பத்திரிகையாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 31ல் இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வன்மையாகக் கண்டித்துள்ளார். ”இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த பலத்த அடி – critical blow to freedom of expression in Sri Lanka” என அவர் இதனை வர்ணித்துள்ளார்.
ஓகஸ்ட் 31ல் லண்டனில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ அமிர்தலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வில் நினைவுப் பேருரை வழங்குகையிலேயே அவர் இதனைத் தெரிவித்து இருந்தார். ‘அ அமிர்தலிங்ம் நினைவுப் பேருரை’ யை வழங்க ஓகஸ்ட் 29ல் லண்டன் வந்திருந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவசரகாலச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் அங்குள்ள மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள முதலாவது ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை இலங்கையின் நீதித்துறையை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்துவதற்கு மிகுந்த வாய்ப்பை அளித்துள்ளது. சர்வதேச ஊடக அமைப்புகள் சர்வதேச உரிமை அமைப்புகள் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு இலங்கை அரசு தண்டனை வழங்கியதற்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புகள் சிறந்த ஊடகவியலாளருக்கான உயர் விருதுகளை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி அவரை கௌரவித்துள்ளதுடன் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளன.
‘அ அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை’யில் மு கா தலைவர் இலங்கை அரசு மீதான தனது குற்றச்சாட்டை வைத்த போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ரூ லவ் ம் உடனிருந்தார். அன்ரு லவ் இலங்கைக்கான பிரித்தானிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்ரூ லவ் தனது கருத்துக்களை புரிந்தகொள்ள வேண்டும் என்ற வகையில் மு கா தலைவர் ஹக்கீம் தனது கண்டனத்தை ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டார். ”மிகவும் கரிய மேகங்கள் இலங்கைக்கு மேல் படிகின்றது. மிகவும் அபத்தான போக்கு ஒன்று உருவாகின்றது” என்ற அச்சத்தையும் மு கா தலைவர் ஹக்கீம் வெளியிட்டார்.
ஓகஸ்ட் 31ல் தண்டனை வழங்கப்பட்ட ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு ‘2009 International Press Freedom Award – சர்வதேச பத்திரிகைச் சுதந்திர விருது 2009’ யை வழங்கி உள்ளது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists (CPJ) என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு. ”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை எவ்வளவு மோசமானது என்பதனை வெளிக் கொண்டுவருவதற்காக அவருக்கு இவ்விருதினை அறிவித்து உள்ளோம்” என CPJ இயக்குநர் ஜோல் சைமன் தெரிவித்துள்ளார்.
2008 மார்ச் 7ல் ஜே எஸ் திஸ்ஸநாயகம் (45) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2006 யூன் க்கும் 2007 யூன் க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. கிழக்கு மாகாணத்தில் அரச படைகள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக கட்டுரையை எழுதியது, அதனை வெளியிட்டது, அதன் மூலம் அரசபடைகளுக்கு அவதூறு ஏற்படுத்தியது, அதன் மூலம் இனங்களுக்கிடையே பகைமைய வளர்க்கத் திட்டமிட்டது என சட்டமா அதிபர் திஸ்ஸநாயகம் மீது குற்றம் சுமத்தி இருந்தார்.
ஜே எஸ் திஸ்ஸநாயகத்தால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து. அதனை அடிப்படையாக கொண்டு ஜே எஸ் திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது. இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
”இன்று திஸ்ஸநாயகம் என்னத்தை எழுதினாரோ பேசினாரோ அதையே அன்று அண்ணன் அமிர்தலிங்கமும் செய்தார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி எழுதினார் பேசினார். அன்றைக்கு அதற்காக அண்ணன் அமிர்தலிங்கம் துன்புறுத்தப்பட்டார். அது தான் இன்றும் நடைபெறுகின்றது” என்று கூறிய மு கா தலைவர் ஹக்கீம் ”இலங்கை அரசியல்வாதிகளுடைய சிந்தனைமுறை மாறவில்லை. அவர்களுடைய நடத்தைகள் மாறவில்லை. ஆட்சியாளர்கள் மட்டுமே மாறி உள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார். மு கா தலைவரின் இக்கருத்திற்கு சபையோர் பலத்த கரகோசம் வழங்கி தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஜே எஸ் திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா ”திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளhர்” என்றும் தெரிவித்தள்ளார். ”அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இனஇ மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ள போதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம்” என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 31ல் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாகவும் சட்டத்தரணி அனில் டி சில்வா தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டு மே யில் இடம்பெற்ற உலக பத்திரிகைச் சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் வழங்கிய உரையில் ‘குறியீட்டு உதாரணமானவர்கள் – emblematic examples’ என்ற வரிசையில் இலங்கையில் ஜே எஸ் திஸ்ஸநாயகத்தை சுட்டிக்காட்டி இருந்தார். இன்று அவருக்கே இந்த 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.
ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணி நேரங்களிற்கு ள்ளாகவே அதற்கு எதிரான கண்டனங்கள் வர ஆரம்பித்து உள்ளது. ஏற்கனவே யுத்தக் குற்றங்கள், மக்களை மனிதாபிமானமற்ற வகையில் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு மீண்டும் தனது தவறான நடவடிக்கைக்காக உலக அளவில் பேசப்படுவதற்கு இடமளித்துள்ளது.
”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான தண்டனை, இலங்கை நீதிபதிகள் சிலர் பழிவாங்குவதையும் நீதியையும் போட்டுக் குழுப்புகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றது” என Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் என்ற பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் எல்லைகளற்ற ஊடகவியலாளர் Global Media Forum இணைந்து ‘Peter Mackler Prize’ என்ற விருதை ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கி உள்ளனர். இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இவ்விருது, ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படாத நாடுகளில் தொழில் நேர்மையுடனும் துணிவுடனும் இயங்கும் ஊடகவியலாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
”ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்க வழங்கப்பட்ட தண்டனை கொடியது மனிதாபிமானமற்றது” என்று குற்றம்சாட்டியுள்ள International Federation of Journalists (IFJ) என்ற சர்வதேச ஊடக அமைப்பு, இலங்கை ஆட்சியாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாகவும் விமர்சனங்களை மௌனிக்க வைக்கவே முற்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. இது பற்றி கருத்த வெளியிட்டுள்ள IFJ செயலாளர் ஏய்டன் உவைற் ”அரசாங்கத்தை பொறுப்பாக்கியதற்காகவும் சட்டபூர்வமான அல்லது விமர்சனமான குரலை வழங்கியதற்காகவும் ஜே எஸ் திஸ்ஸநாயகம் பாதிக்கப்பட்டு உள்ளார். இத்தண்டனை சீரற்றது கொடியது மனிதாபிமானமற்றது. இது சுயாதீனமான ஊடகவியலாளர்களுக்கு இலங்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை அபாயத்துடன் ஞாபகமூட்டுகின்றது” என்று தெரிவித்து உள்ளார்.
2007 முதல் இலங்கையில் எட்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல மடங்காணோர் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர்.
எஸ் ஜே திஸ்ஸநாயகத்தின் இந்நிலைக்கு காரணமான எழுத்துக்கள்:
Providing security to Tamils now will define northeastern politics of the future It is fairly obvious that the Government is not going to offer them any protection. In fact it is the state security forces that are the main perpetrator of the killings.
July 2006, North Eastern Monthly
With no military options Government buys time by offering watered-down devolution Such offensives against the civilians are accompanied by attempts to starve the population by refusing them food as well as medicines and fuel.
November 2006, North Eastern Monthly
Source: Committee to Protect Journalists
sekaran
இது ஒரு வழக்கு. அதுக்கொரு தீர்ப்பு! மகிந்த சகோதரயாவுக்கும் அவரின் ஜால்ராக்களுக்கும் இது சந்தோஷம் தரலாம். நிச்சயமாய் நேர்மையாய் சிந்திக்கிற மனிதர்களுக்கல்ல.
மாயா
குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கையெழுத்திடுங்கள். உங்களை விடுவிக்கிறேன் என சொல்லி 20 வருடத்துக்கு உள்ளே தள்ளி விட்டார்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் குமுறுகிறார்கள். தவிரவும் இவரை விட மோசமாக எழுதிய சிங்கள ஊடகவியலாளர்கள் நடமாட , இவருக்கு மட்டும் ஏன் இப்படி என கருத்துகளை முன் வைத்துள்ளார்கள். போராட்டமும் நடத்தவுள்ளார்கள். எந்தவொரு நபருக்கும் தனது கருத்தை பேச அல்லது எழுத சுதந்திரம் உண்டு. அதை புரிந்து கொள்ளாத நீதி செத்து விட்டது.
Anonymous
அண்ணே! கணக்கு சரியண்ணே.
1. அரச படைகள் கிழக்கு மாகாணத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக கருத்து…5 வருசம்.
2 குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டது…..5 வருசம்.
3 சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளது….10 வருசம்.
அண்ணே! நீதிபதி தீபாலி விஜேசுந்தரவுக்கு ஒரு தூதுவர் பதவி கொடுக்கச் சொல்லி மாத்தையாவிட்ட கேளுங்கோ.
Marcus
Sri Lanka was in 165th place in the World Freedom Index 2008. See bottom raking below:
165 Sri Lanka
166 Iran
167 China
168 Vietnam
169 Cuba
170 Burma
171 Turkmenistan
172 North Korea
173 Eritrea
I am sure we have beaten Eritrea by now!! Bravo!!!
பார்த்திபன்
அநியாயங்கள் தலைவிரித்தாடும் போது, மக்கள் இறுதியாக நம்புவது நீதித்துறையையே. அந்த நீதித்துறையே அநியாயத்திற்கு தலை வணங்கினால், மக்கள் எதை நம்புவார்கள். இதனால்த் தான் மக்கள் வன்முறையை நாட முற்படுகின்றார்கள். பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக மார் தட்டும் அரசு, மீண்டும் அதே பயங்கரவாதம் அதைவிட மோசமாக வளரவே வழி வகுக்கின்றது. சிந்திக்குமா அரசு??
அஜீவன்
The Asian Human Rights Commission is saddened, disappointed and shocked but not surprised at the judgment of the High Court of Colombo in sentencing J.S. Tisssainayagam to 20 years of rigorous imprisonment for a simple piece of writing which he had done and which was interpreted as aiding and abetting terrorism. The AHRC is not surprised by this judgment because at the very inception of this case the AHRC pointed out that this is purely a political case, the first of its kind in which the accused, Mr. Tisssainayagam’s guilt or innocence was not an issue but an opportunity to send a message to society on the changed circumstances of the country where freedom of expression does not matter at all. That was the real aim of this case. It is the sort of prosecution that could have happened under the regime of Joseph Stalin through the prosecutor, Andrei Vyshinsky.
In Vyshinsky’s trials the outcome was predetermined. The trials of the 1930s were known worldwide as show trials. Those actually accused were not really the targets of the proceedings. The accused were mere exhibits to be advertised before the rest of Russia in order to pass a message to the people about the fundamental beliefs that Stalin wanted to impose on society. Vyshinsky’s biographer Arkady Vaksberg writes that the “purpose of the trial had not been to disgrace or, indeed, to annihilate some of the accused but to create a precedent and pave the way for a psychological attack on the population.”
Tisssainayagam has been selected for a show trial where there was not even any evidence to base a charge on. The particular passages which were arbitrarily selected from his writings did not represent any attempt to raise feelings of racism or to instigate people to violence on the basis of race. The text was selected as the pretext and there was no genuine thought in this prosecution at all.
What the case points to is the illusions of the liberals both in Sri Lanka and abroad who fail to see a persecution staged as a show trial. The illusion that somehow things may turn out and that there would be a fair trial was the comfort zone in which many people were resting, unwilling to accept that justice is dead in Sri Lanka and that the executive can manipulate and get whatever verdict it wants.
The greatest loser in this case is not J.S. Tisssainayagam it is the justice system and the judiciary in Sri Lanka that has suffered the greatest loss which would be hard for it to overcome. Even this is not a huge surprise for most people in Sri Lanka. They know that justice has been dead for a long time in their country.
The Tisssainayagam case will also remain the most glaring proof of the absence of freedom of expression in Sri Lanka. The memory of this case will shame so many journalists and media men in the country who have found it possible to lick the very feet of the executive which has completely destroyed the freedom of expression in the country. Some have fought back and lost their lives and some finally fled for their own safety. But this has also created a paradise for those who live by their contribution to misinformation and suppression of freedoms.
We urge the local and international community to condemn the judgment and the sentence in Tisssainayagam’s case and to call for his unconditional release. We also urge the local and international community to grasp the reality that justice is dead in Sri Lanka and the freedom of expression and the media which has also been killed.
Justice and media freedom in Sri Lanka is like the phantom limb; a dream of an amputee who still believes that his limbs are intact. The reminder of the Tisssainayagam case should always be associated with the image of the phantom limb.
AHRC: The Asian Human Rights Commission is a regional non-governmental organisation monitoring and lobbying human rights issues in Asia. The Hong Kong-based group was founded in 1984.
Devan
புலிகள் அழிந்து போனது நாட்டிலும் புலத்திலும் ஜனநாயகம் திரும்புவதட்க்கு கிடைத்த முதல் வெற்றி. இனி யார் நாட்டை ஆழ வேன்றும் என்பதை வரும் தேர்தல்களில் மக்கள் முடிவு செய்யட்டும். ஜனநாயக உருமைகள் பறிக்கப்படும் பொழுதும், பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பொழுதும் மக்கள் நிட்சியமாக மாற்றத்தை தேடுவார்கள்.
BJM
All I want is freedom of speech
Is that too much to ask
All I want is freedom of speech
To stand up against in justice
All I want is freedom of speech
To take away all the tears and the pain
All I want is freedom of speech
To express others suffering
All I want is freedom of speech
To make all my fears go away
All I want is freedom of speech
In my own and beautifull country
கிருபா
165 Sri Lanka
166 Iran
167 China
168 Vietnam
169 Cuba
170 Burma
171 Turkmenistan
172 North Korea
173 Eritrea
how many countries in this list practice Buddhism as their major religion ?
Why many major Buddhists living countries running by military regime ?
Why the love to kill or like to be killing fields ?
Thailand also should be listed.. ??
meerabharathy
Yes! We will write until….
Yes! We can!
Fight against violence!
Fight against Terrorism!
Fight against Journalism too???
Fight against writing the TRUTH too?????
But writing is not killing other human beings
like violence….
…writing is not destructive…..
Writing is the way to find TRUTH….
With pen….
But not with the arms….
We cannot fight against TRUTH….
Because TRUTH is an untouchable….
But can be revealed the TRUTH….
By Writing…
We can do that….
Yes! We can!
Yes! We can!
Kill leaders!!!
Leaders dies!!!
but no one cannot kill TRUTH!!!!
Because……..
TRUTH never dies!!!!
even…
Jailed the Journalists…
but they do not stop writting…..
becasue no one cannot jail the TRUTH!!!
Journalists will survive….
Journalism will survive….
Even if they are inside the prisons!!!!
Even if they are live in the undergrounds/ bungers/ and
under the dark clouds…..
Until the TRUTH is revealed!!!
Until see the sunrise….
HOPE! We can TRUST in!!!
Yes! We will/should write…
until know the truth!!!
Until enjoy the peace!!!
Even from our death bed/ graveyard….
No one can stop us!!!!
YES! WE CAN!!!
http://www.facebook.com/note.php?saved&&suggest¬e_id=125816532403
Award for jailed S Lankan editor
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8230965.stm
J.S. Tissainayagam, journalist lauded by Obama, is jailed in Sri Lanka
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6815885.ece
DEMOCRACY
/Providing security to Tamils now will define northeastern politics of the future It is fairly obvious that the Government is not going to offer them any protection. In fact it is the state security forces that are the main perpetrator of the killings.
July 2006, North Eastern Monthly
With no military options Government buys time by offering watered-down devolution Such offensives against the civilians are accompanied by attempts to starve the population by refusing them food as well as medicines and fuel.
November 2006, North Eastern Monthly
Source: Committee to Protect Journalists/–
இந்த வரிகள் உண்மையாக இருந்தால், நிச்சயமாக,” சர்வதேச அளவில்” முக்கியமானது!. ஆனால் இந்த வரிகளுக்க்க் “பிரதிவாதமாக” எதிர்காலத்தில், தற்போது மறைந்திருக்கும் விடுத்லைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர், இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசினால் (பிரேமதாஸாவுக்கு ஆதரவளித்த மாதிரி)என்ன செய்வது!?. அதாவது “இந்த வரிகளின் முக்கியத்துவம் தெரிந்தும்” இலங்கை அரசு இந்த தீர்ப்பை வெளியிடும்போதே, எதிர்காலத்தில், சில அதிர்ச்சி வைத்தியங்களை, கைவசம் வைத்திருக்கின்றது என்று அர்த்தம்!.
மாயா
Award for jailed Sri Lankan editor
A Sri Lankan Tamil journalist sentenced to 20 years in prison on Monday has now been given an award for courageous and ethical journalism. JS Tissainayagam has been named the first recipient of the Peter Mackler Award by the Paris-based group Reporters Without Borders. He was found guilty of “causing communal disharmony”.
Mr Tissainayagam was arrested in 2008 and charged with inciting violence in articles in his magazine. He was also accused of receiving funds from Tamil Tiger rebels. He has denied supporting violence.
The world’s largest organisation of journalists, the International Federation of Journalists (IFJ), has condemned the judgement – which also sentences Mr Tissainayagam to hard labour while in prison – and described it as “disproportionate, brutal and inhumane”.
The Tamil journalist has already been in detention for a year-and-a-half and was one of a handful of journalists mentioned in May by US President Barack Obama, who called them “emblematic examples” of reporters jailed for their work.
The Sri Lankan government said Mr Obama had been misinformed.
‘Under threat’
The case of JS Tissainayagam has received widespread attention in Sri Lanka, and international rights groups have been campaigning for his release – they say Sri Lanka is using anti-terror laws to silence peaceful critics.
BBC correspondents says Mr Tissainayagam’s sentence is the harshest given to a Sri Lankan journalist in recent years. The US state department said it was “disappointed to learn of the verdict and the severity of the sentence”.
Deputy spokesman Robert Wood told the AFP news agency: “We continue to be concerned about the state of media freedom in Sri Lanka. Journalists remain under threat and consequently continue to practise self-censorship.”
– http://news.bbc.co.uk/2/hi/south_asia/8230965.stm
T Sothilingam
திசைநாயகத்தின் தீர்ப்பு இலங்கை அரசு இன்னும் தனது இனவாத தமிழர் எதிர்ப்பு விடயங்களில் இன்னும் மாற்றம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது. மாறி மாறி ஆட்சிக்குவந்த அத்தனை கட்சிகளும் இனவாதிகளே இவர்களிடம் எப்படியான தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்.
அரசு தான் தமிழர்கள் மீதான அடக்கு முறைகளை தொடர்ந்தும் செய்வதற்கான உதாரணமாகவே இது உள்ளது.
சாந்தன்
அண்ணன் அமிர்தலிங்கம் என விழித்து அவசரகால விதிகளை குறை சொல்லும் ஹக்கீம் எத்தனை முறை இச்சட்டத்துக்கெதிராக வாக்களித்தார் என சொன்னாரா?
திசைநாயகத்துக்கு கிடைத்த ‘தீர்ப்பு’ எமக்கொன்றும் புதிதல்ல, சொல்லப்போனால் தமிழர் யாருக்கும் புதிதல்ல. ஆனால் சிலர் ஏதோ புதிய தீர்ப்பு போலவும் அதிர்ச்சியடைந்திருப்பது போலவும் எழுதுவது யாரை இங்கே ஏய்ப்பதற்கு என விளங்கவில்லை?
palli
இதைதானே பல்லி பலமுறை கத்துகிறேன்; இதுக்கு யார் காரணம்;
அன்று புலிகள் உன்மைதான், ஆனால் இன்று??
சாந்தன்
”தளபதி” அமிர்மீது ரயல்-அற்-பார் (Trail- at-bar) என்ற யூரிகள் அற்ற முறையில் நடந்த வழக்கில் எங்கே புலிகள் வந்தனர்? 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை விளக்கித் துண்டுப்பிரசுரம் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டு நடந்த முறைகேடான வழக்கிற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் பல்லி அவர்களே?
’…இதுக்கு யார் காரணம்…’
அன்றும் இன்றும் காரணமானவர்கள் ஸ்ரீலங்கா இனவாத அரசும் அவர்களது கைக்கூலிகளுமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
T Sothilingam
//அண்ணன் அமிர்தலிங்கம் என விழித்து அவசரகால விதிகளை குறை சொல்லும் ஹக்கீம் எத்தனை முறை இச்சட்டத்துக்கெதிராக வாக்களித்தார் என சொன்னாரா?//சாந்தன்
சாந்தன் சொல்லும் இந்த கருத்தையும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையில் புலிகளின் யாழிலிருந்து வெளியேற்றம் முக்கியகாரணமாக இருந்த போதும் இதற்கு பிராயச்சித்தமாக பிரபாகரன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
புலிகளின் செயலுக்காக மட்டும் முஸ்லீம் காங்கிரஸ் செயற்ப்படுவதில்லையே. கடந்த காலங்களில் தமிழர்க்கு எதிரான அவசரகாலச் சட்டம் நீடிப்பின் பொது முஸ்லீம் அமைப்புக்கள் கட்சிகள் என்ன நிலைப்பாட்டை கொண்டிருந்தன? ஏன் இந்த நிலைப்பாட்டை கொண்டிருந்தன?
இன்றும் முஸ்லீம் காங்கிரஸ் அடுத்த 6 வருடங்களுக்கு தற்போதய தலைவரே இலங்கையின் தலைவராக இருப்பார் ஏன் இந்த முஸ்லீம் காங்கிரஸ் அரசுக்கு எதிராக இருக்கிறது, அரசுடன் சேர்ந்து முஸ்லீம் பகுதிகளை முன்னேற்றலாம் அல்லவா என்ற முஸ்லீம்களின் கருத்துக்களும் வெளிவருகிறது.
தமிழர் தரப்பு மட்டுமல்ல முஸ்லீம்கள் தரப்பிலும் தவறான சிந்தனைகளும் செயற்பாடுகளும் கடந்த 30 வருடங்களில் இருந்து வந்துள்ளது இதை மு.கா தலைவர் வெளிப்படுத்தவில்லை கருத்தை சொல்லவில்லை. தாங்கள் சரியாகவே நடந்துள்ளோம் எல்லாம் தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் தான் தவறுகள் என்று சொல்லிவிட முடியாது.
முக்கியமாக முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் பற்றி யாரும் வெளிப்படையாக பேசுவதில்லையே ஏன்?
விமர்சனங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்ல முஸ்லீம்கள் சிங்கள தலைவர்கள் மட்டத்திலும் நிறையவே உண்டு விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும்
muthu
பல்லி அமிர்தலிங்கத்தின் கொலையை மையமாக வைத்து கருத்தெழியதாகவே நான் பார்த்தேன். வழக்கையல்ல. (குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும்.)
palli
சாந்தன் பல்லியின் கருத்து புரியவில்லையெனில் வெக்கபடாமல் கேட்டு தெரிந்து கொல்லவும், அதை விட்டு பல்லியை வம்புக்கு இழுப்பது என்ன நியாயம்;
முதுவின் ஆதங்கத்தை கவனிக்கவும்;
சாந்தன்
பல்லி,
எனக்கு கேட்பதற்கு வெட்கம் ஒன்றுமில்லை. ஆனால் கருத்தெழுதும் போது எல்லோருக்கும் புரிவது போல் எழுதினால் மறுப்புக்கருத்துகளும் அதுக்கு பின்னூட்டங்களும் தவிர்க்கப்படுமல்லவா?
மேலும் இங்கே ஹக்கீம் சொல்லவந்தது ஸ்ரீலங்காவின் நீதியற்ற கைதுகள் அமிர் காலத்தில் இருந்து திசைநாயகம் வரை தொடர்கின்றது. இவ்வாறான கைதுகளுக்கு தண்டனை உலகநாடுகளில் உள்ள சட்டங்களில் மோசமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழேயே வழங்கப்படுகிறது என்பதையே! அத்துடன் அவர் அமிர் கொலையைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என நீங்கள் கேட்டிருந்தால் நியாயம்.
அதனால்தான் நீங்கள் அக்கருத்துக்கு எதிர்/ஆதார வாதம் எழுதியதாக நான் புரிந்து கொள்ள வேண்டி வந்தது. மன்னிக்கவும்!
(ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடைச் சட்டம் தென்னாபிரிக்க இனவாத அரசின் சட்டத்தை ஒட்டுமொத்தமாக கொப்பி அடித்டு எழுதப்பட்டது. நெல்சன் மன்டெலா தலைமை ஏற்றவுடன் இச்சட்டத்தையும் ஸ்ரீலங்கா அரசுடனான எல்லா ஆயுத ஒப்பந்தங்களையும் தூக்கி எறிந்தார்)
பார்த்திபன்
//முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையில் புலிகளின் யாழிலிருந்து வெளியேற்றம் முக்கியகாரணமாக இருந்த போதும் இதற்கு பிராயச்சித்தமாக பிரபாகரன் மன்னிப்பு கேட்டுள்ளார்.- T Sothilingam //
இது தவறான தகவல். பிரபாகரன் ஒரு போதும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் அன்ரன் பாலசிங்கம் மட்டுமே பல வருடங்களின் பின் முஸ்லீம்களை வெளியேற்றியது தவறு தான் என ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் கூட இதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை.