சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது

Balendra_Kலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று இன்று (யூலை 22 2010) சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. கூத்துப்பட்டறை மூன்றாம் அரங்கு என்ற இரு அரங்கியல் அமைப்புகளின் அனுசரணையோடு இம்மேடையேற்றம் இடம்பெற்றதாக அவைக்காற்றுக்கழகக் கலைஞர் வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

250 பேர் வரை இவ்வரங்க நிகழ்வை காண வந்திருந்தனர். தமிழக நாடகக்கலை மற்றும் கலைஇலக்கிய தளங்களில் அறியப்பட்டவர்களான ந முத்துசாமி இந்திரா பார்த்தசாரதி ஞானி ரங்கராஜன் பாரதிமணி சதானந்த மேனன் ரி அண்ணாமலை பிரசன்னா ராமசாமி புரசை கண்ணப்பகாசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் முன்னாள் கூத்துப்பட்டறை மாணவர்களாக இருந்து சினிமாவுக்குள் அறியப்பட்டுள்ள பசுபதி கலைவாணி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரங்கியல் தொடர்பான தம் தேடலுக்காக சென்னை சென்றிருந்த தமிழ் அவைக்காற்றுக்கழகம் அங்குள்ளவர்களின் ஏற்பாட்டில் இம்மேடையெற்றங்களை மேற்கொண்டனர். மூன்றாம் அரங்கு குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நாடகங்களை மேடையேற்றுவதற்கான சகல ஒத்துழைப்பையும் வழங்கியதாகவும் அவர்களது நட்பு தாங்கள் தங்கள் ஊரிலேயே நாடகத்தை மேடையேற்றுவது போன்ற உணர்வையூட்டியதாகவும் வாசுதேவன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கலைப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இப்பயணம் உதவியுள்ளதாகவும் வாசுதேவன் தெரிவித்தார். க பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா மனோ வாசுதேவன் ஆகியோர் அடங்கிய தமிழ் அவைக்காற்றுக்கழகக் குழுவினரே சென்னை சென்றிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • maran
    maran

    பாலேந்திராவிற்கு எதிராக குரல் கொடுத்தோர் இன்னமும் வட்டத்தை விட்டு வெளியேவராமல் கூண்டுக்குள் உள்ளனர். பாலேந்திரா எங்கோ சென்று விட்டார்.

    Reply
  • Kumar
    Kumar

    ஈழத்தவரின் கலை இலக்கிய முயற்சிகளை தமிழகம் வியந்து நோக்கும் காலம் விரைவில் புலம்பெயர் தமிழர்களினால் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பாராட்டபட வேண்டியது மட்டுமல்ல மகிழ்ச்சி கொள்ள வேண்டியதும்;
    ஈழதமிழனாய் பல்லியின் வாழ்த்துக்கள்.

    Reply