சிவராம் – 5வது ஆண்டு நினைவு: இலங்கையின் ஊடகத்துறையின் தற்போதைய நிலை : த ஜெயபாலன்

Sivaram_Tharaki(படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் நினைவாக இலங்கை ஊடகத்துறையின் இன்றைய நிலை மற்றும் சிவராமது போராட்ட கால செயற்பாடுகள் பற்றிய இரு பதிவுகள் இங்கு பிரசுரமாகின்றது. முதலாவது பதிவு இனறு தேசம்நெற்றில் பிரசுரமாகின்றது. பின்னுள்ள இரு பதிவுகளும் 2005ல் தேசம் சஞ்சிகையின் இதழ் 23இலும் இதழ் 25இலும் பிரசுரமாகி இருந்தன அவற்றை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.)

இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பதை கேலிக் கூத்தாக்கி உள்ளது இலங்கை அரசு. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே வந்துள்ளது. பிரான்சைத் தயமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2004ல் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை 109வது இடத்தில் வைத்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் மிக வேகமாக 162வது இடத்திற்குத் தாவியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுவதில் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்சவினதும், பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வாவினதும் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்பதனை ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

Media Minister MR and his deputy Mervin Silvaஇருந்தும் புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு எதிரான தனது அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதனை மேர்வின் சில்வாவை பிரதி ஊடக அமைச்சராக நியமித்ததன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதனை ‘Gang boss known for hostility towards journalists appointed deputy media minister – ஊடகவியலாளருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என அறியப்பட்ட காடைக்குழுத் தலைவர் பிரதி ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்’ என்று தலைப்பிட்டு கண்டித்துள்ளது Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு. ஏப்ரல் 26ல் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘In what country do you appoint an arsonist to put out fires? – எந்த நாட்டில் தீ வைப்பில் ஈடுபடும் ஒருவரை தீயை அணைப்பதற்கு நியமிப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆளும் கட்சியின் வெற்றியை இவ்வாறான நியமனங்கள் பாதிப்படையச் செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடகங்களுக்கான அவ்வமைப்பு இவ்வாறான நியமனங்கள் மீளுறவையும் மீள்கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இந்த ஊடக சுதந்திரத்தின் பின்னணியில் ஊடகவியலாளர் தாராக்கி என்று அறியப்பட்ட தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நிறைவு லண்டனில் நினைவு கூரப்படுகின்றது. Tamil Legal Advocacy Project (TLAP) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு : April 29, 2010 – from 6:30 PM – 9:30 PM,
Conway Hall
25 Red Lion Square
WC1R 4RL London
United Kingdom இல் நடைபெறுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது கொலையாளிகளையும் குற்றவாளிகளையும் தண்டிக்காது சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்ற நாடுகளின் வரிசையில் இலங்கையை நான்காவது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists – CPJ ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கின்ற குழு. உள்நாட்டு யுத்தம், மனித உரிமைகள், அரசியல், ஈராணுவ விடயங்கள், ஊழல் – மோசடிகள் பற்றி தகவல்கள் வெளியிட்டமைக்காக கடந்த ஒரு தசாப்த காலத்தில் 24 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் இப்படுகொலைகள் தொடர்பாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளரைப் பாதுகாப்பதற்கான குழு தனது 2010 அறிக்கையில் தெரிவித்தள்ளது. இதே காலப்பகுதியில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் எண்ணற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இவற்றின் காரணமாக 2008 யூன் முதல் 2009 யூன் வரையான ஓராண்டு காலப்பகுதியில் 11 ஊடகவியலாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி உள்ளதாக அவ்வூடக சுதந்திரத்திற்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதமே படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களில் 90 வீதமானவர்கள் உள்ளுர் ஊடகவியலாளர்களாகவே உள்ளனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதன் முக்கிய நோக்கம் அனைத்து ஊடகங்களுக்குமே ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை வழங்குவதே. சிவராம் உட்பட 1999 முதல் இலங்கையில் 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 18 பேருடைய கொலைக்கான நோக்கம் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஆறு பேருடைய கொலைக்கான நோக்கத்தை உறுதிப்படுத்த முடியவில்லையென ஊடகவிளலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவிக்கின்றது.

இலங்கை ஊடகத்துறையின் மீதான தாக்குதல்களுக்கு அரசு மட்டுமல்ல விடுதலை கோரிப் போராடிய அமைப்புகளும் பொறுப்பாக இருந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் ஊடகங்கள் மீதான வன்முறைக்கு பொறுப்பாக இருந்தள்ளனர். குறிப்பாக இலங்கை ஊடகத்துறை ஆயுதம் ஏந்திய அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழல் கடந்த காலங்களில் இருந்தது. தற்போதும் இந்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஊடகங்களில் சுயதணிக்கை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழமையாகவே இருந்து வந்தள்ளது. இந்த அரசியல் அதிகாரத்தின் செல்வாக்குக் காரணமாக ஊடகவியலாளர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாக அல்லாமல் அரசியல் சார்ந்த கட்சி சார்ந்த ஊடகவியலாளர்களாகச் செயற்படுகின்ற போக்கு இலங்கையில் பொதுவாகக் காணப்படுகின்ற ஒரு அம்சமாகவே உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 2010 பாராளுமன்றத் தேர்தலில கூட வீரகேசரி செய்தி ஆசிரியர் சிறிகஜன் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர் ரெங்கா உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் மற்றும் சிங்கள பத்திரிகையாளர் சிலரும் அரசியற் கட்சிப்பட்டியலில் தேர்தலில் நின்றமை குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் சுயாதீனத்துடன் முரண்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்ற கலாச்சராம் இலங்கையில் ஏற்பட்டு இருக்கவில்லை. கொல்லப்படுபவரின் அரசியல் சார்ந்தே அதனைக் கண்டிப்பதா? இல்லையா? என்கின்ற முடிவு எடுக்கப்படுகின்றது. இப்போக்கு குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையான அம்சமாக உள்ளது.

இதற்கு சிவராமின் படுகொலையும் விதிவிலக்காக இருக்கவில்லை. சிவராமின் படுகொலைக்கான கண்டனங்கள் அவரது அரசியலின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டது. சிவராம் என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டதை தமிழ் ஊடகத்தறையின் ஒரு சிறுபகுதியினர் கண்டிக்கத் தவறினர். அல்லது கடமைக்காகக் கண்டித்தனர். சிவராமின் கொலையை கண்டிக்க முற்பட்டவர்கள் ஒரு ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்டதற்காகத் தமது கண்டணத்தை முன்வைத்தனர் என்பதிலும் பார்க்க தங்கள் அரசியலின் பக்கம் சிவராம் என்பவர் நின்றதனால் தங்கள் கடுமையான கண்டனங்களை சரியாகவே முன்வைத்தனர்.

Media Minister MR and his deputy Mervin Silvaஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமல்ல எந்தவொரு மனித உரிமை மீறலையும் அதனை யார் யாருக்கு எதிராக மேற்கொண்டாலும் கண்டிக்கின்ற வன்முறைக்கு எதிரான அரசியல் கலாச்சாரம் தமிழ் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்படுபவர்கள் தியாகிகள் ஆக்கப்பட்டு பூசிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான குரல்கள் அழுத்தமாக வரவேண்டும். அதன் பின் அவர்கள் மீதான அவர்களது அரசியல் தொடர்பான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். ஆனால் அந்த மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அவர் மீதான வன்முறையை நியாயப்படுத்துவதாக இருக்க முடியாது.

1999 முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தகவல் மூலம் – CPJ

நோக்கம் உறுதிப்படுத்தப்பட்ட கொலைகள்:
Puniyamoorthy Sathiyamoorthy, freelance
     February 12, 2009, in Mullaitheevu district, Sri Lanka
Lasantha Wickramatunga, The Sunday Leader
     January 8, 2009, in an area outside Colombo , Sri Lanka
Rashmi Mohamed, Sirasa TV
     October 6, 2008, in Anuradhapura, Sri Lanka
Paranirupasingham Devakumar, News 1st
     May 28, 2008, in Jaffna, Sri Lanka
Suresh Linbiyo, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
T. Tharmalingam, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Isaivizhi Chempiyan, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Selvarajah Rajeewarnam, Uthayan
     April 29, 2007, in Jaffna, Sri Lanka
Subash Chandraboas, Nilam
     April 16, 2007, in an area near Vavuniya, Sri Lanka
Subramaniyam Sugitharajah, Sudar Oli
     January 24, 2006, in Trincomalee, Sri Lanka
Relangi Selvarajah, Sri Lanka Rupavahini Corp.
     August 12, 2005, in Colombo, Sri Lanka
Dharmeratnam Sivaram, TamilNet and Daily Mirror
     April 29, 2005, in Colombo, Sri Lanka
Lanka Jayasundara, Wijeya Publications
     December 11, 2004, in Colombo, Sri Lanka
Bala Nadarajah Iyer, Thinamurasu and Thinakaran
     August 16, 2004, in Colombo, Sri Lanka
Aiyathurai Nadesan, Virakesari
     May 31, 2004, in Batticaloa, Sri Lanka
Mylvaganam Nimalarajan, BBC, Virakesari, Ravaya
     October 19, 2000, in Jaffna, Sri Lanka
Anura Priyantha, Independent Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka
Indika Pathinivasan, Maharaja Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka

நோக்கம் உறுதிப்படுத்தப்படாத கொலைகள்:
Sahadevan Nilakshan, Chaalaram
     August 1, 2007, in Jaffna, Sri Lanka
Sinnathamby Sivamaharajah, Namathu Eelanadu
     August 20, 2006, in Jaffna, Sri Lanka
Sampath Lakmal, Sathdina
     July 1, 2006, in Colombo, Sri Lanka
Vasthian Anthony Mariyadas, Freelancer
     December 31, 1999, in Vavuniya, Sri Lanka
Atputharajah Nadarajah, Thinamurusu
     November 2, 1999, in Colombo, Sri Lanka
Rohana Kumara, Satana
     September 7, 1999, in Colombo, Sri Lanka

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 23 (மே – யூலை 2005)

சிவராம் : வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர்கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் : அசோக்

Sivaram_Tharakiசிவராம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இன்றைய தமிழ் ஊடக உலகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. இது இன்னும் சில நாட்களுக்கே. மீண்டும் இன்னுமொரு ‘மாமனிதர்’ பட்டம் சூட்டும் கதை தொடங்க இவன் கதை முடிந்து போகும். நாம் காணும் துதிபாடும் சார்பு நிலை தமிழ் ஊடக வரலாறு இதுதானே. ஆனால் தவிர்க்க முடியாத இந்த காலகட்ட நாட்களுக்குள் சிவராமைப் பற்றி ஒரு சாரார் கட்டமைக்கும் விம்பங்கள் அச்சார்பு நிலையாளர்களின் அரசியல் மனோ நிலையை புரிந்து எமக்கு ஆச்சரியத்தை தராவிட்டாலும் அவை சில வேளைகளில் நகைச்சுவை உணர்வை அதிகம் தந்துவிடுகிறது.

சிவராமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதியுயர் நம்பிக்கைக்குரியவனாகவும் அவர்களின் ‘அனைத்து’ வகை அரசியலையும் ஏற்றுக் கொண்டவனாகவும் அவனைச் சுற்றி கட்டமைக்கும் புனைவுகள் சிவராமை நன்கு தெரிந்த – புரிந்த நண்பர்கள் மட்டத்தில் கேலிக்குரிய ஒரு நகைச்சுவைத் தனம் எழுந்து வருவதை தவிர்க்க முடியாததாக்கிவிடுகின்றது. சிவராம் உயிர் கொண்டு எழுவானானால் தமிழீழ விடுதலைப் புலிகள் தன் தலையில் மாட்டிய அந்த மாமனிதர் பட்டம், அவனுக்கு அவனுடைய மட்டக்களப்புத் தமிழில் அவன் அடிக்கடி கூறும் அந்த எள்ளல் மொழியோடு இணைந்து மாபெரும் பகிடியாக தென்பட்டிருக்கும்.

சிவராம் என்ற அந்த மனிதன், மார்க்சியத்தின் வழிகாட்டலோடு அரசியல் களம் புகுந்ததாக அறிக்கைவிடும் பலரில் ஒருவன்தான். ஆனால் சிவராம் ஒரு இனவாதி என்பதில் நாம் யாரும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. மார்க்சியம் பேசப்போய் மறுபுறம் இனவாதம்கக்கும் போலிகளிடையே சிவராம் தன்னை கடைசி ஒரு தமிழ் தேசியவாதியாகவாவது காட்டிக் கொண்டவன் என்ற வகையில் நாம் அவனைப் பாராட்டியே தீரவேண்டும்.

கொழும்பு வாழ் சூழல், அதன் நெருக்கடி, இலங்கை அரசின் கண்ணோட்டம் அனைத்தும் சேர்த்து சிவராம் போன்ற நபர்களை இன்னொரு பக்க இனவாதிகளாக மாற்றிவிடும் பரிதாபத்தை செய்து வருகின்றது. அரசின் இனவாதம் அதன் பின்னணி, வர்க்க சார்பு நெருக்கடிகள், சமூகத் தாக்கங்கள் இவை பற்றிய எந்த அவதானிப்பும் – விமர்சனக் கண்ணோட்டமும் அற்று தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட அனுபவ வெறுப்புகளிலிருந்து இவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு வருவதும், இனவாத சேற்றுக்குள் மூழ்குவதுமான பரிதாப தற்கொலை அரசியலை இவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். மார்க்சியவாதியாக எம்மிடம் அடையாளம் காண்பித்த பேராசிரியர் சிவத்தம்பியே கொழும்பில் சொகுசாய், பாதுகாப் பாய் அனைத்து சௌக்கியங்களோடும் வாழ்ந்து கொண்டு பச்சை இனவாதம் பேசும் போது பாதிப்புக்குள்ளாகும் சிவராம் போன்றவர்கள் இனவாத அரசியலை தேர்வு செய்வது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

அதேவேளை சிவராம் போன்ற@ புலிகளின் கொடூரமான வன்முறைகளை எதிர்கொண்ட, புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட விடுதலை அமைப்புகளில் இருந்து வந்தவர்களில் புலிகளின் கடந்தகால, நிகழ்கால வன்முறை அரசியலை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். அதனால் தங்களின் நிகழ்கால அரசியலை நடத்துவதற்கு தங்குமடங்களாக புலிகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு தங்களின் சில நோக்கங்கள் நிறைவேறும் வரையிலாவது புலிகளோடு தங்களை இனம்காட்டிக் கொள்ளவும் வேண்டியவர்களாகி விடுகின்றனர். இதற்கு நல்லுதாரணம் சிவராம் என்பேன்.

சிவராமுக்கும் எனக்குமான உறவு ஓரளவு நீண்டது. 1978க்களில் இருந்தே அவன் எனக்கு நண்பனானவன். எங்கள் இருவரையும் இணைத்தது இலக்கியமே. அதன்பின் 1981ல் நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் – புளொட்டில் இணைந்து கொள்ள சிவராம் 1983ம் ஆண்டில் நான் சார்ந்த விடுதலை அமைப்பினுள் தன்னை இணைத்துக் கொண்டவன். ஒரு காலத்தில் புலிகளின் வன்முறையை ஒடுக்குவதற்கு ஆயுதத்தின் உதவியை நாடுவதில் எவ்வித தயக்கமும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். புலிகளின் பாஸிசப் போக்கும் வளர்ச்சியும் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு வேட்டு வைப்பதில் தான் போய் முடியும் என்றும் அவர்களின் பாஸிசப் போக்கு மௌனம் கொண்ட ஒரு அடிமைத் தமிழ் சமூகத்தை உருவாக்குவதையே தலையான கடமையாக கொண்டிருக்கும் என்னும் முன் ஆருடம் கூறியவன் அவன்.

சிவராமுக்கும் எனக்கும் கருத்தியல் சார்ந்த அரசியல் முரண்பாடுகள் ஏராளம். அதில் குறிப்பானது அவனது தீவிர பிரதேசவாத நிலைப்பாடு. கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வில் சமூக முன்னேற்றத்தில் அவன் கொண்டிருந்த அக்கறையானது அவனை யாழ் மேலாதிக்க மையவாத சிந்தனைக்கு எதிரானவனாக மாற்றியிருந்தது. இந்த சிந்தனையானது புலிகளில் மலிந்து காணப்பட்ட மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு எதிரானவனாக, அவர்களின் செயற்பாடுகளில் கடும் விமர்சனம் கொண்டவனாகவும், புலிகளுக்கு மாற்றாக கிழக்குப் பிரதேசத்தில் ஒரு அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது கால அவசியம் என்ற கருத்தில் கடும் முனைப்பும், அதற்காக எந்தவிதமான செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாரானவனாக அவனை ‘ரகசியமாக’ உருவாக்கி இருந்தது. இந்த சிந்தனை வழித்தடங்களின் நீட்சியே விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட கருணா முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற முறைமையும் அதில் ஏற்பட்ட சிக்கலும். இது பலரும் அறிந்த இரகசிய விடயங்களாகிவிட்டன இன்று.

அவனது மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய கடைசிப் பயணத்தின் சந்திப்பின் போது கூட கிழக்கு மாகாணம் பற்றிய அதீத வெறி யை வெளிப்படுத்தினான் சிவராம். கருணாவின் உடைவின் மீதான விமர்சனங்களோடு கிழக்கின் தனித்துவ செயற்பாட்டின் மீதான அவனின் விருப்பும் வெளிப்பட்டது. சிவராமின் கடைசிக் கால செயற்பாட்டின் மீதான நம்பிக்கையின்மையே கருணா, இவனை புறந்தள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். கருணாவின் இந்த தள்ளி வைப்பே புலிகளிடம் இருந்து சிவராம் உயிரைக் காப்பதற்கான தற்காப்புக் காரணியாக அமைந்திருக்கும். எனினும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் சிவராமின் ‘அனைத்தும்’ அறிந்த புலிகளுக்கு சிவராமின் இறுதி முடிவு துயரைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகமே. சிவராமின் மரணம் புலிகளுக்கு மதிப்பிடவியலா அறுவடையை கொடுத்துவிட்டது என்பது தான் உண்மை.

இத்தோடு இப்பத்தி எழுத்தை நிறுத்திக்கொண்டு பின்வரும் சுவரொட்டி வாசகத்தோடு நிறைவு செய்கிறேன்.
‘புலிகளின் மேலாதிக்க வன்முறையை பிடித்து இன் னொரு வரலாற்றை உருவாக்க முயன்றவன் வாழ்வு மாமனிதப்பட்டத்தோடு முடிவுற்றது. வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர் கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் இது என்பேன்.’

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005)

சிவராம்: இரத்தக் கறைபடிந்த கரங்கள் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Sivaram_Tharakiவிடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.
 
சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.
 
 (1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.
 
 (2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும்  PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.
 
மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.
 
1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான  ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.
 
2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்
சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)
 
3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.

தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர்  பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.
 
சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்
 
“உங்களை நம்பேலாது மச்சான்”
 
இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.
 
இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.
 
சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.
 
மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.
 
ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.

அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.
 
மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 Comments

  • ssganendran
    ssganendran

    /இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே./

    இதில் ஒண்றைக் குறிப்பிடத் தவறிவிட்டார் செவ்விந்த்தியன். வாசுதேவா , கண்னன், சுபாஸ். ஆனந்தன் உட்பட பல உறுப்பினர்கள் புலிகளினால் கொல்லப்பட்ட 13/ 09/1987 அண்று வாசுதேவாவின் சகோதரியின் வீட்டில் பொட்டன் கருனா கரிகாலன் சித்தா ஆகியோருடன் வாசுதேவா குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடாத்தியபோதும் காலைப்போசனத்தை ஒண்றாக அருந்த்திய வேளையிலும் சிவராமும் சேர்ந்த்தே இருந்தார். பின்னர் யாருக்கும் சொல்லாமல் கொழும்புக்கு ஓடிச்செண்றார். இதுதான் உண்மை

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளை நம்பி வெறும் கையோடு போனது பெரும் தவறு. அடுத்து சிவராம் ஒரு நேர்மையான அரசியல்வாதியோ அல்லது ஊடகவியளாரோ அல்ல. அவரது காட்டிக் கொடுப்புக்கு மாமனிதர் பட்டம் கிடைத்தும் இருக்கலாம்?

    Reply
  • NANTHA
    NANTHA

    யாழ்ப்பாணத்தில் “ஈழமுரசு” பத்திரிகையின் அலுவலக நிருபரான ஐ.சண்முகலிங்கம் கடத்தி செல்லப்பட்டு புலிகளால் கொலை செய்யப்பட்டார். பின்னர் அதே ஈழமுரசு பத்திரிகையின் உரிமையாளர் மயில் அமிர்தலிங்கமும் கொல்லப்பட்டார்.

    கொழும்பில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதற்கு முன்னரெ அதாவது 1994 ஆம் ஆண்டு புலிகளால் சண்முகலிங்கம் கொல்லப்பட்டதைப் பற்றி இப்போது “ஊடகவியலாளர்கள்” கொலைகள் பற்றி எழுதுபவர்கள் குறிப்பிடாத நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

    தவிர அந்த சாதாரண பத்திரிகையாளனின் எழுத்துக்களே முதலில் யாழ் பல்கலைக் கழக மாணவன் விஜிதரனின் கொலை பற்றியும் புலிகளின் போக்கிரித் தனங்களையும் அம்பலப்படுத்தியது.

    தேசம்நெட்டில் எழுதுபவர்கள் பலருக்கு 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஈழமுரசு பத்திரிகையய் விட அந்தப் பெயரில் புலிகளால் நடாத்தப்படும் ஈழமுரசு பற்றி மாத்திரம் தெரிந்திருக்கிறது.

    1987 ஆம் ஆண்டு மயில் அமிர்தலிஙத்திடம் இருந்து ஈழமுரசு பத்திரிகை கிட்டுவின் ஆட்களால் “பிடுங்கப்பட்ட” வரலாறுகள் தெரியாமல் இருப்பது விசனிக்கத் தக்கது.

    ஊடகவியலாளர் கொலை என்பது புலிகளால் கொல்லப்பட்ட ஐ.சண்முகலிங்கத்தின் கொலையிலிருந்தே ஆரம்பமாகியது

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    கணேந்திரன் மாயா நந்தா ஆகியோருக்கு நன்றிகள். உங்கள் பதிவுகள் மிக ஆரோக்கியமானவை. கணேந்திரனின் தகவல் எனக்குப்புதிது. வாசுதேவாவும் சிவராமும் சகலன் மார் என்பதும் இருவரும் புளட்டிலிருந்த “ராஷ்புடின்” கள் என்பதும் தெரிந்ததே.சண்முகலிங்கம் புலிகளால் கொல்லபபட்டது முறிந்த பனையூடாக நான் அறிந்தது.மயில் அமிர்தலிங்கம் பற்றிய தகவல் எனக்குப் புதிது. அமிர்தலிங்கத்தை கொன்றது யார்? ஈழமுரசா? ஈழநாடா? மேற்கூறிய தகவல்களை விளக்கமாகத் தரமுடியுமா நந்தா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எனக்கு கவிதை எழுத வராது
    ஒரு நாள் வந்தது
    புது கவிதை வடிவில்
    இந்தக் கொலையை யார் செய்தார்கள்?
    அந்தக் கொலையை!?.
    அவனை கட்டியிழுத்துப் போனது எந்த இயக்கம்?
    தந்திக் கம்பத்தில் கட்டியும் தார்பீப்பாவில் ஏற்றியும்
    தண்டணை கொடுத்தார்களே இது எந்த? எவர்?? இயக்கம்
    போன வழியில் வந்த வழியில் கொலையில்
    விலத்தி நின்றவர்களை கண்டீரா?
    கொலைகள் மலிந்த பூமி என்பதும்
    இயக்கம் மலிந்த பூமி என்பதும் ஒன்றா?
    இது நாமாக இல்லாது
    வேறு இனத்திலும் உண்டா?
    யுத்தத்தின் கொடுமையும்
    வயிற்றுப் பசியும் தெரியாதவர்களா?
    தமிழர்கள் என்பவர்கள்.
    இனியொரு விதி செய்வோம்
    தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனெனில்..
    தீதும் நன்றும் பிறர் தர வரா
    எனப் படித்து வந்தோமே!
    எல்லாம் பட்டபடிப்புக்காகவா?
    எம் இனம்
    அடுத்த இனத்தில் குறை கண்டு
    காலத்தை கழித்து விடுவோமா?
    அம்மியும் நகரும் என்பார்கள்
    இயங்கியல் விதியையோ
    உடைத்து விட்ட பார்முழுக்க
    பரந்து வாழும் இனம்
    ஈழத் தமிழ் இனம.
    தாயகப்பூமி இலங்கை மண்.
    அதிலிருந்து ஒரு தமிழன்
    வெளிறேறும் வரை-சுவடு தெரியாது
    அழியும்வரை சாத்திய வகைக்குட்பட்ட
    அத்தனை போராட்டங்களையும்
    நடத்தியே தீருவோம்.ஏனெனில்
    நாம் ஈழத் தமிழர்கள்.
    நாம் என்ன?
    நிறம் மாற்றத் தெரியாதவர்களா?
    பாரே!எம்மினத்தின்
    பெருமை பேசு!.
    குட்டிப் புழுவை தின்றால் தான்
    தாய்புழு உயிர் வாழமுடியும்
    என்பதற்கு உதாரணமாக இரு
    இல்லையேல் நீ ஈழத்தமிழன் அல்ல.

    சிறுகுறிப்பு:இது பற்றிய விமர்சனங்கள் ஏற்புடையதல்ல. கீதமாகவும் எடுக்கலாம்.கொடும் புயலாகவும் எடுக்கலாம் தெரியாது போல் அமைதியாகவும் இருக்க.

    Reply
  • T Jeyabalan
    T Jeyabalan

    ஈழமுரசு நிருபர் மற்றும் உரிமையாளர் கொலை பற்றி அப்பத்திரிகையில் நிருபராக இருந்த கொன்ஸ்ரன்ரைன் அறிந்திருப்பார் என நினைக்கின்றேன். தேசம் சஞ்சிகையின் யூன் – ஒக்ரோபர் 2007 இதழ் 32ல் பிரசுரமாகியிருந்த கொன்ஸ்ரன்ரைனின் ஒரு குறிப்பு:

    ”தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் அமிர்தலிங்கத்துடனான இப்பேட்டி முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய ஈழமுரசு பத்திரிகைக்காக 11 நவம்பர் 1988ல் அமிர்தலிங்கம் லண்டன் வந்திருந்தபோது எடுக்கப்பட்டது. நான் ஈழமுரசு முதற் தடவையாக வாரப்பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளியாகியபோது பணியில் சேர்நதேன். லண்டன் வந்த பின்னரும் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். ஈழமுரசு பத்திரிகை பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாகக் கையகப்படுத்தப்பட்டு அவர்களால் நடத்தப்பட்டது. புலிகள் அப்பத்திரிகையைக் கையகப்படுத்தும் வரை அதன் சிறப்பு நிருபராகக் கடமையாற்றினேன். ஈழமுரசு பத்திரிகையை கையகப்படுத்திய விடுதலைப் புலிகள் அப்போது எடுக்கப்பட்ட இந்த நேர்காணலை வெளியிட மறுத்ததால் அது இதுசரை எங்கும் பிரசுரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈழமுரசு பத்திரிகையின் உரிமையாளர் திரு மயில் அமிர்தலிங்கம் அவர்கள் பின்னர் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மயில் அமிர்தலிங்கம் (TULF தலைவர் அ. அமிர்தலிங்கத்துக்கு எந்தவிதத்திலும் சொந்தம் இல்லாதவர்). அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினராக இருந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஊர்காவற்றுறையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் கண்டவர்.

    அப்போது ஈழமுரசுவின் பிரதம ஆசிரியராக எஸ்.தி. என்றழைக்கப்பட்ட எஸ்.திருச்செல்வம் அவர்கள் கடமையாற்றினார். பின்னர் இவர் முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக்க கடமையாற்றினார். அப்போது இந்தியப் படையின் ஆதரவுடன் செயற்பட்ட EPRLF அமைப்பினர் எஸ்.திருச்செல்வத்தின் ஒரே மகன் அகிலனை மனிதநேயமின்றிச் சுட்டுக்கொன்றனர். EPRLF இனர் எஸ்.திருச்செல்வத்தைக் கொலைசெய்ய அவரது வீட்டுக்கு வந்தபோதே, அங்கு அவர் இல்லாத காரணத்தினால் அவரது மகனை அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கொலைசெய்தனர். தற்போது திருச்செல்வம் தம்பதியினர் கனடாவில் ரொரன்ரோவில் தமிழர் தகவல் என்ற மாத இதழை நடத்திவருகிறனர்.” ரி கொன்ஸ்ரன்ரைன் (யூன் – ஒக்ரோபர் 2007 தேசம் இதழ் 32)

    Reply
  • பல்லி
    பல்லி

    //சிவராம் ஒரு நேர்மையான அரசியல்வாதியோ அல்லது ஊடகவியளாரோ அல்ல. //
    இது பலருக்கு கசக்கலாம் ஆனாலும் இதுவே உன்மை; இன்னும் சொல்ல வேண்டுமானால் சிவராம் மிக கொடூரமான கொலையாளி கூட, ஈழமக்கள் தமக்கு விடுதலை பெற்று தருவார்கள் என நம்பிய (அன்று) புளொட் அமைப்பு காணாமல் போனதுக்கு காரணங்களில் மிக முக்கியமானது சிவராமின் கொலைவெறி என கழக தோழர்கள் இன்றும் சொல்லுவார்கள். அதுக்காக அவரை கொலை செய்தவர்களை நான் ஏற்றுகொள்ள இல்லை: ஆனால் அவர் துதி பாட முடியவில்லை; திறமைகள் எதுவாயினும் வாழ்வுக்காய் இருக்க வேண்டும், அது சிவராமிடம் இல்லை, புலியின் கருனா; பிரபா பிரிவிக்கு அடிதளம் இட்டவரே இந்த சிவராம்தான், இவரது எண்ணங்கள் அத்தனையும் கிழக்கின் விடிவெள்ளி தானாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான்; புளொட் அமைப்பினரை (இவரது சகலையான வாசுதேவா உட்பட) கருனா கூண்டோடு அனுப்பியதுக்கு சிவராமின் உதவி கருனாவுக்கு மிக உண்டு, அதேபோல் கருனாவை புலிகள் அழிக்க நடத்திய போரிலும் (ஆரம்பத்தில்) இதே சிவராமின் பங்குகள் அதிகம்; ஆக இவரை நினைப்பத்தை விட மறப்பதே!!

    Reply
  • மாயா
    மாயா

    தமிழருக்கு விடுதலை வாங்கித் தரவென்று ஆரம்பித்த எல்லா இயக்கங்களும், அனைத்து தமிழர்களையும் உலகத்தை விட்டே மெளனிக்க விடுதலை வாங்கித் தந்துள்ளனர். இதுதான் ஈழத்தமிழர் விடுதலை?

    Reply
  • NANTHA
    NANTHA

    சண்முகலிங்கம் என்ற நிருபரைத் தெரியாமல் கொன்ஸ்டன்டையின் இருந்தார் என்றால் அவரது கதை நம்ப முடியாத கதை. ஈழநாடு பத்திரிகையில் அலுவலக நிருபராக இருந்த சண்முகலிங்கம் பின்னர்( திருச்செல்வம் துரத்தப்பட்ட பின்னர்) ஈழமுரசு பத்திரிகையின் அலுவலக நிருபராக இருந்தவர். ஈழமுரசு பத்திரிக்கை அலுவலகத்துக்குத் தினமும் வந்து போன ஐ.சண்முகலிங்கத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

    ஜெயபாலனின் கூற்றுப்படி கொன்ஸ்டன்டையின் திருச்செல்வத்தின் கதையையே தப்பாக எழுதியிருக்கிறார். திருச்செல்வத்தைக் கொல்ல EPRLF இயக்கம் அங்கு செல்லவில்லை. திருச்செல்வத்தின் மகனைத் தேடியே அவர்கள் சென்றனர். அவர்களைக் கண்டவுடன் சுவரேறிக் குதித்து ஓடிபோன திருச்செல்வத்தைக் கொல்ல பெரிய முயற்சிகள் தேவைப்பட்டிருக்காது. திருச்செல்வத்தின் மகன் அகிலன் புலிகளின் மாணவ அமைப்பில் முக்கிய நபராகவும் இந்திய எதிர்ப்பு சுவரொட்டிகளை ஓட்டும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில் அகிலனை “விசாரிக்கவே” ஜீப்பில் கொண்டு சென்றனர். அப்போது அகிலன் “கீழ் சாதிகள்” என்று EPRLF பையன்களைப் பார்த்து கத்த உணர்ச்சி வசப்பட்ட ஓர் ஆள் அகிலனுக்கு கபால மோட்சம் கொடுத்தார் என்பதுதான் கதை. அப்போது ஈபிஆர்எல்எப் இயக்கம் கீழ்சாதிகளின் இயக்கம் என்று புலிகளினால் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிடித்துச் சென்று பத்து நிமிடங்களுள் நடந்த கொலையை “சித்திரவதைகள் செய்து” என்று கொன்ஸ்டன்டையின் எழுதியிருப்பது அப்பட்டமான பொய். இந்த கொன்ஸ்டன்டையின் ஒரு புலி ஆதரவாளர் என்பது அவரது எழுத்துக்களில் புலனாகிய விஷயம்!

    பின்னர் அதே திருச்செல்வத்தை கொழும்புக்குப் பத்திரமாகக் கொண்டு வந்து விட்டவர்களும் அதே EPRLF இயக்கத்தினர்தான்!

    இந்த திருச்செல்வம் ஈழமுரசு பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்த தொலைபேசியை இரவு நேரங்களில் “வாடகைக்கு: விட்டு” ஒரு எக்ஸ்ட்ரா சம்பாத்தியம் செய்து வந்தமையை மயில் அமிர்தலிங்கம் கண்டுபிடித்து அவரைத் துரத்த அதுவரை காலமும் யுஎன்பி அடியாளாக இருந்த திருச்செல்வம் புலிகளிடம் ஓடிச்சென்று சரண் அடைந்து “புலியாக” மாறியவர். பின்னர் கிட்டுவின் குடும்ப பத்திரிகையான “முரசொலி” ஆசிரியராக மாறி ஈழமுரசு அலுவலகத்துக்கே வந்து மயில் அமிர்தலிங்கத்துக்கு நேரடியாகவே கொலை மிரட்டல் விட்டவர்.

    மயில் அமிர்தலிங்கம் எனது நண்பர். அவருக்கு அந்த நாட்களில் “திருச்செல்வத்தை’ நம்பாதே” என்பதுதான் எனது அறிவுரையாக இருந்து.

    தான் போனால் ஈழமுரசு பத்திரிக்கை படுத்துவிடும் என்று நினைத்த திருச்செல்வம் அடுத்த நாள் வழமை போல வந்த ஈழமுரசப் பார்த்து கோபத்தில் புலம்பியதுதான் மிச்சம்! கோபாலரத்தினம், சண்முகலிங்கம், இளவாலை விஜேந்திரன், நந்தா, வவுனியா திலீபன் ஆகியோர் இரவிரவாக வேலை செய்து அந்த பத்திரிகையை நிலை நிறுத்தினோம். யாழ் பல்கலைக் கழக மாணவன் விஜிதரன் இனம்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார் என்ற பொய்யை உடைத்து ” புலிகள்” விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர் என்று அறிக்கை விடச் செய்வதில் ஐ.சண்முகலிங்கத்தின் எழுத்துக்கள் பங்களிப்பு செய்தன. உண்மையில் அந்த நேரத்தில் விஜிதரன் உயிரோடு இல்லை. பின்னர் அந்த “கடத்தல்” பற்றி நடந்த உண்ணாவிரதத்தை நிறுத்த புலிகள் மாத்திரமல்ல யாழ்ப்பாணத்து கத்தோலிக்க பாதிரிகளும் வந்து மிரட்டல் விட்டதை அடுத்துத்தான் நந்தாவுக்கு பாதிரிகள்-புலி தேன்நிலவு விவகாரம் தெரிய வந்தது. ஈழமுரசு பத்திரிக்கை புலிகளால் பிடுங்கப்படுவதட்கு இந்த விஜிதரன் பிரச்சனையும் ஒரு காரணம்.

    இந்த கொன்ஸ்டன்டையின் திருச்செல்வத்தோடு ஓடிப்போன ஆட்களில் ஒருவராக இருக்க வேண்டும். ஏனென்றால் ஈழமுரசின் இறுதிவரை இருந்த எனக்கு “கொன்ஸ்டன்டையின்” என்ற பெயரில் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை!

    பின்னர் திருச்செல்வம் கனடா வந்து “புலிகளின்” ஆஸ்த்தான வித்துவான் ஆகியது வேறு கதை. இப்போது திருச்செல்வமும் நாடு கடந்த அரசின் ஒரு எம்பி ஆகியுள்ளார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…புளொட் அமைப்பு காணாமல் போனதுக்கு காரணங்களில் மிக முக்கியமானது சிவராமின் கொலைவெறி என கழக தோழர்கள் இன்றும் சொல்லுவார்கள்….//பல்லி

    ஏதோ புளொட்டை அழித்துவிட்டு அதன் இடைமட்டத்தலைவர்கள் வெளிவந்தனர் எனவும் இங்கே எழுதுபவர் அவர்களில் ஒருவர் எனவுமல்லவா இரண்டு கிழமைக்கு முன்னர் எழுதினீர்கள். இப்போ இதுக்கெல்லாம் சிவராம் காரணம் என ‘வசதி’யாக மாற்றிப் போடுகிறீர்கள் அப்போ சிவராம் செய்த கொலைகளுக்கு அவரை ‘அழிக்காமல்’ இயக்கத்தை அழித்தீர்களாக்கும். சிவராம் பற்றி எனக்கொன்றும் நல்ல அபிப்பிராயம் இல்லைத்தான் ஆனால் ‘புளொட்டின்’ பிரச்சினைக்கெல்லாம் சிவராம் மட்டும் காரணமில்லை! வேரு விடயங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவைகளைச் சொல்லாமல் புலிப்பாட்டு பாடித் தப்ப நினைக்கிறார்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஏதோ புளொட்டை அழித்துவிட்டு அதன் இடைமட்டத் தலைவர்கள் வெளிவந்தனர் எனவும் இங்கே எழுதுபவர் அவர்களில் ஒருவர் எனவுமல்லவா இரண்டு கிழமைக்கு முன்னர் எழுதினீர்கள். //
    சாந்தன் வெக்கபடாமல் அவசரபடாமல் நிதானமாய் படித்தபின் எழுதலாமே; எல்லாத்திலும் பரபரப்புதானா?
    அவர்கள் ஏன் அப்படி இயக்கத்தை கலைத்துவிட்டு வந்தனர்? அதுக்கான காரனத்தை தேடினால் சிவராம் கொலையும் எட்டி பார்க்கும்; உங்களுக்கு சவுக்கம்காடு மட்டுமே போதுமா??

    //அப்போ சிவராம் செய்த கொலைகளுக்கு அவரை ‘அழிக்காமல்’ இயக்கத்தை அழித்தீர்களாக்கும். //
    மீண்டும் அவசரம்;; அழிப்பது புலிகளின் வேலை, அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள், (நீங்களும்தான்) அது தானாக கலைந்து விட்டது;

    //சிவராம் பற்றி எனக்கொன்றும் நல்ல அபிப்பிராயம் இல்லைத்தான் ஆனால் //
    அவர் சிலகாலம் புலியாக வலம் வந்ததால் ஒரு ஈடுபாடு அப்படிதானே;

    //புளொட்டின்’ பிரச்சினைக்கெல்லாம் சிவராம் மட்டும் காரணமில்லை! //
    நானும் அப்படி சொல்லவில்லை, அவர் முக்கிய பங்கு வகித்தார் என தள மகாநாட்டில் சொன்னார்களாமே;

    //வேரு விடயங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவைகளைச் சொல்லாமல் //
    பலதடவை சொல்லுயுள்ளேன்; என்னும் சொல்லுவேன்; அதுக்கான கட்டுரை வரும்போது,

    //புலிப்பாட்டு பாடித் தப்ப நினைக்கிறார்கள்.//
    அப்படி பல்லியை சொல்ல முடியாது; பல இடத்தில் புலிக்காகவும் பாடியுள்ளேன், (புலியாக அல்ல)

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…மீண்டும் அவசரம்;; அழிப்பது புலிகளின் வேலை, அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள், (நீங்களும்தான்) அது தானாக கலைந்து விட்டது; ….//
    புளொட் அவ்வளவு ‘புனிதமானதா’? புளோட்டினதும் மற்ரைய இயக்கங்களினதும் ‘கறைபடியா’ கரங்கள் புலியின் அழிப்பால் வந்தது அல்லாமல் ‘புனிதர்களின்’ நடவடிக்கையால் வந்ததல்ல என்ற் உண்மைக்கு இதுவும் ஒரு சாட்சி!

    //….அவர் சிலகாலம் புலியாக வலம் வந்ததால் ஒரு ஈடுபாடு அப்படிதானே; ….//
    இல்லை அவரின் எழுத்துகள் ஆய்வுகளுக்காக படிப்பேன். இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது அவரது கல்லூரித்தோழர். அப்போது அவர் ‘தராக்கி’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் எழுத ஆரம்பித்திருந்தார் (அனேகமானவை புலிகளுக்கு எதிரானவையாக).

    //….நானும் அப்படி சொல்லவில்லை, அவர் முக்கிய பங்கு வகித்தார் என தள மகாநாட்டில் சொன்னார்களாமே;….//
    ‘தள மகாநாடு…தல மகாநாடு’ எனச் சொல்கிறார்களே இம்மகாநாட்டில் என்ன நடந்தது என யாராவது சொன்னார்களா..இல்லை எழுதினார்களா.. இல்லை ஒரு பிரசுரமாவது வெளிவந்ததா? வந்த கதை எல்லாம் அவரவர் கண்ணூக்குட்பட்ட ‘கதை’ யாகவே இருந்தது. எங்கேயாவது உத்தியோக பூர்வமாக (இன்றைய சித்தார்த்தன் புளொட் இயக்கம் வரை) ஒரு அறிக்கையாவது வெளியிட்டார்களா? யான் அறியேன்!

    Reply
  • santhanam
    santhanam

    புலி அழிவுக்கு வித்திட்டவரும் சிவராம். நோர்வே அரச அனுமதியுடன் ஆரம்பிக்கபட்ட 1997ல் தமிழ்நெற் இதன் ஆசிரியராக சிவராமே செயற்பட்டவர் இதைவிட இந்த தமிழ்நெற் இப்போ புலத்து தமிழரை பலதாக உடைத்து பதம்பார்க்கிறது இப்போது உங்களிற்கு விடைதெரிகிறதா இவர்கள் யார் என்று.

    Reply
  • பல்லி
    பல்லி

    //புளொட் அவ்வளவு ‘புனிதமானதா’?//
    அப்படி சொல்ல முடியாவிட்டாலும் புலியைவிட புனிதமானது என சொல்லலாமல்லவா? அதுசரி இந்த புனிதமென்பதை எப்படி வரையறுக்கிறியள்,?

    //புலியின் அழிப்பால் வந்தது அல்லாமல்//
    புலி புளொட்டின் தலமைகளைதான் (இரண்டாம்) அழித்ததென சொல்லுகிறார்கள். அதுக்கு முன்பே அந்த அமைப்பின் செயல்பாடுகள் முடங்கி விட்டதாக மாயா சொன்னாரே ;

    //இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது அவரது கல்லூரித்தோழர்.//
    அவருக்கு ஒரு தோழரா?? பலே பலே;

    // அப்போது அவர் ‘தராக்கி’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் எழுத ஆரம்பித்திருந்தார் (அனேகமானவை புலிகளுக்கு எதிரானவையாக)./
    அது உங்களை போன்ற அறிவுஜீவிகளுக்கு தெரிந்த விடயமாக இருக்கலாம்; ஆனால் பல்லியை போன்றோருக்கு புலியின் புண்ணாக்காய் புருடா விட்ட போதுதான் தெரியும்; ஆனாலும் மனுஸன் அடிக்கடி புலம்பெயர் தேசத்துக்கு புத்தக வெளியீட்டுக்கு வருவாராம்;

    //தள மகாநாடு…தல மகாநாடு’ எனச் சொல்கிறார்களே இம்மகாநாட்டில் என்ன நடந்தது என யாராவது சொன்னார்களா//
    சொன்னார்களே அக்கம் பக்க தளங்களை கவனிப்பதில்லையா?

    //இல்லை ஒரு பிரசுரமாவது வெளிவந்ததா? //
    நீங்கள் தேடினீர்களா?? நான் பார்த்ததாய் நினைவு; மாயா இதற்க்கு பதில் தரவும்;

    //வந்த கதை எல்லாம் அவரவர் கண்ணூக்குட்பட்ட ‘கதை’ யாகவே இருந்தது//
    நீங்கள் புலிகள் விட்ட பட்டத்தை வைத்து சொல்லுறியள். அவைதான் பட்டம் பற்றி பல கதை காது கிழிய சொன்னார்கள்? இருந்தாலும் நீங்கள் இருந்த அமைப்பு பற்றி உங்களுக்கே தெரியாதது வேடிக்கைதான், நீங்களே இப்படி சொன்னால் நாம் யாரிடம் போய் கதை கேப்பது;

    //எங்கேயாவது உத்தியோக பூர்வமாக (இன்றைய சித்தார்த்தன் புளொட் இயக்கம் வரை) ஒரு அறிக்கையாவது வெளியிட்டார்களா? யான் அறியேன்//
    காலம் கடந்த கேள்வி(கேலி) ஆனாலும் யாராவது சாந்தனுக்கு பதில் (கழக தோழர்கள்) தருவார்கள் என நம்புவோமே;

    Reply
  • santhanam
    santhanam

    புளட் ஒரு மக்கள் இயக்கம் தமது இயக்கவளச்சிக்கு பொதுமக்களின் கழுத்தில் கைவைக்கவில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….புளட் ஒரு மக்கள் இயக்கம் தமது இயக்கவளச்சிக்கு பொதுமக்களின் கழுத்தில் கைவைக்கவில்லை….//
    தேங்காய் வரி, முட்டை வரி, லொறிபார்க்……

    Reply
  • NANTHA
    NANTHA

    நட்சத்திரன் செவ்விந்தியன்:
    புலிகளால் ஈழமுரசு பத்திரிக்கை பிடுங்கப்பட்டு நடாத்தப்பட்டது. அப்போது புலிகளினால் நியமிக்கப்பட்ட ராதேயன் (சிரித்திரனில் எழுதியவர்) “அங்கு” வந்து சேர்ந்தார். அவர் மற்றைவர்களின் எழுத்துக்களை “மேற்பார்வை” செய்யும் பதவியில் இருந்தார். காக்கா பஷீர்(மனோகரன்) பத்திரிகைக்குப் பொறுப்பு. அவரது “சிங்கிடி” ஜவான்.

    ஈழமுரசு பத்திரிகையை புலிகள் பிடுங்கியவுடன் அங்கு வந்த முதல் பத்திரிகை பிரமுகர் சிரித்திரன் சிவஞான சுந்தரம். என்னையும் சண்முகலிங்கத்தையும் கண்டவுடன் முகம் கறுத்து மாடிப் படியேறாமலே திரும்பிப் போய் விட்டார். ஏனென்றால் அந்த சம்பவத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சண்முகலிங்கமும் நானும் சிவஞான சுந்தரத்தோடு பேசிக் கொண்டிருந்த பொழுது “இயக்கங்கள்”, “ஈழம்” பற்றி பற்றி “சூரத்தனமாக சாடிய சிவஞானசுந்தரம் எங்களைக் கண்டதும் வெலவெலத்துப் போய் விட்டார். அதன் பிறகு அவரை நான் அங்கு காணவில்லை.

    மயில் அமிர்தலிங்கம் ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். ஒரு முறை மாத வட்டி கொடுக்க காலம் தாழ்த்தப்பட்டமையால் “கஸ்டமர்கள்” புலிகளிடம் முறைப்பாடு செய்தனர். அதனை விசாரிக்கக் “திலீபன்” என்ற புலி அடிக்கடி மயில் அமிர்தலிங்கம் வீட்டுக்கு வரத் தொடங்கினார். இறுதியில் கிட்டு கம்பனி ஈழமுரசை பிடுங்கியதுடன் மயில் அமிர்தலிங்கத்தின் காணியிலிருந்து “இந்து சாதனம்” கட்டிடத்துக்கு ஈழமுரசு கொண்டு செல்லப்பட்டது. அங்கு “வீரகேசரியின்” யாழ் பதிப்புக்காக கொண்டு வரப்பட்ட அச்சியந்திரங்கள், எழுத்துக்கள் என்பனவற்றை ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தினர் முடக்கி வைத்திருந்தனர்.

    புலிகளின் பத்திரிகை என்ற காரணத்தினால் “ஈழமுரசு” 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினால் தகர்க்கப்பட்டது. ஆசிரியர் கோபாலரத்தினம் கைது செய்யப்பட்டார். திருச்செல்வத்தை ஆசிரியராகக் கொண்ட “முரசொலி” பத்திரிகையும் தகர்க்கப்பட்டது. முரசொலியின் உரிமையாளர்கள் யாரென்றால் கிட்டுவின் அண்ணனும், சப்ரா பைனான்ஸ் கம்பனியும் ஆகும்.

    பின்னர் இந்திய இராணுவம் உண்மைகளைக் கண்டறிந்து ஈழமுரசு பத்திரிகையை வெளியிட அனுமதித்தது. பத்திரிகை வெளிவர இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    Reply
  • santhanam
    santhanam

    சப்ரா பைனான்ஸ் புலி பினாமிதான்.

    Reply
  • மாயா
    மாயா

    //சாந்தன் on May 5, 2010 11:41 pm //….புளட் ஒரு மக்கள் இயக்கம் தமது இயக்கவளச்சிக்கு பொதுமக்களின் கழுத்தில் கைவைக்கவில்லை….//
    தேங்காய் வரி, முட்டை வரி, லொறிபார்க்……//

    இந்த வரிக்கே இவ்வளவு கூப்பாடு போடுறீங்களே, ஆள் கடத்தல் , பயமுறுத்தி கப்பம் வாங்குதல் , சிறைப்படுத்தல் , படு கொலைகள் , அதிலும் சகோதர படுகொலைகள், அதைவிட புலி உறுப்பினர்களையே கொத்துக் கொத்தாய்க் கொன்றது என அனைத்தும் சாந்தன் போன்றவர்களுக்கு சாந்தமாகத்தான் தெரியும்.

    இயக்கங்களின் வாழ்வாதாரத்துக்கு யாராவது உதவ வேண்டும். அது இல்லாத போது வரி விதிப்பில் புளொட் மட்டுமல்ல அனைத்து இயக்கங்களும் ஈடுபட்டன. ஆனால் புலிகளோடு அவற்றை ஒப்பீடு செய்யவே முடியாது.உள் நாட்டில் வரி. காணிகள் , வீடுகள் அபகரிப்பு, வன்னியை விட்டு அரச பகுதிகளுக்கு வருவதானால் ஆள் பிணை. ஆள் வராவிட்டால் பிணைக்கு நின்றவனுக்கு சிறை. சிறையிலிருந்து மீட்க லட்சக் கணக்கில் கொடுக்க வேண்டும். புலத்தில் இருந்தவனும் காசு கொடுக்க வேணும். புலத்தில் சொந்தம் இருந்தாலும் கொடுக்க வேணும்?

    இதைத்தான் புலிகளது பகுதியில் இருந்து மீண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தலில் நின்று வென்ற சிங்களவரான பியசேன , தேர்தல் வெற்றிக்குப் பின் ” புலிகளுக்கு காசு கொடுத்தால் போதும் சிங்களவன் கூட அச்சமில்லாமல் வாழலாம். இப்போது தேர்தலில் வென்ற எனக்கே அச்சமாக இருக்கிறது” என சிங்கள பத்திரிகை ஒன்றில் சொல்லியிருந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது. எவனாவது பணம் கொடுத்தால், புலி ஒன்றும் செய்யாது என்பதுதான். இதை ஒரு சிங்களவர் சொன்னார். இதே போல நாட்டில் மட்டுமல்ல , நாட்டுக்கு வெளியேயும் பலர் காசு கொடுத்து புலி ஆதரவாளர்கள் ஆனார்கள். அதன் பலாபலன், முள்ளிவாய்க்கால் மாயானம். புலிகளிடம் இடதுசாரிக் கொள்கையுமில்லை. வலதுசாரிக் கொள்கையுமில்லை. கொலையும், முடிச்சவிழ்ப்பும்தான் மட்டுமே கொள்கையாக கடைசி வரை இருந்தது. எனவே கண்ணுக்கு கிடைத்தவர்களையெல்லாம் கொன்றார்கள். கண்ணில் கிடைத்ததையெல்லாம் பறித்தார்கள். அதற்கு மண் மீட்பு, நில மீட்பு, தாயகத்துக்கான வங்கி, ஆயுதபூஜை, கப்பல் வாங்க காசு, கப்பலை அடிக்க காசு, பிளைட் வாங்க காசு, பிளைட்டை வீழ்த்த காசு…………என வறுகினார்கள்? எத்தனை விதம்? தலை சுத்தும்?

    //புலி புளொட்டின் தலமைகளைதான் (இரண்டாம்) அழித்ததென சொல்லுகிறார்கள். அதுக்கு முன்பே அந்த அமைப்பின் செயல்பாடுகள் முடங்கி விட்டதாக மாயா சொன்னாரே//

    தளம் என்பது இலங்கை. பின் தளம் என்பது இந்தியா, அதுவும் தமிழ் நாட்டை. முதலில் நடந்த சுழிபுரம் கொலையை புளொட்டில் பலர் அங்கீகரிக்கவில்லை. அதற்கான பொறுப்பு (கந்தசாமி) சங்கிலியனுடையது. இருந்தாலும் புளொட்டின் முதல் கறை அதில்தான் தொடங்கியது. அடுத்து சந்ததியார் தொடர்பில் கொல்லப்பட்ட தோழர்கள் மற்றும் சந்ததியார் தொடர்பாக கறையானது. இக் கொலைகளுக்காக வெளியார் எவருமே போராடவில்லை. வெளியாருக்குத் தெரியவும் தெரியாது. உள்ளே இருந்த தோழர்கள்தான் போராடினார்கள். இதுவே கழகத்தில் நம்பிக்கையீனத்தையும், பாரிய விரிசலையும் உண்டு பண்ணி, கழகத் தோழர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இதை கண்டித்தும், புளொட்டின் ஆயுத பற்றாக் குறை, எதிர்கால போராட்டம் குறித்த மந்த நிலைகள், தலைமைகளின் தவறுகள் என்பன குறித்து தளத்திலும், பின் தளத்திலும் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கே பரந்தன் ராஜனது வெளியேற்றமும் அடக்கம்.

    போராளிகள் மத்திய குழு உறுப்பினர்கள் மேல் நேரடியாகவே தோழர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தினர். அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெளியேறினர். போராளிக் குழுக்களின் முதல் வானோலியான தமிழீழத்தின் குரலில் இருந்தோரது வெளியேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வந்த உதவிகள் தடைப்பட்டன. அவர்கள் வெளியேறும் போதே புளொட்டின் அராஜகம் மற்றும் தவறுகள் என அறிக்கைகளை அனைவருக்கும் அனுப்பி விட்டே வெளியேறினார்கள். வெளியில் இருந்து வந்த பணம் முடங்கியது. இது புலிகளுக்கு கடந்த காலங்களில் கிடைத்த அளவில் 1 வீதம் கூட இல்லை. இருந்தாலும் அது பாரிய பின்னடைவை உண்டாக்கியது. இந்தக் வெளியேறிய வானோலிக் குழுவில் TTNல் இருந்த திவாகரன் எனப்படும் சிவா சின்னப்பொடி இருக்கவில்லை. அவருக்கு விபரம் தெரிந்திருந்தால் அனைவரும் சிவனடி சேர்ந்திருப்பர். அவர்கள் வெளியேறும் போது 1 சதத்துக்கும் கணக்குகளை எழுதி வைத்து விட்டே வெளியேறினார்கள். இவை நேர்மையின் குணாதிசயம். இதெல்லாம் நடக்கும் போது உமா மகேஸ்வரனோடு இருந்தார். இலங்கைக்கும் பின்னர் சென்று இணைந்திருந்தார். பின்னர் பிரான்சில் வைத்தே புலியானார். இப்படிச் சிலர்? இதில் சிவராமும் ஒருவர்? இவர்கள் அனைவரும் சுயநலவாதிகள். இதில் மாற்றுக் கருத்தில்லை.

    தளத்திலும் , பின் தளத்திலும் புளொட் தலைமையோடு மாற்றத்துக்காக போராடியவர்களில் அநேகர், இன்றும் அமைதியாக இருக்கிறார்கள். இந்தவகையில் புளொட் , புலியை விட எவ்வளவோ மேல்தான். அது பொய்யல்ல.

    புலிகளில் இருந்த எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்? எத்தனை போராளிகள் கொல்லப்பட்டார்கள்? எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்? புலிகளில் இருந்த ஒருத்ததராவது நீங்கள் செய்வது தவறு என வாதாடியதுண்டா? வாய் திறந்து பேசியதுண்டா? இன்றும் புலிகளாக இருந்தவர்கள், என்ன செய்கிறார்கள்? மெளனம் அல்லது இன்னும் வறுகுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள்? எனவே வெறியைத் தவிர வேறெதுவும் புலிகளிடமும் இருந்ததில்லை. புலி ஆதரவாளர்களிடமும் இருந்ததில்லை. புலி ஆதரவாளர்கள் , புலிகள் அமைப்பை தமிழ் சினிமா கதாநாயகன் அந்தஸ்த்தில் வைத்துப் பார்த்தார்களே ஒழிய யதார்த்தத்தோடு பார்க்கவே இல்லை. நீல சோப் போட்டு துவைத்தால்தான் துணி வெளுக்கும் என்பது போல, வேறு ஒரு சோப்பையும் பாவிக்காதவர்கள் போன்றவர்கள் புலிகளில் இருந்தவர்கள். இருப்பவர்கள். இது மாறி வருகிறது. அது மெளனமாக………. புலித் தேர்தல்கள் அதை ஊர்ஜிதப்பபடுத்துகிறது? பார்க்கலாம்?

    புளொட், போரினால் பாதிக்கப்பட்டு வந்த மக்களுக்கு சோத்து பார்சலையாவது கொடுத்தது, செய் நன்றிக் கடன் போல. ஆனால் புலி இதுவரை அந்த மக்களுக்கு என்ன செய்தது?

    நல்லவன் சந்தர்ப்ப வசத்தால் கெட்டவன் ஆனாலும் , அவனிடம் இருந்த பழக்க தோஸத்திலாவது கொஞ்சம் இரக்கம் இருக்கும். கெட்டவனுக்கு பழக்க தோஸத்தில் கூட கெடுதல்தான் செய்யத் தோன்றும். அனைத்து தமிழருக்கும்கெடுதல் செய்தவர்கள் புலிளே. இது தமிழன் விதியா?. இல்லையென்றால் யாரோ இட்ட சாபமா?

    Reply
  • பல்லி
    பல்லி

    சாந்தன் மாயாவின் பின்னோட்டத்துக்கு பின்னும் பல்லியிடம் ஏதாவது எதிர்பார்க்கிறியளா? நான் எழுதுவது அறிந்தவை; மாயா சொல்லுவது அனுபவம்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… ” புலிகளுக்கு காசு கொடுத்தால் போதும் சிங்களவன் கூட அச்சமில்லாமல் வாழலாம். இப்போது தேர்தலில் வென்ற எனக்கே அச்சமாக இருக்கிறது” என சிங்கள பத்திரிகை ஒன்றில் சொல்லியிருந்தார்….//

    புலிகளுக்கு பணம் கொடுத்தால் சிக்கல் இல்லை. புலி பணம் கேட்கும் கொடுதால் சும்மா விட்டுவிடும்.
    ஆனால் ‘ஜனநாயகம்’, ‘தேர்தல்’ எனக்கூப்பாடு போடுவோர் வோட்டுப்போட்டாலும் என்ன செய்வார்கள் என்பதைத்தான் அவர் சொல்லி இருக்கிறார். நன்றாகத்தான் ஸ்பின் பண்ணுறியள் மாயா!

    //… வெளியாருக்குத் தெரியவும் தெரியாது. உள்ளே இருந்த தோழர்கள்தான் போராடினார்கள். இதுவே கழகத்தில் நம்பிக்கையீனத்தையும், பாரிய விரிசலையும் உண்டு பண்ணி, கழகத் தோழர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது…//
    மாயா, வெளியாருக்கு தெரிதா? சனம் கிழிச்ச கிழியல் எனக்கெல்லோ தெரியும்!

    //…பின் தளத்திலும் புளொட் தலைமையோடு மாற்றத்துக்காக போராடியவர்களில் அநேகர், இன்றும் அமைதியாக இருக்கிறார்கள். இந்தவகையில் புளொட் , புலியை விட எவ்வளவோ மேல்தான். அது பொய்யல்ல. ….//
    மாற்றத்துக்கு போராடியவர்கள் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்? என்ன நடந்தது எனச் சொல்ல வேண்டியதுதானே? ”அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்” எனப்புறப்பட்டவர்கள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்?

    //…புலிகளில் இருந்த எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்? ….ஒருத்ததராவது நீங்கள் செய்வது தவறு என வாதாடியதுண்டா? வாய் திறந்து பேசியதுண்டா? இன்றும் புலிகளாக இருந்தவர்கள், என்ன செய்கிறார்கள்?…//
    அது புலி…அவர்களினது ‘அராஜகக்கும்பல்’ என சொல்கிக்றீர்களே. பின்னர் ஏன் அவர்களையும் மற்ரவர்கலையும் ஒப்பிடுகிறீர்கள். மற்றவர்கள் தாம் ‘கறைபடியா கரங்களின்’ சொந்தக்காரர்கள் எனச்சொல்லி விட்டு எங்கள் கறை அவர்களின் ‘கறைக்கு’ எவ்வளவோ மேல் எனச்சொல்வது …..

    //..புளொட், போரினால் பாதிக்கப்பட்டு வந்த மக்களுக்கு சோத்து பார்சலையாவது கொடுத்தது, செய் நன்றிக் கடன் போல….///
    புளொட் 1980களில் ஒரு அரச ஆதரவாளரைப் போட்டுத்தள்ளினார்கள். அவரின் குடும்பம் பாங்கில் வேலைவாய்ப்பு, சங்கக்கடையில் வேலைவாய்ப்பு …இப்படி பல செய்தவரை நன்றி இல்லாமல் கொன்று விட்டனரே என அழுதபோது புளொட் சொன்னது “அள்ளி எடுத்ததில் கிள்ளித்தெளித்தவர்’ என. அதுவே புளொட்டுக்கும் பொருந்தும்!

    /…சாந்தன் மாயாவின் பின்னோட்டத்துக்கு பின்னும் பல்லியிடம் ஏதாவது எதிர்பார்க்கிறியளா? நான் எழுதுவது அறிந்தவை; மாயா சொல்லுவது அனுபவம்;….// ஏன் நான் அறியவில்லையா…அல்லது அனுபவப்படவில்லையா…நான் முன்னர் ஒரு பதில் எழுதியிருந்தேன் மாயாவுக்கு ஆனால் ஏனோ தேசம் தணிக்கை செய்து விட்டது!

    Reply
  • santhanam
    santhanam

    அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்” எனப்புறப்பட்டவர்கள் இதன் அர்த்தம் என்ன தெரியுமா எந்த சக்திகளின் கைபொம்மையாக நாம் செயற்படோம் புலியை போல எல்லா வல்லரசுகளையும் தேவைக்கு பயன்படுத்துவோம் பின்பு அவர்களை கைகழுவோம் என்ற சிந்தனை இந்தியா முதல் பிறேமதாச ஐரோப்பா அமெரிக்கா என்ற நீண்டசக்திகள் ஊடுருவியிருந்தனர் இவர்களது பொம்மையாகதான் புலிகள் செயற்பட்டனர் அவர்களது தேவைகளை புலிகள் நிறைவேற்றினர் தமிழ்மக்களது தேவையோ அபிலாசைகளோ புலிகள் கருத்தில் கொள்ளவில்லை கொழும்பிலும் இந்தியாவில் நடந்த அரசியல் கொலைகள் ஒவ்வொரு வல்லரசுகளின் எதிரிகளே அவர்கள் தமிழ்மக்களின் எதிரிகள் அல்ல.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஜி.எல். பீரிஸ் ‘நாடு கடந்த அரசு பற்றி நடவடிக்கை எடுக்கும் என்று தொடங்கிய செய்தியையும் அதற்கு எழுதப்பட்ட கருத்துக்களையும் “தேசம் நெட்” முற்றாக நீக்கி விட்ட மர்மம் என்ன? திருச்செல்வம் என்ற சந்தர்ப்பவாத பத்திரிகையாளனின் சுத்துமாத்துக்களை எழுதியவுடன் “தேசம்நெட்டுக்கு” வந்த வருத்தம் என்னவென்று பதிலளித்தால் நல்லது.

    சிவராம் பற்றி “மாபெரும்” ஆராச்சி செய்து நேரத்தை வீணடிப்பதை விட “பத்திரிகை சுதந்திரம்” அல்லது கருத்துச் சுதந்திரம் என்பதற்கு “தேசம்நெட்” என்ன மதிப்புக் கொடுக்கிறது என்பதனை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்!

    யாழ்ப்பாணத்து ஊடகத்துறையின் “கதி” பற்றி எழுதியவுடன் தேசம் நெட் பிச்சுக்கிட்டு போனது ஏன்? புலிகளுக்கும், திருச்செல்வத்துக்கும் “தேசம்நேட்டுக்கும் ” ஒரு அன்னியோன்யம்” இருப்பது புலனாகிறது!

    ._._._._._._._._._._._._._._._._._._._._._.

    நாடுகடந்த தமிழீழத்தை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு– 3May 2010

    http://thesamnet.co.uk/?p=20001

    THESAMNET

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    THE REFERENCES MADE By SOME REDAERS ABOUT LATE mR.IAMPILLAI sHANMUGALINGAM IS PERFETLY CORRECT.HE WAS ATTACHED TO THE education department,Jaffna.I personally warned him,though I was not a friend of him.I understood the way Shan writing in the papers could invite trouble to him.He had five or six daughters.No son.Poor family.This is why I warned him.he is from ariyalai west, Jaffna. I must thank those mking the references.

    Reply
  • thaasan
    thaasan

    … ” புலிகளுக்கு காசு கொடுத்தால் போதும் சிங்களவன் கூட அச்சமில்லாமல் வாழலாம். இப்போது தேர்தலில் வென்ற எனக்கே அச்சமாக இருக்கிறது” என சிங்கள பத்திரிகை ஒன்றில் சொல்லியிருந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது. எவனாவது பணம் கொடுத்தால், புலி ஒன்றும் செய்யாது என்பதுதான். இதை ஒரு சிங்களவர் சொன்னார்….

    தேர்தலில் நின்றவன் வீட்டுக் கைதியாக இருக்கவேண்டிய அளவுக்கு ஜனநாயகத்தின் நிலமை எனச் சொல்லி வருந்தினால் மாயா அதை ‘புலி/பணம்’ என விளக்கம் கொடுக்க முனைகிறார்!

    ”இதன் அர்த்தம் என்ன தெரியுமா எந்த சக்திகளின் கைபொம்மையாக நாம் செயற்படோம் புலியை போல எல்லா வல்லரசுகளையும் தேவைக்கு பயன்படுத்துவோம் பின்பு அவர்களை கைகழுவோம் ”

    உண்மைதான், புளொட் இதை ‘வங்கம் தந்த பாடம்’ என அச்சடித்து விற்றனர் (வினியோகித்தனர் என்று சொல்வார்கள். கேட்ட்டால் ‘விற்பனை’ என்பது முதலாளித்துவ சுரண்டல் என விளக்கம் சொன்னார்கள்) பின்னர் அதே ’எட்டுச்சுரக்காய்’ பாடத்தை தமிழீழ ‘கறிக்கு’ உதவாது என உணர்ந்து…ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல், உட்கொலை, சித்திரவதை என ஆரம்பித்து மாலதீவு வரை போய் உமாவின் ‘உட்கொலை’யில் நின்று பின்னர் சுவிஸில் இருவரைக்கொலை செய்யுமளவு வந்தது…….(அண்மையில் இன்னொரு தளத்தில் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டனர் எனவும் பழைய புளொட்காரர் ’அனுபவத்தில்’ எழுதி உள்ளார். ஆனால் என்னிடம் ஆதாரமில்லை)

    Reply
  • NANTHA
    NANTHA

    நல்லூர் கந்தன்:
    காலம் சென்ற நண்பர் சண்முகலிங்கத்தைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது உண்மையே. ஆரம்பத்தில் ஆசிரியராக வேலை தொடங்கிய அவர் பின்னர் இரத்தினபுரியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக யாழ் வந்து ஓர் வாச்சர் வேலையோடும் பகலில் ஓர் நிருபராகவும் வாழ்ந்து மாண்டு போனவர். இந்த இயக்கங்கள் எல்லாம் “நல்லது” செய்யவே புறப்பட்டார்கள் என்று நம்பியது அவர் விட்ட தவறுகளில் ஒன்று.

    “உண்மைகளை” மக்களுக்குச் சொல்லவேண்டும் என்ற அவரின் கருத்து அவருக்கு எமனாக வந்தது. அவர் யாழ் மக்கள் நல்லதை ஆதரிப்பார்கள் என்றும் நம்பினார். யாழ்ப்பாணத்தில் திருடர்களுக்கும், காவாலிகளுக்கும் கொடுக்கும் மரியாதையை “நேர்மையானவர்களுக்கு” கொடுப்பதில்லை.

    ஈழமுரசு பத்திரிகையில் மயில் அமிர்தலிங்கம் “எழுதுபவர்களுக்குப்” பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். அதனால் உண்மைகளை எழுதுவது பிரச்சனையாக இருக்கவில்லை.

    கந்தன் கருணைப் படுகொலைகளை திருச்செல்வம் தனது முரசொலியில் “பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டனர் என்று எழுதினார்! இன்று அதே ஆள் “நாடு கடந்த அரசு” என்று புறப்பட்டிருக்கிறார்! தமிழர்களுக்கு நேர்மை என்பதில் நம்பிக்கை இல்லை என்பதை இந்த பத்திரிக்கை வரலாறுகளே சொல்லுகின்றன. ஆயினும் திருச்செல்வம் மேடை ஏறினால் நாராகக் கிழிக்கப் பலர் உள்ளனர். திருச்செல்வம் ஒரு மட்டமான அரசியல் கிரிமினலே தவிர “பத்திரிக்கை” நடத்த அல்லது எழுத எந்தவித தார்மிக உரிமையும் இல்லாத ஒருவர் என்பதே என் கருத்து!

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Thanks Mr.nantha.It is very sad those speak loud about journalists who suffered for various reasons never opened their mouth to speak about journalists like I.Shan.He was never an admirer of Ealam/vaddukoddai resolution.later,like many others,became associated with one of the tamil radical organizations.One day I had an opportunity to discuss the then current situation(during IPKF time) and I was shocked to know he made a U turn in the Ealam issue and became asociated with EPRLF.But he was a committed person.There are many,many who believed these radical organizations were going to do good things to the Tamil people.This was the mistake they have done.

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி, புளொட்டின் கொலைகள், பிரச்சனைகள் உள்ளிருந்து வெளியான பின்னரே மக்களுக்கு தெரிய வந்தது. சுளிபுரம் கொலைகள் மட்டுமே பகிரங்கமாக தெரிய வந்தது. புளொட் மட்டும் உட் கொலைகளை செய்யவில்லை. அனைத்து இயக்கங்களும் உட் கொலைகளை செய்துள்ளன. அவை வெளிக் கொண்டு வரப்படவில்லை, அல்லது மூடி மறைக்கப்பட்டன. எனவேதான் ஆயுதம் தாங்கிய அமைப்புகள் மேல் என்னால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. நம்பிக்கையோடு தம்மோடு இணைந்து போராட வந்த இளைஞர்களது அழிவுக்கு வித்திட்டவை இந்த இயக்கங்கள். இதில் புலிகள் அளவுக்கு உட் கொலைகளை செய்தவர்கள் குறைவு. இதற்காக இவர்கள் தவறிழைக்காதவர்கள் எனச் சொல்ல வரவில்லை. இவர்களும் மகா பாதகர்களே. கருணா பிரிந்த போது கருணாவோடு பிரிந்து வந்து சரணடைந்த இளைஞர்களையும், யுவதிகளையும் புலிகளது பகிரங்க கொலைக் களமாக மட்டக்களப்பில் என்ன செய்தார்கள் என கேளுங்கள்? இதயம் வெடிக்கும். தாயக விடுதலை எனப் போய் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட யுவதிகள் கதை, செம்ணியை விட மோசமானது?

    நந்தா சொல்கிறார். புளொட் போதை வஸ்த்து கடத்தலில் ஈடுபட்டதாக, புலி? கப்பல்களில் போது வஸ்த்து கடத்தலிலும், ஆயுத கடத்தலிலும் ஈடுபட்டவர்கள் புலிகள். அதைத் தவிர தமிழ் பெண்களை விபச்சாரகளாக்கி, இராணுவத்தினரோடு படுக்கை அறைகளை பகிர்ந்து கொண்டு, இராணுவ ரகசியங்களை பல பெண்கள் பெற்று புலிகளுக்கு வழங்கி வந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் கைதாகி விபரங்கள் பத்திரகைளில் மேலோட்டமாக வந்தன. புலி ஊடகங்கள் மூடி மறைத்தன. அண்மையில் என்னோடு பேசிய ஒரு இராணுவ அதிகாரி ” புலிகள், அதிகமாக தகவல்களை பெற்றது பெண்களை வைத்துத்தான். அதுவும் பணக்கார பெண்கள் போல் நடித்து, ஒன்றாக சின்ன வீடு போல வாழ்ந்து ரகசியங்களை கறந்துள்ளார்கள். தவிர பெரும்பாலான சிங்கள பெண்களைக் கூட பயன்படுத்தினார்கள். ” என்றார்.

    //மாற்றத்துக்கு போராடியவர்கள் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்? என்ன நடந்தது எனச் சொல்ல வேண்டியதுதானே? ”அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்” எனப்புறப்பட்டவர்கள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்?//

    இதுவரை பொறுத்துத்தானே இருந்தார்கள். இன்னும் கொஞ்சம் காலம் பொறுப்பதில் தவறில்லை. இதுவரை புலிகள் அராஜகம் செய்தார்கள். இனி எவனாலும் அந்த பாதையில் வெகு காலம் போக முடியாது. கடந்த கால அதிர்ச்சியிலும் , பழக்க தோஸத்திலும் இருந்து மீள காலம் கொடுங்கள். நல்லது நிச்சயம் நடக்கும்.

    பொறுத்தோர் பூமி ஆள்வார். பொங்கினோர் காடாள்வார் என முன்னோர் சொன்னவை உண்மைதானே?

    Reply
  • BC
    BC

    //நந்தா-யாழ்ப்பாணத்தில் திருடர்களுக்கும் காவாலிகளுக்கும் கொடுக்கும் மரியாதையை “நேர்மையானவர்களுக்கு” கொடுப்பதில்லை.//
    இது யாழ்ப்பாணம் என்றில்லை பொதுவாக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் இது பொருந்தும்.

    //மாயா-ஆயுதம் தாங்கிய அமைப்புகள் மேல் என்னால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. நம்பிக்கையோடு தம்மோடு இணைந்து போராட வந்த இளைஞர்களது அழிவுக்கு வித்திட்டவை இந்த இயக்கங்கள்.//
    மாயா நீங்கள் எவ்வளவு மனித நேயம் உள்ளவர் என்பதை உங்கள் கருத்துக்கள் உடாக அறிவேன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    Nallur Kanthan:
    In his last letter to me I.Shan stated that EPRLF has accepted the INDIAN solution for the Ethnic problems of Sri Lanka and it was the best at all times. I believe it. Even today Indian solution of 1987 is still the best for the Tamil People.

    13th Amendment was destroyed by LTTE and UNP jointly!

    Now Samabanthan gang asks to re-join N and E.

    Supporting EPRLF is not a crime. But I.Shan never tried to leave the soil like others.

    Reply
  • NANTHA
    NANTHA

    மாயா:
    என்னையா என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்? ப்லொட் இயக்கத்திலிருந்தவர்கள் போதை வஸ்து கடத்தியிருக்கலாம் என்று கூடநான் சொல்லவில்லை!

    தவிர புலிகளின் “சுதந்திரப்பறவைகள்” பற்றி நீங்கள் குறிப்பிடுவது உண்மையே! அடேல் பாலசிங்கத்தின் பொறுப்பில் இருந்த “பெண்கள்” சித்திரவதை முகாம்களின் கதைகள் கொடுமையிலும் கொடுமை! 55 வயது பாட்டியை கூட புலிக் காமுகர்கள் விட்டு வைக்கவில்லை! அவர்கள் செய்த குற்றம்: அவர்கல் பெற்ற பிள்ளைகள் மற்றைய இயக்களில் இருந்ததுதான்!

    Reply
  • பல்லி
    பல்லி

    // புளொட்டின் கொலைகள், பிரச்சனைகள் உள்ளிருந்து வெளியான பின்னரே மக்களுக்கு தெரிய வந்தது. சுளிபுரம் கொலைகள் மட்டுமே பகிரங்கமாக தெரிய வந்தது. //
    உன்மைதான் மாயா ஆனால் ஒரு திருத்தம் சுளிபுர விடயமும் முகுந்தனின் பாதுகாப்புக்காக இந்தியாவில் இருந்து போன ஒரு தோழர்தான் அம்பல படுத்தினாராம்; (அவரும் பல்லியின் தற்போதய கழக நண்பர்களில் ஒருவர்)

    //புளொட் மட்டும் உட் கொலைகளை செய்யவில்லை. அனைத்து இயக்கங்களும் உட் கொலைகளை செய்துள்ளன.//
    மாயா இவை அனைத்தும் வெளிவரவேண்டும்; அரசியலுக்காக அல்ல இறந்த தோழர்களின் உறவுகள் தெரிந்து கொள்ள, இதுக்காய் பல்லியின் பங்கு கண்டிப்பாக இருக்கும், இதை யாரும் கிண்டல் செய்தாலும் எனக்கு கவலையில்லை;:

    //ஆயுதம் தாங்கிய அமைப்புகள் மேல் என்னால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை.// இது உங்கள் அனுபவமாக இருக்கலாம்;

    //நம்பிக்கையோடு தம்மோடு இணைந்து போராட வந்த இளைஞர்களது அழிவுக்கு வித்திட்டவை இந்த இயக்கங்கள். இதில் புலிகள் அளவுக்கு உட் கொலைகளை செய்தவர்கள் குறைவு.// உன்மைதான் ஆனால் அதுக்காக எந்த இயக்க கொலையையும் யாரும் நியாயபடுத்த முடியாது;(அதுவே உங்கள் கருத்தும்)

    //கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட யுவதிகள் கதை, செம்ணியை விட மோசமானது?//
    யாராலும் நம்ப முடியாது; ஆனாலும் அதுவே நிஜம்:

    //நந்தா சொல்கிறார். புளொட் போதை வஸ்த்து கடத்தலில் ஈடுபட்டதாக, //பல்லி சொல்லுகிறேன் இயக்கங்களே ஒரு
    போதையாகதானே ஆரம்பித்தன;

    //தமிழ் பெண்களை விபச்சாரகளாக்கி, இராணுவத்தினரோடு படுக்கை அறைகளை பகிர்ந்து கொண்டு, இராணுவ ரகசியங்களை பல பெண்கள் பெற்று புலிகளுக்கு வழங்கி வந்திருக்கிறார்கள்// மாயா இதே நபர்கள் வயித்து பசிக்காய் குப்பனுடனும் சுப்பனுடனும் அதுக்காய் போனவர்களுக்கு பகிரங்க மரண தண்டனை கொடுத்ததை இந்த இடத்தில் பல்லி நினைவு கொள்கிறேன்:

    //”அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்” எனப்புறப்பட்டவர்கள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்//
    சொல்வதில் பலர் மாயா; சாந்தன், உட்பட பல்லிக்கு தகவல் தருபவர்கள் வரை அவர்கள்தான் என்பது தெரியவில்லையா?

    //இதுவரை பொறுத்துத்தானே இருந்தார்கள்.// இது காலத்தின் (புலியின்) கட்டாயம்:

    //இன்னும் கொஞ்சம் காலம் பொறுப்பதில் தவறில்லை.// ஆனால் அவர்கள் பொறுப்பதால் பல ஊடகத்தில் பலர் கற்பனை கதைகள் சொல்லி விடுவார்கள். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; (பார்க்க பலரது தளங்களை)

    //பழக்க தோஸத்திலும் இருந்து மீள காலம் கொடுங்கள்.// மாயா மக்கள் கொடுத்த காலமும் அதிகம்; இயக்கங்கள் கெடுத்த காலங்களும் அதிகம்;

    //பொறுத்தோர் பூமி ஆள்வார். பொங்கினோர் காடாள்வார் என முன்னோர் சொன்னவை உண்மைதானே?//
    உன்மைதான் ஆனால் பொங்கினார் காடாளும் போது பொறுத்தார் பொங்குவது சரியல்ல, இதுதான் பல்லி;

    //புலிகளுக்கு பணம் கொடுத்தால் சிக்கல் இல்லை. புலி பணம் கேட்கும் கொடுதால் சும்மா விட்டுவிடும்// சாந்தன்;
    சரி கொடுக்க முடியாதவர்கள் என்ன கொடுப்பது; அப்படி கொடுக்காவிட்டால்???

    //தேங்காய் வரி, முட்டை வரி, லொறிபார்க்……// உயிர் வரி வைக்கவில்லையே, சந்தோஸ படுங்க.

    //புலி…அவர்களினது ‘அராஜகக்கும்பல்’ என சொல்கிக்றீர்களே.//என்னுமா சாந்தனுக்கு அதில் சந்தேகம்?

    //“அள்ளி எடுத்ததில் கிள்ளித்தெளித்தவர்’ என. அதுவே புளொட்டுக்கும் பொருந்தும்!// கிள்ளியாவது தெளித்தார்கள் அல்லவா? ஆனால் இன்று அனைத்தையும் சுரண்டியவர்கள் எதையும் கசியகூட விடவில்லை என்பது சாந்தனுக்கு அன்பின்பால் தெரியவில்லை;

    //ஏன் நான் அறியவில்லையா…அல்லது அனுபவப்படவில்லையா…//
    பல்லி ஒரு போதும் அப்படி நினைத்ததில்லை; என்னும் சொல்ல போனால் பல இடத்தில் உங்கள் ஆதாரத்தை சுட்டி காட்டியுள்ளேன்; அதே போல் பார்த்திபன் போல் பல தகவலை தருவதில் சாந்தன் தேர்ச்சி பெற்றவர்தான்; ஆனால் கழகம் பற்றிய செய்திகள் மட்டும் அனுபவம் அறிந்தவை சாந்தனிடம் இருப்பதாக உங்கள் எழுத்தில் குறவாகவே உள்ளது, இது எனது கருத்தல்ல உங்களோடுஅன்று இருந்த நண்பர்களின் கருத்து; அதுக்கு உதாரனம் புளொட்டில் இருந்து சிவராமின் கொலைவெறி தெரியாதென்பது நம்ப முடியவில்லை,

    Reply
  • மாயா
    மாயா

    //NANTHA on May 8, 2010 12:38 pm மாயா:
    என்னையா என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்? ப்லொட் இயக்கத்திலிருந்தவர்கள் போதை வஸ்து கடத்தியிருக்கலாம் என்று கூடநான் சொல்லவில்லை!//

    //thaasan on May 7, 2010 4:41 pm …….(அண்மையில் இன்னொரு தளத்தில் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டனர் எனவும் பழைய புளொட்காரர் ’அனுபவத்தில்’ எழுதி உள்ளார். ஆனால் என்னிடம் ஆதாரமில்லை)//

    மன்னிக்கவும் நந்தா, thaasan என எழுத வேண்டியதை நந்தா என எழுதிவிட்டேன். மன்னித்தருளுக.

    Reply
  • thaasan
    thaasan

    ” புளொட் போதை வஸ்த்து கடத்தலில் ஈடுபட்டதாக, புலி? கப்பல்களில் போது வஸ்த்து கடத்தலிலும், ஆயுத கடத்தலிலும் ஈடுபட்டவர்கள் புலிகள்”

    நான் சொல்லியது இன்னொரு தளத்தில் பழைய (?) புளொட்காரர் எழுதியிருப்பது. ஆனால் அதற்கு என்னிடம் ஆதாரமில்லை எனவும் நான் சொல்லி இருக்கிறேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜெயபாலன் உங்களது அல்லது தேசம்நெற்ரின் ஈமைல் தரவும்
    நட்புடன் பல்லி;

    ._._._._._._._._._._._._._._._.

    thesam97@hotmail.com

    sothi@thesamnet.co.uk

    Reply
  • thaasan
    thaasan

    “அண்மையில் என்னோடு பேசிய ஒரு இராணுவ அதிகாரி ” புலிகள், அதிகமாக தகவல்களை பெற்றது பெண்களை வைத்துத்தான். அதுவும் பணக்கார பெண்கள் போல் நடித்து, ஒன்றாக சின்ன வீடு போல வாழ்ந்து ரகசியங்களை கறந்துள்ளார்கள். தவிர பெரும்பாலான சிங்கள பெண்களைக் கூட பயன்படுத்தினார்கள். ” என்றார்.”

    இது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஸ்ரீலங்கா “ராணுவ அதிகாரி” களின் கதைகளை ஸ்ரீலங்கா ராணுவ அதிகாரிகளே நம்புவதில்லை என்பது ஒருபுறம் இருக்க இங்கே மீண்டும் மீண்டும் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் ‘ரகசியங்களை கறந்துள்ளார்கள்’ என்பது தான். அவர்கள் எடுத்த விடயயத்தை முடிக்க எதற்கும் தயார்…எந்ததியாகமும் செய்யத்தயார்…அதனால்தான் அவர்கள் மக்களின மனதில் நிற்கின்றனர்.
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

    Reply
  • பல்லி
    பல்லி

    //அவர்கள் எடுத்த விடயயத்தை முடிக்க எதற்கும் தயார்…எந்ததியாகமும் செய்யத்தயார்…//
    இது நம்ம நேர்த்திக்கு பக்கத்து வீட்டு கிழவிக்கு திருப்பதியில் மொட்டை போடுவதுக்கு சமன் அல்லவா?

    குமரப்பா புலேந்திரன் என மிக பெரிய தளபதிகள் என வலம் வந்தவர்களையே சிறையில் வைத்து ஆலோசகர் மூலம் (பாலா சொன்னதுதான்) விஸம் கொடுத்து கொன்ற தலமை முள்ளி வாய்காலில் அதே விஸத்தை ஆற்றில் எறிந்து விட்டு அரசிடம் மண்டியிட்டது எந்த தியாகம் என சொல்லுங்கோவன், நான் இவர்கள் முள்ளிவாய்காலில் மண்டியிட்டத்தை குறை சொல்லவில்லை; காரனம் எந்த உயிரும் அவதியாய் போககூடாது என்பது என்கருத்து; ஆனால் அன்று திலீபன் உடபட எத்தனை பேரை ஈழம் என்னும் போதை ஏற்றி சாகடித்தார்கள். தியாகம் அன்றும் சரி இன்றும் சரி செய்தது அப்பாவி மக்களே, ஆக புலி சுக வாழ்வுக்காய் (போருக்காக அல்ல) மக்கள் தியாகம் செய்தார்கள் என்பதுதான் உன்மை, அதே மக்களின் தியாகம் (அழிவு)தான் இன்று புலி அழிவுக்கும் உதவியது, ஆக ஈழதமிழர் வாழ்வை விட தியாகம் செய்த காலமே அதிகம்; வெற்றி என்பது பல தடவை புலிகள் அனுபவித்தனர் ஆனால் மக்களோ இறுதிவரை ஏன் இன்று வரை தோல்வியை மட்டுமே சுவாசிக்கின்றனர் என்னும் ஆதங்கமே எமது எழுத்து;

    Reply
  • BC
    BC

    அவர்கள் எடுத்த விடயத்தை முடிக்க எதற்கும் தயார் என்பது தெரியுமே! அவர்கள் தாங்கள் வாழவேண்டும் என்று எடுத்த முடிவுக்காக மக்களை கொன்றார்கள். பல புலிகளை சயனைட் கொடுத்து சாகடித்தவர்கள் தாம் மட்டும் உயிர்தப்பி வாழ்வதற்காக வெள்ளைகொடியோடு சரணடைந்தனர். தங்களுக்கு லாபம் என்பதற்காக ஆயுதமே தமிழர்களின் பாதுகாபபு என்று முடிவு எடுத்து மக்கள் வாழ்வையே அழித்தவர்கள் தாங்கள் வாழவேண்டும் என்று எடுத்த முடிவுக்காக ஆயுதங்கள் மெளனிக்கபண்ணினர்.

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    “இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார்.
    கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.”

    சில ஆண்டுகளுக்கு முதல் எழுதிய எனது கட்டுரைக்கு சில மேலும் தெளிவான குறிப்புக்கள். சிவராமின் உறவினரான குறித்த கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் யூவி தங்கராசா இப்போது லண்டனில்தான் வாழ்கிறார். இவர் ரமணலால் புலிகளின் முகாமில் வைத்து “விளங்கப்பட்டபோது” இவர் கொல்லப்படப்போகிறார் என்பதையுணர்ந்த சிவராம் உடனடியாகவே வன்னிக்குப் பேரம் பேசுவதற்கு விரைந்தார். பேச்சின்போது வன்னிப்புலிகள் கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை அங்கேயே வைத்து சிவராமைக்கொண்டு எழுதிப்பெற்றனர். இக்கடிதம் புலிகளின் பிரச்சாரப் பிரிவால் திருப்தி பார்க்கப்பட்டபின்னர் சிவராமிடம் வீரகேசரியில் பிரசுரத்திற்காகக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டது. கடிதம் வெளிவந்ததும் யூவி எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டார்.

    ஈழமுரசை மட்டுமே புலிகள் அபகரிக்கவில்லை. எண்பதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த திசை என்ற பத்திரிகையையும் 90 களில் புலிகள் அபகரித்தார்கள். இதில் மிகக்கெடுங்கேவலம் என்னவென்றால் புலி அபிமானிகளான இதே திசையின் ஆசிரியர்களாக அப்போதிருந்த மு.பொன்னம்பலமும் அ.யேசுராசாவும் புலிகளின் இந்நடவடிக்கையை நியாயப்படுத்தியமைதான். புங்குடுதீவுக்காரரிடமும் குருநகர்க்காரரிடமிருந்தும் இதைவிட வேறெதை எதிர்பார்க்க முடியும்?

    -நட்சத்திரன் செவ்விந்தியன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    சிவராமின் எழுத்துக்களைப் பார்த்து ஆகர்ஷித்தவர்கள் அதிகம். அவர் அப்போதே “விலை போய்விட்ட” விஷயம் பலருக்குத் தெரியாது. சிவராமுக்கு யுஎன்பி ஊடாக கிடைத்த அங்கீகாரங்கள் அவரை ஒரு “மாமனிதர்” அந்தஸ்த்துக்கு இட்டுச் சென்றது. யுஎன்பி யின் தோல்வி சிவராமின் “முடிவுக்கு” அத்திவாரமிட்டது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //புங்குடுதீவுக்காரரிடமும் குருநகர்க்காரரிடமிருந்தும் இதைவிட வேறெதை எதிர்பார்க்க முடியும்?//

    இது நாகரிகமற்ற எழுத்து சந்திரராஜா சொல்லவது போல் ஏதோ ஒரு பிரிவினைவாதம் செய்வதில் தயவுசெய்து கவனம் எடுக்காதீர்கள். இந்த வசனத்துக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்;
    நட்புடன் பல்லி;

    Reply
  • T Constantine
    T Constantine

    I do not recall meeting late Shanmugalingam in Eelamurasu office. But I have heard about him. Perhaps cannot put the name to the face. I was one of the first appointee to Eelamurasu. I still have my official Eelmurasu ID card and also the appointment letter signed by Mr S Thiruchelvam. I wrote articles in Eelamurausu from its first day of publication on my own name and I still have the copies. Soon after the murder of Mr S Thiruchelvam’s son I wrote several articles regarding this murder and I still have the copies. Articles were published in Tamil Times (London) and Daily News (Sri Lanka). Therefore it’s stupid to say that I don’t know what I am taking about.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //NANTHA on May 2, 2010 7:38 pm
    யாழ்ப்பாணத்தில் “ஈழமுரசு” பத்திரிகையின் அலுவலக நிருபரான ஐ.சண்முகலிங்கம் கடத்தி செல்லப்பட்டு புலிகளால் கொலை செய்யப்பட்டார். பின்னர் அதே ஈழமுரசு பத்திரிகையின் உரிமையாளர் மயில் அமிர்தலிங்கமும் கொல்லப்பட்டார்.

    T Jeyabalan on May 4, 2010 3:28 pm
    ஈழமுரசு நிருபர் மற்றும் உரிமையாளர் கொலை பற்றி அப்பத்திரிகையில் நிருபராக இருந்த கொன்ஸ்ரன்ரைன் அறிந்திருப்பார் என நினைக்கின்றேன்.

    NANTHA on May 5, 2010 7:09 am
    சண்முகலிங்கம் என்ற நிருபரைத் தெரியாமல் கொன்ஸ்டன்டையின் இருந்தார் என்றால் அவரது கதை நம்ப முடியாத கதை. ஈழநாடு பத்திரிகையில் அலுவலக நிருபராக இருந்த சண்முகலிங்கம் பின்னர்( திருச்செல்வம் துரத்தப்பட்ட பின்னர்) ஈழமுரசு பத்திரிகையின் அலுவலக நிருபராக இருந்தவர். ஈழமுரசு பத்திரிக்கை அலுவலகத்துக்குத் தினமும் வந்து போன ஐ.சண்முகலிங்கத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

    ஜெயபாலனின் கூற்றுப்படி கொன்ஸ்டன்டையின் திருச்செல்வத்தின் கதையையே தப்பாக எழுதியிருக்கிறார்.

    இந்த கொன்ஸ்டன்டையின் திருச்செல்வத்தோடு ஓடிப்போன ஆட்களில் ஒருவராக இருக்க வேண்டும். ஏனென்றால் ஈழமுரசின் இறுதிவரை இருந்த எனக்கு “கொன்ஸ்டன்டையின்” என்ற பெயரில் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை!

    T Constantine on May 12, 2010 9:56 am
    I do not recall meeting late Shanmugalingam in Eelamurasu office. But I have heard about him. Perhaps cannot put the name to the face. I was one of the first appointee to Eelamurasu. I still have my official Eelmurasu ID card and also the appointment letter signed by Mr S Thiruchelvam. I wrote articles in Eelamurausu from its first day of publication on my own name and I still have the copies. Soon after the murder of Mr S Thiruchelvam’s son I wrote several articles regarding this murder and I still have the copies. Articles were published in Tamil Times (London) and Daily News (Sri Lanka). Therefore it’s stupid to say that I don’t know what I am taking about.

    T Jeyabalan on May 11, 2010 10:00 am
    இப்பகுதியில் பல்வேறு புதிய விடயங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னூட்டகளத்தின் மிக முக்கிய அம்சம் பல்வேறு மூலைகளிலும் மூளைகளிலும் மறைந்துள்ள தகவல்களைப் பொதுத் தளத்திற்கு கொண்டுவருவது. ஆனால் அவற்றின் உண்மைத் தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவது கருத்தினைப் பதிவு செய்பவருடைய பொறுப்பும் கூட. தயவு செய்து கருத்தாளர்கள் அதனைக் கவனத்திற்கு எடுக்கவும்.//

    நந்தா பல்லி மற்றும் கருத்தாளர்கள் உங்கள் தகவலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தி உள்ளனர். கொன்ஸ்ரன்ரைன் தன்னிடம் ஆதாரங்கள் கைவசம் உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். தயவு செய்து உங்கள் தகவலின் நம்பகத்தன்மையைத் தெளிவுபடுத்தவும்.

    த ஜெயபாலன்

    Reply
  • NANTHA
    NANTHA

    ஜெயபாலன்:
    ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குவது நிர்வாகமே தவிர பத்திரிகை ஆசிரியர் அல்ல. கொன்ச்டன்டய்யின் அதிலேயே தனது பொய் கூறுகிறார்.

    திருச்செல்வம் ஈழமுரசு பத்திரிகையின் உரிமையாளருமல்ல பங்காளியுமல்ல.

    திருச்செல்வத்தின் மகன் கொல்லப்பட்ட காலத்தில் ஈழமுரசு என்று ஒரு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் வெளி வரவில்லை. அப்படியிருக்க கொன்ச்டன்டயின் எந்த “ஈழமுரசில்” எழுதினார் என்பது புரியவில்லை.

    தற்போது வெளினாடுகளில் பிரசுரிக்கப்படும் ஈழ முரசுக்கும் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழ முரசுக்கும் எது வித சம்பந்தமும் கிடையாது. எனவே கொன்ஸ்டன்டயின் “எந்த” ஈழமுரசில் எழுதினார் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

    ஐ.சண்முகலிங்கத்தை தெரியவில்லை என்று கூறும் இவர் கண்டிப்பாக யாழ் பத்திரிகை எதனுடனும் தொடர்பு இல்லாதவர் என்ரே எண்ணுகிறேன்.

    அவரிடம் “ஈழமுரசு” அடையாள அட்டை உள்ளதாக இருந்தால் அதனை ஜெயபாலன் பிரசுரிப்பது நல்லது. ஏனென்றால் அந்த நாளில் “ஈழமுரசு” நிர்வாகம் யாருக்கும் அடையாள அட்டைகள் வழங்கவில்லை.

    Reply