மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் ஊடாக வழங்க நேர்ந்ததாக புலிகளின் பிடியில் இறுதி வரையிருந்து சேவையாற்றிய ஐந்து டாக்டர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை அப்பொழுது வழங்கியமைக்காக தாங்கள் தற்பொழுது வருந்துவதாக தெரிவித்த அவர்கள், புலிகளின் துப்பாக்கி முனையில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டமையினாலேயே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
புலிகள் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களது பெயர்களை பயன்படுத்தி பலாத்காரமாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் வழங்கியதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் பிடியில் இறுதிவரையிருந்து சேவையாற்றிய வண்ணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய ஐந்து டாக்டர்களும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து தமது உண்மை நிலைமைகளை விபரித்தனர்.
இரகசிய பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் சின்னத்துரை சிவபாலன், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வீரகத்திப்பிள்ளை சன்முகராஜா, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் தங்கமுத்து சத்திய மூர்த்தி மற்றும் முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி டாக்டர் கதிரவேல் இளஞ்செழியன் வள்ளவன் ஆகியோரே இதில் கலந்து கொண்டனர்.
இவர்கள் இங்கு மேலும் தகவல் தருகையில்:- நாங்கள் அரசாங்க வைத்தியர்களாக இருந்த போதிலும் புலிகளின் ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலிலேயே இறுதிவரை புலிகளுக்கும் சேவையாற்ற நேர்ந்தது. சிவிலியன்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாக புலிகளுக்கும் சிகிச்சை வழங்க வேண்டியேற்பட்டது. எனினும் இறுதி வரை நாங்கள் அரசாங்கத்தின் சம்பளத்தையே பெற்றுக் கொண்டோம். நாங்கள் எமது சொந்த விருப்பத்திற்காக இவ்வாறு செயற்படவில்லை. எம்மையும், எமது குடும்பத்தையும் பாதுகாக்க இது தவிர எமக்கு வேறு வழியில்லை.
புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே அதிகமானவர்கள் காயமடைந்தனர். எனினும் உயிரிழந்தவர்களதும், காயமடைந்தவர்களதும் எண்ணிக்கை தொடர்பில் மிகைப்படுத்தி கூறும்படியே புலிகள் அதிகமான சந்தர்ப்பங்களில் வற்புறுத்தி வந்துள்ளனர். உண்மையாக இந்தப் பிரதேசத்தில் மருந்து தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு கூறும் பட்சத்திலே பலரது கவனத்தை ஈர்த்து யுத்தத்தை நிறுத்த வழி செய்ய முடியும் என்றனர்.
எட்டு தடவைகள் அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மருந்து, சத்துணவு போன்றவற்றை அனுப்பிவைத்திருந்தது. அவற்றில் பெரும் தொகையான மருந்துகளை புலிகள் எடுத்துச் சென்றனர் என்றனர். நாங்கள் காயமடைந்த சிவிலியன்களுக்கே அதிகமாக சிகிச்சை வழங்கியுள்ளோம். ஏனெனில் புலிகளுக்கு சிகிச்சை வழங்கவென தனியான வைத்தியசாலைகளை புலிகளின் மருத்துவக் குழுவினர் வைத்திருந்தனர். தேவையேற்படின் மாத்திரமே எம்மிடம் கொண்டு வருவார்கள் என்று டாக்டர் சன்முகராஜா தெரிவித்தார்.
இறுதியாக வந்த மூன்று கப்பல் பொருட்களையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.
எமது வைத்தியசாலையின் சுற்றுப் புறங்களில் புலிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது உண்மைக்கு புறம்பானது. எனினும் ஷெல் ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் வந்து விழுந்தது. நாங்கள் ஐ.சி.ஆர்.சி.க்கு அறிவித்தோம். பின்னர் புலிகளின் முகாம்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவர்கள் கூறினார்கள். நாங்கள் பல முறை தப்பிவர முற்பட்ட போதும் அது பலனளிக்க வில்லை. எமது குடும்பத்தினரும் உறவினர்களும் இங்கு சிக்கிக் கொண்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் நாங்கள் சேவையாற்றி வந்தோம். படையினர் முன்னேறி வர வர நாங்கள் எமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டோம். இறுதியாக பொக்களை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து சேவையாற்றினோம்.
இறுதியாக பாதுகாப்புப் படையினர் நாங்கள் இருக்கும் இடத்தை நெருங்கினர். வெடிச் சத்தம் குறைந்த நிலையில் நாங்கள் இருக்கும் இடத்தை ஐ.சி.ஆர்.சி. ஊடாக அறிவித்து எம்மை பாதுகாக்குமாறு தெரிவித்தோம். மே மாதம் 15ம் திகதி நாங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எங்களை பாதுகாத்தமைக்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.
இராணுவத்தினரிடம் சரணடைந்து 50 நாட்கள் கடந்த நிலையிலேயே நீங்கள் செய்தியாளர் மாநாட்டை நடத்துகின்றீர்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள். இராணுவத்தினரிடம் சரணடைந்த உடனடியாக எம்மால் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. அதற்குப் பின்னர் நாம் பல சட்டப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.
அத்துடன் எமக்கு சில நோய்களும் ஏற்பட்டிருந்தன டாக்டர் வரதராஜா கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேவையும் இருந்தது. இது போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காகவே நாம் இக்கால தாமதத்துடன் இச்செய்தியாளர் மாநாட்டை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதெனத் தெரிவித்தனர்.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் அச்சுறுத்தலில் பொதுமக்களின் இழப்புகள் குறித்து மிகைப்படுத்திய தரவுகளை வெளியிட்டதாகக் கூறிய நீங்கள் தற்பொழுது அரச கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு மாறுபட்ட தகவலைத் தருவதற்கு சாத்தியம் உள்ளது. அத்துடன் நீங்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் இன்னொரு நாட்டிலிருந்து இன்னொரு கருத்தையும் கூறும் சாத்தியம் உள்ளதே? எனக் கேட்டபோது.
இல்லை, நாம் தற்பொழுது சிறந்த முறையில் அரசினால் கவனிக்கப்பட்டு வருகின்றோம். எம்மை சிறையில் தடுத்து வைக்கவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளோம். ஆதலால், நாம் தற்பொழுது கூறுவதுதான் உண்மை. இக்கருத்தையே நாம் என்றும் எங்கும் கூறுவோம் எனத் தெரிவித்தனர்.
வன்னி வைத்தியர்கள் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே முன்பு வழங்கிய தகவல்களை மறுத்துள்ளனர் - புலிகளின் ஆதரவு இணையத்தளம்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக வன்னியில் இருந்து வந்து கைதாகி தடுப்புக் காவலில் உள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரில் வெளியிட்டுள்ளதாக சர்வதேச உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
அரசின் அழுத்தம் காரணமாக இப்பேட்டிக்கு வரவில்லை - டாக்டர் ஷண்முகராஜா
டாக்டர் சண்முகராஜா பி.பி.ஸி. தமிழோசைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கியிருந்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை, தமது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், விரைவில் விசாரணைகள் முடிந்து பணிக்கு திரும்ப முடியும் என்று தாங்கள் எண்ணுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், செய்தியாளர்களை சந்திக்க ஐந்து மருத்துவர்களும் தாங்களே முன்வந்ததாகவும், அரசின் அழுத்தம் காரணமாக வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவரது பேட்டி நேற்றிரவு (08) பி.பி.ஸி. தமிழோசையிலும் ஒலிபரப்பப்பட்டது.
« மட்டக்களப்பில் புலி உறுப்பினர்கள் கைது | Home | சார்க் மாநாட்டில் கொழும்புப் பிரகடனம்! சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தகவல் »
Related posts:
- Will be added soon here...
உங்கள் கருத்து
This entry was posted on Thursday, July 9th, 2009 at 9:44 am and is filed under அருட்சல்வன் வி, செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

அதிகாரத்தின் குரல்களைப் பதிவது இருக்கட்டும் அருட்செல்வன்.உமது கருத்தென்ன இவ்நடாத்தையின்பால்?இன்றைய நிலையில் இத்தகைய மக்கள் விரோத அரச-அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தையைக் குறித்து எதிர்ப்புக் குரலாக பாதிக்கப்பட்ட மக்களே போராட முடியாதளவுக்கு வன்னி-இலங்கைச் சூழலுள்ளது.இராணுவக் கண்காணிப்புக்குக்கீழ் மக்களை “இடைதங்கல் முகாமென்றும்-இராணுவக் குடியிருப்பு”களாகவும் ஒடுக்கியபடி முழுத் தமிழ்ப்பிரதேசத்தையும் இராணுவக் கெடுபிடிக்குள் தள்ளித் தமிழ்பேசும் மக்களைக் கண்காணிக்கும் நிலையில்-அவர்கள் இத்தகைய அரச ஒடுக்குமுறைகளைக் குறித்துப் போராட முடியாத சூழலில்-இத்தகைய மருத்துவர்கள் எதையும் கூறிமுடியும்.
ஆனால் அருட்செல்வன் உமக்கு என்ன தடை இருக்கிறது?;இது குறித்து மக்கள் நலனிலிருந்து கருத்துச் சொல்ல? அதிகாரத்துக்குட்பட்ட-அவர்களது கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களுக்கு முண்டு கொடுப்பதற்காகவா இப் பதிவு ஜெயபாலன்?
அல்லது”ஜனநாயகத்தை”செழுமைப்படுத்தும் தார்மீகம் உந்துதல் வழங்குகிறதோ?
மிக்க நல்லது.
அரசு இவர்களை இனியாவது விடுதலை செய்ய வேண்டும்.
இவர்கள் நாட்டுக்கு வெளீயே வந்தால் என்ன சொல்வார்கள் என்று எமக்கெல்லாம் மட்டுமன்றி அரசுக்கும் தெரியும்.
காவோலை விழுந்ததெண்டு குருத்தோலை சிரிச்சதாம்.
ரயாகரன் பாணியில் சொல்வதானால் இந்த இடத்தில் எந்த கொம்பன் இருந்தாலும் இப்படிதான் கேட்டவருக்கு ஆதரவாக சொல்வார்; இதில் தவறு காண முடியாது; கருணாவே அரசுடன் கவுண்டு படுக்கும்போது இவர்கள் மருத்துவர்கள்தானே அவர்கள் சரிந்து படுப்பது தவறா?
My humble appeal to Virakesari,Thinakural,Sudaroli and Uthayan-You gave maximum importance to the news when these doctors were under the LTTE grip.In the name of your so called journalistic values,could you please give the same importance to the interview by the doctors.
இவ்வறிக்கை தேசத்தில் வருவதற்கு 3 மணித்தியாலங்களின் முன்னரே ஏ.பி யின் குறிப்பில் வந்திருந்தது. இதை கொழும்பில் இருந்து திரு. ரவி நேஸ்மன் எழுதியிருந்தார். தேசத்தில் ’புலி சார்பு’ குற்றம் சாட்டியது போல் அல்லாமல் அவர் ஐ.நா, சர்வதேச மன்னிப்பு சபை போன்றவற்றிடம் கருத்துக் கோரி அவற்றையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் அல்லாமல் எவ்வாறு அரச தொலைக்காட்சியினரும் சில ‘வெள்ளை சேட், ரை கட்டிய’ சிலரும் அங்கிருந்து இந்த பேட்டியை ’வழி நடத்தினர்’ எனவும் சொல்லியிருப்பதோடு மட்டுமல்லாது இவ் வைத்தியர்களின் இன்றைய ‘கணக்குகளும் ’ ‘அறிக்கைகளும்’ எவ்வாறு செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோக பூர்வ கணக்கிலும் விட மிகக்குறைவாக இருக்கிறதென்பதையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அருட் செல்வனோ….பாவம் விட்டுவிடுங்கள்.
http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gVoaDFmbCYS-Usz9ACDRIengj21QD99ACJVO0
நல்லூர்கந்தா சொல்லுவதுபோல இவ்வறிக்கையை வீரகேசரி, உதயன் போன்றன வெளியிடுவது மட்டுமல்லாது அவற்றை பெரிய எழுத்துகளில் வெளியிட்டால் மிக்க நல்லது அப்போது தான் ஐ.நா, சர்வதேச மன்னிப்பு சபை, செஞ்சிலுவைச் சங்கங்கள் போன்ற ‘புலிப்பினாமிகளின்’ முதலாளித்துவ, ஆதிக்க வெறி முகமூடி தமிழர்களிடையே கிழிந்து தமிழ்ரும் சிங்களவர்களும் மஹிந்த சொன்னது போல இன மத வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக ஆடிப்பாடி வாழ்வர்!
தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் .
இந்த பேட்டி, அரச “ஜனநாயகம்;” எப்படிப்பட்டது என்பதையும், அது கையாளும் பாசிச வக்கிரத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. குற்றவாளிக் கும்பல்கள், நாட்டை ஆளும் விதமும், ஆள விரும்புகின்ற விதமும் இது. இப்படி இலங்கையில் மகிந்த சிந்தனை எவ்வளவு அகோரமானது என்பதையும், கொடூரமானது என்பதையும், இது எடுத்துக் காட்டுகின்றது. புலிகள் பகுதியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் மிரண்ட படி, விழுங்கியும், திணறியும், சமாளித்தளித்த பேட்டி, பாசிசத்தின் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது. இந்த மருத்துவர்களை அரசு தன் வதைமுகாமில் வைத்து வதைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தான், இந்தப் பேட்டியை கொடுக்கும்படி பத்திரிகையாளர்களை கொண்டு வந்துள்ளது. வேடிக்கையான பிரச்சார உலகம்.
அவர்களை “ரை” கட்டிய பொம்மைகளாக, மேடையில் நிறுத்தியது. அவர்கள் மூலம் அரசு தான் குற்றம் எதையும் யுரியவில்லை என்று, சொல்ல வைக்கின்றது. இப்படி சொல்ல வைப்பதன் மூலம், குற்றம் எதுவும் இழைக்கப்படவில்லை என்று உலகம் நம்பிவிடும் என்று நம்பும், பாசிச கிறுக்கர்கள் தான் இந்த நாட்டை ஆளுகின்றனர்.
இலங்கையில் ஒரு சாத்திரி கூட, தமக்கு எதிராக சாத்திரம் செல்ல முடியாது. இதற்காக சாத்திரியைக் கூட கைது செய்து சித்திரவதை செய்கின்றது அரசு இப்படி எல்லாவற்றையும் ஒடுக்குகின்றது இந்த அரசு. கருணா ………., தமிழ் கட்சிகளே இனி இலங்கையில் இருக்கக் கூடாது என்கிறர். அது கட்சிகளை மிரட்டியும், உருட்டியும், விலை பேசியும், அவற்றை இல்லாததாக்குகின்றது. கீழ் இருந்து மேலாகவும், மேல் இருந்து கீழாகவும் தமிழ்க்கட்சிகளையே, அரச பாசிசம் கருணா மூலம் இன்று அழித்தொழிக்கின்றது. இங்கு தான் தேர்தல், ஆனால் சுதந்திரமாக யாரும் பிரச்சாரம் செய்யமுடியாது. இப்படி பல முகமெடுத்தாடுகின்றது. இந்த வகையில்தான், மருத்துவர்கள் மூலம் தமக்காக உளற வைத்துள்ளது. எப்படிப்பட்ட ஒரு இலங்கையில் தலைவிரித்தாடுகின்றது என்பதற்கு, இவை சிறந்த உதாரணங்கள். மகிந்தா குடும்பமே குற்றவாளிக் கும்பலாக, இன்று மாறி நிற்கின்றது. மகிந்த சிந்தனை என்பது, வடிகட்டிய பாசிசம் தான்.
Earlier our crime was ignorance of human rights and gross negligence on human life. Now we are commiting an additional crime for threatning witness and making a mocker at civilisation and legal system.