கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • சரத் பொன்சேகா கைது (9)
  • சரத் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க (1)
  • வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை - ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு (2)
  • இலங்கையிலிருந்து தேர்தல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் தேசம்நெற் ஆசிரியர். - த சோதிலிங்கம் (51)
  • புதிய திசைகள் அமைப்பின் சந்திப்புத் தொகுப்பு : ரி சோதிலிங்கம் (11)
  • பாடசாலை மாணவர்களுக்கான 2010 ஆம் ஆண்டுக்கான இலவச சீருடை விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகின்றது. இதன் முதல் தொகுதி ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

    1200 மில்லியன் ரூபா செலவில் நாற்பது லட்சம் மாணவர்களுக்கான நான்கு வகையான,  65 லட்சம் சீருடைகளை விநியோகிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதிலுள்ள 92 வலய கல்வி காரியாலயங்களுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இரண்டு லட்சம் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி நாளை ஏ-9 வீதியூடாக யாழ். வலயக் கல்வி காரியாலயத்துக்கு வைபவ ரீதியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது. 7 லட்சம் ரூபா போக்குவரத்து செலவில் இவை அனுப்பி வைக்கப்படவுள்ளன.சீருடை விநியோகத்துக்காக பத்து மில்லியன் மீட்டர் துணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

    இதேவேளை அரசாங்க பாடசாலை  மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தக விநியோகத்தை உத்தியோகபூர்வமாக இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகா வித்தியாலயத்தில் டிசம்பர் 07 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அன்றைய தினத்திலேயே சீருடைகளையும் வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. 






    Related posts:
    • Will be added soon here...
    உங்கள் கருத்து

    Name (required)

    Email (required)

    Website

    உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
    English பாமினி உச்சரிப்பு