தென் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ். செயலகத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியொன்றின் மூலம தொழில்உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இவ்வேலைவாய்ப்ப வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27, 28, 29ம் திகதிகளில் மாவட்ட திட்டமிடல் செயலகத்தினால் 145 மாணவர்களுக்கு ஆடைத் தொழிற்சாலைத்துறை சம்பந்தமான செயலமர்வு நடத்தப்பட்டது. இவர்களில் 70 பேருக்கே தற்போது இவ்வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான உணவு, தங்குமிடவசதிகள் என்பன குறித்த நிறுவனங்களால் வழங்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.