கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை – ஜனாதிபதி

290909mahinda.jpgவன்னியில் அங்குலத்திற்கு அங்குலம் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணி வெடிகளின் மேல் அப்பாவி மக்களைத் தள்ளிவிட நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், இந்த நாட்டை மீண்டும் அடகு வைப்பதற்கும், ஏலத்தில் விடுவதற்கும் நாம் ஒரு போதுமே இடமளியோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ரன்பிம (தங்கபூமி) காணி உறுதி வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இப்போது சிலருக்கு கோஷங்கள் எழுப்புவதற்கு விடயங்கள் இல்லாதிருக்கின்றது. அதனால் கடந்த காலத்தில் யுத்தம், மனித உரிமை குறித்து பேசியவர்கள் இன்று இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும், அவர்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்துமாறும் கூறுகின்றனர்.

இந்த மக்களைப் புலிப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தே எமது படை வீரர்கள் மீட்டெடுத்தனர். இம்மக்களைப் பாதுகாத்து அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்.

இம்மக்களைப் பராமரிப்பதற்காக நாளாந்தம் கோடிக்கணக்கான ரூபாக்களை செலவிடுவது அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல. எமக்கு அரசியலை விடவும் மக்களின் உயிர் முக்கியமானது.

அதனால் புலிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் முழு உலகினதும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் அம்மக்களை நாம் விடுவித்தோம். இன்று இம்மக்களுக்காகப் பேசுபவர்கள் இம்மக்களைப் புலிகள் மனித கேடயங்களாகப் பாவித்ததை அன்று சர்வதேச சமூகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்களா? இல்லை. மாறாக எமக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என்று வங்கிகளிடமும், ஜி. எஸ். பி. பிளஸ் உதவியை நிறுத்துமாறுமே கூறி வந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Comments

  • மாயா
    மாயா

    கண்ணி வெடிகளுக்கு மேல் நிறுத்த விரும்பவில்லை என்று சொல்லி துப்பாக்கிகளுக்கு முன் நிறுத்தி வைத்துள்ளீர்களே அதிபரே? வேண்டாம் விச(ர்)ப் பரீட்சை அந்த மக்களை விரைவில் சுதந்திரமாக நடமாட வழி பாருங்கள். புலிகளிடமிருந்து விடுவித்த மக்களாக இல்லாமல் விசராக்கிய மக்களாகி விடுவார்கள் எனும் அச்சம் மனதில் வருகிறது.

    Reply
  • jeeva
    jeeva

    உதை முதலில் சொல்லி இருக்கலாம்தானே. ஏன் 180 நாள், மழைக்காலம், விதைப்பு என பம்மாத்து…. அல்லது போன கிழமை ஐ.நா சபையில் வந்து ’மனிதாபிமானி’யாகச் சொல்லி இருக்கலாமே? ஏன் பிரதமரை அனுப்பி அவருக்கு அலுப்பு?
    கிரியேற்றிவ் ஆன்சருக்கு கொஞ்சம் ரைம் எடுக்கும் தானே!

    Reply
  • sumita
    sumita

    ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்க முடியாதா? பொறு மகனே பொறு, அவசரம் வேண்டாம்.
    180 தினங்கள் உண்மைதான். கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்தானே,

    Reply
  • Thaksan
    Thaksan

    நீங்கள் கண்ணிவெடிகளை தேடித்திரிய வேண்டியதில்லை. அங்கிருந்த மக்களை அந்த பிரதேசத்துக்கு அனுப்புங்கள். அவர்களுக்கு தெரியும் புலிகள் எங்கெங்கு கண்ணிவெடிகளை புதைத்தார்களென்று. அவர்களே அவற்றை கிளியர் பண்ணித் தருவார்கள். உங்கட ராணுவம் கிளியர் பண்ண ஒரு வருடத்திற்கும் அதிகம் தேவை. ஆனால் அந்த மக்கள் ஓரிரு மணித்தியாலங்களிலேயே கிளியர் பண்ணி விடுவார்கள். உங்களுக்கு ஏன் வீண் செலவும் கெட்ட பெயரும்?நம்பிக்கையிருந்தால் அந்தந்த பிரதேசத்து மக்களை அந்தந்த இடத்துக்கு சென்று வாழ அனுமதியுங்கள்.

    Reply
  • palli
    palli

    தக்ச்சன் உங்களுடன் பல்லி பல நிகழ்வுகழில் தர்க்கம் செய்துள்ளேன்(கடந்த காலத்தில்) ஆனால் சமீப காலமாக தாங்கள் சொல்வதெல்லாமே தத்துவமாய் இருக்கு; தொடருங்கள்;;;

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்க முடியாதா? பொறு மகனே பொறு, அவசரம் வேண்டாம். 180 தினங்கள் உண்மைதான். கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்தானே.
    சுமித தயவு செய்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள் இவர்களும் மனிதர்கள்தான் உங்களின் விருப்பு வெறுப்பை இவர்களின் வாழ்வில் காணாதீர்கள். அரசின் கூற்றுப்படி வன்னியில் மட்டும்தான் கண்ணிவெடி மற்ற பிரதேசத்துக்குள் இல்லைஎன. நாம் அங்கிருந்து இங்கு வந்துநிம்மதியாக வாழும்போது ஏன் அவர்கள் அங்கு வாழமுடியாது. யாழ் இடப்பெயர்வின்போது இதை விட மூன்று மடங்கு மக்கள் இடம்பெயர்ந்தார்கள் அவர்களில் அரைவாசிக்குமேல் உறவினர் நண்பர்கள் வீட்டில் தான் வசித்தார்கள் இப்போது இவர்களை வெளியில் விட்டால் அவரவர் வழியில் முடிந்தளவு முயற்சி செய்தாவது வாழ்வார்கள்.

    Reply
  • jalpani
    jalpani

    நீங்கள் மக்களை முகாம்களில் அடைப்பதற்கு முன் அவர்கள் வாழ்க்கையை எங்கு நடத்தினார்கள்? கண்ணி வெடிகளுக்கு மேலேயா நின்று கொண்டிருந்தார்கள்? மக்கள் மேல் உங்களுக்குத்தான் என்ன அன்பு! என்ன அன்பு!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஓர் ஆயிரம்மல்ல லட்சக்கணக்கான மக்கள். சுகாதாரக்கேடு தொற்றுநோய் அபாயம். கம்பி வேலிக்குள் சமையலுக்கு விறகு தேடும் நிலை. முள்ளுக்கம்பியை தாண்ட முயன்றால் துவக்கு சூடு. இந்த நிலையில் கண்ணிவெடி தான் பிரச்சனை என்று அரசாங்கம் காரணம் கூறுமானால் கண்ணிவெடி அகற்றுவதில் அரசாங்கம் என்ன அக்கறை காட்டுகிறது? பத்திரிக்கைகளிலும் அரசாங்கபேச்சாளர்களிடமும் இருந்து
    திருப்திகரமான பதில்தான் வருகிறது. சிந்திதுப்பார்தால் எவ்வளவு நயவஞ்சக தனமானது என்பது தெரியும்.

    அங்கிருந்து வரும் செய்திகள் பல இடங்களில் கண்ணிவெடி கண்டுபிடிப்பதற்கான வேலைகள் எதுவும் நடக்கவில்லை தெரிகிறது. அப்படி ஏதாவது நடந்துகொண்டிருந்தால் ஆமைவேகம். நான்கு மாதங்களும் இரண்டு கிழமைகளும் வன்னிபிரதேசங்களுக்கு குறைந்த காலங்களா? நிறைவான காலங்களே! கண்ணிவெடி மிதிவெடிகள் அப்புறப்படுத்த வேண்டாம் அடயாளப்படுத்தி விட்டாலே வன்னிமக்கள் வாழப்பழகிவிடுவார்கள்.

    எனக்கு மகிந்தராஜபக்ஷா அரசில் எந்தகோபதாபமும் இல்லை. ஆனால் “கண்ணிவெடி கதை” அளக்கும்போது அரசு வஞ்சம்தீர்க்கும் அரசியலை கொண்டு நடத்துவதாகவே தோற்றம் அளிக்கிறது. பயங்கரவாதத்தை தோற்கடித்துவிட்டோம் எனவிழா எடுப்பதிலும் உலகம்முழுக்க தம்பட்டம் அடித்து புழுகிக் கொட்டுவதிலும் எந்தபயனும் வந்துவிடப்போவதில்லை. ஒருஅரசுக்கு முள்ளுக்கம்பிவேலியை அறுத்து முகாமைகலைத்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்புவதை தவிரவேறுவேலைகள் இருக்கமுடியாது. ஒவ்வொரு நாட்களும் அரசியலில் வளரும்தேயும் நாட்களே!ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஒவ்வொரு விலையிருக்கிறது. அரைபைத்திமாக திரும்பி வந்தமக்களை முழுபைத்தியமாக ஆக்கும் நடவடிக்ககைளில் அரசு தொடர்ந்தும் ஈடுபடுமேயானால் அதுஅரசுக்கு தேய்மதிகாலங்களே! அரசுக்குமட்டுமல்ல தமிழ்அமைச்சர்களுக்கும் தான்.

    Reply
  • Thakshan
    Thakshan

    நட்புடன் பல்லிக்கு>
    தத்துவம் எழுதுறன் எண்டெல்லாம் கிண்டல் செய்யுறது கொஞ்சம் ஓவராயிருக்கு.
    நானும் நீங்களும் கருத்துச் சுதந்திரத்தில் கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருக்கிற படியால் தர்க்கிக்கிறோம். எங்களுக்குள் பகைமுரண்பாடு கிடையாதே.

    Reply
  • பல்லி
    பல்லி

    தக்ச்சன் உன்மையாகதான் சொன்னேன்; நான் எப்போதும் மக்கள் சார்பான கருத்துக்கு கிண்டலாயோ அல்லது நாகரிகமற்ற முறையிலோ பின்னோட்டம் விட்டதில்லை, அதுக்கென சிலர் இருக்கிறார்கள் அவைமீதுதான் எனது காமடி இருக்கும்,

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஒவ்வொரு விலையிருக்கிறது. அரைபைத்திமாக திரும்பி வந்தமக்களை முழுபைத்தியமாக ஆக்கும் நடவடிக்ககைளில் அரசு தொடர்ந்தும் ஈடுபடுமேயானால் அதுஅரசுக்கு தேய்மதிகாலங்களே! அரசுக்குமட்டுமல்ல தமிழமைச்சர்களுக்கும் தான்.// உன்மை:

    Reply
  • Thaksan
    Thaksan

    தமிழ் அமைச்சர்களை இங்கு இழுக்க வேண்டியதில்லை என நம்புகிறேன். அம்மானுக்கு பிள்ளையான் தான் பிரச்சனையேயொழிய தமிழ்மக்களினது அல்ல என்பதை அவர் சு.க.வில் இணைந்தபோதே மறைமுகமாக உணர்த்திவிட்டார். உள்ளுராட்சி தேர்தலின்போது தனித்து நிற்க முயற்சித்தும் அற்ப பலவீனங்களை வைத்து அரச தரப்பு வடக்கு அமைச்சரை அடக்கியாண்டு கொண்டது. ஆனாலும் அவர் மாநகரசபை வெற்றியை பெருந்தன்மையுடன் தனக்கு தோல்வியே எனக் கூறி அரசுக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். எது எவ்வாறெனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலை எந்த அடிப்படையில் மக்கள் ஆதரிக்கிறார்கள்? அவர்களின் சுயநலனையும் கபட அரசியலையும் தோலுரித்து காட்டாத வரை மக்களை மாயைக்குள் இருந்து மீடக முடியாது. அவர்களின் அரசிலுக்கு மூலதனமாக உள்ளதே சிங்கள அரசுகளின் தவறுகள் தானே? இதனை மாறிமாறிவரும் சிங்கள அரசுகள் உணரவில்லையா அல்லது உணர்ந்தும் தங்களது அரசியலிருப்புக்காக வளர்த்த விடுகிறார்களா?

    Reply
  • jalpani
    jalpani

    “ஒவ்வொரு நாட்களும் அரசியலில் வளரும்தேயும் நாட்களே!ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஒவ்வொரு விலையிருக்கிறது. அரைபைத்திமாக திரும்பி வந்தமக்களை முழுபைத்தியமாக ஆக்கும் நடவடிக்ககைளில் அரசு தொடர்ந்தும் ஈடுபடுமேயானால் அதுஅரசுக்கு தேய்மதிகாலங்களே! அரசுக்குமட்டுமல்ல தமிழ்அமைச்சர்களுக்கும் தான்.

    எனக்கு மகிந்தராஜபக்ஷா அரசில் எந்தகோபதாபமும் இல்லை.”

    கண்ணிவெடி விசயத்தில் மட்டுமல்ல தமிழ்மக்கள் சார்ந்த எல்லா பிரச்சனைகளிலும் இந்த அரசு தேய்மதிக் காலங்களையே கடந்து வருகிறது. புலியின் தேய்மதிக்காலம் சுந்தரத்தின் படுகொலையோடு தொடங்கி மே 18 ல் உலகிற்கு வெட்டவெளிச்சமாகவில்லையா? அதே போன்றே இந்த அரசின் தேய்மதிக்காலம் வெளிச்சமடையும் போது இலங்கையே அதிர இருக்கிறது. ஆனால் பல பின்னூட்டங்களில் சந்திரன்ராஜா அதைப் புரிந்து கொண்டவராக இருக்கவில்லை. எனக்கு மகிந்தராஜபக்ஷா அரசில் எந்தகோபதாபமும் இல்லை என சொல்ல முடிகிறது. ஆனால் பலருக்கோ மகிந்தவின் மேல் எல்லாவற்றிலும் கோபம் இருக்கிறது. இதுவே சந்திரன்ராஜா மற்றும் புலம்பெயர்குழுக்கள் என்பவற்றிற்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். அளவாக ,தெரிந்தெடுத்து கோபப்பட எல்லோராலும் முடியவில்லை.

    Reply
  • santhanam
    santhanam

    தேசத்தில் தத்துவம் வியாக்கியாணம் எழுதுவதை விட செயல் வீரர்களாக இன்றே புறப்படுங்கள் அந்த முள்வேலி மக்களை காப்பாற்ற நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் நடப்பவை எனியாவது அந்தமக்களிற்கு நல்லது செய்யவும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //தேசத்தில் தத்துவம் வியாக்கியாணம் எழுதுவதை விட செயல் வீரர்களாக இன்றே புறப்படுங்கள் //
    புறப்படுங்கள் என சொல்வதால் எங்களை அனுப்பி விட்டு இங்கிருந்து வேடிக்கை பார்க்கும் திட்டமோ? சிலர் வீட்டுக்கு சொல்லாமல் புறப்பட்டதன் விளைவே இன்று அனுபவிக்கிறோம், சரி வன்னியில் இருந்து வாருங்கள் என சந்தானம் கேட்டிருந்தால் பெருமைபடலாம், ஆனால் பின்னால் இருந்து எம்மை முன்னுக்கு தள்ளி வேடிக்கை பார்ப்பது நல்லாவாஇருக்கு, தத்துவம் என்பது பல்லியை பொறுத்தமட்டில் எம்மக்கள் சார்பாய் சரியான கருத்தை சொல்வதுதான், அதுதான் எனக்கு தத்துவம், காரணம் எனக்கு சிவப்பு ஆகாத கலரப்பா?

    Reply
  • மாயா
    மாயா

    மெனிக் முகாமிலிருந்து 6000 பேரை மீள் குடியமர்த்தியிருப்பதாக அரசு சொல்வது பொய் , அவர்கள் யாழ் கைதடி மற்றும் மிருசுவில் முகாம்களில் மீண்டும் அடைபட்டுக் கிடக்கின்றனர் என ஜேவீபியின் பா.உ. விஜித கேரத் நேற்று (30) முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் நிகழ்வின் போது பத்தரமுல்லை ஜேவீபீ தலைமையகத்தில் வைத்து தெரிவித்தார்.

    அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2000 பேர் மட்டுமே இதுவரை மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த கேரத் அவர்கள், யாழ் வாசிகள் 40,000 பேர் வெளியேற்றப்பட்டு வேறு முகாம்களில் இன்னும் தங்க வைக்கப்பட்டள்ளனர் எனவும் தெரிவித்தார்.

    முகாம்களில் உணவு தட்டுப்பாடு நிலவுவதாகவும் , சமைப்பதற்காக கொடுக்கும் உலர் உணவுப் பொருட்களை சமைப்பதற்கு தேவையான விறகுகளை வெட்டிக் கொள்ள அருகேயுள்ள காடுகளுக்குச் செல்ல இராணுவம் ஆரம்பத்தில் அனுமதி வழங்கியிருந்த போதிலும் , அண்மையில் அது மட்டுப்படுத்தப்பட்ட போதே இராணுவத்தோடு மக்கள் பிரச்சனைப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார். அவர் மேலும் அந்நிகழ்வு குறித்து பேசும் போது மோதல்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் காண முடிந்தது. ஆனால் அரசு சொல்வதற்கும் , மக்கள் சொல்வதற்கும் இடையே பரஸ்பரம் முரண்பாடு காணப்படுவதாகவும் , அன்றைய சம்பவம் குறித்து பக்க சார்பற்ற அறிக்கையொன்றை அரசு முன்வைக்க வேண்டும் என்றார்.

    முகாம்களில் வாழும் மக்கள் தற்போது 3 பிரிவினராக இருப்பதாக தெரிவித்த பா.உறுப்பினர் கேரத் , ஒரு சாரார் வெளிநாட்டு உறவுகளைக் கொண்டவர்கள் , இரண்டாமவர்கள் இந்நாட்டில் உள்ள பணக்காரர்களின் உறவுகள் , அடுத்தவர்கள் யாருடைய உதவியும் இல்லாத, கையில் பணமே இல்லாத ஏழைகள் என சுட்டிக் காட்டிய கேரத், இவர்களுக்கான உடைகளைக் கூட அரசு முறையாக வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

    ஊடகவியலாளர்கள் சிலரது கேள்விகளுக்கு பதில் அளித்த கேரத் , சில குழந்தைகள் புலிகளாக இருந்தாக பெற்றோரே தெரிவித்துள்ளார்கள். அதே சமயம் பல குழந்தைகளை பலாத்காரமாக புலிகள் அழைத்துச் சென்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். சரித்திரத்தில் அவர்கள் புலிகளாக இருக்கலாம் , இப்போது அந்த சரித்திரம் தேவையற்றது. தொடர்ந்தும் புலி முத்திரையோடு அவர்களை நாம் பார்க்கக் கூடாது. அனைவரையும் சுதந்திரமாக நடமாட இடமளிப்பது அரசின் கடமையாகும். அனைவருக்கும் மன்னிப்பு வழங்க நாங்கள் சொல்லவில்லை. சட்ட ரீதியாக தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குங்கள். ஏனையவர்களை சுதந்திரமாக வெளியேற அனுமதியுங்கள். இந்த பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் முகாம்களில் இருந்து பெரும் பிரச்சனைகள் உருவாகும். அடுத்து வரவிருக்கும் மழை காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளால் , வெளிநாடுகள் நேரடியாக தலையிடும் நிலை ஏற்படும் என்றார் ஜேவீபீ பாரளுமன்ற உறுப்பினர் கேரத்.

    Resettlement of 6000 Menikfarm refugees is a lie: They are in Kaithady and Mirisuwil, Jaffna –Vijitha Herath
    ————————————————–
    The Govt. told a blatant lie to the world and the Sri lankans that it has resettled 6000 refugees of the Menikfarm in their villages. They have been re located at Jaffna Kaithady and Mirisuvil, said, JVP M.P. Vijitha Herath who is also a convener for the Headquarters looking into refugee problems.

    Vijitha Herath disclosed this today (30) at a media briefing at a JVP headquarters at Battaramulla.

    Mr. Herath who stated, the refugees have not been resettled, went on to add that about 2000 have been settled on the borders of Ampara, Batticaloa and Trincomalee. About 40,000 of the Jaffna residents are still in the refugee camps.

    There are 723 letters received of the relatives abroad of the refugees and those written by the refugees. According to those letters these refugees are facing untold hardships and are in miserable conditions. Despite food and relief items being supplied by World food program and Nayetra Organization, there is an acute shortage of food in these camps the letters reveal, Herath observed.

    Though Rice, dhal, sugar and flour are provided for families in units of fifty, the other requirements like condiments etc. are not available. Infant food are sometimes not available for Rs.2000/- a packet,despite the existence of Co operative outlets, the contents of the letters disclose., Herath lamented.

    Dry rations are provided to the refugees, but no firewood is supplied. Though the refugees had permission of the Forces to go in search of firewood, until the recent clash between the Forces and the camp inmates. Due to this clash two persons in the camps had been admitted to Hospital. In regard to this incident, the Govt.’s versions are contradictory. The Headquarters for looking into refugee problems has asked for an independent impartial report on this incident, Herath asserted.

    http://www.lankaenews.com/English/news.php?id=8408

    Reply
  • chandran.raja
    chandran.raja

    யாழ்பாணியின் கருத்தை பத்துதரம் திரும்பதிரும்ப படித்துப் பார்தேன். அவர் என்னத்தை சொல்லவிரும்புகிறார் என்பதை புரியமுடியவில்லை. ஊடகம் என்பது ஊகம் ஒழிய உண்மையில்லை. அதைபுரிந்து கொள்வதாக இருந்தால் சமூகவிஞ்ஞானத்தை ஓர்ரளவுக்கு தன்னும் புரிந்து கொள்வதாலேயே சாத்தியம். சமூகவிஞ்ஞானம் எப்படி பட்டது என கேட்காதீர்கள். கேட்டால் அந்த கேள்வி முட்டாள் தனத்தின் அறிகுறி என்பேன்.

    //கண்ணிவெடி……இந்த அரசு தேய்மதிகாலங்களையே கடந்து வந்திருக்கிறது.
    சுந்தரத்தின் கொலையோடு…..மகிந்தாஅரசில் கோபம் இல்லை…..//
    சுந்தரத்தின் கொலையை இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அங்கீகரித்த மிழ்சமூகத்தை தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். ஒரு சமூகத்தை எப்படி முடியும்?. மகிந்தாவும் தான் என்ன செய்யமுடியும்?. கண்ணிவெடி விஷயத்தில் மட்டுமல்ல தமிழ்மக்கள் சார்ந்த எந்த விஷயத்திலும் பல்லினங்களும் பலமதங்களும் வாழும் ஒருதீவில் மற்றைய இனங்களை மதங்களை மதிக்காத ஒருஇனம் இருந்தால்…அதுவும் தமிழ்இனமாக இருந்தால் அந்த இனத்தில் வந்தவன் அந்தசமூகத்தை முற்போக்கான பாதையில் கூட்டிச்செல்வதற்கு உரிமை இருக்கிறது. இதில்லென்ன குறைகண்டீர் யாழ்பாணி?.

    மகிந்தாஅரசு தலைநகரிலும் மற்றைபகுதிகளிலும் தமிழ்மக்களின் ஆதரவைப்பெற்று குறிப்பாக புலம்பெயர்தமிழரின் ஆதரவைப்பெற்ற தமிழ் பயங்கரவாத அமைப்பு கொலைசெய்தும் காயப்படுத்தியும் பொருளாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருந்தபோது எத்தனை இனக்கலவரத்தை நடத்தியிருக்க வேண்டும்?. சிந்தித்துப்பாருங்கள்.

    தமிழ்சமூகம் எப்பவும் மமதை பிடித்தது. சுயநலமிக்கது. தன்பாதுகாப்புக்காக தன் சகோதரத்தையோ தாய்யையோ கொல்லத் தயங்காதது. இதைதான் கடந்த முப்பது வருடங்களும் நிரூபித்திருக்கிறது. இனி என்ன? கற்றுக்கொள்ள எமக்கு வேண்டும்.
    மகிந்தாவில் குறைகாண எந்த தமிழனுக்கு உரிமையிருக்கிறது?. ஒரு ஐக்கியஇலங்கையை நேசிப்பவனுக்கு மட்டுமே! இருக்கமுடியும்.

    Reply
  • santhanam
    santhanam

    தமிழன் எதிரிகளால் அழிந்ததை விட துரோகிகளால் அழிக்கபட்டதுதான் சங்ககாலத்திலிருந்து அதிகம் இது தமிழ் இனத்தின் சாபக்கேடா அல்லது எங்களின் அறியாமையா. சோசலிச தத்துவமும் கெரிலாயுத்துமும் இதுதான் எங்களது தாரகைமந்திரம் இதை கேட்டுதான் வீட்டுக்கு சொல்லாமல் ஓடினோம் அழிந்தோம் இப்பவந்து பல்லி ஆகாது என்றால் இப்ப தெளிவாகவுள்ளீரா பட்டுதெளிந்தீரா. நான் வேடிக்கை பார்க்கும் ரகம் அல்ல இந்த முடிவை நீண்டகாலத்திற்கு முன் சொன்னவன் எனது நண்பர்கள் வன்னியிலிருந்து வந்தவர்கள் துணிந்து விமர்சனமாக வைத்தவன் அதனால் பலகோணங்களில் என்னை ஆய்வுசெய்தவர்கள் ஆனால் யாதர்த்தமான சிந்தனையுடன்தான் முன்வைத்தவன் 1987 மே மாதம் தமிழ்மக்களின் ஈழகனவு சிதறடிக்கபடடது. அதற்கும் புலிகளைதான் இந்தியா பயன்படுத்தியது 2009 மே மாதம்வரை இந்தியா தனது நலனை பலப்படுத்த புலிகளை பயன்படுத்தியது அதன் நிறைவுதான் எங்களுடைய அழிவும். இப்ப அதே ஆட்கள் வேறு உருவெடுத்து ஒற்றுமையை பேசுகிறோம் எங்களிற்கு அடிப்படையில் தெளிவில்லை.

    Reply
  • jalpani
    jalpani

    கண்ணிவெடி விஷயத்தில் மட்டுமல்ல தமிழ்மக்கள் சார்ந்த எந்த விஷயத்திலும் பல்லினங்களும் பலமதங்களும் வாழும் ஒருதீவில் மற்றைய இனங்களை மதங்களை மதிக்காத ஒருஇனம் இருந்தால்”

    58 ம் ஆண்டே புலி தோன்றி விட்டதா? 1980 களுக்குப்பிறகு தமிழினம் மதிக்கப்பட்டதால் தான் அவர்களுக்கு மேல் குண்டு மழை பொழிந்தார்களோ?

    சமூகவிஞ்ஞானத்தை ஓர்ரளவுக்கு தன்னும் புரிந்து கொள்வதாலேயே சாத்தியம்”

    எதற்கு நடைபெற்ற தேர்தல்களில் கூட்டமைப்பிற்கு வாக்குகள் அளிக்கப்பட்டன?

    மகிந்தாஅரசு தலைநகரிலும் மற்றைபகுதிகளிலும் தமிழ்மக்களின் ஆதரவைப்பெற்று என்பது மோசடியான கருத்து.

    தமிழ் பயங்கரவாத அமைப்பு கொலைசெய்தும் காயப்படுத்தியும் பொருளாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருந்தபோது எத்தனை இனக்கலவரத்தை நடத்தியிருக்க வேண்டும்?

    ஆகா! என்ன கண்டுபிடிப்பு. கலவரம் ஒன்று வந்திருந்தால் மறுகணமே நாடு பிரிக்கப்பட்டிருக்கும். இது தெரியாத முட்டாள்கள் இல்லை சிங்கள அரசியல்வாதிகள்.

    கடைசியாக நான் சொல்ல வருவது நீங்களே குறிப்பிட்டது போல கண்ணிவெடி விடயத்தில் பழிவாங்கும் விதமாக செயற்படும் இந்த அரசின் இந்த செயலே இலங்கை அரசியலுக்கு ஒரு துளி விசம் ஆகும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்தானம் எனது பின்னோட்டத்துக்கும் உங்கள் பின்னோட்டத்துக்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக பல்லிக்கு தெரியவில்லை, இருப்பினும் ஏதோ பல்லியை திட்டி இருப்பது தெரியவில்லை, இதையெல்லாம் பார்த்தால் தேசத்தில் பல்லி தொடரமுடியுமா?

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி நீங்கள் இருந்தால் தான் நாங்கள் எழுதமுடியும் உங்களை காட்டி தேசம் கருத்துகளத்திற்கு பலம் சேர்க்கிறோம் நீங்கள் தொடரவும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    யாழ்பாணிக்கு தான் எத்தனை மாயாஜலாக்கனவுகள்! அரசியலே புரிந்திராத ஒரு கிறிமினல் பேர்வழியின் பேரில் நாடு பிரிந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழினமே அழிக்கப்பட்டிருக்கும். இலங்கையரசு இதை செய்யாவிட்டாலும் இந்திய தேசிய முதலாளித்துவம் இதை செய்து முடித்திருக்கும்.
    கண்ணிவெடியை பற்றி கதைப்பதாக இருந்தால் கண்ணிவெடியுடன் மட்டுமே இருங்கள். சுந்தரத்தின் கதை 58 80 தையெல்லாம் ஏன்? தட்டத்தில் வைத்து தூக்கி வருகிறீர்கள். ஆகவே உங்கள் முடிவின்படி சிங்கள அரசுடனும் சிங்கள இனத்துடனும் கூடிவாழ முடியாது என்பதே! இது புலியின் வேலைத்திட்டத்திற்கு எதுவும் குறைந்தது இல்லையே!.

    Reply
  • jalpani
    jalpani

    நீங்களே மகிந்த அரசு கண்ணிவெடி விடயத்தில் பழிவாங்கும் அரசியலை செய்கிறது என சொல்கிறீர்கள். நான் மகிந்த அரசு அதற்கும்மேலே செயற்படுகிறது நம்பாதீர்கள் என சொல்கிறேன். எனது கணிப்பீடு உங்களுக்கு மாயாஜாலக்கனவாக இருக்கிறது. சுந்தரம், 58 ,80 களில் இருந்து தான் எனக்கு புலியை புரிந்து கொள்ள முடிகிறது. மகிந்தவையும் அவர் சொல்வது- செய்வது என்பவற்றை வைத்துத் தானே கணிப்பிட முடியும். சிங்கள அரசுடன் வாழ முடியாது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதற்கு அந்த அரசுகளை தேர்ந்தெடுக்கும் சிங்கள மக்களுக்கும் பொறுப்பு உண்டு. புலியை ஆதரித்த தமிழ் மக்கள் எப்படி இந்த அழிவுகளில் பொறுப்பெடுக்க வேண்டுமோ அது போன்றது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //கண்ணிவெடியை பற்றி கதைப்பதாக இருந்தால் கண்ணிவெடியுடன் மட்டுமே இருங்கள். சுந்தரத்தின் கதை 58 80 தையெல்லாம் ஏன்? தட்டத்தில் வைத்து தூக்கி வருகிறீர்கள்.//
    சரியான கருத்து; பேசபடும் விடயத்தை விட்டு நாம் திசை மாறி பேசுவதும் எதிரிக்கோ அல்லது சம்பந்தபட்டவர்களுக்கோ சாதகமாக முடியும்; உதாரனத்துக்கு புலிகளின் சமாதான பேச்சுவார்த்தை ஒன்றிலும் தமிழ்மக்கள் பற்றி பேசபடவில்லை, ஆனால் தமிழர் பிரச்சனை பற்றி பேசும் போது மட்டும் புலிகளை மறக்காமல் அழைக்க வேண்டி கிடக்க்கு; தமிழர் பிரச்சனைக்கு புலிகள் மட்டுமல்ல வட்டுகோட்டை கொட்டைபாக்கு வியாபாரிகளும் ஒதுங்குவதே மிக நல்லது;
    தொடரும் பல்லி;

    Reply
  • பல்லி
    பல்லி

    // பல்லி நீங்கள் இருந்தால் தான் நாங்கள் எழுதமுடியும் உங்களை காட்டி தேசம் கருத்துகளத்திற்கு பலம் சேர்க்கிறோம் :://
    அப்ப இதுவரை பல்லியை வைத்து தேசத்தில் காமடிதான் பண்ணினீங்களா? இது தெரியாமல் பல்லியும் பகல் இரவாய் எழுதி விட்டேனா? இருப்பினும் ஏதோ ஒரு வகையில் பல்லி இந்த சமுதாயத்துக்கு உதவுவதால் அதே காமடியை தொடர்கிறேன் சந்தானம்;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிங்கள அரசுடன் வாழமுடியாது என்பது உங்களுக்கு இலகுவாக இருக்கிறது. அப்படி சொன்னவர்களும் இப்படியான வெறிவார்த்தைகளை சொன்னவர்களும் போய் சேர்ந்து விட்டார்கள். முழுமையாக அழியவில்லை என்பதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள். வசதிதேடி பாதுகாப்புதேடி நீங்கள் வந்துவிட்டடீர்கள். உங்கள் உசார்நிலை பார்த்தால் கையில் பிறிதொருநாட்டின் குடியுரிமையும் பெற்றுவிட்டவர்கள் போல்லிருக்கிறது. மகிந்தா அரசில் நீங்கள் வைத்திருக்கிற அபிப்பிராயம் உங்களுடைய சுகந்திரம். நான் வேண்டுவது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்வை சுகந்திரமான நடமாட்டத்தை.
    அர்த்தமில்லாத ஒரு சகோதரயுத்தை நடத்தி அந்தமக்களை உருக்குலைத்ததில் இன்னும் நீங்கள் திருப்திப்படவில்லையா? அரசாங்கத்திற்கு ஒவ்வொரு வெறுப்பான வார்த்தைகளும் மேலும்மேலும் அங்குள்ளவர்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.
    அங்குவாழும் மக்களுக்கு இணக்கப்போக்கு அரசியலே தேவையானது. அவர்களுக்கு கட்டுநாயக்காவும் கதிர்காமமும் தேவைப்படுகிறது. கோட்டை புகையிரத நிலையமும் சிவனொளிபாதமலையும் தேவைப்படுகிறது. அவர்களை வாழவிடுங்கள் யாழ்பாணி.

    Reply