மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார்.

02seva-geetha.jpgஇது தொடர்பாக அவரிடம் கேட்டபோது இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் இது ஒரே நாடு ஒரே இனம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தவே நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்றேன்.

கடந்தகால யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் சிதைவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்து நமது மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கு இன்று பொருத்தமாகவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதுதான் சிறந்ததாகும். தமிழ் மக்களுக்கு தேசிய, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் இது தொடர்பாக பேசி அவரையும் இணைத்துக்கொண்டு சேரவிரும்புகின்றேன். இது தொடர்பாக நான் விரைவில் அறிவிப்பேன் என மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கட்சித் தலைமை எடுக்க வேண்டிய முடிவை அம்மணியே எடுத்திருக்கின்றார். மொத்தத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கு ஆப்பு வைக்க முடிவு எடுத்திட்டினம் போல.

    Reply
  • thevi
    thevi

    வடபகுதிகளில் மொத்த யுத்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஜனநாயக ஆட்சிகளை ஏற்படுத்துகின்ற வகையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை அப்பகுதிகளில் நடாத்தி அதன் மூலமாக உயிரோட்டமுள்ள உள்ளுராட்சி சபைகளை இயங்கச் செய்து, தமிழர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை அளிப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன் ஆரம்பமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்று யாழில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் யாழ் மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக புலிகள் இயக்க முக்கியஸ்தர்களுள் ஒருவரான முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவியைக் களமிறக்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், வடமாகாணத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைப்பாளருமாகிய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணாஅம்மான்) அவர்களே தமிழ்செல்வனின் மனைவியை முதன்மை வேட்பாளராக தெரிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து சிறிடேலோ (நியூடெலோ)வும் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறிடேலோ அமைப்பினை கட்டி வளர்ப்பதிலும், காப்பதிலும் முக்கிய பங்காற்றியது ஈ.பி.டி.பி. ஆகும். ஆயினும் அவர்கள் தனித்து வீணைச் சின்னத்தில் களமிறங்கிக் காரியமாற்றுவார்கள் என நம்பப்படுகின்றது.
    பிற்குறிப்பு:- தமிழ்ச்செல்வனின் மனைவிக்கு மக்களால் அளிக்கப்படும் வாக்கு, தமிழ்ச்செல்வனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் போன்றதே. ஆகவே, புலிகளுக்கு அளிப்பதாக உணரப்படும் வாக்குகளே தமிழ்ச்செல்வனின் மனைவிக்கு அளிக்கப்படுவதாக அமையும். எனவே புலிகளை வெறுத்தொதுக்கியவர்கள் புலிகளுக்கான ஆதரவினைப் பயன்படுத்தியே, ஆசனத்தை அடையப் போகிறார்களே. என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர் புலி ஆதரவாளர்கள். (யாழிலிருந்து கண்ணா)

    Reply
  • நண்பன்
    நண்பன்

    சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியாகிறது. இனி அனைவரும் சிறீலங்கன்ஸ்.

    Reply
  • xavier
    xavier

    all tamil people live abrod must accepted in the sake of tamil people in srilanka war is over. i know its hard to accept but we need to move on if we all care about tamil people we have to understand they been though hell and back one whole generation is in question we have to help them get back to their normal life if u dont do that i think we help one way or other helping goverment

    Reply