ஒவ்வொரு மனிதனும் அவனது வாழ்க்கைக் காலத்தின் ஒரு கட்டத்தில் உள நெருகடிக்கு உள்ளாகிறார்கள். தமிழ் சமூகத்திலும் கணிசமான பகுதியினர் உளப் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால் உளப் பாதிப்பு தொடர்பான சமூகப் பார்வை காரணமாக அதனை பலரும் வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதனால் விளைவுகள் பாராதூரமாகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளின் வாழ்நிலை அவர்கள் மத்தியில் பல்வேறு வாழ்வியல் சவால்களை விட்டுள்ளது. அதில் முக்கியமானது இந்த உளவியல் பாதிப்பு.
இந்த உளவியல் தாக்கம் பற்றிய சில செய்திகளுக்கான இணைப்பு அருகில் உள்ளது. அவையே புலம்பெயர் வாழ்வியலில் உளவியல் தாக்கத்தை எடுத்துக் கூறும்.
தனது குழந்தைகளைக் கொலை செய்த பின் தற்கொலை செய்ய முயன்ற தாய்
அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்
இவை பரவலாக அறியப்பட்ட சில செய்திகள் ஆனால் மௌனமான அழுகைகள் எமக்குத் தெரிவதில்லை.
உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நெருக்கடிகளுண்டு விபரீதங்கள் ஏற்படமுன் உதவியை நாடுவது அவசியம். அந்த நோக்கிலேயே உள ஆலோசனைச் சேவையை மறைந்த அகிலன் கோபால கிருஸ்ணனின் நினைவாக அரம்பிக்கப்பட்டு உள்ளது.
உள ஆலோசனைச் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் : 0333 123 0 123 அல்லது 0203 371 0006 (உள்ளுர் கட்டணம் மட்டுமே)
ஆகஸ்ட் 4ல் பன்னிரண்டு மாதங்களுக்கு முன் அகிலன் கோபாலகிருஸ்ணன் மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணத்தினால் தன்னுயிரை தானே மாய்த்துக் கொண்டார். நேற்று (ஓகஸ்ட் 4ல்) அகிலனை நினைவு கூரும் வகையில் உள ஆலோசனை வழங்குவதற்கான தொலைபேசிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. அகிலன் கோபாலகிருஸ்ணனின் பெற்றோர்கள் அகிலன் பவுண்டேசனூடாக இந்தத் தொலைபேசிச் சேவையை ஆரம்பித்து வைத்தனர். கிழக்கு லண்டன் நியூஹாமில் அலுவலகத்தைக் கொண்டுள்ள இச்சேவையை வெளிநாடுகளில் உள்ளவர்களும் அணுக முடியும். ஆனால் நேரடியான சந்திப்புக்கள் லண்டனிலேயே தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உளவியல் மருத்துவர்களான டொக்டர் சுஹாசினி டொக்டர் யோகன் ஆகியோர் தற்போது ஆலோசனைகளை வழங்க உடன்பட்டு உள்ளனர். மேலும் சில உளவியல் மருத்துவர்களும் ஆலோசனை வழங்க முன்வந்துள்ளனர். தொலைபேசிச் சேவையூடான ஆலோசனைகளுக்கு உளவியல் ஆலோசனைத் துறையில் பயிற்சி பெற்ற லீனா என்பவர் பொறுப்பாக உள்ளார். அவருடன் பிரிசாந்தி, கிறிஸ்ரின், சொருபீம், மோகன் ஆகியோர் கடமையாற்றுவர்.
இச்சேவை ஆரம்ப நிகழ்வு ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் மனோ பார்க்கில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உள ஆலோசனைச் சேவையின் தேவையை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நியுஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
Constantine
This is an extremely good and positive contribution by Ahilans parents. To make some positive outcome out of their personal tragedy is a positive move. I am sure this service will be appreciated and welcomed by everyone.
Constantine
பார்த்திபன்
மிகவும் தேவையானதும் நல்லதுமான ஒரு முயற்சி. இச்சேவையை அகிலன் பவுண்டேசனூடாக ஆரம்பித்த அகிலன் கோபாலகிருஸ்ணனின் பெற்றோர்களின் பரந்த மனப்பான்மையை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.