ஜனநாயகத்தை நிலைநாட்ட மட்டு மேயர் சிவகீதா சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு

sivageetha.jpgமட்டுநகர் மேயர் சிவகீதா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் வேண்டுதலுக்கு இணங்க அரசியலில் நுழைந்து கொண்ட நான், அரசியலில் நுழைந்ததில் இருந்து எனது பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்றே அரசியல் செய்துவருகின்றேன். இன்றைய நிலையில் எனது பிரதேசத்தில் உள்ள மக்களும், புத்தி ஜீவிகளும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, இலங்கையின் பொருளாதாரத்தை உயத்துவார் என நம்பப்படுகின்ற ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டியதை அடுத்து இம்முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • BC
    BC

    மக்களும் புத்தி ஜீவிகளும் சேர்ந்து ஏன் இவரை பொன்சேகாவை ஆதரிக்கும்படி கேட்டனர்? தாங்கள் நேரடியாக பொன்சேகாவுக்கு வாக்களிக்கலாம் தானே!!

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “பணம் பாதாளம் வரைப் பாயும் என்பார்கள்”!, மனம் பாதாளத்தைவிட ஆழமான பெருங்கடல் என்பார்கள்!, ஆனால் இலங்கையிலும், இந்தியாவிலும் “பணம்” என்ற வார்த்தை,”சராசரி வக்காளர்களின் மன அடி வரை பாய்ந்துள்ளதும்”, இலங்கையில்,பணம் என்ற வார்த்தையுடன், “மேற்குலகம்” என்பதுவும் சேர்ந்துள்ளதுடன், “சினிமாவைப் பாருங்கோ எத்துனை ஏழைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் நாம் பரவாயில்லை, இந்தியாகாரனோட சேர்ந்துடாதேயோங்கோ, ஏழையாயிடுவோம்”, – மேற்குலக ஆதரவாளர்களுக்கு ஓட்டுப் போடுங்கோ! என்ற மேலோட்டமான பழமைவாத சிந்தனை துரதிஷ்ட வசமானதும்! – இந்த இரு வாசகங்களும் இந்தியாவில் இல்லை என்றாலும், மற்றப்படி, கிரிமினல் அரசியல்வாதிகளின் விளையாட்டுக் களமாக இருக்கிறது, “தமிழன்!?” உருவாக்காத பணம் என்ற வார்த்தை, என்பது வேதனை தரத்தக்கதே!.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கூத்தமைப்புச் சம்மந்தரிலிருந்து இன்று கூத்தடிக்கும் இந்த சிவகீதா வரை, தங்களது சுயநல அரசியயலுக்காக ஏன் பிரதேசத்தில் உள்ள மக்களையும், புத்தி ஜீவிகளையும் போலியாக துணைக்கழைக்கின்றார்கள்??

    Reply
  • thaya
    thaya

    அப்பன் வழி போனாயோ அம்மணி!

    போ!.. மகிந்த போட்ட
    பிச்சைதான் அம்மணி
    உங்கள் மேஐர் பதவி!

    ஐனவரி 27 இல்

    திரும்பவும் வந்து
    மகிந்தவிடம்
    மண்டியிட்டு விடாதிர்!

    மேற்குலகின் மேலாதிக்கத்திற்கு
    கட்டுப்படாத மகிந்தவை வீழ்த்த
    ஒபாமாவும் அள்ளிக்கொடுப்பபார்
    பொன்சேகாவிற்கு

    பொன்சேகா உங்களுக்கு
    கிள்ளித்தெளித்திருப்பார்!

    Reply
  • BC
    BC

    //Thaya -ஐனவரி 27 இல் திரும்பவும் வந்து மகிந்தவிடம் மண்டியிட்டு விடாதிர்!//
    திரும்பவும் வந்து மகிந்தவிடம் மண்டியிடுவதற்கு முன்னேற்பாடாக தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்துகொண்ட மாதிரி இப்போ பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவு எடுத்த பின்பும் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கிறார்.

    Reply
  • rohan
    rohan

    மேலுள்ள பின்னூட்டங்கள் பரிதாபம் தருவன. மகிந்தவை சிவகீதா ஆதரிக்கத் தவறியமைக்காக அவர் மீது சேறு வீசப்படுகிறது. பணம், பதவி, பொய் என்று வார்த்தைப் பிரயோகங்கள் வேறு!

    யார் மீது பரிதாபப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    றோகன்,
    நீங்கள் கவலைப்படாதீர்கள். வழமை போல் நீங்கள் புலிவால்களுக்காகவும், புலிவால்கள் ஆதரிக்கும் சரத்திற்காகவும் கவலைப்படுங்கள். தை 26 இற்குப் பின் அது தானே தங்கள் தலையாய கடமையாகவிருக்கும்:::

    Reply
  • BC
    BC

    //Rohan – மகிந்தவை சிவகீதா ஆதரிக்கத் தவறியமைக்காக அவர் மீது சேறு வீசப்படுகிறது. பணம், பதவி, பொய் என்று வார்த்தைப் பிரயோகங்கள் வேறு! //

    புலிகளின் தாகமான பொன்சேகாவின் வெற்றிக்கு சிவகீதா ஆதரவு தெரிவித்தபடியால் அவர் புனிதமான அரசியல்வாதி ஆகிவிட்டார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளை இனம் காண்பதற்கு தமிழ்மக்களுக்கு முப்பதுவருடங்கள் தேவைப்பட்டது. மிகுதிப் புலிககளை இனம்காண்பதற்கு (ஆயதம் இல்லாத புலிகள்) இந்த ஜனாதிபதித் தேர்தல் போதுமானது. இதன் வெளிப்பாடே சிவகீதா பிரபாகரனின் இந்த நிலைப்பாடு.

    Reply
  • Sivam
    Sivam

    சிவகீதா புலி ஆதரவாளர் அல்லது இல்லை என்பது எனக்கு தெரியாது. ஆனால் எல்லாவற்றையும் புலிப் பூச்சாண்டி என்றால் எந்த திறமையான பூசகாராலும் பேய் கலைக்க ஏலாது. பேய் ஆடித்தான் இறங்கும். சிவகீதாவின் கணக்கு மிகவும் இலகுவானது. முதலாளித்துவ அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர பகைவர்களும் இல்லை. தற்போதைய நிலையில் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையில் இடிபடுவதை தவிர அவவினது அரசியல் உலகத்தில் ஒரு வசந்தமும் இல்லை.

    மகிந்தா வென்றால் இந்த நிலைமையில் ஒரு பெரிய வித்தியாசமும் ஏற்ட்பட்ப் போவதில்லை. மகிந்தவின் வெற்றியின் பின்னர் பிள்ளையான் எப்பிடியாவது முதலமைசர் பதவியில் இருந்து உயிரோடோ அல்லது உயிரில்லாமலோ வெளியேறினால் கூட ஏற்படும் அரசியல் குத்து வெட்டுக்களில் இவவுக்கு இருக்கும் பாத்திரம் சிறிது.

    அதே மாதிரி கருணா மந்திரி பதவியில் இருக்க வேண்டிய தேவை மகிந்தா சகோதரர்களுக்கு இல்லாமல் விட்டாலும் இவவுக்கு ஒரு சந்தர்பமும் இல்லை. வாழ்நாள் முழுக்க கருணாவிற்கு பக்க வாத்தியம் வாசிப்பதற்கு பதிலாக சிவகீதா பொன்சேகா துரையின் கருணையில் கிழக்கில் வசந்தம் காண விரும்புகின்றா. இந்த கணக்கு பிழைச்சால் மட்டகளப்பு வாவி பக்கம் போவதை மட்டும் நிறுத்தினால் போதாது.

    Reply
  • thaya
    thaya

    வெல்லப்போவது மகிந்தா என்பது உறுதியாகிவிட்டது. தெரியாத பேயை விடவும் தெரிந்த பேய் நல்லது என்றாவது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

    திரும்பவும் மகிந்தாவே ஆட்சியதிகாரத்தில் அமரப்போகின்றார். கூட்டமைப்பு ஆதரிக்கும் பொன்சேகாவிடம் அரசியல் தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது இருக்கவும் இல்லை. கூட்டமைப்பு மக்களுக்கு என்ன சொல்லப்போகின்றது?…

    ஆனால் மகிந்த சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார். அது தொடரும் என்பதில் உறுதி.

    கண்டியில் வைத்து யுத்தத்தின் இறுதிக்காலத்தில் சரத்பொன்சேகா செவ்வி ஒன்று கொடுத்திருந்தார். புலியில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட பொது மன்னிப்பு கிடையாது என்று இறுமாப்புடன் தெரிவிதட்தார் பொன்சேகா.

    அவரது வாலில் தொங்குவதற்கு கொழும்பு வர்த்தகர் மனோ கணேசன்> அடிக்கடி ஆட்சி மாற்றங்களுக்கு துணை போவதையே பொழுபோக்காக கொண்டிருக்கும் கக்கீம்> மற்றும் கால காலமாக தரகு முதலாளித்துவத்தை தலையில் தூக்கி கொண்டாடும் மித வாத தமிழ் அரசியல் தலைமைகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

    இதில் பாவம் சுரேஸ் போன்றவர்கள். அவர்களுக்கு தனியாகவோ அல்லது கட்சி ரீதியாகவோ செல்வாக்கு எதுவும் கிடையாது. புலிகளை வைத்துக்கொண்டு மட்டும்தான் அவர்களால் மக்களிடம் செல்ல முடிந்தது. இப்போது அப்படியம் செல்ல முடியாத நிலையில் புலிகளை தானே உள்ளிருந்து அளித்ததாக பெருமிதம் கொள்கிறார். வெுறம் தமிழ் தேசியத்தை மட்டும் உச்சரித்துக்கொண்டு மக்களிடம் போகப் போகிறர்களாக்கும்.

    மகிந்தவிற்கு வாக்களித்தால் வரும் விளைவுகளுக்கு தானே பொறுப்பு என்கிறார் டக்ளஸ். நடக்குதோ இல்லையோ துணிச்சல்தான். சரத் பொன்சாகாவிற்கு வாக்களித்தால் தாமே பொறுப்பு என்பார்களா கூட்டமைப்பு?….

    Reply
  • Sivam
    Sivam

    “பொன்சேகாவிற்கு வாக்களிப்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் புலிகள்”
    “மகிந்தவிற்கு அரசியலில் எதிரானவர்கள் புலிகள்”
    “தமிழீழ விடுதலை புலிகள் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்”
    “நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டால் அவர்களுடன்(“பயங்கரவாதிகளுடன்”) நிற்கின்றீர்கள். [George Bush]

    இந்த வசனங்கள் அவமானம் நிறைந்த ஆபத்து நிறைந்த ஆக்கிரமிப்பு வசனங்கள். அதே நேரத்தில் ஒரு விவசாயி “நான் பயிரிடாத மரவெள்ளி கிழங்கு எல்லாம் நஞ்சு” என்று சொல்வதை போன்று பயம் கலந்த கோமாளித்தனமானவை.

    இந்த பேய் எந்த பூசரியாலும் இறக்க ஏலாது, நிரந்தர ஆட்டம் சில வேளைகளில் முள்ளி வாய்கால் போன்ற கடல் கரைகளில் இறங்கலாம். வாழ்க ஜனநாயகம், வாழ்க கருத்து சுதந்திரம்.

    Reply