அமைப்பாக செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தமது வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் புரட்சியாளர்கள் வெகுஜன வர்க்கங்களுக்கு பகிரங்கமாகவே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறாhகள்: அரசியல் நிர்ணய சபையின் முடிவுகள் எப்படியாக இருந்தபோதிலும் இது தொடரப்படுவது அவசியமானதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்குகளை கேட்பதையே ஒரே வழிமுறையாக கொள்ளும் பாரளுமன்ற அரசியல் பொறிக்குள் புரட்சியாளர்கள் சிக்கிக் கொள்ள வில்லை. இவர்கள் மிகவும் கவனமாக தமது சமூக அடித்தளத்தையும் (“social constituency”) -அதாவது, ஏழை விவசாயிகள், நகர்ப்புற் தொழிலாளாகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தேசபக்த மற்றும ஜனநாயக பிரிவினரை உள்ளடக்கிய மத்திய தர வர்க்கங்கள் போன்ற அமைத்தையும் உள்ளடக்கிய ‘வெகுஜன வர்க்கங்களை’,அரசியல் தளத்தில் அடிக்கடி ஏற்ற இறக்கத்திற்குள்ளாகிவரும் அரசில் அடித்தளத்தையும் ( “political constituency”) வேறுபடுத்தியே பார்க்கிறார்க்ள். புரட்சியின் மூலமாக அதிகாரத்திலிருந்து தூக்கி யெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ – தரகு முதலாளிய குழுமத்திற்குப் ( feudal – comprador block) பதிலாக தமது வெகுஜன சமூக அடித்தளத்தை, அமைப்பாக்கப்பட்ட ஆளும் குழுமமாக ( ruling organized social block) அமைப்பதே புரட்சியாளர்களது நீண்டகால வேலைத்திட்டத்தின் இலக்காக அமைகிறது.

நன்றி : Monthly Review
தமிழாக்கம் : மனோ.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Karan
    Karan

    நேபாள மாஓ இஸ்ற்றுக்களின் போராட்டம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பிந்திய காலப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இன்று அவர்கள் சர்வதேசத்தின் கண்காணிப்பில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தங்கள் போராட்டத்தை அரசியல் வழிகளில் முன்னெடுக்கின்றனர்.

    நேபாளம் நம்பிக்கையூட்டும் புரட்சிகரமான முன்னெடுப்பு என்பது நிச்சயமான உண்மை. ஒரு போராட்டத்தை எப்படி முன்னெடுக்கக் கூடாது என்பதற்கான சிறந்த அனுபவம் எம்மிடம் உண்டு. நம்பிக்கையூட்டும் முன்னெடுப்பு எமது பிராந்தியத்திலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்து நாம் சில பாடங்களைக் கற்பது மிக அவசியம்.

    இந்தக் கட்டுரைரை மொழிபெயர்த்த மனோ தொடர்ந்தும் இவ்வாறான கட்டுரைகளைத் தருவது நல்லது. கட்டுரையை இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த முயற்சிக்கவும்.

    சில படிப்பினைகள்
    1.இந்த புரட்சியுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டதன் மூலமாக நேபாளி கொங்கிரஸ், ஐக்கிய மார்க்சிய லெனினிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட குறைந்தபட்ச அங்கிகாரத்தை மறுத்துவிட முடியாது என்பதை புரிந்து கொண்ட கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது இந்த கட்சிகளுடன் தானாக முன்வந்து ஒரு சமரச உடன்பாட்டை செய்து கொண்டது.

    2.ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது., பலகட்சிகள் கலந்துகொண்ட தேர்தலில் வெற்றி பெற்று முதன்மையான இடத்தைப் பெற்றதுடன்இ இதன் தலைவர் பிரசந்திரா பிரதம மந்திரியாக ஆனார். இந்த நாட்டின் வரலாற்றிலேயே முதல் தடவையாக (ஏன் ஆசிய உபகண்டத்தின் வரலாற்றிலேயே முதல் தடவையாக) ஏழை விவசாயிகளும், ஒழுங்கமைக்கப்படாத நகர்ப்புற தொழிலாளர்களும், தலித்துக்களும், மற்றும் வெகுஜன வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களும் விகிதாசார எண்ணிக்கையில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

    அவர்கள் எதிர்கொண்ட சவால்களில் குறிப்பாக அவர்களுடைய தத்துவத்திற்கு எதிரான ஏகாதிபத்தியங்களின் எதிர்ப்பும் குறைத்து மதிப்பிட முடியாதது என நினைக்கிறேன்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    மொழிபெயர்ப்பாளர் மனோவிற்கு நன்றிகள் – கரன் அவர்களின் கருத்துக்களுடன் தொடரந்து எனது கருத்துக்களையும்

    கட்டுரையை வாசிக்கும் போது புதியபாதை சுந்தரத்தின் கருத்துக்கள் ஞாபகத்திற்க்கு வருகிறது – எமது போராட்டம் எப்படி ஆரம்பிக்கப்பட்டீருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இது திகழ்கிறது போராட்டம் வெறும் தனிநபர்-இராணவ வெற்றிகளாக சித்தரிக்கப்பட்டு இறுதியில் புஸ்வாணமாகிவிடும் என்பதை தோழர் சுந்தரம் குறிப்பிட்டிருந்தார். மக்களின் – தொழிலாளர்களின் விவசாயிகளின் பிரச்சினைகள் உரிமைகளிலிருந்தும் அதற்கான மீட்சிகளுக்குமாகவே என்பதை மறந்து போனது எமது தமிழர் பொராட்டம்.

    எமது போராட்டம் எமது வாழ்வின் அம்சமாகவே இருந்திக்க வேண்டும் என்பதை தோழர் சுந்தரமும் வேறு பல தோழர்களும் சுட்டிக்காட்டியதை மீண்டும் நினைவு கூரவைத்துள்ளது. போராட்டவாதிகளின் – போராளிகளின் தலைமறைவு ஒருசில காலத்திற்கு மட்டுமே அன்றி போராட்டகாலம் முழுவதும் மறைந்து வாழ்வதற்கல்ல என்பதை நேபாளம் எமக்கு படிப்பினைகளைத் தந்துள்ளது.

    நேபாள போராளிகளுக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்கள்.

    Reply
  • palli
    palli

    சோதிலிங்கம் சொன்னது போல் பல உன்மையான போராளிகளை எமது இனம் தறுதலை அமைப்பால் பறி கொடுத்து விட்டது; சுந்தரம் ஒரு போராளி என்பதை விட மிக நிதானமான ஊடகவியாளன்; அன்று கழகத்தினரின் மிக பெரிய பலமே புதிய பாதைதானே; அது போல் சுந்தரம் என்றுமே ஆயுதத்தை விட மக்களையே போராட்டத்தில் இனைக்க விரும்பியதாக அவரது நண்பர்கள் சொல்லி கேட்டுள்ளேன்;அது போல் கழகத்தினரும் ஓர் அளவு மக்கள் அமைப்பாகவே செயல்பட்டனர்; ஆனால் அதிலும் எமது தலைவிதி ஏதோ தொங்கு காச்சல் வந்ததுபோல் காணாமல் போய்விட்டது; ஆனாலும் மற்றய அமைப்புகளை விட சகோதர யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தாமாகவே தறுதலைகளுக்கு வழி விட்டனர்; அதனால் பலத்த உயிர் இழப்புகளை அவர்கள் தவிர்த்து கொண்டனர்; இதை ஏன் இங்கு எழ்துகிறேன் எனில் ;அது கூட அந்த சுந்தரத்தின் கருத்தில் ஓரளவாவது நம்பிக்கை வைத்து வந்ததால்தான் என நான் நினைக்கிறேன்;புலி தமிழரை (தனக்கு பிடிக்காத)கொன்றது; அரசு புலி தமிழரை கொல்லுகிறது(புலிக்கு பிடித்த) ஆக மொத்தத்தில் அனைத்து தமிழருக்கும் சங்குதான் மிச்சமோ??

    Reply
  • Pulikuddi
    Pulikuddi

    சுந்தரம் குழுவினரால் வெளிப்கொணரப்பட்ட புதியபாதையிலும் தோழர்களுடன் கதைத்துக் கொள்ளும் போதும் அடிக்கடி அளவாளாவும் தலைப்பு சமூக வார்க்கப்போராட்டமும் ஆகும். அதாவது இப்போராட்டமும் சரி; வர்க்க சமூகவியல் போராட்டமானாலும் சரி அது அடிமட்ட மக்களிருந்தே புறப்படும். அப்படித்தான் எமது போராட்டம் ஆரப்பிக்கப்பட்டதா? ஒரு இனப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேளை வர்க்க சமூகப் போராராட்டமும் தானாக முன்னெடுக்கப்படும்; முன்னெடுக்கப்படவேண்டும். வெறும் இனப்பிரச்சனை முன்னெடுக்கப்பட்டு போராட்டம் நடக்கமானால் இப்பிரச்சனை முடிவுக்கு வரும் பொழுது வர்க்கப்பிரச்சனையும் சமூகப்பிரச்சனைகளும் தலைதூக்கும். இச்செய்தியை சோதிலிங்கத்தின் கருத்துக்கு வலுச் சேர்பதாகவே எழுதுகிறேன். அன்று பிரபாவைப் போடுவது புளொட்டுக்கோ சுந்தரத்துக்கோ பெரிய காரியமாக இருக்கவில்லை. அவர்களின் நோக்கம் அதுவல்ல.

    Reply