தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்த ஆர் சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என ஆர் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட ஆர் சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வி ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக வி ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த வி ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை ஆர் சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்தார்.
இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் ஆர் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.
மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரிஎன்ஏ இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். ரிஎன்ஏ ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (சம்பந்தர் அணி), ஈபிஆர்எல்எல் (சுரேஸ்அணி) ஆகியோரின் ஆசனங்களுக்கு பிரச்சினை இராது. ஆனால் தற்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலொவில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே ஆசனம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழ் கொங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே கூடுதலாக வாழ்ந்துள்ளனர். அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை. அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் ஆர் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா போன்றவர்கள் ஆர் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. ரிஎன்ஏ தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என எம் கெ சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் ரிஎன்ஏ க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை ரிஎன்ஏ யில் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் ரிஎன்ஏ யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. ரிஎன்ஏ இல் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வியூகம் அமைக்கலாம் எவ்வாறு ஆசனங்களைத் தக்க வைப்பது என்று கணக்குப் போடுவதில் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றன. வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது. முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த வி ஆனந்தசங்கரி தற்போது தனிமைப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் தனித்துப் போட்டியிட உள்ளது.
இவர்களைவிடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிட உள்ளனர். இந்த ஆரவாரங்களுடன் வடக்கு கிழக்கு தேர்தலுக்கு தயாராக உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே.
santhanam
//தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது// இது அவரின் சரியான முடிவு புலிகளால் நியமிக்கபட்ட அத்தனை பிரதிநிதிகளிற்கும் அரசியல் சுத்த சூனியம்
அவர்களை நான் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன் அவர்களது நோக்கம் எதை எவன் சொல்லிவிட்டனோ அதையே திருப்பி திருப்பி கதைப்பது மக்களை பற்றிய சிந்தனை தெளிவில்லை பாரளுமன்ற சம்பளத்தையும் 50000 ருபாவருவதாகவும் தங்களிற்கு அது காணும் என்றும் சொன்னார்கள்.
thurai
30 வருடப்போரில் வெற்ரி பெற்ரவர் சம்பந்தனேயாவார். ஈழப் போராட்டமும் , தமிழரின் உருமைப் பேச்சும் அடக்கப்பட்டு விட்டன, இன்று பாராளுமன்ற பதவிக்கான தமிழரசியல் வாதிகளின் பரம்பரைப் போட்டிகளை ஆரம்பித்து விட்டனர்.
இவர்களில் யாராவது ஈழத்தமிழர்களிற்கு தற்போது என்ன தேவையென்பதையும், அதற்காக தாங்கள் எவ்வகையான் அரசியல் தீர்வை உலகின் முன் வைத்துள்ளார்களென்பதையும் கூறுவார்களா?
அல்லது புலிகள் பணத்தையும், உயிரையும் கேட்டார்கள் எங்களிற்கு உங்கள் வாக்குகளைத் தந்தால் மட்டும் போதும் என தமிழர்களிடம் கேட்டு வருகின்றார்களா?
துரை
Kajan
யாழ்ப்பாணத்தாருக்குத்தான் உப்பிடி மூளை ஓடுமெண்டால் திருகோணமலையாருக்கும் உந்த விசயம் கைவந்த கலைபோலை இருக்கு.
அது சரி சம்பந்தன் ஜயா உங்களை ஆர் நியமிச்சது ? நீங்கள் புலியளாலை நியமிக்கப்பட்ட ஆக்களில்லை எண்டு நெஞ்சைத் தொட்டு சொல்லுறியளோ? அப்ப ஏன் plote சித்தார்த்தருக்கு போனமுறை நீங்கள் நியமனம் குடுக்க ஓமெண்டுபோட்டு பிறகு மாட்டனெண்டு சொன்னனீங்கள் ? தலைவர் மறுத்தபடியாலைதானே?
சந்தானம் சம்பந்தர் கோஸ்டி மட்டுமென்ன ஒரே கதையைத்தானே திருபபித் திருப்பிச் சொல்லினம்.
சந்தானம் நாங்களும் இஞ்சை யாழ்ப்பாணத்திலையிருந்து எல்லாற்றை கதையளையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறம். ரெணடுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சிலவேளையளிலை பிராணியளின்ரை ஆக்கள் பறவாயில்லைப்போலை தெரியுது. பாவங்கள் பானையிலை இருக்கிறதுதானே அகப்பையிலை வரும். வைச்சுக்கொண்டே இல்லையெண்டு சொல்லுதுகள்?.
Kajan
//ஆனால் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. //
உங்களுடைய கணிப்பு இம்முறை தவறும்.
யாழப்பாணத்தில் மனோ கணேசனும் போட்டியிடுகிறார். இவர் கொழும்பில் ஜ.தே.க. கூட்டமைப்பில் தனக்கும்> பிரபா கணேசனுக்கும்> குருபரனுக்கும் என 3 ஆசனங்களைக் கேட்டிருந்தார். ஜ.தே.க. 2 ஆசனங்கள்தர ஒப்புக் கொண்டது. உடனே இவர் யாழ்ப்பாணத்தில் போட்டியிட போவதாக வெருட்டத் தொடங்கியுள்ளார். இவர் போட்டியிட்டால் கூட்டமைப்பினரின் ஆசனங்கள் சில இவருக்குப் போகும். இது தவிர சங்கரியாரும் தனக்கு 5 சீட் இருக்கிறது எனக்கூறி சுயேட்சையாக போட்டியிடபோவதாக கூறுகிறார். இவருக்கும் கூட்டமைப்பு வாக்குகளை போகும். இவை தவிர ஜ.தே.கட்சியும் தனியாக யாழில் நிற்கவிருக்கிறது. அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் சிறிய ஆதரவு இருக்கிறது. மண்ணெண்ணை மகேஸ்வரன் இவர்களது கட்சியிலிருந்து முன்னர் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதுவும் கூட்டமைப்பினரை பழுதாக்கும். இது தவிர சிவாஜிலிங்கம் விக்கிரமபாகுவுடன் சேர்ந்து தனியாக கேட்க இருக்கிறார். இதுவும் கூட்டமைப்பினரை பாதிக்கும்.
எனவே> இறுதியில் வெல்லரப்போவது யார் ? .
Kusumpu
சம்பந்தருக்கு வயது போய்விட்டது. அறளை பெயர்ந்து விட்டது. த கூத்தமைப்புக்கு தான் என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்பது தெரியாமல் வாய்க்கு வந்தமாதிரி உளறுகிறார்கள். புலிகள் இருந்தபோது தலையாட்டிப் பொம்மை போல் ஆட்சினார்கள். பின் சரத்தோடு உடன்படிக்கை செய்த போது இவர்கள் கேட்டது பிடித்து அடைத்து வைத்திருக்கும் புலிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றே. தற்போது மகிந்தவுக்கு வலை வீசுகிறார்களாக்கும். புலிகளுக்கு ஆட்டு மட்டும் தலை ஆட்டிவிட்டு புதுக்ககை பேசுகிறார் சம்பந்தர். சம்பந்தர் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்.
msri
சம்பந்தர்> தமிழ்கூட்டமைப்பு தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை யென்றதும்> புலிகளால் நிறுத்த்பபட்வர்களுக்கு அடுத்த தேர்லில் இடம் இல்லையென்பதும்> ஆனந்தசங்கரி அவர்கள் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிதவாதத் தலைவர் என்பதையும்> அவருக்கு தொகுதி ஓதுக்க முன்வருவதையும் > அரசியல் முதிர்ச்சி என்பதா? மக்களை மாக்கள் ஆக்கும்> மகிந்த சிந்தனைக் கொப்பியடிப்போ? இவரும் ரஷ்யா போனால்> “அரசியல் விஞ்ஞானக் கலாநிதி” பட்டம் வழங்குவார்கள்!
chandran.raja
ரி.என்.ஏ. இலங்கையில்லுள்ள தமிழ்மக்களின் அபிலாசைகளாவது பிரதிநிதிப் படுத்துகிறார்களா? என்று கேள்வி கேட்டால் எப்படியிருக்கும்?? இவர்களுக்கு இந்த சிறுதீவில்லுள்ள தமிழ்மக்கள் யார் என்பதே இவர்களால் புரிந்து கொள்ள முடியாத புதிர்.
செல்வநாயகத்திருந்து முப்பதுவருட தீ குளிப்பு வரை-இறுதியில் சம்பந்தன் வரை இந்த புதிரை புதிராகவே வைத்திருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை மலையக மக்கள் தமிழ்மக்கள் இல்லை. சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் தமிழ்மக்கள் இல்லை. வக்கீல் வாதங்களுக்கு துணை சேர்காதவர்களும் ஆதரவு கொடுக்காதவர்ளுமான கிழக்கு மாகாணமக்கள் தமிழ்மக்கள். ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்டவர்களுமான
முஸ்லீம்மக்களும் தமிழ்மக்கள் இல்லை. எல்லாவற்றையும்விட காலத்திற்கு காலம் எல்லா சமூகமட்டங்களிலும் இருந்து வறுமையில் தள்ளபடுகிறார்களே அவர்களும் தமிழ்மக்கள் இல்லை.
இவர்களின் அரசியல் வரலாற்றில் தமிழ்மக்களை சிங்கள மக்களுக்கெதிராக எதிர்நிறுத்துவதிலேயே தமது அரசியல் சாணாக்கியத்தை காட்டி நிற்கிறார்கள். இன்றும் இந்தநிமிடப் பொழுதிலும் அதுவே. தமிழ்மக்களுக்கு அரசியல் தலைமை தாங்கக்கூடிய சக்தி 2009 தின் கடைசிப்பகுதியிலும் முற்பகுதியிலும் தெட்டத் தெளிவாகக் கண்டு கொண்டோம். இனி சம்பந்தனுக்கு தமிழ்மக்கள் “சீட்” கொடுக்க முடியுமா? என்பதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.
palli
சம்பந்தரும் பேரபிள்ளைகளுடன் ஆடும் விளையாட்டை மக்களுடன்(தமிழ்) ஆடுவது கவலைதான், இவர் சுவிஸ்க்கு வந்தபோது ஆராவது அவருக்கு உதவி போட்டிருக்கலாம் அகதி விண்ணப்பத்தை, சரி பார்ப்போம் வராமலா விடபோகிறார்,
santhanam
ஆயுதபோரட்டம் 30வருட தோல்வி ஆனால் அருணாச்சலம் தொடக்கம் சம்பந்தர் வரை அரசியல் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் வெற்றி.
NANTHA
வாக்குகளைப் பெற்று எம் பி ஆகியவுடன் வாக்கு போட்ட மக்களையே மறந்து போகும் சம்பந்தர் கோஷ்டிகளுக்கு, புலியின் ஆதரவாளர்களைத் “துரத்துவது” அவர்களின் “இருப்பின்” பிரச்சனையாகி விட்டது. இதுதான் காலத்தின் கோலம்.
“புலிகள்தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள்” என்று சம்பந்தர் முன்னர் கூறியவற்றை இப்போது தமிழர்கள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அப்போது சம்பந்தரும் புலிதான்.
பார்த்திபன்
தவறுகள் செய்யும் போது சேர்ந்து செய்வது, தவறுகள் அம்பலமானதும் அடுத்தவனை மாட்டிவிட்டு, தன்னை உத்தமனாக்க முயல்வது. இதைத் தான் தற்போது சம்மந்தரும் செய்கின்றார். இவர்களுக்கு எல்லாவற்றையும் விட தமது இருப்பும் பிழைப்புமே முக்கியம்…….
NANTHA
சரியாக சொன்னீர்கள் பார்த்திபன். “குட்டு” உடைந்து விட்டது. கூட்டமும் கலைந்து விட்டது.
மாயா
எப்பிடி இருந்த நாங்க இப்பிடி ஆகிட்டோம். ( 10 ஆயிரம் திரட்டிய மைதானத்தில் இன்று 10-15 )
http://www.puthinappalakai.com/images/s/murugathas-swiss01.jpg
ஜ.நா முன்றலில் போர் முழக்கம்:
தேசியத் தலைவன் மீதும் கொடியின் மீதும் ஆணையிட்டு உறுதி எடுக்கின்றோம், எந்த இடர் வரினும் ஈழம் வெல்லும் வரை புலத்தில் ஓயமாட்டோம்
santhanam
சம்பந்தர் ஆயுதத்தால் ஆட்டபட்டார் மே18க்கு முன் நான் அறிந்தவரை புலியால் நியமனம் பெற்றவர்கள் தான் தமிழ் கூட்டமைப்பை புலிஉயிர்வாழும் வரை ஆட்டிபடைத்தார்கள்
ஏதாவது தீர்மானம்எடுக்கவும் முட்டுகட்டையாகவிருந்துள்ளனர் சம்பந்தர் அவர்களை அகற்றுவதில் எனக்கு உடன்பாடு
sumi
இவர்களுக்கு பதவிதானே முக்கியம். எந்த கட்சியிலும் சேரலாம். இதற்கு ஏன் இவ்வளவு “பில்டப்”
மாயா
புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் பா.உக்குகளுக்கு மட்டுமல்ல , கருணா அம்மானுக்கும் , தேர்தலில் நின்று பாராளுமன்றம் வருமாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பீடம் தெரிவித்துள்ளது. இதை ஜனாதிபதி நேரடியாக கருணா எனும் முரளீதரனுக்கு தெரிவித்துள்ளார்.
nallurkanthan
We have to think as Sri Lankans, not as Tamils. When we enjoy the benefits of free education, health and so on we are getting what other sri Lankans get. Our unnessary talks destroyed us. I read a comment made by some body about Doctorate to MR. He deserves it because he led a country to destroy mafia tigers. Thereafter Tamils of Jaffna enjoys many benefits. What is the problem of giving recognition to MR. Tamils have been fooled by SJV and all the siblings.
island.lk
Twelve TNA MPs sidelined – Sivajilingham
by Franklin R. Satyapalan
Independent candidate at the recently concluded Presidential election and ex-TNA Parliamentarian representing TELO, M. K. Sivajilingham said that his party hierarchy had sidelined 12 former MPs over their alleged support to the LTTE.
With the decimation of the LTTE on the military front, the TNA leadership had changed the ideological stands of the party, he said.
He said the task of making a final decision on TNA’s participation at the forthcoming election had been entrusted to a five member committee led by Party Leader R. Sampanthan.
The other stalwarts of the TNA are Mavai Senathirajah of the ITAK, Suresh Premachandran of EPRLF, Selvam Adaikalanathan of TELO and Gajendrakumar Ponnambalam of the ACTC
Sivajilingham attributed his poor performance at the Presidential elections in the Jaffna district to negative reports published in ‘Uthayan’ and other papers.
Sivajilingam expressed these views when he was asked whether the other TNA MP and TELO member, Attorney- at- Law N. Srikantha and he had held discussions with NSSP Leader Dr. Wickremabahu Karunaratna and decided to contest the forthcoming Parliamentary elections on the NSSP ticket..
He said, “We would decide on an alternative following the decision of the TNA Leadership on the elections”.
He said he was awaiting the final decision of the five member committee of the TNA headed by R. Sampanthan.—- island.lk/2010/02/17/news30.html
NANTHA
//கருணா அம்மானுக்கும் , தேர்தலில் நின்று பாராளுமன்றம் வருமாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பீடம் தெரிவித்துள்ளது. இதை ஜனாதிபதி நேரடியாக கருணா எனும் முரளீதரனுக்கு தெரிவித்துள்ளார்.//
ஜனாதிபதி தனது சகோதரன் பசிலுக்கும் அதனையே சொல்லியுள்ளார். பசிலும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்!
kunapathy
not a single leader in this groups are not fit for to lead the tamils including former terrorist groups. all wants a chair in the parliment until their body goes to florist.the tamils were cheated by this stooges from sjv
தமிழ்வாதம்
அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக வந்தது போல், கிழக்கின் மனிதன் சம்பந்தன் தமிழர்களுக்கு தலைமையாகி வழி நடத்துவது வரவேற்கத்தக்கது. வாழ்த்துவோம்.
ஒற்றை ஆட்சி முறையா, பற்றை வாழு நிலையா என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை விதையுங்களொரு நல்ல எதிர்காலத்திற்காக.
‘உவை உப்பிடித்தான்,அப்பவே சொன்னனான்’என்பது ஏட்டுச் சுரைக்காய். ‘என்ர சொல்லைக் கேள் இல்லையேல் மாள்’ என்கிற பலரது ஆதிக்க சிந்தனை ஆழுமையுள்ளதாகப் படவில்லை.
மாயா
கனடா வானொலியில் சம்பந்தர் கலந்துரையாடும் போது , ஆவேசப்பட்டு புலிகளது வயித்தெரிச்சலுக்கு உள்ளாகும் விதத்தில் தொலைபேசியை துண்டித்து விட்டார். அதன் பின்னர் வந்த புலி வால்கள் எல்லாம் சம்பந்தரை இல்லாமல் பண்ண வேண்டும். இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என பேசினர்.
அதில் ஒருவர் சொன்னதை நினைத்தால் மனசு தாங்குதில்லை. அந்த பேச்சின் போது ” இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். அவர்கள் அச்சமில்லாதவர்களாகவும், உயிர் பயம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். நிச்சயம் அவர்களது உயிர் அரசால் பறிக்கப்பபடும். அவர்களது உயிர் பறிபோகும் போது உலகம் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைக் கொடுக்கும். அது தமிழரின் தாயகத்தை பெற வழி செய்யும்” என்றார்.
ஐயா, உங்களைப் போன்றவர்கள் , பிரபாகரனுக்கு கொடுத்த அல்வாவாவை பிரபா விழுங்கி, முள்ளிவாக்கால் வரை சென்று உயிரிழந்தவர்கள் எத்தனை ஆயிரம்? இன்னுமா நீங்கள் திருந்தவில்லை?
தாயக உறவுகளே, புலத்து புலம்பல்களை ஒதுக்கி விட்டு, உங்கள் மூளையால் சிந்தித்து முடிவெடுங்கள். இவர்கள் தமது வேண்டுதலுக்காக கோயிலில் பலியிடும் விலங்குகளாக உங்களை எண்ணுகிறார்கள். பாவம் தாயக உறவுகள்.
ஒலிப் பகுதியை கேட்க pathivu.com/news/5620/54/.aspx
NANTHA
மாயா:
புலம் பெயர் புலிகளின் ஆசை “தமிழ்” அல்ல. டொலர் மாத்திரமே. அவர்களுடைய “வசூல்” தொழில் இப்போது முற்றாக நின்று போயுள்ளது. பிரபாகரன் ஆண்டு என்று எழுதி புலிகளின் பிரச்சாரம் செய்த பத்திரிகை முழக்கத்தை இப்போது காணவில்லை.
“இலங்கையில்” தமிழர்களின் பிணம் குவிந்தால்தான் தங்களுக்கு சுபீட்சம் என்று நம்பும் இந்த வெளிநாட்டு தமிழர்கள் இப்போது “வெளிநாடுகள்” தலையிட்டு ஈழம் பிடிக்கலாம் என்று பகல் கனவு காணுகிறார்கள்!