மேலதிக விசாரணைக்காக கொழும்பில் பிரபாகரனின் பெற்றோர்

வவுனியாவிலுள்ள முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஊடகங்களில் நேற்று திங்கட்கிழமை செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டே பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வேலுப்பிள்ளை பார்வதிபிள்ளை ஆகிய இருவரும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பான இடமொன்றில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மேற்குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த மக்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்து வந்திருந்த இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பிரபாகரனின் பெற்றோர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவியபோது அது பற்றி உத்தியோக பூர்வமாக தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையெனக் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • vanthijathevan
    vanthijathevan

    மகிந்த ஓவராக ஆடுகிறார். பாவம் அந்த கிழவரும் ஆச்சியும்.

    Reply
  • மகுடி
    மகுடி

    பிள்ளைகளது தறுதலைத்தனத்துக்கு பெற்றோரே காரணம்?

    Reply
  • msri
    msri

    நல்லொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு? மகிநதா இன்னொரு பிரபாகரன் ஆகின்றார்! கோத்தபாயா ஓர் பாலசிங்கம் ஆகிவிட்டார்! இதற்கெல்லாம் பெற்றோர்தான் காரணமோ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பிரபாகரனின் பெற்றோர் என்பதாலேயே, அவர்கள் தனது மகனின் சிறப்புக் கவனிப்பில் வாழ்ந்தனர். இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இவர்கள் வந்தபோது, உடலில் ஒரு சிறு கீறல் கூட இல்லாத நிலையிலேயே வந்துள்ளனர். இவர்களை நோயாளிகள் போல் செஞ்சிலுவைச் சங்க கப்பலில் ஏற்கனவே பிரபாகரன் பத்திரமாக திருகோணமலைக்கு அனுப்பி, பின் வன்னிக்கு அழைத்து வரப்பட்டதாக தகவலும் கசிந்தது. ஏனைய பெற்றோர் யாருக்காவது இந்தக் கவனிப்புக் கிடைத்ததா?? அவர்களை அரசு விசாரணை செய்வதில் தவறில்லை. ஆனால் விசாரணைகளின் பின் அவர்களை விடுவிக்க வேண்டுமென்பதில் எனக்கும் உடன்பாடே……

    Reply