‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.

SpecialCamp_Detainee இக்கடிதம் தேசம்நெற் இணையத்தின் கருத்தக்களம் பகுதியில் பதிவிடப்பட்டு உள்ளது. அகதி என்ற பெயரில் இக்கடிதத்தைப் பதிவிட்டுள்ள கருத்தாளர் தான் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வாழ்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இக்கருத்தாளர் பற்றிய எவ்வித விபரமும் தேசம்நெற் ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் வெளிக்கொண்டுவர விரும்பும் சிறப்புமுகாம் – சிறைமுகாம் அவலம் கருதி இக்கடிதத்தை தேசம்நெற் பிரசுரிக்கிறது.

தமிழகத்தின் சிறப்புமுகாம்கள் பற்றி அம்முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையின் 16வது இதழில் – 2004 ஜனவரியில் ‘சிறப்புமுகாம் மிகப்பெரும் மனித உரிமைமீறல்’ என்ற தலைப்பில்ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதி இருந்தார்.

SpecialCamp_TN_S__Balachandran_Documentமேலும் துறையூர் சிறப்புமுகாமில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவா 1994 ஒக்ரோபர் 10ல் வழங்கிய சாட்சியம் தேசம் சஞ்சிகையின் இதழ் 18ல் 2004 மேயில் ‘நாம் புதைக்கப்படுபவர்கள் அல்ல விதைக்கப்படுபவர்கள் : கூண்டிலிருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.

இவற்றினை இன்னும் சில தினங்களில் மீள்பிரசுரம் செய்கிறோம்.

தேசம்நெற்.
._._._._._.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அப்பாவி அகதியின் இக் கடிதத்தை யாராவது இந்த “அருள” சகோதரர்களுக்கு அனுப்பி வைப்பார்களா?

சிறப்பு முகாம்
செங்கல்பட்டு
19.09.2010

மதிப்புக்குரிய அருள் சகோதரர்களே!

சதா நேரமும் ஈழத் தமிழனுக்காக மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உங்கள் மகிமை பற்றி தெரியாமல் “தமிழரங்கம்” ரயாகரனும் “தேசம்நெற்” ஜெயபாலனும் நீங்கள் யாரோ தமிழனைக் கடத்தி காசு சம்பாதிப்பதாக எழுதியதை அறிந்து கண்ணீர் வடித்தேன். உங்கள் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மனநோயாளிகள்”;. உங்கள் நண்பர் நாவலன் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மகிந்தவின் கைக்கூலிகள்”. எனவே அவர்கள் தவறுகளை மன்னித்து தொடர்ந்தும் எங்களுக்காக குரல் கொடுங்கள். எங்களுக்கு விமோசனம் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் அல்லவா! பாவம் ஈழத்தமிழன். அவன் இளிச்சவாயனாக இருக்கும்வரை உங்கள் போராட்டம்(!) தொடரட்டும்.

நீங்கள் ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறுவதையும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்வதையும் பொறுக்கமுடியாத ரயாகரனும் ஜெயபாலனும் நீங்கள் செய்த கடத்தலைக் கொச்சைப் படுத்துகின்றனர். நீங்கள் குறிப்பிட்டது போன்று உண்மையில் அவர்கள் மனநோயாளிகள்தான். ஏனெனில் நீங்கள் செய்த கடத்தல் பணி எந்தளவு பெரிய “புரட்சிப்பணி” என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமா? ஒரு புறத்தில் அரச கைக்கூலியான குகநாதனுடன் வியாபாரம். மறுபுறத்தில் புலிகளின் தலைவர் பாலசிங்கத்துடன் பேட்டி. அதற்கும் மேலாக முள்ளிவாயக்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த இந்திய அரசை எதிர்த்து பக்கம் பக்கமாக கட்டுரை. அதே மறுபுறத்தில் இந்த கொலைகளுக்கு உதவி புரிந்த கருனாநிதி அரசின் உதவியுடன் குகநாதனை கடத்தி பணம் பறிப்பு. உங்களின் இந்த பலே கில்லாடித்தனங்களை புரிந்துகொண்டு நாவலன் போல் மாக்சியத்தின் பேரால் இதை நியாயப்படுத்தாமல் இதனை தமிழ்மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்திய ரயாகரனும் ஜெயபாலனும் உண்மையிலே உங்கள் மொழியில் மனநோயாளிகள்தான்.

தமிழ்மக்கள் தொடர்ந்து போராடினால்தான் உங்கள் கல்லா நன்றாக நிரம்பும் என்ற சின்ன “லாஜிக்” கூட புரிந்து கொள்ள முடியாமல் “தமிழ்மக்கள் தொடர்ந்தும் தமிழீழத்திற்காக போராட வேண்டும்” என்று நீங்கள் (பணம் பெற்றுக் கொண்டு) எழுதிய கட்டுரையை சிலர் சீரியஸாக எடுத்துக்கொண்டு “இதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?” என்று கேட்கின்றனர். பாவம் சின்னப் பயல்கள். உங்கள் மகத்தான பங்களிப்புகள் தெரியாமல் புலம்புகின்றனர். அவர்களையும் மன்னித்துவிடுங்கள்.

முள்ளிவாயக்காலில் பிரபாகரனுக்கு பக்கத்தில் இருந்து முழங்கிய பீரங்கியில் இருந்தது நீங்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது.(இன்னும் பத்துவருடம் கழித்து நீங்கள் எழுதப்போகும் கதையில் உள்ள இந்த விடயம் எனக்கு எப்படி தெரிந்தது என்று அச்சரியப்பட வேண்டாம். எல்லாம் “இனியொரு”வில் வெளியான உங்களின் சில கட்டுரைகளைப் படித்த கோளாறுதான் இது.)

அதைவிட ஈழத்தமிழனுக்காக தன்னுயிரை எரித்த முத்துக்குமரனுக்கு மண்ணெண்ணையும் தீப்பெட்டியும் வாங்கிக் கொடுத்த உங்கள் மகத்தான பங்களிப்பு இவர்களுக்கு தெரிய வாயப்பில்லை. (அது சரி தமிழனுக்காக உயிரைவிட நீங்கள் என்ன முத்துக்குமார் போன்று முட்டாள் அல்லவே. நீங்கள் தமிழனை வைத்துப் பிழைக்கும் புத்திசாலிக் கூட்டம் அல்லவா.)

நீங்களும் தானும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிவிட்டதாக உங்கள் நண்பர் நாவலன் கூறுகிறார். அது உண்மையாயின் அதில் எத்தனை கட்டுரை தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம் கொடுமைகள் குறித்து எழுதப்பட்டன என்பதை கொஞ்சம் தெரிவியுங்கள். ஏனெனில் நீங்கள் மகிந்த கொடுமைகள் குறித்து மட்டும்தான் எழுதுவீர்கள். இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைகளுக்கும் பிடிக்காத விடயங்களை எழுதமாட்டீர்கள் என இங்கு சிலர் கூறுகின்றனர். அது உண்மையா சகோதரர்களே?

யுத்தம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் புலி எனக் குறறம்சாட்டி கைது செய்து எந்தவித விசாரணையும் இன்றி பல வருடங்களாக இந்த சிறப்பு முகாமில் பூட்டிவைத்து சித்திரவதை செய்கிறது இந்திய மத்திய மாநில அரசுகள். வன்னியில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை மகிந்த அரசு விடுதலை செய்ய வேண்டும் என எழுதியும் போராடியும் வரும் நீங்கள் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் அப்பாவி தமிழ் அகதிகளை அடைத்துவைத்து சித்திரவதை செய்யும் கருனாநிதி அரசுக்கு எதிராக ஏன் எழுதவும் போராடவும் தயங்குகிறீர்கள்?

நீங்கள் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் ஒரு கட்டுரை கூட இந்த சிறப்புமுகாம் அகதிகள் பற்றி இல்லையே. அது ஏன்?

குகநாதனுக்கு எதிராக உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்த நீங்கள் அதே உயர்நீதிமன்றில் இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்காக ஒரு மனு தாக்கல் செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

குகநாதனுக்கு எதிராக பல வழக்கறிஞர்கள் பொலிஸ்கமிசனர் அலுவலகம் வந்து போராடியதாக அறிகிறேன். அது உண்மையாயின் இந்த வழக்கறிஞர் கூட்டத்தை பயன்படுத்தி இந்த சிறப்புமுகாம் அகதிகளுக்காக ஒரு முறை பொலிஸ்கமிசனர் அலுவலகம் செல்வீர்களா?

இவ்வாறு எல்லாம் கேள்வி கேட்டு உங்களை தர்மசங்கடப் படுத்துவது என் நோக்கம் அல்ல. மாறாக நீங்கள் உண்மையிலே ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க விரும்பினால் முதலில் உங்கள் நாட்டில் உங்க மத்திய மாநில அரசுகள் அகதிகளுக்கு செய்யும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுங்கள். சிறப்பு முகாம் என்னும் பெயரில் நடத்தும் சித்திரவதை முகாமை மூட வழி செய்யுங்கள். அதன்பின் மகிந்த அரசின் கொடுமைகளை தாராளமாக கண்டியுங்கள். அப்பதான் உங்களைத் தமிழ்மக்கள் நம்புவார்கள். இல்லையேல் தமிழ்மக்களின் துயரத்தில் காசு சம்பாதிக்கும் ஈனப்பிறவிகள் என்று வரலாறு உங்களைக் கூறும்.

இப்படிக்கு

உங்களின் மகத்தான போராட்டத்தால் ஈழம் கிடைக்குதோ இல்லையோ குறைந்தது சிறப்புமுகாமாவது மூடப்பட வழிபிறக்கும் என அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு அகதி.
சிறப்பு முகாம் – செங்கல்பட்டு.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 Comments

  • மாயா
    மாயா

    //நீங்களும் தானும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிவிட்டதாக உங்கள் நண்பர் நாவலன் கூறுகிறார். அது உண்மையாயின் அதில் எத்தனை கட்டுரை தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம் கொடுமைகள் குறித்து எழுதப்பட்டன என்பதை கொஞ்சம் தெரிவியுங்கள். ஏனெனில் நீங்கள் மகிந்த கொடுமைகள் குறித்து மட்டும்தான் எழுதுவீர்கள். இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைகளுக்கும் பிடிக்காத விடயங்களை எழுதமாட்டீர்கள் என இங்கு சிலர் கூறுகின்றனர். அது உண்மையா சகோதரர்களே?//

    இந்த அகதியின் கேள்விக்கு இவர்கள் விடை கொடுப்பார்களா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு அகதி.//
    நண்பரே நாம் எல்லாம் அகதிகள்தான் அதில் சிலர் பணக்கார அகதியாகவும் சிலர் ஏழை அகதியாகவும் வாழுகிறோம்; அதில் அருள் சகோதரர் கவனமெல்லாம் பணக்கார அகதிகளின் தொடர்புடையதே? உன்மையில் நான் இன்று இப்படியான ஒரு கேள்வியுடன் ஒரு பின்னோட்டம் இட இருந்தேன்(இதன் முன்பு சங்கரியர் தோழர் கூட்டமைப்பு என பலரிடம் இதே தேச மூலம் இதை கேட்டேன்) ஆனால் உனர்வுடன் தாங்கள் கேட்டதால் மகிழ்ச்சி. இதுக்கான விடை இனிஒருவில் இனி வரலாம்; வராத பட்சத்தில் இவர்கள் மீது இன்னும்பல கட்டுரைகள் வரலாம் என்பது உறுதி;

    Reply
  • thavalingam
    thavalingam

    “தேசம்நெற்” ஆசிரியர் ஜெயபாலனும் “தமிழரங்கம்” ஆசிரியர் ரயாகரனும் வேண்டுமென்றே “அருள்” சகோதரர்கள் மீது அவதூறு செய்கிறார்கள் என்றே நான் கருதியிருந்தேன்.ஆனால் இந்த அகதியின் கடிதம் படித்த பின்பு இந்த “அருள்” சகோதரர்களின் போலி முகத்தை புரிந்துகொண்டேன். இனியாவது இந்த அப்பாவி அகதிகளுக்கு விடிவு கிடைக்கட்டும்.”தேசம் நெற்” முயற்சிகள் இதற்கு வழி சமைக்கட்டும்.

    Reply
  • Sudha
    Sudha

    அருள் பிரதர்சில் மூத்தவர் சன் தொலைக்காட்சியிலும் இளையவர் குங்குமம் பத்திரிகையிலும் வேலை செய்கிறார்கள். இவை கருணாநிதியின் குடும்ப நிறுவனங்கள். அங்கு வேலை செய்துகொண்டே இவர்கள் கருணாநிதிய எதிர்ப்பது போலவும் இலங்கைத் தமிழருக்காக உயிரைக் கொடுப்பது போலவும் நாடகம் நடத்துகிறார்கள்.அதையும் சில இளிச்சவாய்கள் நம்புகின்றன. கருணாநிதியின் பணியாளர்களுடன் மாக்சிய நாவலன் கூட்டு. இப்பவே கண்ணைக் கட்டுதே.

    Reply
  • மாயா
    மாயா

    // Sudha on September 19, 2010 11:17 pm
    அருள் பிரதர்சில் மூத்தவர் சன் தொலைக்காட்சியிலும் இளையவர் குங்குமம் பத்திரிகையிலும் வேலை செய்கிறார்கள். இவை கருணாநிதியின் குடும்ப நிறுவனங்கள். அங்கு வேலை செய்துகொண்டே இவர்கள் கருணாநிதிய எதிர்ப்பது போலவும் இலங்கைத் தமிழருக்காக உயிரைக் கொடுப்பது போலவும் நாடகம் நடத்துகிறார்கள்.//

    இவை வியாபார நோக்கமானவை. இப்படியான பொய்க் கட்டுரைகள் மூலமே இவர்களால் காசு பார்க்க முடியும். அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்.

    Reply
  • ஆதவன் தீட்சண்யா
    ஆதவன் தீட்சண்யா

    இவர்களைப் பொறுத்தவரை, ஈழத்திலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் எல்லாம் களத்திலே நின்று போராடாமல் புறமுதுகிட்டு ஓடிவந்தவர்கள்(ஒன்றுமில்லாமல் வந்து இங்கு அல்லாடுகிற இவர்களை ஆதரித்து என்ன பயன்?). ஆனால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போனவர்கள் புலத்திலே இல்லாவிட்டாலும் களத்திலே இருப்பவர்கள் ( இப்படி சொன்னால்தான் டாலரும் பவுண்ட்சும் வரும்.) இந்தியாவிலுள்ள 85,000 ஏதிலிகளைப் பற்றி பேசினால் இங்குள்ள ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அட்டைக்கத்தியை ஆகாயத்தில் சுழற்றி வீரனென்று பேரெடுக்க ஆயிரம் வழிகள் இருக்க எதற்கு வம்பு?

    மலேசியாவில் இருக்கிற வழக்கறிஞர் சகோதரர்கள் இருவர் இந்தியாவிலிருந்து வலுத்தக் கைகளை வரவழைத்து எல்லாவற்றையும் கறந்துகொண்ட பிறகு கொன்று எரித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள செய்தி இப்போது ஊடகங்களில் பரபரப்பாக உள்ளது. அவர்களோடு ஒப்பிடும்போது பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஆளை உயிரோடு அனுப்பிய அருள் பிரதர்ஸ் இரக்கவான்கள் என்று கொண்டாடப்பட வேண்டியவர்கள். வெளியான வாக்குமூலங்களிலிருந்து, இவர்கள் கேட்ட பணயத்தொகை இந்தியாவிற்கு வெளியே இருக்கிற இவர்களையொத்த கொள்கைக்குன்றுகளிடம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனில் அந்த 15 லட்சம் இந்தியாவுக்குள் எப்படி வந்து இவர்கள் கைக்கு சேர்ந்தது? சட்டப்பூர்வமாகவா கள்ளத்தனமாக ஹவாலா வழியிலா? திவாலா பிரதர்ஸ் ஹவாலா பிரதர்ஸ் ஆகிவிட்டார்களா?

    தான் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் ஊர் உலகத்தார் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிற அருள் பிரதர்ஸில் ஒரு பிரதரான அருள் எழிலன் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இங்கு எதுவுமே நடக்காதது போல நடுக்கடல் தனிக்கப்பல் என்று எழுதி நழுவிக்கொண்டிருக்கிறார். மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களை விலைபோனவர்கள் என்று அவதூறு பேசித்திரிந்த இவர்கள் எப்படி கூலிக்கு மாறடித்துக் கொண்டிருந்தனர், என்னென்ன ஆதாயங்களை அடைந்தார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஆனால் கருணாநிதி குடும்பத்துடனான தமது தொடர்புகளின் செல்வாக்கில் இப்படி எத்தனை பேரை பிடித்துவைத்து கறந்திருக்கிறார்கள் என்பது இனிதான் வெளியாக வேண்டும்.

    -ஆதவன் தீட்சண்யா

    Reply
  • Sudha
    Sudha

    Welden said, Adhavan Dheedchanya!

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    D . அருள் எழிலன் என்ற, திருவாளர். நாவலன் அவர்களின் கூட்டாளி, வினவு தளத்திலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆலை இல்லா ஊரில் இலுப்பம் பூ சர்கரையாம், என்பது போல; குறிப்பாக இலங்கை பிரச்னை பற்றி வெளுத்து வாங்கியுள்ளார். இவர் கச்சதீவும் மீன் பிடியும் பற்றி வினவுவில் எழுதிய கட்டுரை கீழைகாற்று பதிப்பகத்தால் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை நான் எழுதுவதன் அர்தம் வினவு தளம் சுய விமர்சனம் செய்ய வேண்டுமென்பதல்ல. ஆனல் எதிர்காலத்தில் அருள் எழிலன், திருவாளர். நாவலன் போன்ற அறிவாளிகளை வைக்க வேண்டிய இடத்தில வினவுவும், இந்திய இடது சாரிகளும் வைப்பார்கள் என எதிர் பார்கிறேன்.

    Reply
  • BC
    BC

    சிறி வைஸ்ணவியின் எதிர்பார்ப்பு நிறைவேற போவதில்லை. வினவுவின் நேர்மை!! தெரிந்த விடயம். இலங்கை பற்றி வெளுத்து கட்டி எழுதும் கட்டுரைகள் வினவுவின் தேவை.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    ஈழப்போராட்டத்தை தமது சுய நலனுக்காகவும் தமது அரசியல்லாபத்துக்காகவும் தமிழ்நாட்டு இந்திய அரசியல்வாதிகள் பயன்படுத்துவார்கள் என்றும் தமிழகத்தில் இந்தியாவிலுள்ள முற்போக்கு மற்றும் சிங்கள முற்போக்கு சக்திகளினுடனே கூட்டு இருக்க வேண்டும் என 1980 களில் நிறையவே எல்லா அமைப்பினரும் தாராளமாக பேசியுள்ளோம் இன்றைய கருத்துக்களுடன் இந்த கருத்துக்களத்தில் கருத்து பகிரும் நண்பர்கள் தோழர்களும் அறிவார்கள் தானே!!

    Reply
  • BC
    BC

    தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சனையை தங்களது லாபத்திற்காக பயன்படுத்துபவர்களில் அரசியல்வாதிகளும் தாங்கள் முற்போக்கானவர்கள் என்று சொல்லி கொள்வோரும் ஒரே மாதிரியாகவே நடக்கின்றனர்.

    Reply
  • மகஇக
    மகஇக

    இரயாகரனின் குற்றச்சாட்டு: பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!

    இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்), சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி, தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன், குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன், அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற், தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் தொடர்ந்தன.

    “அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும், “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோ, அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.

    இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும் இரயாகரன், குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர், அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதி, தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமே, “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.

    “நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும், ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத, அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.

    இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி, அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி, அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி, அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே, டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர், பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.

    தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர், “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.

    எங்களைப் பொருத்தவரை, வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

    புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை. இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.

    அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.

    இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி, அதனைத் தொடர்ந்து இதில் வினவு, மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே, நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

    இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில், ஆவணங்கள், சாட்சியங்கள், சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு, அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன், அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும், அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.

    இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.

    அதே நேரத்தில், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை, அவருடைய விசாரணை முறை, விவாத முறை, தீர்ப்பு வழங்கும் முறை, குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம். இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால், அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.

    குகநாதனிடம் கேட்பதற்கும், குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.

    அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும், கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.

    ஆகவே, இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது, பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு, முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

    நாவலன், எழிலன், செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல், பணம் பறித்தல், மஃபியா வேலை, மாமா வேலை” என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.

    ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன், எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.

    நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும், குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.

    எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.

    இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும், ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.

    குற்றம் சாட்டுகின்ற இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன், செழியன், எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ, நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள், பதில்கள், குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள், மகஇக வின் மீது சேறடித்தவர்கள், தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.

    குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா, தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன, எவ்வளவு பணம் கொடுத்தார், யாரிடம் வாங்கிக் கொடுத்தார், இதில் நாவலனின் பாத்திரம் என்ன, குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன, அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார், குகநாதன்-புலிகள், குகநாதன்-டக்ளஸ், குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன, 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து, நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.

    இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.

    விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள், உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.

    தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும், சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.

    இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவே, குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

    “குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.

    பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    நாவலன், அருள் எழிலன் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளினால் எங்கள் மீது விழுந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகத்தான் இப்படி ஒரு விசாரணையை முன்மொழிகிறோம் என்று யாரும் தவறாக கருதிக் கொள்ளவேண்டாம். மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.

    இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கி நிற்பது சரியல்ல. எனவே, தலையிடுகிறோம். ஒருவேளை எங்கள் மதிப்பீடு தவறு என்று விசாரணையில் தெரிய வருமானால், எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை. எனவேதான், தைரியமாகத் தலையிடுகிறோம். எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.

    இதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் முன்வைக்கும் வழிமுறை. குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் இந்த விசாரணையில் பங்கு பெறுவது குறித்த தங்களது பதிலை தம் இணையதளத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இணையத்தில் புழங்கும் மகஇக வின் ஆதரவாளர்கள், பதிவர்கள் யாரும் “நல்லெண்ண முயற்சி” என்று கருதிக் கொண்டு, இரயாகரன், ஜெயபாலன், நாவலன் போன்ற இப்பிரச்சினையில் தொடர்புள்ள யாருடனும் இது குறித்துத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுருத்துகிறோம்.

    இவண்
    மக்கள் கலை இலக்கியக் கழகம்,
    தமிழ்நாடு
    நன்றி வினவு டொட்காம்

    Reply
  • மாயா
    மாயா

    சொதப்பிட்டதா தோணுது. அம்சா , லண்டன் வர்றதுக்கு முன்னாடியே, புலிகளுக்கு எதிரான இணையங்கள் இருந்து வந்துச்சு.. அதை நீங்க யாரும் காணல்ல. இலங்கை பிரச்சனையில , வயிறு வளர்த்த ரொம்ப பேரில் , இந்திய அரசியல்வாதிகள் அதிகம். ஊடகவியளார்களும் அதிகம். ஊடகங்களும் அதிகம். உண்மையை எழுதாம, யார் யாரோ சொன்னதையெல்லாம் எழுதி படத்துக்கு கதை பண்ணுறது மாதிரி , காசு பார்த்தீங்க. உங்க பக்கங்களை பார்க்க ஆள் தேடிக்கிட்டீங்க. வேற எதுவும் தெரியாது. நீங்க யாரும் அங்க ( ஈழத்தில) என்ன நடக்குதென்ணே புரிஞ்சுக்கல்ல. இந்தியாவை மதிக்கிறோம். இந்திய மக்களை மதிக்கிறோம். அதுக்காக தவறான ஒரு செயலுக்காக தூபம் போட்டவர்களை மன்னிக்கவே முடியாது. பொய்களை எழுதி , எழுதி , அந்த மக்களை படு குழியில தள்ளீட்டீங்க. இதை நீங்க உணர, இன்னும் பல வருசம் ஆகும்.

    உதாரணத்துக்கு இந்த கட்டுரை சற்று கண் திறக்க வைக்கலாம். அப்படி உங்க கண் திறக்குமானால்……….மேலே படிங்க. உங்க ஊர்க்காரர் எழுதியிருக்கார்: –

    //கடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

    அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர். -idlyvadai.blogspot.com/2010/09/3.html//

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த விடயத்தில் தணிக்கை இல்லாமல் பல்லியை பின்னோட்டம் இட தேசம் இடம் கொடுக்குமானால் நாவலன் செழியன் என்ன அவர்களுக்கு வக்காளாத்து வாங்கும் யாரையும் எழுத்து மூலம் எதிர்கொள்ள தயாராக பல்லி இருக்கிறேன்; எனது வாதம் கொடுக்கல் வாங்கல் அல்ல கடத்தல் அதுவும் ஒரு நாட்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பொலிஸ்துனையுடன் கடத்தல்: அதுக்கு ஆலோசனை தான் மட்டுமே பொதுவுடமை வாதி என இரவு பகலாய் பலரது தூக்கத்தை கெடுக்கும் நாவலன்; இது இரண்டுமே தவறு என்பதுதான் என் வாதம் இதில் எந்த கொம்பன் வந்தாலும் அவர்களை மக்கள் முன் அடையாள படுத்துவோம்;

    Reply
  • கடுப்பாகிப்போனவன்
    கடுப்பாகிப்போனவன்

    ஐயா பல்லி, அதான் நேர வரசொல்லி சொல்லிட்டாங்க இல்ல, அங்க வந்து அடையாளப்படுத்துங்க, கூடவே தேசம்நெற் ஓனர், டான் டீவி குகநாதன், தமிழரங்கம் இரயாகரன் எல்லாரையும் கூட்டியாங்க… ஏன்னா குற்றம் சாட்டப்பட்டவர்களே வெளிப்படையா விவாதிக்க தயார்னு சொன்னப்புறம், பல்லி உங்கள மாதிரி பெரிய மனுஷாள் ஓளிஞ்சிருந்து பேசுனா இனிமே அது பச்சை பொய்யின்னும், நீங்க ஒரு கோழைன்னும் நெனப்போம்…

    – கடுப்பாகிப்போனவன

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லிக்கு உதவியாய் பாம்பையும் சேர்த்து செம வாங்கு வாங்குகிறார்கள். ஏனப்பா பல்லி தேசத்தில்தான் எழுதுகிறேன், இங்கே வந்து பல்லியை திட்டலாமே, பல்லியும் பதிலுக்கு உங்களை திட்ட ஒரெ அமர்க்களமாய் இருக்குமே.. ஒருவர் கடத்துவார், இன்னொருவர் திட்டம் போட்டு கொடுப்பார், இவை வெளிவந்தவுடன் ஒரு தளம் அமைதிகாக்க ஏதோ கடனுக்காய் அமைதிபடையாய் நாட்டாண்மை பண்ண மிக சத்திவாய்ந்த தளம் ஒன்று வருமாம், இதில் தேசத்துக்கும் ஒரு விசாரனையாம்; என்ன இது சின்னபிள்ளை யாட்டம்; மஸூதி இடிப்பின் தீர்ப்புபோல் கடத்தலாம் ஆனால் கண்டுக்க கூடாது, அதுக்காய் உதவிய நாவலனை ஏதும் சொல்லபடாது காரணம் அவர் நாஆஅ வலர், அப்படிட்தான் இருக்கு சிலரது வாதம்; நாம் கேட்டது சிலருக்கு புரியவில்லை, எமக்கும் குகநாதனுக்கும் பிரச்சனையும் இல்லை; கொடுப்பனவும் இல்லை, அவரோடு கோட்டில் பேச வேண்டியதை ஏன் இருட்டில் பேசினீர்கள். இது தொடராதா?? இந்த போக்கில் நேரடி விசாரனைக்கு சென்னை வரட்டாம், பல்லி பாம்பை பாஸலில் அனுப்பட்டாம், பல்லி பாம்பு என்னும் பயம் இருக்கே அது போதும் நாம் பாஸலில் வர முடியாவிட்டாலும் ஈ மைலிலோ அல்லது ;;;;;;;;;; வந்து சேருவோம், முதலில் நாவலன் கூட்டணியை கூட்டிசெல்ல ரதம் அனுப்புங்கள்? சரி ரயாகரனையும் அழைப்பது குகநாதன் போல் கடத்தி காரியம் சாதிக்கதானே, இதுவும் நாவலன் நக்கலா??
    தொடரும் பல்லி;;;

    Reply
  • பல்லி
    பல்லி

    //அதான் நேர வரசொல்லி சொல்லிட்டாங்க இல்ல, அங்க வந்து அடையாளப்படுத்துங்க, கூடவே தேசம்நெற் ஓனர், டான் டீவி குகநாதன், தமிழரங்கம் இரயாகரன் எல்லாரையும் கூட்டியாங்க…//
    ஜயா,
    கடுப்பாகி போய் பல்லியை விடுப்பு பார்க்க அழைக்கும் கடுப்பாகி போனவரே வருவோம் ஆனா வரமாட்டோம் எழுத மாட்டோம் ஆனா எழுதுவோம்;

    முகம் பார்த்து குறிசொல்ல வேண்டாம் குகநாதனை கடத்தினீர்களா? இல்லையா?? குகனாதனின் மனவியை நாவலன் மிரட்டினாரா இல்லையா? இவை இல்லை என ஆம்; அல்லது இல்லை என ஏதாவது ஒரு ஊடகத்தில் விடை சொல்லிபோட்டு அடுத்த கடத்தலுக்கு தயராகுங்கள். மிக விரைவில் அதிமுக வினருக்கு இந்த செய்தி ஒரு அவலாக அமையும், காரணம் கமிஸ்னர் ஜெயராம் மீது அவர்களுக்கு அப்படி ஒரு அன்பு ஆகையால் இந்த வில்லுபாட்டு காரரின் நேரடி விசாரனை தேவையில்லை; நாவலன் நிர்வாண அரசியல்வாதி என்பது குகநாதனின் மனைவியின் ஒலி நாடாவை தன்னை பாதுகாக்க வெளியிட்டதில் இருந்தே நிருபணமாகி மாதம் ஒன்றாகி விட்டது
    பல்லி தொடரும்;

    Reply
  • கடுப்பாகிப்போனவன்
    கடுப்பாகிப்போனவன்

    மேலே இருக்கும் இரண்டு பல்லிகளும் பேசுவதை பார்தா சிப்பு சிப்பா வருது கடத்தினாரு, திட்டம் போட்டாருன்னுட்டு இவரு பின்னூட்ட பெட்டீலேருந்து பல்லீன்ற பேருல சொல்லுவாறாம், ஆனா நேர்ல வாய்யா வக்கீல் வச்சு பேசுவோம் எழிலன்/நாவலன் கடத்தியிருந்தா தூக்கி உள்ள போடுவோம்னு சொன்னா, இல்ல இல்ல நீங்க பின்னூட்ட பெட்டீல தான் பதில் போடனும்னு சொல்லுவாராம்.. குற்றம் ஆள கடத்துனதா பின்னூட்டத்த கடத்துனதா? தப்புசெஞ்சதா சொன்ன நீங்க சொன்ன ஆளே வலிய வந்து மாட்டும் போது வந்து குற்றச்சாட்டை நிரூபிப்பீங்களா அத விட்டுப்பிட்டு இப்படி பம்முறீங்களே…

    /சரி ரயாகரனையும் அழைப்பது குகநாதன் போல் கடத்தி காரியம் சாதிக்கதானே //

    மக்களே இதைவிட ஒரு வேடிக்கையான வரியை யாராவது வாசிக்க முடியுமா? வெளிப்படையா உலகறிய அறிவிச்சு வாங்க சார் வாங்க சார்னு கூவி கூவி கூப்பிடறாங்க, மொத்தத்தையும் வீடியோ எடுத்திடலாம்கிறாங்க, வேணுன்னா வக்கீலும் வச்சு தாறோங்கராங்க அப்புறம் எப்படி இந்த மாதிரியெல்லாம் கேட்கதோணுது… விட்டா புலிகள் சித்திரவதை கூடாரத்திலிருந்தே தப்பி வந்த இராயவுக்கு லாலிபாப் கொடுத்து துக்கிட்டு போயிடுவாங்கன்னு சொல்லுவீங்க போலிருக்கு…! ஹையோ ஹையோ!

    – கடுப்பாகிப்போனவன்

    Reply
  • பல்லி
    பல்லி

    //மக்களே இதைவிட ஒரு வேடிக்கையான வரியை யாராவது வாசிக்க முடியுமா? வெளிப்படையா உலகறிய அறிவிச்சு வாங்க சார் வாங்க சார்னு கூவி கூவி கூப்பிடறாங்க,//
    வேடிக்கை அதுவே பல்லியின் மூலதனம்;
    சரி கடுப்பு வீடியோ எடுக்கலாம், உங்கள் ஆசைபோல் எல்லாம் நடக்கட்டும், இந்த வீடியோ காட்சியில் கமிஸ்னர் ஜெயராமும் கலந்து கொள்வாரா என கேட்டு சொல்லுங்கோ, அதோடை அலுப்பை பாராமல் எடுத்த (கடத்தலின் போது) வீடியோவை தரும்படி அல்லது ஒரு ஊடகத்தில் போடும்படி பலதடவை கேட்டும் அது வராதபோது மீண்டும் ஒரு வீடியோவா??

    //பல்லீன்ற பேருல சொல்லுவாறாம்// சரி கில்லி என வைச்சுங்குங்கோ எனக்கு அதில் எந்த தடையும் கிடையாது;

    //ஆனா நேர்ல வாய்யா வக்கீல் வச்சு பேசுவோம்//
    அதை உங்க அன்பு சகோதரர்கள் செய்திருந்தால் இன்று பல்லிக்கு கடுப்பு பின்னோட்டம் எழுத நேரிட்டிருக்காது, அத்துடன் இப்போ எல்லாம் கடத்தல் பண பறிப்புக்கு கூட சென்னையில் வக்கில் வந்து பேசும் அளவுக்கு தமிழக வக்கில் மலிவாக போய் விட்டார்களா??

    //எழிலன்/நாவலன் கடத்தியிருந்தா தூக்கி உள்ள போடுவோம்னு சொன்னா,//
    என்ன சமூக அக்கறை தொடர்க உங்க வாதத்தை;

    //இல்ல இல்ல நீங்க பின்னூட்ட பெட்டீல தான் பதில் போடனும்னு சொல்லுவாராம்.. //
    இதுவே உங்கள் கடத்தல் கூட்டத்துக்கு அதிகம்;

    //குற்றம் ஆள கடத்துனதா பின்னூட்டத்த கடத்துனதா?//
    அதுக்கான விடையை கமிஸ்னர் ஜெயராமன் மிகவிரைவில் சொல்லுவார், கடுப்பு தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குகிறது, புரியுமே

    //தப்புசெஞ்சதா சொன்ன நீங்க சொன்ன ஆளே வலிய வந்து மாட்டும் போது //
    அதுதான் பேனாவின் பலம்; அது உங்க கட்சிகாரருக்கும் தெரியுமே; இது எங்கே போய் முடியுமென;

    ..// குற்றச்சாட்டை நிரூபிப்பீங்களா //
    குற்றத்தை அவர்கள் தாங்களே செய்ததாக சொல்லி அதுக்கு ஆதாரமாய் ஒருவர் வீடியோவையும் மற்றவர் ஆடியோவையொ காட்டி மாட்டி விட்டார்கள். இது கடுப்பின் கண்டுபிடிப்பு அல்ல;

    //அத விட்டுப்பிட்டு இப்படி பம்முறீங்களே…//
    நாவலனிடம் சொல்லுங்க எல்லோரையும் குகநாதனாய் எடைபோட வேண்டாமென;

    // விட்டா புலிகள் சித்திரவதை கூடாரத்திலிருந்தே தப்பி வந்த இராயவுக்கு//
    ஜயோ அதையும் அறிந்தவர்தான் இந்த கடத்தலின் சூத்திரதாரி;

    //ஹையோ ஹையோ! //
    இது மட்டுமே உங்களுக்கு இப்போதைக்கு போதும்; அதைவிட்டு பல்லியை பிடித்து கொடுக்கும் மாமா வேலை வேண்டாமே;
    பல்லி தொடரும்

    Reply
  • aathav
    aathav

    ரயாகரனுக்கு சர்வதேச நீதிமன்றத்திலிருந்து பிடிவிறாந்து விட்டதுபோல் உள்ளது> ம.க.இ.கவின் பகிரங்க விசாரணைக்கான அழைப்பாணை! இந்த “இனியொரு” விசாரணைக்குள் ஏதோ கிடக்கென்று சிலர் இலவு காத்த கிளிகள் போல….! பஞ்சாய் பறக்கும் போதுதான் தெரியும்! இது வெறும் உரித்த வெங்காயமென!

    Reply
  • கடுப்பாகிப்போனவன்
    கடுப்பாகிப்போனவன்

    அன்புள்ள பல்லி,
    அஞ்ச வேண்டாம்! பதற வேண்டாம !! எத்தனையோ பல்லிகளை பார்த்தாயிற்று, இந்தப் பல்லி பத்தோடு பதினொன்று என்பதைத்தான்டி வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லாத ஒன்று. தன்னை வெளிக்காட்டிக்கொள்ள மறுக்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது போல பல்லிக்கும் உண்டு. அவர் வராவிட்டால் எதுவும் குடிமுழுகிப்போய்விடாது. இந்தப்பல்லி பின்னூட்டப் பெட்டியிலேயே ஒட்டியிருக்கட்டும்.

    ஆனால் தேசம்நெற், தமிழரங்கம், ரான் டீவி முதலாளிகள் பல்லிகள் அல்ல, அவர்கள் உலகரிந்தவர்கள், பல்லிகளுக்கு தேவையான அநாமதேய முகமுடி அவர்களுக்கு தேவையில்லையே.. அவர்களுக்கு வெளிப்படையான விவாதத்தில் கலந்து கொள்வதில் என்ன தயக்கம்? இதை அவர்கள் நேரடியாக சொல்லலாமே, அதைவிட்டு எதற்காக மௌனம் சாதிக்க வேண்டும்?

    – கடுப்பாகிப்போனவன்

    Reply
  • BC
    BC

    //பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை…//
    அதே பாசிச இயக்கத்தின் தீவிர ஆதரவாளரை கொண்டு தொடர் கட்டுரையை இரயாகரன் எவ்வளவு எடுத்து கூறியும் பொருட்படுத்தாமல் வெளியிட்டவர்கள் தான் இந்த மகஇக. அந்த கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் தான் தயங்கிய நேரங்களில் எல்லாம் இவர்கள் உற்சாகம் கொடுத்து எழுதபண்ணுவார்களாம்.
    //அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார்//
    அம்சாவை ஏன் இங்கு கொண்டுவருகிறார்கள்! இது புலிகளின் ஸ்ரைல் மாதிரியுள்ளது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //அன்புள்ள பல்லி,//
    நன்று உங்கள் வம்புக்கல்ல அன்புக்காக;

    //அஞ்ச வேண்டாம்! பதற வேண்டாம !! //
    நான் யாரை கெடுத்தேன் யாரை கடத்தினேன் அஞ்ச: பல்லி தன்னை பாதுகாத்து கொள்ள மட்டும் அல்ல மற்றவர்கள் தண்டிக்கும் அளவுக்கு தவறுகள் விட அஞ்சுவேன்;

    //எத்தனையோ பல்லிகளை பார்த்தாயிற்று,//
    ஆனால் நான் பல கடுப்புகளை பார்த்தவன் என சொல்லி என்னை தேற்றி கொள்ள முயலமாட்டேன்,

    //இந்தப் பல்லி பத்தோடு பதினொன்று என்பதைத்தான்டி வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லாத ஒன்று. //
    இதை நான் பிறந்த வளர்ந்த கிராமத்தில் கிழவனின் சாவில் கிழவியின் ஒப்பாரி என்பார்கள். ஆனாலும் கடுப்பை நான் அப்படி நினைப்பேனா??

    //தன்னை வெளிக்காட்டிக்கொள்ள மறுக்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது போல பல்லிக்கும் உண்டு. //
    நல்லது உரிமை பற்றி பேசியதுக்கு; ஆனால் என் உரிமை என்ன என்று நீங்கள் சொல்லுவதும் ஒருவகை உரிமை மீறலோ என பல்லிக்கு தெரியவில்லை;

    // அவர் வராவிட்டால் எதுவும் குடிமுழுகிப்போய்விடாது.//
    என்ன இது நீங்களே வா என்பதும் வராவிட்டால் ஒண்ணும் ஆகாது என்பதும்; வரணும் ஆனால் தேவையில்லை என காமடி; ஆனாலும் நாம் வருவோம் ஆனால் வரமாட்டோம்: (நான் காமடி செய்யவில்லை உங்களுக்கு முன்பே உங்கள் விசாரனை கமிட்டியிடம் பல்லியின் சாட்சியம் கிடைத்து விடும் போதுமா)

    //இந்தப்பல்லி பின்னூட்டப் பெட்டியிலேயே ஒட்டியிருக்கட்டும். //
    அப்படியா அப்படியாயின் ஏன் இந்த கேனைதனமாய் பல்லிக்கு எதிரான பின்னோட்டம், பல்லி எங்கே படுக்க வேண்டும் என்பதை தாங்கள் முடிவு செய்வது இரண்டாவது போர் குற்றம்;

    //ஆனால் தேசம்நெற், தமிழரங்கம், ரான் டீவி முதலாளிகள் பல்லிகள் அல்ல,//
    அவர்களும் அப்படி சொன்னதில்லை, அதுவும் றயாகரன் இருக்கும் போது பல்லி தேவையில்லைதான், ஆகா பல்லிக்கு இம்முட்டு பெருமையா;

    //, அவர்கள் உலகரிந்தவர்கள்// அதனால் இந்த சம்பவம் பற்றி அவர்கள் சொல்லுவதை பல்லி பாம்பு கேகலாமல்லவா??

    // பல்லிகளுக்கு தேவையான அநாமதேய முகமுடி அவர்களுக்கு தேவையில்லையே.. //
    அவர்கள் உடல் நிலை பல்லிக்கு இல்லை; பல்லியல்லவா பல்லி போல்தான் இருப்பேன்; முகமூடி அதுவே எமக்கு பாதுகாப்பு கவஸம்;

    //.. அவர்களுக்கு வெளிப்படையான விவாதத்தில் கலந்து கொள்வதில் என்ன தயக்கம்? //
    இது அன்புள்ள பல்லியிடம் கேக்கும் கேள்வியல்ல; இரு தளத்திடம் கேக்க வேண்டிய கேள்வி;

    //இதை அவர்கள் நேரடியாக சொல்லலாமே,//
    இதுபற்றி எனக்கு தெரியாது ஆனால் நீங்களும் இதை அவர்களிடம் நேரடியாக கேக்கலாம் என நினைக்கிறேன்; கண்டிப்பாக பதில் கிடைக்கும் என்பதை பல்லி உறுதி செய்வேன்;

    //அதைவிட்டு எதற்காக மௌனம் சாதிக்க வேண்டும்? //
    மௌனம் என்ற வார்த்தை இருவரது எழுத்திலும் கிடையாது; நண்பர்களையும் விமர்ச்சிக்க தயங்கதவர்கள் இந்த இரு தளமும்; ஆனால் எனது ஒட்டல் ஒரு தளத்தில் மட்டுமே;
    தொடருவேன் பல்லி;

    Reply
  • indiani
    indiani

    அருள் சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம் கட்டுரை எழுதிய உள்ளத்திற்க்கு நன்றி

    தமிழ்நாட்டிலுள்ள மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒரு பொய் மாக்ஸீய இயக்கம் என்பதிற்கான நடத்தைகளை இன்று இவர்களால் வெளியிடப்ட்ட அறிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இப்படியான மாக்ஸீய இயக்கங்களின் முகத்திரையை கிழிக்கவும் மக்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்களை ஊக்குவிப்பு செய்யவும் இயங்க வேண்டிய தேவை அவசியமாக உள்ளது.

    முதலாவதாக இந்த மாக்ஸீய இயக்கம் தமது அமைப்பு சார்பானவர்களின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் அதற்கு பதிலாக புலிகள் சொல்வது போன்று வன்னிக்கு வாருங்கள் பதில் சொல்லுகின்றோம் என்ற பாணியில் பதில் அழித்திருப்பது இவர்கள் கூறும் மாக்ஸீயம் என்பது என்ன என்று எமக்கு தெரியவில்லை.

    தமிழ்அரங்கம் தேசம் இன்னும் வேறு ஊடகங்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்தால் அந்த ஊடகங்களின் ஆசிரியர்களை எழுத்தாளர்களை புலிகளின் பாணியில் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறுவதா மாக்ஸிஸ்ட்டுக்களின் பதில். பதில் என எழதாமலே காலத்தை கடத்துவது மாக்ஸீசமா என்று இந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் பதில் தந்தாக வேண்டும்.

    ஒரு மாக்ஸீய இயக்கக்தின் (மக்கள் கலை இலக்கியக் கழகம்)உறுப்பினர் நாவலன் அதிகாலை 3 மணிக்கு ஒரு பெண்ணை நித்திரையால் எழுப்பி அச்சம் ஊட்டும் வகையில் பேசியதும் அந்த பெண்ணுக்கே தெரியாமல் பேச்சை பதிவு செய்து அதிலும் தனக்கு வேண்டியவற்றை வெட்டித் தொலைத்துவிட்டு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அதை தனது இனியொரு இணையத்தளத்தில் பதிவு செய்தார். பின்னர் அந்த பதிவு தனக்கு எதிரான கருத்துக்களை வளர்க்கிறது என்பதை அறிந்ததும் அந்த ஒலிப்பதிவை நீக்கியதும் எந்த வகையில் ஒரு மாக்சிசவாதியின் செயலாகும் என்பதை மக்கள் கலை இலக்கியக் கழகம் மக்களுக்கு முன்வைக்க வேண்டும். அதாவது தன்னை, ஒரு தனிமனிதனை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு பெண்ணின் உரையாடலை அப் பெண்ணின் அனுமதியில்லாமல் பாவித்ததும் எப்படி சரியாகும் இதற்கு மாக்சீசம் பதில் கொண்டுள்ளதா? மக்கள் கலை இலக்கியக் கழகம் பதில் வெளியிட்டே தீர வேண்டும்.

    ஊடகங்கள் பத்திரிகைகள் விமர்சித்தால் அதற்கு பதில் விசாரணை என்று எந்த மாக்சீசம் சொல்லுகின்றது பதில் தருமா மக்கள் கலை இலக்கியக் கழகம்?

    நாவலனிடம் என்ன விமர்சனங்களை இந்த ஊடகங்கள் முன்வைத்தன. அதற்குப்பதிலை ஒரு சிறிய பந்தியாக முன்வைத்திருந்தால் நாவலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் உறுப்பினர்களின் கட்டைப்பஞசாயம் இவ்வளவு தூரம் போயிராது. இப்படி நாவலனோ அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் உறுப்பினர்களோ முன்வைக்காததே காரணமாக இருந்துவந்துள்ளது. இவர்கள மாக்சீசம் பற்றிய அறிவு அறிவற்வர்களாகவும் மாக்சிசத்தில் பற்று அற்றவர்களாகவுமே உள்ளனர். இவர்கள் மக்கள் மீது எப்படியான பற்றுதலை கொண்டிருப்பார்கள் என்பது இந்த விசாரணைக்காக தமிழ்நாட்டுக்கு வா என்று புலிப்பாணியில் ஊடகவியலாளர்களை மிரட்டுவதில் இருந்து புரிகின்றது.

    இப்படியான மாக்சிஸ்ட்டுக்கள் தமிழ்நாட்டில் எப்படியான கேவலமான நடத்தைகளில் அப்பாவி மக்கள் மீது நடாத்துவார்கள் என்ற சந்தேகமும் உருவெடுக்கிறது.

    இந்த அறிக்கையை பார்த்துக்கொண்ட மக்கள், கலை இலக்கியக் கழகத்தின் இதர உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும் இந்த அறிக்கையுடன் முழுமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் உறுப்பினர்களும் உடன்படுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை அவர்களில் ஒரு சிலராவது இந்த கட்டைப் பஞ்சாயம் பற்றி தாம் தமது கட்சி தமது உறுப்பினர் நாவலன் விமர்சனம் செய்து கொள்வேண்டும் என்ற அடிப்படை மாக்சிசத்துடன் நிற்பார்கள் என்றே தோன்றுகிறது.

    நாவலன் இனிமேல் எப்படியாக தனது அரசியலை புலம்பெயர் சூழலில் முன்வைக்கமுடியும் அதுவும் புதிய திசைகள் சார்பில் ரேடியோ இனியொரு தளங்களில் நாவலனால் எப்படி அரசியலை எழுதமுடியும் தன் மீது எழுப்பப்பட்ட அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள திராணியில்லாத நாவலன் இனிமேல் எப்படி அரசியலை அல்லது புலிகள் அரசசார்பு கட்சிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க முடியும்

    இன்னும் சொல்லப்போனால் நாவலன் தான் விமர்சனம்பற்றிய தனது அறிவை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்………….

    புலம்பெயர் இலங்கைத்தமிழ் மத்தியில் கட்டைப்பஞ்சாயத்திக்கு உடன்தையாக நாவலன் இருந்துள்ளார் என்பதே இங்கு முக்கியமாவிடயமாக உள்ளது அருள் பற்றிய அக்கறையை விட இந்திய எழுத்தாளர்கள் மாக்ஸீயவாதிகள் கட்சிகள் பொலீசாரின் நடத்தைகள் என்பதை விட நாவலன் குகநாதனின் மனைவியாருடன் நடந்து கொண்டதில் இனியொரு இந்த விடயத்தை ரயாகரன் வெளிப்படுத்தும் வரையில் மறைத்ததும் பணம் பறிப்பதில் நாவலனின் பங்கிலுமே பலருக்கும் பலவிதமான விமர்சனங்கள் உண்டு. நாவலன் இந்த விடயத்தில் சம்பந்தம் குகநாதனின் மனைவியின் கருத்துக்கள் ஊடாக வெளிப்படுவதை ஒரு மாக்ஸீயக்கட்சி விளங்கிக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாகவே உள்ளது.

    Reply
  • பல்லி
    பல்லி

    நன்றி இன்டியாணி; பல்லி எழுதும் விதத்தால் என் கருத்துக்கள் சில வேளைகளில் கருத்தில் எடுபடாமல் போவதுண்டு, ஆனாலும் நான் தொடரவே செய்வதுண்டு; ஆனல் உங்கள் இந்த பின்னோட்டம் எனக்கு மிக நம்பிக்கை ஊட்டி உள்ளது, எனது கருத்தும் கறுப்பு பணமாறத்துக்கு ஒரு பெண்ணை நடு சாமத்தில் மிரட்டுவதா? என்பதே;

    Reply
  • கடுப்பாகிப்போனவன்
    கடுப்பாகிப்போனவன்

    திருவாளர் பல்லி அவர்களே, நீங்களாகவே உங்களை இப்பிரச்சனையில் ஏன் முக்கியமானவராக கருதிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் என்னைப்போலவே உண்மையை அறிய முயற்ச்சிப்பீர்கள் என்ற நம்பிக்கையை நான் இப்போதும் இழக்கவில்லை, ஆனால் உண்மையை அநாமதேய பின்னூட்டங்களைக் கொண்டு என்றுமே கண்டுபிடிக்க முடியாது. இது புரியாதவரா நீங்கள்! நான் அப்படி நினைக்கவில்லை.

    நடந்திருப்பது ஒரு கிரிமினல் குற்றம் என்று எப்போது பிரச்சாரம் செய்யப்பட்டதோ அப்போதே குற்றவாளியை அடையாளம் காட்டி சட்டத்திடம் ஒப்படைப்பதுதானே முறையான வேலை. இதை யார் செய்வது? இவ்வழக்குக்கு சற்றும் தொடர்பில்லாத அமைப்புகளை தொடர்ப்பு படுத்தி எழுத தமிழரங்கன், தேசம் தளம் பயன்பட்டுள்ளது, அப்படி கேள்விக்குள்ளாக்கப்பட்ட அமைப்பு, நேரில் வாருங்கள் உண்மையை கண்டுபிடிப்போம் என்று உறுதிகூறுகின்றனர், இதற்கு மேலும் குகநாதனும் அவர் சார்பாக பேசும் இரயாகரனும் தேசம் நெற் ஆசிரியரும் மௌனம் சாதிப்பது, அந்த அமைப்புக்கு பதில் சொல்லாதது சந்தேகத்துக்கிடமான போக்காக இல்லையா?

    தமிழக அமைப்பு நேரில் வரச்சொல்லி பேசி புரியவைக்கலாம் என்கின்றனர், நீங்களோ அல்லது அவர்களோ அது சரியில்லையென்றால் அதற்கு மாற்றுவழியை முன்மொழிய வேண்டியதுதான் முறை.

    என்ன சொல்கிறீர்கள்?

    – கடுப்பாகிப்போனவன்

    Reply
  • கடுப்பாகிப்போனவன்
    கடுப்பாகிப்போனவன்

    அன்புள்ள இன்டியானி,

    ஒரு பாசிச அமைப்புடன் ஜனநாயகமாக மக்கள் திரள் அரங்கில் செயல்படும் ஒரு மார்க்சிய அமைப்பை ஒப்பிட்டு எழுதுவது என்றால் ஒன்று உங்களிடம் காழ்புணர்ச்சி மிகுந்திருக்க வேண்டும் அல்லது அரசியல் ஓட்டாண்டியாக இருக்கவேண்டும். ஏற்கனவே விசாரணை செய்து (விமர்சனம் அல்ல) தீர்ப்பு வழங்கிய இராயகரன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு த்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் பதில் அளித்திருக்கின்றனர். உங்களை ஜனநாயக பூர்வமான முறையில் இப்பிரச்சனையை பேசி குற்றவாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை கொண்டுவரவும் உறுதியளித்திருக்கின்றர். இதற்குமேலும் அவர்களின் நோக்கத்தை திரித்து சிதைத்து எழுதுவதால் யார் குற்றவாளி என்ற உண்மையை கண்டுபிடித்துவிட முடியுமா? உண்மையை கண்டறிய இதை விட சிறந்த வழிமுறை உங்களிடமிருக்கும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக வெளியிடலாம்.

    – கடுப்பாகிப்போனவன்

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லியின் கருத்தோடு;;;;;;

    ம.க.இ.க வின் விசாரணைக்கான அழைப்பும் எமது பதிலும் பதிவேற்றியது தமிழரங்கம் Sunday, 03 October 2010

    //இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்) சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன் குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது. இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன் அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். //

    சபா நாவலன் அருள் செழியன் அருள் எழிலன் அனைவரும் தாங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சுயவாக்குமூலங்களை தெளிவாக பதிவு செய்திருக்கின்றனர். அப்படி இருக்கின்றபோது அவர்கள் இதனை அவதூறு என்று மறுப்பதனை எவ்வாறு மகஇக ஏற்றுக் கொள்கிறது?

    //இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற் தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள் பின்னூட்டங்கள் விவாதங்கள் தொடர்ந்தன. “அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும் “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோ அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.//

    பின்னூட்டங்கள் வகைதொகையின்றி நிபந்தனையிட்டு தமிழரங்கத்தால் எந்த ஒழிந்திருக்கும் பெயர்களிலும் என்றும் விடப்படுவதில்லை. பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்ற போது அவை வெளிவரும் பெயர்கள் அதனை வெளியிடும் நபருக்கு பிரத்தியேகமானது. அவற்றுக்கு பதில் தழிழரங்கத்தால் என்றும் பின்னூட்டத்திற்கு பின்னூட்டமாக தரப்படுவதில்லை என்பது பொதுவான நடைமுறை. எனவே இவற்றை நாங்கள் பிரசுரித்துவிட்டு மவுனமாக இருந்தது தற்செயலானதல்ல என்பது கற்பனை.

    //இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும் இரயாகரன்இ குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர், அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதி, தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமே, “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.//

    இது குறிப்பிட்ட பின்னூட்டங்களை இட்ட வாசகர்களை நோக்கியதாயின் சரியானது. ஆனால் இது தமிழரங்கத்தின் உள்நோக்கம் என கருதப்படுமாயின் அது தவறானது மட்டுமல்ல அவதூறானதுமாகும்.

    //“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும் ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.

    இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர் பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.

    தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர் “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன் நாவலன் அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. //

    சம்பவங்களின் உண்மைகள் குகநாதனின் சொற்களில் மட்டும் வைத்துப் பார்க்கப்படவில்லை. ஆனால் கட்டைப்பஞ்சாயத்து சரியானதா, கடத்தல் சரியானதா என்பதே இங்குள்ள மையமான கேள்வி. இக் கேள்வியை விலத்தி வைத்துவிட்டு குகநாதன் குணவியல்புகளை நம்புவது நம்பாமல் விடுவததென்பதல்ல இங்குள்ள கேள்வி.

    இது கட்டைப்பஞ்சாயத்தா இல்லையா? பணத்தை மீளப்பெறக் கையாண்ட வழிமுறைகள் சரியா தவறா என்பதே இங்குள்ள கேள்வி. அதனை நாவலன் செய்திருந்தால் என்ன, யார் செய்திருந்தால் என்ன, அது அரசியல் ரீதியில் சரியானதென விளக்கமுடியுமா?

    //சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.//

    குற்றங்களை வெளிக்கொணரும்போது அவர் யாருடன் தொடர்பில் உள்ளார் யாருடன் தொடர்பில் இல்லை என்பது அவ்வளவு முக்கியமானதா என்ன?

    //எங்களைப் பொருத்தவரை வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

    புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை.//

    உங்களுக்கு இரயாகரன் அவ்வாறு பிரச்சாரம் செய்தார் என கூறியிருக்காவிட்டால், லண்டனில் அவ்வாறு அவர் பிரச்சாரம் செய்யாததாகி விடமுடியுமா?

    //இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.

    அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.//

    புலிகள் பற்றிய அருள் எழிலனின் அபிப்பிராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சுப் போடும் விமர்சனங்களை யார் செய்தார்களோ அவர்களை நோக்கி இக் கேள்வி செல்லட்டும். ஆனால் அவரது சம்பந்தம் பற்றி கேள்வி எழுப்பினால் அது அவர் புலிகள் மீது கொண்டிருந்த அபிப்பிராயத்தின் மேலான காழ்ப்பில் எழுந்த அவதூறு என குறிப்பிடுவது பொருத்தமில்லை. இது இங்கு பொருத்தமான வாதம் அல்ல.

    இன்றைக்கு புலிகளின் மேல் அபிப்பிராயம் கொண்டிருந்த அருள் எழிலன் மீளாய்வு செய்து தன்னை மாற்றிக் கொண்டு வருகின்றார். அது வரவேற்கப்பட வேண்டியதே. அன்று அவர் புலிகள் மேல் கொண்டிருந்த அபிப்பிராயம் புலிகளின் நேர்மையீனங்களையும் உள்ளடக்கியது தான். எனவே அவர்களது நேர்மையீனங்களையும் இன்று தான் அவரால் அறிய முடிகின்றது என்றால் அது எங்களது தவறல்ல. அல்லது புலிகள் பற்றிய நேர்மையீனங்களின் பின்புலத்தில் தான் அவரது அபிப்பிராயமும் கட்டப்பட்டிருந்தது எனின், அது அவரது நேர்மைக்கு அன்றைக்கும் இன்றைக்கும் குந்தகமானது தான். புலிகளுக்காக அன்று இயங்கியவர்கள் சடுதியாக இன்று மாறி தாங்கள் புலிகளல்ல என்று இன்று புலத்தில் புதிதாக அமைப்புக்களை உருவாக்கும் நச்சுச்சுழலுக்குள் மக்கள் மீண்டும் மயக்கப்படுகிறார்கள். புலிகளின் பிரமுகர்களாக இருந்தவர்களை அதன் பாசிசப் போக்குகளுக்கு குடைபிடித்தவர்களை சாமரம் வீசியவர்களை குஞ்சம் கட்டியவர்களை அரசியல் நியாயம் கற்பித்தவர்களை முன்னணியில் நின்றவர்களை பத்திரிகைத்துறையுடன் நின்று முண்டு கொடுத்தவர்களை, பணம் பறித்தவர்களை சேர்த்த பணத்தை முடக்கியவர்களை, சொந்த மக்களையே கருவறுத்தவர்களை எவ்வாறு நாங்கள் மதிப்பிடுவது?

    //இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி அதனைத் தொடர்ந்து இதில் வினவு மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே நாவலன் அருள் எழிலன் பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர்.//

    தமிழரங்கம் இவற்றை வெளிக்கொணரும் முன்பே உங்களுக்கு அவர்கள் விளக்கம் தந்தார்கள் எனில் அவர்கள் இங்கு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை தாங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள. பிறகு இவை எவ்வாறு அவதூறு ஆகும்?.

    இந்த சம்பவத்துக்கான விளக்கத்தைத்தானே பொது வெளியில் தமிழரங்கமும் கோரியிருந்தது? இது கட்டைப்பஞ்சாயத்து எனவும் கூறியிருந்தது.

    உங்களுக்கு அந்த விளக்கத்தை அவர்கள் தர முன்வந்தார்கள் எனில் ஏன்? அந்த விளக்கம் என்ன?

    அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டால் அதன் அடிப்படையில் அவர்கள் இங்கு சம்பந்தப்படவுமில்லை தவறேதும் இழைக்கவுமில்லை என்றால் அவ்விளக்கம் என்ன?

    அவர்களது அந்த விளக்கங்கள் அரசியல்ரீதியாக சரியென நீங்கள் ஏற்றுக்கொண்டல் அதை முன்வையுங்கள்.

    //அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம் தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில் நாவலன் அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

    இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில் ஆவணங்கள் சாட்சியங்கள் சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன் அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும் அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.//

    இத்தனை காலமும் குகநாதனுடன் கொண்டிருந்த வியாபாரத் தொடர்பு எந்த வகைப்பட்டது. இதில் எங்கு நேர்மை பூத்துக்குலுங்கியது. அருள் எழிலன் செழியன் மீதான மதிப்பீட்டில் குகநாதனுடைய நேர்மையீனங்களும் பணக்கொடுப்பனவுகளும் ஏன் மறைந்திருந்தனவா? வெளிச்சத்துக்கு வந்தனவா? கூடியிருக்கும் வரை நண்பன். குழப்பம் வந்தவுடன் மட்டும் தான் குகநாதன் கொள்ளைக்காரனா? அன்றைக்கு உறவு செழித்தது. இன்றைக்கு உறவு முறிந்தது. அன்றைய குகநாதன் தான் இன்றைய குகநாதன். ஒரு சின்ன மாற்றம். அன்றைக்கு அவர் புலிக்குகைக்குள் இருந்தார். இன்று அரச பாசிசக் குகைக்குள் இருக்கின்றார். ஆனால் அவரது நேர்மையீனத்தோடு கூட்டு வைத்திருந்தவர்கள் இன்று தங்களை மட்டும் சுற்றவாளிகளாக்கியது எவ்வாறு?

    //இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.

    அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை அவருடைய விசாரணை முறை விவாத முறை தீர்ப்பு வழங்கும் முறை குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம்.//

    குகநாதனுக்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை. இங்கு நபர் அல்ல பிரச்சனை. நடந்த நிகழ்வுகள் எதிரிக்காயிருப்பினும் சரியானதா என்பதே கேள்வி. இப்படிப் பார்த்தால் சம்பவத்தை தவிர்த்து நடந்தவற்றை மறுத்து நாவலனுக்கு வக்காலத்து வாங்குவதாக உங்களையும் நாங்கள் குறிப்பிட முடியும்

    //இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால் அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.
    குகநாதனிடம் கேட்பதற்கும் குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.

    அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும் கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.

    ஆகவே இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.//

    இது இனியொருவுக்கே மிகமிக பொருந்தும். அங்கே தான் எக்ஸ்(xxx) வை கள் அதிகம். மற்றவர்களுடைய பெயர்களை களவாடி பின்னூட்டமிடும் பின்னூட்டங்கள் அதிகம். இது இனியொரு மீதான விமர்சனமா?

    //நாவலன் எழிலன் செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல் பணம் பறித்தல் மஃபியா வேலை மாமா வேலை” என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.

    ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன் எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.
    நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும் குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.
    எமது தரப்பில் நாவலன் அருள் எழிலன் அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.//

    அப்போ நீங்கள் அவர்களுடன் உரையாடிய பின் எடுத்த முடிபுகள் தான் இவை. அவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தான் இந்த அழைப்பு. மற்றவர்கள் இந்தியாவுக்கு வரக்கூடிய சூழல் இருக்கின்றதா என்ற விபரங்களைக் கூட அறிவதற்கு மறுபக்கத்தில் இருக்கக் கூடிய தொடர்புகளை துண்டித்துவிட்டு விசாரணைக்கு நாடுகடந்து வருமாறு அழைப்பது முன்னேற்பாடான முடிவல்லவா?

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.

    //இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும்//

    தொடர்பு இல்லைத்தான். ஆனால் உங்களுக்கு மற்றையவர்கள், தமிழரங்கம் அதனை வெளிக்கொணர முன்னரே விளக்கம் தந்தார்கள் எனில் அது எதற்காக? தாங்கள் கேட்டுக்கொண்டதன் பட்சத்திலா அல்லது தாமாகவே முன்வந்தார்களா? தாமாகவே முன்வந்தார்கள் எனின் ஏன்?

    //குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும் ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.//

    தமிழரங்கம் ம.க.இ.க மீது எங்கே எப்போது சேறடித்திருக்கின்றது என்பதை குறிப்பிட முடியுமா? நாங்கள் எப்போதும் கட்டுரைகளுக்கு ஊடாகவே பதிலிறுப்பவர்கள். எனவே அப்படியான சேறடிப்புக் கட்டுரைகளை சுட்டிக்காட்ட முடியுமா?

    ம.க.இ.க மீது அதன் மையமான அரசியல் மீது உடன்பாடு கொண்டு நாங்கள் இணையத்தளம் உருவாவதற்கு நீண்ட காலம் முன்பாகவே புதிய ஜனநாயகம், புதிய கலாச்சார ஆக்கங்களை புலத்தில் கட்டுரைகளாகவும் முழு இதழ்களாகவும் எடுத்துச் சென்றோம். பல திடீர் மார்க்சியவாதிகளின் வருகைக்கு முன்பாகவே இவ்விதழ்களை குறிப்பிட்டளவு அறிமுகப்படுத்தியிருந்தோம்.

    இணையம் ஆரம்பித்ததன் மறுகணமே ம.க.இ.க வின் ஒலி ஒளி கலை நிகழ்வுகளையும் நாங்கள் வலையேற்றுவதற்கும் வெளிக்கொணரவும் உழைத்ததன் பயனாய் அவைகள் இணையத்தில் பார்வைக்கு கிடைத்தன. புலிகள், அரசு மற்றும் ஏனைய இயக்கங்கள், குழுக்கள் மத்தியில் தனியே நின்று மேற்கொண்ட இவ்வேலைகளுக்கு மத்தியிலும் சர்வதேச கடப்பாடுகளை நாம் மறக்கவில்லை.

    ம.க.இ.க எமது தோழமை அமைப்பு அதனது கருத்துக்களின் வீச்சுக்களுக்கு இணையத்தில் நாம் முதன்முதலாக களம் அமைத்தோம். இதன் பின்னரே வினவு தளம் வெளிவந்தது. அதன் வரவானது மேலும் எங்களுக்கு இணையத்தில் தோழமையான இன்னுமொரு வலைப்பதிவு என்ற வகையில் உற்சாகம் தந்தது. இவ்வாறு நிலைமைகள் இருக்க நாங்கள் சேறடிப்பதாக நீஙகள் கூறுவது வேடிக்கையானது தான். நாங்கள் ஒரு தடவை கருத்தியல்ரீதியில் ரதி எழுதிய வரலாறு தொடர்பாய் வினவுடன் முரண்பட்டு விவாதம் நடத்தினோம். வினவு என்பது வினவுதற்காகத்தானே முரண்பாடுகள் எழுகின்றபோது அவற்றை வினவுவது தவறானதல்லவே. தாங்கள் குறிப்பிடும் சேறடிப்பு என்பது என்ன என்பது புரியவில்லை.

    //குற்றம் சாட்டுகின்ற இரயாகரன் குகநாதன் ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். //
    எப்படி நாங்கள் வரமுடியும்? இரயாகரன் இலகுவாக இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கு ஏதுவாகவா?

    //அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன்இ செழியன்இ எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள் பதில்கள் குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள் மகஇக வின் மீது சேறடித்தவர்கள் தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.

    குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன எவ்வளவு பணம் கொடுத்தார் யாரிடம் வாங்கிக் கொடுத்தார் இதில் நாவலனின் பாத்திரம் என்ன குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார் குகநாதன்-புலிகள் குகநாதன்-டக்ளஸ் குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.//

    இங்கேயும் நீங்களும் ஒரு சுயவாக்குமூலம் தருகின்றீர்கள் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பின்னணியில் குகநாதனிடமிருந்து அறவிட கையாளப்பட்ட வழிமுறையில் குறிப்பிடப்படும் நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் அவை விளக்கமளிக்கப்படவேண்டியவை என்பதையும்.

    இது தானே எல்லாருடைய கேள்வியும். அதனை எவ்வாறு அவதூறு அல்லது அவர்கள் சம்பந்தப்படவில்லை என மறுக்கிறார்கள் என கூறமுடியும்.

    //இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாவலன் அருள் எழிலன் அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.

    விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள் உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால் அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.//

    ஏற்கனவே இருக்கின்ற ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என்பவை எதில் அடங்கும் அவை எங்கே?

    //தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும் சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.

    இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவேஇ குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.
    “குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.//

    ஆமாம் புலிப்பாசிசத்தை எதிர்ப்பவர்களின் நடைமுறை ஜனநாயகபூர்வமானதாக இருந்ததா என்பதே எமது கேள்வியும். குகநாதன் கடத்தப்பட்டது அவரிடமிருந்து பணம் வசூலிப்பட்டது அவரது மனைவியிடம் நடாத்தப்பட்ட உரையாடல் என்பன ஜனநாயகபூர்வமானதா என்ற கேள்வியைத் தானே நாங்கள் கேட்டோம்.

    //பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும் ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும் தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம் எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும் இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.//

    நாங்கள் எல்லோருமே தளத்திலிருந்த இயக்கங்களிலிருந்து இயங்கி விடுபட்டு வந்தவர்கள் தான். உங்களைப் போன்ற அமைப்பாக மக்கள் மத்தியில் இயங்கமுடியாத சூழல் எங்களுடையது. அதனாலேயே தான் நாங்கள் எங்கள் கடந்தகாலத்தைய அரசியல் பாத்திரம் குறித்து விரிவாகப் பேசப்படவேண்டிய கடப்பாடுடையோம். ஏனெனில் இன்னும் நாங்கள் எவற்றுக்கும் பொறுப்போ பதிலோ கூறமால், தொடர்ந்தும் அவ்வரசியலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ளாமல் மக்களுக்கு அக்குவேறு ஆணிவேறாக எமது கடந்தகாலப் பாத்திரங்களை அவர்கள் முன் போட்டுடைக்கும் தார்மீகத்திலிருந்து நழுவிவிட முடியாது. கடந்தகாலத்தை மறைத்து மறுத்து திடீர் என அரசியலில் அவதாரம் எடுக்கும் அல்லது புலத்திலிருந்து மீண்டும் தங்களைப்பற்றிய கடந்தகாலத்தை மக்களுக்கு தெரியப்படுத்தாது புதுப்போர்வைகளுக்குள் புகுந்து மீண்டும் வெளியே வரும் நபர்கள் குறித்து, அவ்வாறான வேளைகளில் கடுமையான விமர்சனங்களை நாங்கள் முன்வைக்கின்றோம். அதனை நாங்கள் தொடர்ச்சியாக செய்வோம். இதனை இலகுவாக அவதூறு என அவர்கள் திசை திருப்புவார்களாயின் அது பற்றிய உரைகல்லுக்கு மக்கள் மத்தியிலான நடைமுறை என்பது புலத்தில் இல்லாதபட்சத்தினாலேயே, அந்த நடைமுறை என்ற உரைகல் வாய்க்கப்பெற்ற உங்களுக்கு நாங்கள் வரட்டுவாதிகளாக தெரியக்கூடும்.

    நாங்கள் விவாதித்து ஏற்றுக்கொண்ட ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே ஒரு பொதுவேலை முறைக்குள் நுழைந்திருக்கின்றோம்.

    அனைவர் மீதும் சேறடிக்கும் புத்திஜீவிகளாக எம்மை யாரும் வர்ணனை செய்து கொண்டால் அது எமது தப்பில்லை. அது அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வழி.

    இலங்கையில் உள்ள புதிய ஜனநாயகக்கட்சியைப் பொறுத்தளவில் அவர்களை கொள்கையளவில் நாங்கள் அவர்களின் அரசியலை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவர்களது நடைமுறை சார்ந்து வர்க்க சக்தியாகவே நாங்கள் கணிப்பிடவில்லை. அதை அவர்கள் நிறுவவில்லை. அவர்களது மேல் நேரடியான விமர்சனங்களை நாங்கள் முன்வைத்திருந்தாலும், பின்வழியாக புறத்தில் விமர்சனம் செய்வது கிடையாது. எமது பகிரங்க விமர்சனங்களுக்கு வெளியில், இரகசியமான வழிகளில் எந்தப் பிரச்சாரங்களையும் அவர்களுக்கு திட்டமிட்டு நாங்கள் என்றும் செய்தவர்களல்ல. அது எங்கள் மேலான ஒரு அபாண்டமான ஒரு குற்றச்சாட்டு.

    Reply
  • thavam
    thavam

    குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரம் தொடர்பில் சில குறிப்புகள்

    1. இச்சம்பவம் முற்றிலும் அருள்செழியன் – எஸ் எஸ் குகநாதன் சம்பந்தப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயம். இவர்களில் எவரும் புரட்சிகரமான நிறுவனங்களுக்கு பணிபுரிந்தவர்கள் அல்ல. இருவருமே ஒன்றாக இணைந்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள். தற்போது அது தொடர்பான சர்ச்சையில் இறங்கி உள்ளனர். இவர்கள் ஆளுக்கு ஆள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டவரம்பிற்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்.

    2. ‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ என்ற இலக்கு நோக்கிச் செயற்படும் இனியொரு இணையம், புதிய திசைகள் அமைப்பு (அவர்களும் ஒரு இணையத்தை குரல்வெப் என்ற பெயரில் செயற்படுத்துகின்றனர். சன்றைஸில் வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகின்றனர்.) இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் அற்றதாக இருந்திருந்தால் இவ்விடயத்தை உடனடியாக வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இச்சம்பவம் இடம்பெற்றது ஓகஸ்ட் 02 2010ல். இச்சம்பவத்தை தமிழ்அரங்கம் வெளிக்கொண்டுவந்தது சரியாக ஒரு மாதத்தின் பின்னர் செப்ரம்பர் 02 2010ல். நிர்ப்பந்தத்தின் பெயரில் இனியொரு ஆசிரியர் சபாநாவலன் பதில் எழுதியது செப்ரம்பர் 08 2010ல். ஒரு வகையில் தமிழ் அரங்கம் இந்நிகழ்வை வெளிக்கொணராது இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதோ பணப் பரிமாற்றம் இடம்பெற்றதோ வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தமிழரங்கம் 6000 மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு சம்பவத்தை சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!

    இலங்கையில் இருந்து ஐரோப்பாவரை ஒளிபரப்பாகின்ற ஒரு தொலைக்காட்சியின் உரிமையாளர் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டமை மிக முக்கியமான செய்தி. அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கம் கேள்விக்குரியது.

    3. இச்செய்தியை இருட்டடிப்புச் செய்ததுமல்லாமல் இச்செய்தி வெளியே வந்ததும் அதுவரை மௌனம் காத்த இனியொரு இணையத்தளம் ‘’ அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன்’’ என்றும் ‘’குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்’’ என்றும் குற்றம்சாட்டுகிறது. இது ஏதோ ஒருவகையில் அருள்சகோதரர்களின் செயலை நியாயப்படுத்த முயற்சித்து இருப்பதையே காட்டிநிற்கின்றது. வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவருக்கு இடையேயான பிரச்சினையில் அரசியல் தூய்மைவாதம் பேசுகின்ற நாவலன் ஒருபக்கம்சார்ந்து நிற்பது அவர்களுக்கு இருந்த நலன்களின் முரணையே காட்டி நிற்கின்றது. இது நாவலன் இச்சம்பவத்தில் தொடர்பட்டு இருந்தார் என்ற சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது.

    4. பிரித்தானியாவில் இடம்பெற்ற 20க்கும் மேற்பட்ட தமிழர்களிடையேயான படுகொலைகளில் கணிசமானவை பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பானவை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடையே இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு எல்லையே இல்லை. இவற்றுக்கு அரசியல் முலாம்பூசி ஒரு தரப்பின் செயற்பாட்டை அரசியல் மூலம் நியாயப்படுத்துவது நீண்ட அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமாக அமையாது.

    5. இலங்கையில் விடுதலையின் பெயரில் இயங்கிய விடுதலை இயக்கங்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து மேற்கொண்ட நடிவடிக்கைகள் இன்னமும் எம்மனக் கண் முன்நிற்கின்றது. விசாரணையின்றியே தண்டனை. தண்டனைக்குப் பின் காரணங்களைத் தேடுவதும் தீர்ப்பு வழங்குவதும். எஸ் எஸ் குகநாதன் மீதான காலம் தாழ்த்திய வருகின்ற குற்றச்சாட்டுக்கள் இதனையே காட்டுகின்றன.

    6. இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் பொலிஸ்படைகள் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு விவாதத்திற்காக ‘இனியொரு ஆசிரியர் சபாநாவலன் அருள்எழிலனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் தமிகத்தின் பிரபல ஊடகங்களில் பிணியாற்றி செல்வாக்குள்ள அருள்எழிலனுக்கு சபாநாவலனை தமிழகம் வரச்செய்து அவரைக் கைது செய்து பணம்தரும்படி மிரட்டுவது ஒன்றும் கடியமான விடயம் அல்லவே.’ இனியொருவின் கூற்றுப்படி இலங்கை அரசின் ஊதுகுழல் ஊடகம் ஒன்றின் உரிமையாளரை அந்த அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் தமிழக அரசின் பொலிஸ்படையைக் கொண்டு சட்டப்படி கைது செய்து நீதிமன்றம் செல்லாமலேயே 15 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு விடமுடியும் என்றால் எதுவும் சாத்தியம் அல்லவா?

    7. இங்குள்ள ஆபத்து என்னவென்றால் இது இவ்வாறான செயல்களுக்கு ஒரு முன்ணுதாரணமாக அமைந்து உள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமிழக காவல்துறையை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற முடியும் என்பதனை இச்சம்பவம் நடைமுறையில் நிரூபித்து உள்ளது. ஏற்கனவே இவ்வாறான கசப்பான சம்பவங்கள் சில இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அவ்வாறான சம்பவங்களை நானே செய்தியாக வெளியிட்டும் உள்ளேன். இச்சம்பவம் இவ்வாறானவர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு வழிகோலி உள்ளது.

    8. கைது செய்யப்பட்ட நிலையிலோ அல்லது கடத்தப்பட்ட நிலையிலோ மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் வழங்கும் வாக்குமூலத்தையோ அல்லது அவருடைய துணைவி வழங்கும் வாக்குமூலத்தையோ உண்மையானதாக எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சாதாரணர்களும் அறிந்த விடயம். அதனால் தான் சட்டத்தை அமுல்படுத்துபவர்களிடம் இருந்து நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. தன்னை விடுவிப்பது அல்லது தனது துணைவரை விடுவிப்பதே அவருடைய அல்லது அவருடைய துணைவருடைய நோக்கமாக இருக்கும். அதனால் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட விடயங்கள் சுயாதீனமான நிலையில் ஏற்றுக்கொள்ளப்படாதவரை அர்த்தமற்றவை. இருந்தாலும் எஸ் எஸ் குகநாதன் அப்பதிவுகளையும் மாற்றம் செய்யாது வெளியிடும்படி சவால்விட்டுள்ளார்.

    9. அருள்சகோதரர்கள் குடும்பத்தினர் எஸ் எஸ் குகநாதனிடம் நிதியை இழந்தது உண்மையா இருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தினூடாகவே அதனைப் பெற முயற்சித்து இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புடையவர்கள் இவ்வாறான வழிகளில் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது பிறழ்வான சமூகப் போக்கிற்கு முன்னுதாரணமாக அமையும்.

    10. ஏற்கனவே எழுந்துள்ள அரசியல் நிலையினால் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பலவீனமானதாகவே உள்ளது. இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் இவ்வுறவை மேலும் மோசமாக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி அவர்களே, நீங்களாகவே உங்களை இப்பிரச்சனையில் ஏன் முக்கியமானவராக கருதிக்கொண்டிருக்கிறீர்கள்//
    நான் அப்படி நினைக்கவில்லை, ஆனால் தேசம் தவிர்ந்த ஊடகங்களிலும் நான் அறுவை சிகிச்சை செய்யபடுகிறேன்;

    //நீங்களும் என்னைப்போலவே உண்மையை அறிய முயற்ச்சிப்பீர்கள் என்ற நம்பிக்கையை நான் இப்போதும் இழக்கவில்லை,//
    உன்மைதான் அதில் வேறுபாடில்லை,

    //ஆனால் உண்மையை அநாமதேய பின்னூட்டங்களைக் கொண்டு என்றுமே கண்டுபிடிக்க முடியாது. //
    அப்படி சொல்லுவது தவறு பின்னோட்டம் இடுபவர்கள் சிலர் பிரச்சனை தெரிந்தவர்களும் இரு பகுதி நண்பர்களும் என்பது உன்மைதானே, இதில் பல்லியும் அடக்கம்;

    // இது புரியாதவரா நீங்கள்! நான் அப்படி நினைக்கவில்லை. // இதுக்கான பதில் மேலே உள்ளது;

    //நடந்திருப்பது ஒரு கிரிமினல் குற்றம் என்று எப்போது பிரச்சாரம் செய்யப்பட்டதோ அப்போதே குற்றவாளியை அடையாளம் காட்டி சட்டத்திடம் ஒப்படைப்பதுதானே முறையான வேலை.//
    உன்மைதான்; ஆனால் சட்டமே இங்கு தலை வணங்கியதால் (பணத்துக்கு) அதை ஊடகமூலம் கொண்டுபோக முனைகிறோம்;

    //இதை யார் செய்வது? // பார்க்கலாம் சிலவேளை பல்லியாக கூட இருக்கலாம்;

    // இவ்வழக்குக்கு சற்றும் தொடர்பில்லாத அமைப்புகளை தொடர்ப்பு படுத்தி எழுத தமிழரங்கன், தேசம் தளம் பயன்பட்டுள்ளது, அப்படி கேள்விக்குள்ளாக்கப்பட்ட அமைப்பு,//
    ஆனால் அதே அமைப்பு நாவலர் செழியன் சகோதரர்கள் மற்றும் றயாகரன் தம்முடன் தொடர்பில் இருப்பதாக ஒரு செய்தி உண்டே, அவர்கள் இதுக்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லாமல் நாட்டண்மை தீர்ப்புக்கு அழைபதில் உங்கள் வாதம்??

    //நேரில் வாருங்கள் உண்மையை கண்டுபிடிப்போம் என்று உறுதிகூறுகின்றனர்,// நேரில் எதற்கு என்பதுதானே கேள்வி??

    //இதற்கு மேலும் குகநாதனும் அவர் சார்பாக பேசும் இரயாகரனும் தேசம் நெற் ஆசிரியரும் மௌனம் சாதிப்பது, அந்த அமைப்புக்கு பதில் சொல்லாதது சந்தேகத்துக்கிடமான போக்காக இல்லையா? //
    தவறாக சொல்லுறியள் குகநாதனுக்காக அல்ல கடத்தல் பணபறிப்பு சட்ட மீறல் என்பதுக்கு எதிராக என திருத்தவும்;

    //தமிழக அமைப்பு நேரில் வரச்சொல்லி பேசி புரியவைக்கலாம் என்கின்றனர்,//
    தமிழகத்தில் இதுவரை பாதிக்கபட்ட ஈழதமிழர்(இப்படி) கணக்கெடுக்கலாமா?? அதை இந்த அமைப்பு செய்யுமா?? அல்லது நாவலரையும் றயாகரனையும் சமாதானபடுத்துமா??

    //மாற்றுவழியை முன்மொழிய வேண்டியதுதான் முறை. என்ன சொல்கிறீர்கள்?/
    அவர்களே தங்களிடம் இருப்பதாக சொல்லும் வீடியோவை வெளியிடட்டும், நடந்தது என்ன என்ன என பகிரங்கமாக தமிழக சடதுறைக்கு தெரியும் அளவுக்கு எழுதட்டும்; அதன்பின் உங்கள் ஆசைபோல் நாம் அடங்கி போகிறோம்; இல்லாவிடில் முடிந்தவரை எழுதுவோம்; காலமே பதில் சொல்லட்டும்;

    Reply
  • mani
    mani

    தமிழரங்கத்திற்கு,

    ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒத்துக்கொள்வதாலே அவர்தான் குற்றவாளி என முடிவுசெய்து சேறடிக்கும் ஜனநாயகத்தை ஆளும்வர்க்கம்தான் செய்கிறது. இதனை அறிவுஜீவிகள் செய்தால் அவதூறு என சுட்டிக்காட்டுவதுதானே சரியானது.

    மையமான கேள்வி கட்டப்பஞ்சாயத்து சரியா தவறா என்பதுதானே. கட்டப்பஞ்சாயத்துக்கு நீங்கள் வைத்திருக்கும் இலக்கணம் போலீசு ஸ்டேசனுக்கு போயும் வழக்கு பதிவு செய்யாமல் கோர்ட்டுக்கு போகாமல் தீரும் அனைத்துப் பிரச்சினைகளுமே கட்டப்பஞ்சாயத்துதான் அல்லது ஆள் கடத்தல்தான் உங்கள் மொழியில் இல்லையா ரயா. இதில் உள்ள அபத்தம் புரியவில்லையா..

    ப‌ணத்தை பறிகொடுத்தவன் கேஸ் கொடுக்காமல் பணத்த உடனடியா கேக்குறான்னா அவனோட நிதிநெருக்கடி வெளிப்படையா தெரியுது. எனக்கு கூட 3 ஆண்டுக்கு முன் வேல போச்சு. லே ஆப் கொடுத்தாங்க கம்பெனில• கடசி இரண்டு மாத சம்பளம் தரல• நான் லேபர் ஆபீசர்ட்ட போய் புகார் பண்ணிணேன். அவங்ககிட்ட உடனே பணம் தேவன்னு என் மனுல சொன்னேன். அவங்க உடனடியா கம்பெனிக்கு போன் பண்ணி (உங்க மொழில மிரட்டி) சம்பளத்த செட்டில் பண்ண வச்சாங்க• அத வச்சு அடுத்த இரண்டு மூனு மாசம் வண்டி ஓடிச்சு. அந்த கம்பெனி காரங்க உங்க பார்வல குகநாதன் மாதிரி இருப்பதால் அவங்களுக்காகவும் கொஞ்சம் பேசுங்க•நானும் ஒரு மாலெ ஆதவரவாளன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். கோர்ட்டுக்கு போகாம அதிகாரிய வச்சு எங்க கம்பெனி எச்ஆர் அ மிரட்டியதால எனக்கும் அந்த தகுதி மேல சந்தேகம் வந்திருச்சு. ப்ளீஸ் உதவ முடியுமா ரயா

    -http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7464:2010-09-15-12-30-48&catid=322:2010–இந்த சேறடிப்புகளுக்கு பெயர் பின்னூட்டம் என்றால் இதனை அனுமதிக்கும் தளம் தனது தோழமை அமைப்பை பொதுவெளியில் பதில் சொல்ல அழைப்பதாகத்தான் அர்த்தம். அதைவிடுத்து நாங்கள் எப்போதுமே பதில் எழுதுவது இல்லை என்பது அதிகார வர்க்கத்தின் மொழி. கேள்விகள் உங்களை நோக்கி வருகையில் ரதி பிரச்சினையில் நீங்களே முன்வந்து பதில் சொல்லியும் உள்ளீர்கள். பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்கிறீர்கள் ரயா

    Reply
  • mani
    mani

    தமிழரங்கத்திற்கு,

    குற்றம் செய்பவர் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது அவ்வளவு முக்கியம் இல்லைதான் உங்களுக்கு. இப்படித்தான் தொடர்ந்து பேசுகிறீர்களா.. அரசியலை கூட யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதற்காக சொந்த அரசியலை தூக்கியெறிந்த மிகச்சமீபத்திய தங்களது நடவடிக்கைகள் எதுவும் தங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா..நட்பு முரண்பாடு பற்றி மார்க்சிய ஆர்வலர்களுக்கு வேறு யாரும் பாடம் எடுக்க வேண்டியிருக்காது அல்லவா.. நீங்கள் தீர்மானித்த ஆள்கடத்தல் குற்றவாளிகளிடம் கட்டுரை அல்லது பேட்டி வழியாக தொடர்பில் இருக்கும் அமைப்பை ஏன் நேரடியாக விமர்சித்து ஒரு பதிவும் எழுதவில்லை. மாறாக உங்களை சற்று ஒத்த மனநிலையில் உள்ள பின்னூட்டங்களை பிரசுரித்து அதன் மூலம் விமர்சித்தீர்கள்..

    நாவலன் அவதூறு பிரச்சாரம் செய்தார் அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்தார் என எந்த வித குற்றச்சாட்டையும் நீங்கள் முன்வைக்கலாம். அவ்வளவு ஏன் ஒரு அமைப்பின் மீது கூட முன்வைக்கலாம். குற்றச்சாட்டை முன்வைப்பவர்தான் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும். மாறா ஆளும் வர்க்கம்தான் தான் இயற்றும் பொடா போன்ற சட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை நிராபராதி என நிரூபிக்க வேண்டும் என்கின்றன தமிழரங்கமும் அதைத்தான் கோருகிறது.

    புலிகளை அன்று ஆதரித்தால் அவர்களது நேர்மையின்மையையும் ஆதரித்த்தாகத்தான் அர்த்தம் என்கிறீர்கள். சில பொழுதுகளில் அவர்களை மக்கள் கலை இலக்கிய கழகமும் சில நடவடிக்கைகளில் ஆதரித்துதான் உள்ளது. நீங்கள் கூட குகநாதன் என்ற தவறான நபரின் சரியான நடவடிக்கைக்குதானே (அதாவது அவரது மனித உரிமை பாதுகாப்பு, அவர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு தீர்வுக்கு முன்வந்த நியாயத்தன்மை உள்ளிட்ட) இவ்வளவு பதிவுகளையும் இடுகிறீர்கள். பதில் அளிக்கின்றீர்கள். குகநாதனை நீங்கள் ஏன் இந்தக் கட்டப்பஞ்சாயத்திற்காக இந்திய நீதிமன்றத்தை அணுகவில்லை என்றெல்லாம் நீங்கள் பேட்டியில் கூட கேட்டீர்களா? சரி இந்திய போலீசுதான் மக்களை ஒடுக்குகிறது. உங்கள ஒருத்தன் பிக் பாக்கட் அடிச்சா கூட ஒரு கம்யூனிச ஆதரவாளன் போலீசுல புகார் கொடுக்க கூடாது. ஏன் என்றால் போலீசு அரசின் ஏவல் நாய். என என்னமா யோசிக்கிறீங்க ரயா.. புலியை சில தருணங்களில் ஆதரித்தால் எல்லா தருணங்களிலும் ஆதரித்த்தாக அர்த்தமா.. அப்படியானால் மாற்றம் என்ற ஒன்றே மாறாத ஒன்று என்பதெல்லாம் உங்களை பொருத்தா சும்மா வா..

    ஒரு செயல்முறை தோல்வி அடைகிறது. அதன்பிறகு அச்செயலை இயக்கிய தத்துவத்தை ஒருவன் மறு ஆய்வு செய்கிறான். கடந்த காலத்தின் தப்பெண்ணங்களில் இருந்து மெதுவாக விடுபட முயல்கிறான். இது சரியான அறிவுப்பூர்வமான அறிவியல்பூர்வமான மார்க்சிய பூர்வமான இயக்கியவியல்தானே.. நடைமுறையில் தங்களை மாற்றிக்கொண்ட எல்லா மார்க்சிய ஆதரவாளர்களும் இப்படித்தானே மாறி உள்ளார்கள் அல்லது சிலர் சொல்வது போல அவங்க குடும்பமே கம்யூனிஸ்டு குடும்பம் அதுனால மட்டும்தான் ஒருத்தர் கம்யூனிஸ்டா ஆக முடியும் என நீங்கள் நம்புவது போல படுகிறது.

    Reply
  • Sri Vaishnavi
    Sri Vaishnavi

    சில கேள்விகள் :
    மகஇக போன்ற அமைப்புகளை ஏன் இலங்கை சேர்ந்த இடதுசாரிகள் தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டும்?
    மகஇக தனது அரசியல் கருத்தை தனது நாட்டில் பரப்ப இலங்கை பிரச்னை அவர்களுக்கு தேவையாக உள்ளது. அவ்வளவுதான். அவர்களில் முக்கிய பிரச்னை இலங்கை பிரச்னை அல்ல. ஆகவே மகஇக வை சார்ந்து நின்றால்தான் அது சரியான இலங்கை மக்கள் சார்ந்த சக்தி என்ற மன நிலையை நான் பலமாக எதிர்கிறேன்.

    இலங்கை அரசியலில். மக இக இன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் யார் சரியான மக்கள் சத்தி என வரையறுக்கும் கருத்தியல் தகமையை, அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தார்கள் ?
    வெறும் மேலோட்டமாக மக இக சொல்லும் விளக்கங்கள் சரியாக இருக்கலாம். அனால் இன்றும் இவர்கள் இந்திய மூன்றாம் தர பத்திரிகைகள் எவ்வாறு இலங்கை பிரச்சனையை எழுத்துகின்றதோ, அதே போலவே இவர்களும் எழுத்துகிறார்கள். இதற்கு குறிப்பாக ” இலங்கை தூதரகத்தை சேர்ந்த அம்சா வின் துணையுடன் நாவலனுக்கு எதிராக ஐரோப்பாவில் இயங்குகிறாக்கள், என்ற மகஇகா இன் கூற்று நல்ல உதாரணம். மகஇகா நாவலனையும் அசோக்கையும், வேறு சில பழம் புலிகளையும் வைத்து அரசியல் செய்யட்டும். அது எங்களுக்கு பிரச்சனையை அல்ல. வரலாறு ஒரு நாள் இவர்கள் யார் என மகஇகா வுக்கு கற்றுக்கொடுக்கும்.

    வியாபார விடயத்தில் நாவலனின் கபடத்தனமான பேசும் தன்மையும், அழகான வார்த்தை பிரயோகமும் பலரை மயக்கி இன்று அவர்கள் நடு தெருவில் நிற்கிறார்கள். இது பாரிஸில், லண்டனில் அனைவரும் அறிந்த விடயம். இன்று அரசியல் வியாபாரம் செய்ய வந்து விட்டார். மக இக வின் கருத்துப்படி நாவலன், குகநாதனின் விடயத்தில் செய்ததெல்லாம் சரி, அதை அம்பலப்படித்திய தேசம் மற்றும் தமிழ் அரங்கம் செய்தது தான் தவறு. அதனால் தான் ஜெயபாலனையும், ராஜாவையும் இன்று இந்தியாவில் பஞ்சாயத்து செய்ய அழைகிறார்கள். இதெல்லாம் காலத்தின் கோலம். நமது நிலையை வைத்து யாரெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என நினைக்கும் போது கவலை தான் வருகிறது.

    Reply
  • seelan
    seelan

    ம க இ க மத்திய குழுவினருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

    ம.க.இ.க மத்திய குழு தோழர்கட்கும், ம.க.இ.க தோழர்கட்கும்

    சீலனின் (இது எனது இயற்பெயரே) தோழமை வணக்கங்கள்.
    வினவுதளத்தில் உங்களின் கட்டுரையைப் பார்த்து அதிர்ந்து போனேன். முதலில் முதிர்ச்சியும் செயற்பாட்டுத்திறனும் கொண்ட அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் தங்களின் கட்டுரையா இது என என்னால் நம்பமுடியவில்லை. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. உங்கள் கட்டுரையில் இருந்து எனது கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றேன். புதிய திசைகள் குழுவினருடன் ம.க.இ.க இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என றயாகரன் குறிப்பிட்டிருந்தார் இதில் நாவலன் எங்கு பிரச்சாரம் செய்தார் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. றயாகரன் கூறியது லண்டனில் அவர்சார் நண்பாகளிடம் இவ்வாறு பிரச்சாரத்தை மேற்கொணடடிருந்தார் என்பதே. இதை அறியாது உங்களிடம் அதைப்பற்றி நாவலன் ஒன்றும் கூறவில்லை என எழுதியுள்ளீர்களே என்ன வேடிக்கையிது.
    அருள் எழிலன் அருள் செழியன் நாவலன் போன்றோர் கூறும் கதைகளை நம்புகின்றோம் என அறிவித்துள்ளீர்கள். நல்லது. அருள் சகோதரர்கள் குகநாதனை கடத்தி பணம் பறித்தது சரி என்று மறைமுகமாக இதனுடாக ஏற்றுக் கொள்கின்றீர்கள். காரணம் அருள் எழிலன் றயாகரனின் கட்டுரையின் பின்னூட்டத்தில் தாம் ஒரு நாடகமாடி குகனாதனிடம் இழந்த பணத்தை பெற்றதாக சுயமாகவே ஒப்புக் கொண்டுள்ளார் அவ்வாறிருக்கையில் நீங்களும் ஆட்கடத்தல் கட்டைப்பஞ்சாயத்து போன்றவற்றினை ஆதரிப்பதாக மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
    றயாகரன், தேசம் நெற் குகநாதனின் வாக்குமூலத்தை நம்புகின்றது என்று குறிப்பிட்டுள்ளீர்களே. குகநாதன் இலங்கை அரசு சார்பானவர் என்பதற்காக அவர் கூறுவதெல்லாம் பொய்யாக இருக்க வேண்டிய அவசியம் உண்டா. அல்லது மார்க்கிசம் பாட்டாளி வர்க்கம் என்று கூறினால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? இங்கு நடந்த சம்பவத்தில் நாவலன் பங்குபற்றியதே றயாகரனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டது. இதில் குகநாதன் உண்மை சொல்கிறாரா அருள் எழிலன் உண்மை சொல்கிறாரா என்றதல்ல மார்க்;சியம் பாட்டாளி வர்க்கம் என்று பீலா விட்டபடி மக்களை ஏமாற்ற புறப்பட்ட மக்களைக் காவுகொடுத்தவர்கள் சொல்வது எல்லாம் சரியா? இங்கு பார்க்க வேண்டியது இச் சம்பவத்துடன் தொடர்பான பகுப்பாய்வே.
    மீண்டும் ஒருமுறை நீங்கள் எல்லோரும் தமிழரங்கத்தில் றயாகரனால் எழுதப்பட்ட இரு கட்டுரைகளையும் வாசிக்கவும். அடுத்து றயாகரன் குகநாதனை அழைத்து வரவேண்டும் என்று சின்னப்பிள்ளைத்தனமாக கூறியுள்ளீர்களே. றயாகரன் குகநாதனுக்காக வக்காலத்து வாங்கியிருந்தால் அப்படிச் செய்யக் கோருவது சரி மாறாக நடந்த ஒரு சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தால் அதற்காக குகநாதனை அழைத்து வரச் சொல்வது மூன்றாந்தர அரசியலிலும் கேவலமானது.
    இந்த விடையம் தொடர்பாக றயாகரன் பகிரங்கமாக விவாதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளீர்கள். இதுவரை றயாகரன் ஏதாவது ஒரு விடையத்தை தனிமையில் உங்களுடன் பேசி மற்றவர்களை போட்டுக் கொடுத்ததுண்டா? அப்படி இருக்க இது என்ன புதிதாக எதையும் இணையத்திலேயே பகிரங்கமாக விவாதியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விடையம் பற்றி உங்கள் மற்றைய தோழர்களை விவாதிக்க வேண்டாம் என அறை கூவியுள்ளீர்களே. இதுவா ஜனநாயக சக்தியின் முறை இதிலிருந்து உங்கள் அமைப்பினுள்ளேயே இரட்டைப்போக்கு உள்ளது என்பது தென்படுகின்றது.
    தமிழ் தேசியத்தை உயர்த்திப்பிடித்து அதனுடாக ஆட்சேர்க்க புறப்பட்டுள்ளீர்கள் என என்னால் உணர முடிகிறது.
    தோழர்களே உங்களின் போக்கில் தற்போது மாற்றம் உள்ளதை நான் அவதானிக்கின்றேன் ஏன் என்பது மட்டும் புரியவி;ல்லை.

    தோழமையுடன்
    சீலன்

    Reply
  • BC
    BC

    சிறி வைஹ்ணவி மிக சரியாக மகஇகவை புரிந்து கொண்டு கருத்து எழுதியுள்ளார். இலங்கை தமிழர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

    Reply
  • mani
    mani

    தமிழரங்கத்திற்கு,
    எல்லாவற்றையும் அரசியலுக்கு கீழ் கொண்டு வந்து பரிசீலிக்கும் தங்களது உயர்ந்த தன்மை தமிழக மா.லெ இயக்கங்களுக்கு அவ்வளவாக வாய்த்திருக்காது போலும் என நீங்கள் கருதுவது புரிகிறது. ஒரு சம்பவத்தை கட்டப்பஞ்சாயத்தாக பார்க்க வேண்டும் என்பது அதன் தன்மையால் புரியப்பட வேண்டுமா அல்லது அதில் சம்பந்த்ப்பட்டவர்களால் புரியப்பட வேண்டுமா என்பதற்கு நீங்கள் பின்னதைத்தான் தெரிவு செய்கிறீர்கள். தீபன் துர்கா மீதான கொடுந்தாக்குதலின் போது கூட தீபன் தாங்களை கடத்தியதை விவரித்து விட்டு கடைசி வரிகளில் நடந்த சம்பவத்தின் எதிரிகளையும் கண்டித்தீர்கள். இந்த தன்மைதான் உங்களை இன்றும் அரசியலற்ற ஒரு பிரச்சினைக்கு அரசியல் சாயம் அடித்தாவது சில முன்முடிவுகளை நியாயப்படுத்த வைக்கிறது.

    செழியனுக்கு தர வேண்டிய பணத்தைத்தானே செழியன் கோரினார். அல்லது மிரட்டி பிடுங்கினாரா? பெறப்பட்ட பணத்தில் 75 சதவீத்த்திற்கும் மேல் அவரது 2.5 ஆண்டு கால ஊதிய பணம் என்பதும் ஆதாரத்துடன் உள்ளது. ஒரு நடுத்தர சம்பளம் வாங்கும் ஒருவனது ஊதிய நிலுவையை அவன் பெற்ற முறை தவறு என்பதற்காக வாதாட வந்திருக்கின்றீர்கள். நடுத்தர வர்க்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதா மார்க்சியவாதிகளுக்கு அழகு. அணி சேர்க்கை பற்றி தெரிந்தும் தாங்கள் இம்முடிவுக்கு வர காரணம் என்ன? இவரை விடவும் அதிக சம்பளம் பெறும் அதிகார வர்க்கமாகவே இருக்கும் உமா சங்கருக்கு ஆதரவாக வினவு இணையதளத்தில் கட்டுரை வந்த்தே.. அதனை நீங்கள் ஏன் அரசியல் ரீதியாக எதிர்க்கவில்லை

    Reply
  • mohan
    mohan

    செழியனுக்கு தர வேண்டிய பணத்தைத்தானே செழியன் கோரினார். அல்லது மிரட்டி பிடுங்கினாரா? பெறப்பட்ட பணத்தில் 75 சதவீத்த்திற்கும் மேல் அவரது 2.5 ஆண்டு கால ஊதிய பணம் என்பதும் ஆதாரத்துடன் உள்ளது. ஒரு நடுத்தர சம்பளம் வாங்கும் ஒருவனது ஊதிய நிலுவையை அவன் பெற்ற முறை தவறு என்பதற்காக வாதாட வந்திருக்கின்றீர்கள்./ மணி

    வியாபார விடயத்தில் நாவலனின் கபடத்தனமான பேசும் தன்மையும், அழகான வார்த்தை பிரயோகமும் பலரை மயக்கி இன்று அவர்கள் நடு தெருவில் நிற்கிறார்கள். இது பாரிஸில், லண்டனில் அனைவரும் அறிந்த விடயம். இன்று அரசியல் வியாபாரம் செய்ய வந்து விட்டார்./சிறிவைஸ்ணவி

    மகஇக நாவலனை பிரான்சுக்கு கூட்டி வருமா?? நிலுவையை பெற…

    Reply
  • aathav
    aathav

    இங்கு ரயாவின் மையமான கேள்வி “கட்டப்பஞ்சாயத்து சரியா தவறா என்பதுதானே?. போலீசு ஸ்டேசனுக்கு போயும் வழக்கு பதிவு செய்யாமல் கோர்ட்டுக்கு போகாமல் தீரும் அனைத்துப் பிரச்சினைகளுமே கட்டப்பஞ்சாயத்துதான்” இதைத்தான் அருள் சகோதரர்கள் குகநாதனுக்கு செய்துள்ளார்கள்! இது உந்த ம.க.இ.காரர்களுக்கும் தெரியும்! உந்த “உம்பட்டு–எக்கச்சக்க-ஆய்வுகள் செய்யும்–இந்த ஆய்வாளர்களுக்கு இது புரியல்லையோ? இதனால்தான் பலர் உங்களை “போலிகள்” என்கின்றார்கள்! இப்போ தாங்கள் “இரயாகரனின் குற்றச்சாட்டு: பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம்”
    என அனுப்பியுள்ள அழைப்பாணையும்> கட்டப்பஞ்சாயத்து பாணியிலான>புலிப்பாணியிலான திமிர் அறிவித்தல்தான்! இது மா.லெ. அமைப்புகளுக்கான அணுகுமுறையல்ல!

    Reply
  • mani
    mani

    தமிழரங்கத்திற்கு,

    தீர்ப்புகளில் இருந்து அணுகும் உங்களது போக்கால் நடந்த விசயத்தில் உள்ள அரசியல் தன்மை இன்னது என வரையறுக்க இயலாமல், அந்த இயலாமையே கோபாமாக உருவெடுத்து மக்கள் கலை இலக்கிய கழகம் நாவலனுக்கு வக்கலாத்து வாங்குவதாக கூறுகிறீர்கள். ஆனால் நடந்த சம்பவத்தில் நான்காவது நபராகத்தான் அவரை இருத்த முடியும் அல்லவா.. இதுதான் அருள் எழிலன் அல்லது செழியனை விடவும் அவரை இப்பிரச்சினையில் முன்னுக்கு வரவழைக்குமாறு தங்களையும் தூண்டுகிறது. அடக்குமுறைக் காலத்தில் அமைதி காத்தார்கள் என்பதற்காக இன்னும் பிறரையும் நோக்கி வன்மத்துடன் உரையாடவும் வைக்கிறது. அந்த காரணத்தாலேயே இன்றும் அன்றைய பயந்தாங்கொள்ளிகளிடம் இணைய முடியாது என முடிவு செய்து, அந்த முடிவுக்கேற்ப உரையாட முன்வருகின்றீர்கள்.

    இணையத்தில் விசாரணை சாத்தியம் இல்லை என்பதை விளக்கினால் அது உங்களது கண்ணிற்கு மாத்திரம் உங்களை நோக்கியதாக படவே இதனை இனியொரு தான் செய்கிறது என பள்ளிப் பிள்ளைகள் கிள்ளி விளையாடுவதைப் போல பதிலளிக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு முடிவு எடுத்தீர்களா என பகடி செய்கின்றீர்கள். உங்களால் தமிழகத்திற்கு வருவது சாத்தியமில்லை என்பது சப்பைக்கட்டு.

    மார்க்சியவாதிகளில் சீனியாரிட்டி போய்விடும் என அஞ்சும் ஒரு தோழனாக எனக்கு தெரிந்த சிலர் இருந்துள்ளனர். அவர்கள்தான் புதிய தோழர்களின் கடந்த காலத்தை பற்றி மாத்திரமே பேசி அதே நேரத்தில் தங்களது கடந்த காலத்தை சிந்திக்க மாத்திரமே செய்து அதன் பலனாக பெற்ற புதிய அரசியல் ஒளியில் மார்க்சியத்தை உரசிப்பார்த்து தங்களது பார்வைக்கு உகந்த வழிமுறையை தேர்வு செய்கிறார்கள். அது பின்நவீனத்துவ்வாதமா, அல்லது கலைப்புவாதமா என்றெல்லாம் எனக்கு சத்தியமாக உடனே தெரிந்து விடுவதில்லை. ஆனால் போகப் போகும் திசை புரிந்து விடுகிறது

    Reply
  • பல்லி
    பல்லி

    //எல்லாவற்றையும் அரசியலுக்கு கீழ் கொண்டு வந்து பரிசீலிக்கும் தங்களது உயர்ந்த தன்மை //
    இதுவரை ரயாகரன் பல கட்டுரைகள் ஆய்வுகள் செய்துள்ளார் பலதில் அவர் அரசியலோடுதான் பார்ப்பார்; காரணம் சம்பந்த பட்டவர்கள் அரசியலில் நடனமாடுவதால் இது தவறு என ஒரு போலி வாழ்த்து இதுவே உங்கள் போக்கு;

    // அவர்தான் குற்றவாளி என முடிவுசெய்து சேறடிக்கும் ஜனநாயகத்தை ஆளும்வர்க்கம்தான் செய்கிறது.//
    தயவுசெய்து அந்த ஜனநாயகத்தை தூங்கவிடுங்கள் இங்கே சதிராடுவது பணநாயகம், எடுத்ததுக்கெல்லாம் ஜனநாயகமா?? கடத்தலுக்குமா அது வேண்டும்;

    // அரசியலை கூட யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதற்காக சொந்த அரசியலை தூக்கியெறிந்த மிகச்சமீபத்திய தங்களது நடவடிக்கைகள் எதுவும் தங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா..//
    இது ரயாகரனுடன் தொலைபேசியில் பேசலாமே; இது கடத்தல் பற்றிய வாதம், பின்பு நாமும் யார் யார் என்ன அரசியல் செய்கிறார்கள் என சொன்னால் ஒரே காமடியாய் இருக்காதா??

    //நாவலன் அவதூறு பிரச்சாரம் செய்தார் அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்தார் என எந்த வித குற்றச்சாட்டையும் நீங்கள் முன்வைக்கலாம். அவ்வளவு ஏன் ஒரு அமைப்பின் மீது கூட முன்வைக்கலாம். குற்றச்சாட்டை முன்வைப்பவர்தான் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும். //
    அதுக்குதான் அருள் சகோதரர்களிடம் வீடியோவும் நாவலனிடம் ஆடியோவும் இருக்கு என எத்தனை முறைசொல்லியாச்சு;

    // உங்கள ஒருத்தன் பிக் பாக்கட் அடிச்சா கூட ஒரு கம்யூனிச ஆதரவாளன் போலீசுல புகார் கொடுக்க கூடாது. ஏன் என்றால் போலீசு அரசின் ஏவல் நாய். என என்னமா யோசிக்கிறீங்க//
    உன்மைதான் பொலிஸ்சில் கொடுக்கலாம் கைது செய்யலாம்; அப்புறம் என்ன அதுதானே இங்கு பிரச்சனை?? பொலிஸ்சில் ஒரு கம்யூனிஸ் புகார் கொடுப்பது தவறென சொல்ல யாரும் இங்கு புத்தி கெட்டு இல்லை, ஆனால் அதே பொலிஸை வைத்து கடத்த ஒரு கம்யூனிஸ் முற்பட்டால் அவருக்கு பெயர் க;;;;;;; புரியுமே;

    //ஒரு செயல்முறை தோல்வி அடைகிறது. அதன்பிறகு அச்செயலை இயக்கிய தத்துவத்தை ஒருவன் மறு ஆய்வு செய்கிறான். கடந்த காலத்தின் தப்பெண்ணங்களில் இருந்து மெதுவாக விடுபட முயல்கிறான். இது சரியான அறிவுப்பூர்வமான அறிவியல்பூர்வமான மார்க்சிய பூர்வமான இயக்கியவியல்தானே.. நடைமுறையில் தங்களை மாற்றிக்கொண்ட எல்லா மார்க்சிய ஆதரவாளர்களும் இப்படித்தானே மாறி உள்ளார்கள் அல்லது சிலர் சொல்வது போல அவங்க குடும்பமே கம்யூனிஸ்டு குடும்பம் அதுனால மட்டும்தான் ஒருத்தர் கம்யூனிஸ்டா ஆக முடியும் என நீங்கள் நம்புவது போல படுகிறது.//
    இப்படி சொல்லி சொல்லிதானே சமூகத்தையும் உங்களையும் ஏமாற்றுகிறீர்கள்? உங்களுக்கு களவு; கொள்ளை; கொலை; வழிபறி; கடத்தல், கற்பழிப்பு, கருஅழிப்பு எதை செய்தாலும் விளக்கத்துக்கு தூக்கி போடுவியள் இசங்களை,,,,,,, மணி நீங்கள் வக்கிலாக வாதம் செய்யிறியள் நாங்கள் ஓரு சமூகத்தில் எந்த கொம்பனும் தவறு செய்யகூடாது என்பதை சொல்லுகிறோம்;

    Reply
  • nila
    nila

    சபா நாவலனுக்கு ஒரு பகிரங்க மடல்:
    குகநாதன்- அருள் சகோதரர்கள் விடயத்தில் நீங்களே பிரதான பேசு பொருளாகியிருக்கின்றீர்கள். அப்படியிருக்கையில் உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தொடர்ந்து மௌனமாக இருப்பது பொருத்தமானது அல்ல. இதுதொடர்பாக தமிழ்அரங்கம், தேசம்நெற் இணையத்தளங்களில் வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் பின்னுட்டங்களையும் படித்துவருவதன் பின்னணியில் எம்மிடம் உள்ள சில கேள்விகளை உங்கள் முன் வைக்கவேண்டியிருக்கின்றது. இதற்காக பதிலை தங்களிடமிருந்தே எதிர்பார்க்கின்றோம். அதைவிடுத்து தமிழகத்திலுள்ள அமைப்புக்கள் ஊடாக பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள் என்று கோரிக்கை வைப்பது நல்லதல்ல.

    குகநாதனை இலங்கை அரசின் கைக்கூலியாக தொடர்ந்து நீங்களும் உங்களைச்ச hர்ந்தவர்களும் எழுதிவருகின்றீர்கள். ஆனால் அத்தகைய குகநாதனை இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைக்nhகண்டிருக்கும் இந்திய அரசின் காவல்துறையின் துணையுடன் கடத்திச்சென்று பணம்பெறுகின்றீர்கள் என்றால், நீங்கள் அவரைவிட இந்திய அரசுக்கு தேவையான ஆட்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் குகநாதன் இலங்கை அரசின் கைக்கூலி என்று நீங்கள் எழுதுவது உங்கள் கற்பனையில் வந்த ஒன்றாக இருக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை முதலில் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். எனவே எங்கள் முன் எழும் இந்தக் கேள்விகளுக்கு தயவுசெய்து பதில்தாருங்கள்.

    1) குகநாதன் பொலிசார் வசம் இருந்தபோது அவருடன் நீங்கள் பேசியபோது, அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டு தப்பப் பாருங்கள் என்று நீர் கூறியது உண்மையா? அப்படியானால் ஏன் அப்படி கூறினிர்கள்?
    2) அப்படி நீங்கள் கூறியதாக குகநாதன் கூறியிருப்பதில் உண்மையில்லையெனில், நீங்கள் கதைத்தது எல்லாம் தன்னிடம் பதிவாக இருக்கிறது என்று அருட்செழியன் கூறியிருப்பதால் அந்த வீடியோ பிரதியை அவரிடமிருந்து பெற்று வெளியிடுவிர்களா? இல்லையெனில் எதற்காக? ஏனெனில் அருள் சகோதரர்களுடன் இப்போதும் நட்பிலும் தொடர்பிலும் இருப்பவர் நீங்கள். உங்களைப்பற்றிய குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது.
    3)அப்படிக் கூறியிருந்தால், அவர் கேட்பது என்ன எதற்காக கேட்கிறார் என்பது உங்களுக்கு முழுமையாhகத் தெரிந்திருந்ததா? அப்படித் தெரிந்திருந்தது எனில் தனக்கு சம்பளமாக 50 ஆயிரம் ரூபா வீதம் 18 மாதங்களுக்கு 9 லட்சமாகக் கேட்டதை குறைத்து வாங்குங்களேன் என்று அருட்செழியனிடம் கேட்டுப்பார்க்க வேண்டும் என்று நீங்கள் கருதவில்லையா?
    4) தேவையெனில் குகநாதனிற்காக பொறுப்பு (பாரிஸ் சுபாஸ் பொறுப்பு நின்றால்) நிற்க நீங்கள் சம்மதித்ததாக குகநாதன் கூறியிருக்கிறார். அதற்காக குகநாதனின் மனைவி உங்களை நாடியபோது நீங்கள் சம்மதித்தததும், பின்னர் நீங்கள் அருள் எழிலனுடன் தொடர்புகொண்டபோது அவர் இந்த விடயத்தில் தலையிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக நீங்கள் குகநாதனின் மனைவிடம் கூறியது உண்மையா?
    5) நீங்கள் அருள் எழிலனுடன் தொடர்புகொண்டு உங்களை இந்த விடயத்தில் இழுக்காதீர்கள் என்று கூறியதாக எழிலன் கூறியிருக்கிறாரே? அப்படியெனில் அருள் எழிலன் பொய் கூறுகிறார் என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா?
    6) இனியொரு இணையத்தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான அசோக்கிடம் குகநாதனின் மனைவி தொடர்புகொண்டு பொறுப்புக்கு நிற்குமாறு கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதனைத் தெரிவிப்பதற்காக எழிலனுடன் தொடர்புகொண்டு இந்த விடயத்தில் தன்னை சேர்க்கவேண்டாம் என்று அசோக் கேட்டுக்கொண்டதாக எழிலன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அசோக் தொடர்புகொண்டபோது எழிலனே இவ்வாறு அசோக்கிடம் கேட்டுக்கொண்டதாக குகநாதன் மனைவியிடம் அசோக் தெரிவித்திருக்கிறார். அப்படியெனில் யார் செல்வது உண்மை என்பதை உங்கள் இணையதத்ள ஆசிரியர்களில் ஒரவரான தோழர் அசோக்கிடம் கேட்டுத் தெரிவிப்பீர்களா?
    7) குகநாதனின் மனைவியிடம்நீங்கள் போசியபோது அவரது பேச்சை ஒலிப்பதிவுசெய்கின்ற விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா?
    8. அவரின் உரையாடலை இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு முன்னதாக அதனை அவரிடம் சொல்லவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

    இந்தக் கேள்விகளுக்கான பதிலை சபா நாவலனும், அசோக்கும் தெரிவிக்காதவரை இதைப்பற்றி நாம் பின்னுட்டங்களை வெளியிட்டுக்கொண்டிருப்பது பயனற்றது. இதற்கான பதிலை அவர்கள் வெளியிடும்வரை குகநாதன் குறித்த அனுமானங்கயைளயும் நிறுத்திவைப்பது நல்லது.

    Reply
  • கடுப்பாகிப்போனவன்
    கடுப்பாகிப்போனவன்

    அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

    மகஇக வின் அறிக்கை மீது இரயாகரன் இரண்டு பதிவுகள் எழுதிவிட்டார். அறிக்கையை வரி வரியாகப் பிய்த்துப் போட்டு எதிர்வாதம் செய்வதாகவும், வாக்கியங்களுக்கு தவறான பொருள் கற்பித்து வியாக்கியானம் செய்வதாகவுமே அவரது பதில் அமைந்திருக்கிறது. தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாராக இல்லை. இணையத்தில் விவாதம் நடத்துவது அரட்டைக்கும், அவதூறுக்கும் பயன்படுமே தவிர குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை பயன்படாது என்பதனாலேயே ம.க.இ.க ஒரு பகிரங்க விசாரணையை முன்மொழிந்தது. நேரடி விசாரணைக்கு அவர் அஞ்சுகிறார். அதனை மறைப்பதற்காக வளைத்து வளைத்து எழுதுகிறார்.

    “ரயாகரனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அபாண்டமானவை” என்று அருள் எழிலன், அருள் செழியன், சபா.நாவலன் ஆகியோர் கூறுகின்றனர். ரயாகரன் எழுப்பியிருப்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் அது தங்களது தொழில், சமூக வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றை பாதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான பகிரங்க விசாரணைக்குத் தயார் என்கின்றனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை.

    குற்றம் சாட்டிய இரயாகரன் அதனை நிரூபிக்கத் தயாராக இல்லை. “சம்பவம் உண்மை. அவர்களே அதை ஏதோ ஒரு வகையில் ஓத்துக்கொள்கின்றனர்” என்று மிக அலட்சியமாகப் பேசுகிறார். பிரச்சினையை தீர்ப்பதற்கு ம.க.இ.க முன்வைத்திருக்கும் இந்த வழிமுறையை குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற வழி, என்றும் “எல்லா சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பாதுகாக்கும் முயற்சி” என்றும் சாடுகிறார்.

    இப்பிரச்சினையில் குற்றம் சாட்டியவரும், பிறகு குறுக்கு விசாரணை நடத்தியவரும், தீர்ப்பு வழங்கியவரும் ரயாகரன்தான். ம.க.இ.க வழங்கியிருப்பது தீர்ப்பு அல்ல. பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் குற்றமிழைத்தவரைக் கண்டறிவதற்குமான ஒரு வழிமுறை – அவ்வளவே. “இருதரப்பும் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு நடுநிலையாளர் இந்த விசாரணையை நடத்தட்டும்” என்று ம.க.இ.க வின் அறிக்கை தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறது.

    இது இந்தப் பிரச்சினையை ஒட்டி நாங்கள் கண்டுபிடித்திருக்கும் வழிமுறையும் அல்ல. எமது அமைப்புத் தோழர் ஒருவர் தவறிழைத்திருப்பதாக ஊர்மக்கள் யாரேனும் குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்டவர்களை நேரில் வைத்து பலர் முன்னிலையில்தான் விசாரிக்கிறோம். அதே வழிமுறையைத்தான் இப்பிரச்சினையிலும் முன்மொழிந்திருக்கிறோம். இது இரயாகரனுக்காகவோ, நாவலனுக்காகவோ பிரத்தியேகமாகத் உருவாக்கப்பட்ட வழிமுறை அல்ல.

    “அத்வானி தலைமையில் இந்து பாசிட்டுகள் (மசூதியை) இடித்தனர் என்பதை, அதற்கு எதிராக போராடும் மக்கள் நிறுவ வேண்டும் என்று கோருவது போன்றது இந்த விடையம்” என்று கூறி ம.க.இ.க முன்வைக்கும் வழிமுறையை ரயாகரன் நக்கலடிக்கிறார். அவருடைய பாணியிலேயே பதில் சொல்கிறோம். அத்வானியின் குற்றத்தை நிரூபிப்பதற்கு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றனர். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், அத்வானிதான் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பி ஓடி ஒளிகிறார். இது ரயாகரனுக்கு தெரியாது போலும்!

    இரயாகரன் முன்வைக்கும் வழிமுறை என்ன? ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் சாட்டி, அறிக்கை – மறுப்பறிக்கை விட்டு அரசியல் நடத்தும் ஓட்டுக்கட்சிகளைப் போல இணையத்தில் அறிக்கைப் போர், அக்கப்போர் நடத்த அவர் அழைக்கிறார். பிரச்சினையை நேரில் விசாரித்து முடிவுக்கு வருவோம் என்று சொன்னவுடனேயே, தன்னுடைய குற்றச்சாட்டை “அரசியல் ரீதியாகவும் எடுக்கலாம், ஊடகவியல் சார்ந்ததாகவும் எடுக்கலாம்” என்று விளக்கமளித்து குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பிலிருந்து கூச்சமே இல்லாமல் நழுவுகிறார்.

    சென்ற மாதம் தில்லை தீட்சிதர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் குற்றவழக்கின் உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்குள்ளே நடைபெற்ற ஒரு மர்மமான மரணம் குறித்து சிதம்பரத்தை சேர்ந்த மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவர் வாய்மொழியாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்களிடம் தெரிவித்தார். அதேபோல, சிதம்பரம் நகரத்தின் நக்கீரன் நிருபர் இரவு நேரத்தில் கோயிலுக்குள் நடைபெறும் காமக்களியாட்டங்கள் குறித்து பத்திரிகையில் அம்பலப்படுத்தியிருந்தார். ஆனால் இவை குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசு மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக ( sworn affidavit ) தாக்கல் செய்து, ஒரு சாட்சியமாக முன் நிற்குமாறு அவர்களைக் கோரினோம். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தனர். அதன் விளைவாக தற்போது தீட்சிதர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    “எதற்கு வம்பு” என்று அவர்கள் கருதியிருந்தாலோ, “வழக்கு வாய்தா என்று கோர்ட்டுக்கும் போலீசு நிலையத்துக்கும் அலைய வேண்டுமே” என்று நினைத்திருந்தாலோ இது நடந்திருக்காது. தான் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, ஒரு போலி கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரும், ஒரு முதலாளித்துவ பரபரப்பு பத்திரிகையின் நிருபரும் கொண்டிருக்கும் தார்மீகப் பொறுப்புணர்ச்சி இரயாகரனிடம் இருக்கிறதா?

    சம்பவம் குறித்து அவர் அளிக்கின்ற வியாக்கியானத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமாம். அவர் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமாம். அவர் கேட்கும் ஆவணங்களையெல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்புறம் அவர் கூறும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமாம். -இதுதான் ரயாகரன் முன்வைக்கும் வழிமுறை. தமிழரங்கத்தையும் ரயாகரனையும் அத்தகையதொரு சர்வதேச நீதிமன்றமாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்கி விடலாம். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷையே உலகம் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லையே!

    குற்றம் சாட்டுபவராகவும், குறுக்கு விசாரணை செய்யும் வக்கீலாகவும், பிறகு நீதிபதியாகவும் ரயாகரனே இருக்க விரும்புகிறார். இப்பிரச்சினை குறித்து 2.9.2010 அன்று ரயாகரன் முதன்முதலாக எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பபையும், துவக்க வரிகளளையும் கீழே தருகிறோம் :

    “இந்தியப் போலீசுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்“

    “இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

    கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார்.”

    இதற்குப் பெயர் கிரிமினல் குற்றச்சாட்டா, அல்லது அரசியல் விமரிசனமா? இந்தக் கிரிமினல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கும் நேரில் வருமாறு அழைத்தால், இதனை “அரசியல் ரீதியாக எப்படி பார்த்தல் என்பதில் வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக விளக்கலாம்” என்று கூறி தப்பிக்கிறார் ரயாகரன். இதைவிட நாணயமற்ற பேச்சை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    ஒரு மனிதன், அவன் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு வெங்காயவாதியாக இருக்கட்டும், அவனைத் “திருடன்” என்று கூறுவதும், ஒரு பெண்ணை “வேசி” என்று தூற்றுவதும் அரசியல் விமரிசனங்களா? மார்க்சிய லெனினியத்தில் ரயாகரன் அளவுக்கு எமக்கு ஆழ்ந்த புலமை இல்லாததால் இதனைக் கிரிமினல் குற்றச்சாட்டு என்று புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் குற்றம் சாட்டுபவர் விசாரணைக்கு வந்து தனது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

    நாவலன், எழிலன் குறித்த எங்கள் மதிப்பீடு என்னவாக இருந்தாலும், இந்த விசாரணை, நடுநிலையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதனால்தான் “பகிரங்க விசாரணை” என்ற வழிமுறையை ம.க.இ.க முன்வைத்தது. ஆனால் இதையே ஒரு குற்றமாக்கி, ம.க.இ.கவுக்கும் உள்நோக்கம் கற்பிக்கிறார் ரயாகரன்.

    “ புலிகள் பற்றிய எம் பார்வையும், அதை விமர்சனம் செய்யும் முறையும் தவறானது என்ற அரசியல் கண்ணோட்டம் தான், தீர்மானகரமாக எமக்கு எதிரான ம.க.இ.க.வின் நிலையாக மாறுகின்றது என்று கருதி வருகின்றோம். அனைத்தும் அரசியல் என்ற வகையில், இந்த விசாரணையும் தற்செயலானதல்ல”

    “புலிகள் பற்றிய பார்வையில் அவருக்கும் ம.க.இ.க வுக்கும் கருத்து வேறுபாடு” என்று இரயாகரன் கூறுவதற்கும், தற்போது நாவலன் உள்ளிட்டோர் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கும் என்ன தொடர்பு? அரசியல் ரீதியான கருத்து வேறுபாட்டை கணக்குத் தீர்த்துக் கொள்ளத்தான் விசாரணை என்ற ஆலோசனையை (அல்லது சூழ்ச்சியை) முன்வைத்திருப்பதாக இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறார் ரயாகரன். அல்லது அவருடைய கருத்தின்படி ம.க.இ.க புலி ஆதரவு என்பதால், புலி ஆதரவாளர்களைத் தப்பிக்க வைக்க ம.க.இ.க தந்திரம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இதுதான் அவரது கூற்றின் பொருள். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேர்மையானதொரு வழிமுறையை முன்வைத்திருக்கும் ஒரு புரட்சிகர அமைப்பை இதைவிடக் கேவலமான முறையில் யாரேனும் இழிவு படுத்த முடியுமா?

    இத்தனையும் சொல்லியதற்குப் பிறகு, இந்தியா வருவதில் தனக்கு உள்ள பிரச்சினைகள், சிக்கல்கள் பற்றி அவர் எதற்காக விளக்கவேண்டும்? பகிரங்க விசாரணை என்பதை, “குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான ம.க.இ.க வின் சதித்திட்டம்” என்பதாகச் சித்தரித்து, “வரமுடியாது” என்று நிலை எடுத்தவர் “விசா இல்லாததால் வர இயலாத நிலை”, “கைது செய்யப்படும் அபாயம்” ஆகியவை பற்றியெல்லாம் எதற்காக விளக்கம் அளிக்க வேண்டும்? அனுதாபம் தேடுவதற்கா? “மரண தண்டனைக்குத் தயார், சிறைத்தண்டனைக்குத் தயார்” என்று நாவலனுக்கு சவால் விட்டு அவர் எழுதியவற்றை ஒருமுறை அவரே மீள வாசித்துப் பார்த்தல் நலம்.

    குகநாதனையும், ஜெயபாலனையும், ரயாகரனையும் விருந்துக்கா வருந்தி அழைக்கிறோம்? அல்லது ம.க.இ.க வுக்கு வேறு வேலை இல்லையா? இணையத்தில் இக்குற்றச்சாட்டை முதன்முதலில் எழுப்பியவர் குகநாதன் அல்ல, ரயாகரன். அவருடைய வார்த்தைகளையே மேற்கோள் காட்டுகிறோம்.

    “(குகநாதனை) நான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதுதான், உங்களை கடத்தியதாக கூறுகின்றனரே யார் என்று கேட்கின்றோம். அப்படி யாரும் கடத்தவில்லை என்றதுடன், இது தனிப்பட்ட விவகாரம் என்றும், இதை எழுதுவதை தான் விரும்பவில்லை என்றார். நாம் எழுத உள்ளதை தெளிவுபடுத்தியும், இதில் நடந்தவற்றை பற்றியும் உரையாடினோம்”

    இவ்வாறு தன்னுடைய சொந்த “முயற்சி”யில் நாவலன், செழியன், எழிலன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை எழுப்பியவர் ரயாகரன். குகநாதனைத் தேடிப்பிடித்து தனது குற்றச்சாட்டுக்கு விவரம் திரட்டியவர் ரயாகரன். எனவேதான் குகநாதனை அழைத்து வருவதும் ரயாகரனின் பொறுப்பு என்று கூறுகிறோம்.

    தான் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்போ, நேர்மையோ இரயாகரனுக்கு இல்லை. கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட “புனிதத் திருஉரு” வாக அவர் தன்னைக் கருதிக் கொண்டிருப்பதையே அவரது வாதங்கள் காட்டுகின்றன. அவர் மீது மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்த பல தோழர்கள் மத்தியிலும்கூட அவர் மதிப்பிழந்து வருகிறார். ஒரு அமைப்பு என்பது பல்லாயிரம் தோழர்களைக் கொண்டது என்ற மதிப்போ, மக்களுக்குப் பொறுப்பாக இருப்பது என்ற கம்யூனிஸ்டுக்குரிய பணிவோ அவரிடம் இல்லை. சுயபரிசீலனை அற்ற தன்னகங்காரமும், ஆணவமுமே அவரது பதில் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

    பணத்தைப் பறிகொடுத்ததாகக் கூறும் குகநாதன், ஊடக தருமம் குறித்து பெரும் கவலை வெளியிட்ட “தேசம் நெற்” ஜெயபாலன் ஆகியோரிடமிருந்து எமக்கு எவ்வித பதிலும் வரவில்லை.

    அதே நேரத்தில் “வீடியோவைக் கொடு, ஆடியோவைக் கொடு” என்று பலர் பின்னூட்டமிடுகிறார்கள். “அவை தங்கள் தரப்பு நியாயத்தை நிறுவுவதற்கான ஆதாரங்கள்” என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்து. விசாரணையின் போது அதனை அவர்கள் வெளியிடலாம். குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரம் கேட்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இது ஒரு பாசிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காணமுடியாத நீதி வழங்கு முறையாக அல்லவா இருக்கிறது !

    “விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம்” என்று ம.க.இ.க வெளிப்படையாக பொறுப்பேற்றுக் கொண்டபின்னரும், குற்றம் சாட்டும் இரயாகரன் நழுவுவதும், மற்றவர்கள் மவுனம் சாதிப்பதும், அவர்கள் சார்பில் சிலர் அவதூறாகப் பின்னூட்டம் போடுவதும், இந்த மொத்த விவகாரம் குறித்தும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    இரயாகரனிடம் பதில்களும் அவர் பதிலளிக்கும் முறையும் அவரிடம் நேர்மை இல்லை என்பதையே காட்டுகின்றன. ம.க.இ.க வின் பத்திரிகைகளையும், ஒலி, ஒளித்தகடுகளையும் புலத்திலும் இணையத்திலும் தான் எடுத்துச் சென்றதையும், நாவலன் “திடீர் மார்க்சியவாதி” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டும் நோக்கமென்ன? அவர் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது முதலாளித்துவ ஜனநாயகவாதியாக இருக்கட்டும், அதுவா பிரச்சினை?

    விசாரணை என்று முன்மொழிந்தவுடனே, “குற்றவாளிகளைத் தப்பவைக்க ம.க.இ.க முயற்சிக்கிறது” என்று முத்திரை குத்துகிறார் ரயாகரன். அவர் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதற்கே வேறு மறைவான நோக்கங்கள் இருக்கின்றனவோ என்ற வலுவான சந்தேகத்தைத்தான் அவரது அணுகுமுறை ஏற்படுத்துகிறது.

    இந்தப் பிரச்சினை குறித்து அவர் நடத்தியிருக்கும் விசாரணை, ம.க.இ.க வுக்கு அவர் அளித்திருக்கும் பதில் ஆகியவற்றிலிருந்து அவருடைய மனோபாவம் குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. நாவலனுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு பற்றிக் கேள்விப்பட்டவுடனே, “ஆகா கிடைத்தது வாய்ப்பு” என்று அவர் மகிழ்ந்திருக்கிறார். குகநாதனின் யோக்கியதை என்ன என்பது பற்றிக் கூடக் கவலைப் படாமல் அவரைத் தேடிப்பிடித்து விவரம் கேட்டு, “கடத்தல், தரகுவேலை, மாமாவேலை, கட்டப்பஞ்சாயத்து” என்று எழுதிவிட்டார். “குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரலாம் -வாருங்கள்” என்று அழைத்தால் ஓடி ஒளிகிறார்.

    விவகாரம் இத்தனை தூரம் போகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து செய்த குற்றத்துக்காக நாவலன், எழிலன், செழியன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கோரவேயில்லை. அது அவரது நோக்கமும் அல்ல. அவர் கேட்பது தன்னுடைய சந்நிதியில் ஒரு சுயவிமரிசனம். ஒரு மழுப்பலான சுயவிமரிசனத்தை அவர்கள் வெளியிட்டிருந்தாலும், உடனே அதனைப் “பெருந்தன்மையுடன்” ரயாகரன் அங்கீகரித்திருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள் சுயவிமரிசனம் செய்து கொள்ள மறுத்திருந்தால் புலம்பெயர் உலகத்தின் புகழ்பெற்ற குழாயடிச்சண்டை வரலாற்றில், இன்னொரு அத்தியாயமாக இது சேர்ந்திருக்கும்.

    ம.க.இ.க இப்பிரச்சினையில் நுழைந்து இதனை ஒரு முடிவை நோக்கித் தள்ளும் என்று ரயாகரன் எதிர்பார்க்கவில்லை போலும். அதனால்தான் தான் பின்வாங்குவதை மறைக்கும் பொருட்டு, “ம.க.இ.க குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறது” என்று அவதூறு செய்கிறார். “நாங்கள் சொல்வதில் நம்பிக்கையில்லையா? எங்களை பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறீர்களே” என்று நாவலனோ அருள் எழிலனோ, அருள் செழியனோ எங்களிடம் கேட்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு கேட்கவில்லை.

    ஆனால் அவர்களைக் காட்டிலும் நெடுநாளாக எம்முடன் தொடர்பில் இருப்பவரும், ம.க.இ.க வின் அரசியலில் உடன்பாடு இருப்பதாகக் கூறுபவருமான ரயாகரன், அவருக்கு உவப்பில்லாத ஒரு வழிமுறையை நாங்கள் முன்வைத்தவுடனே, குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் கூறி, ம.க.இ.க வின் மீது எதிர்க்குற்றம் சாட்டுகிறார். அரசியல் உள்நோக்கமும் கற்பிக்கிறார்.

    கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது. அந்த வகையில் ரயாகரன் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவே.

    மேற்கொண்டு இப்பிரச்சினையில் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்.

    இவண்
    மக்கள் கலை இலக்கியக் கழகம்,
    தமிழ்நாடு.

    நன்றி – வினவு.கொம்

    Reply
  • பல்லி
    பல்லி

    கடுப்பானவரே தாங்கள் றயாகரன் மீது விளக்கம் கேட்பது ஒரு நாகரிகமற்ற செயல்; நீங்க சொல்லும் ம, க; இ; க பெரிய அமைப்பாக சிலர் சொல்லுகிறார்கள். எனக்கு அது தெரியாது காரணம் நான் சமூகம் பற்றி மட்டுமே சிந்திப்பவன்(என் தகுதியும் அதுதான்) ஆனால் இன்று நடப்பவையை பார்த்தால் இந்த ம க இ க இப்படி சொல்லலாமோ என தோன்றுகிறது மக்கள் கவலை இல்லாத கழகம்; இந்த பிரச்சனைக்கு உங்கள் மேல் நீதிமன்றமான ம க இ க வை நாவலனிடம் கேக்க சொல்லுங்க குகநாதனின் மனைவியை இரவு ஒரு மணிக்கு எழுப்பி குடிக்க தண்ணியா கேட்டாரென; இதுக்கு மட்டும் விடையோடு வாருங்கள் இல்லையேல் கருணாநிதி, ஜெயலலிதா; மகமோகன்சிங் மீது பாட்டு பாடுங்கள் அதுவே உங்கள் சமூக சிந்தனையாக இருக்கட்டும்; நாவலனையும் அருள் சகோதரர்களையும் காக்க தான் ஒரு அமைப்பாயின் அந்த அமைப்பையும் நாம் விமர்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறோம், சாப்பாடு என்றால் செமிக்க வேண்டும், மார்க்ஸ்சியம் என்றால் குளப்பவேண்டும் என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக நாம் குழம்ப மாட்டோம் காரணம் நாம் குகநாதனின் வக்கில் அல்ல கடத்தல் கப்பத்துக்கு எதிரானவர்கள் மட்டுமே;எனக்கு முன்னால் நாவலன் தாம் குகநாதனை பிடித்து(கடத்தி) பணம் வேண்டி விட்டோம் என பேட்டை ரவுடிபோல் சொன்னார், நாவலருக்கு இப்போது பல்லி யாரென்பது புரியும் என நினைக்கிறேன்; ரயாகரன் மீது எனக்கும் பல முரன்பாடான கருத்துக்கள் உண்டு அதை நான் தேசத்தில் பலமுறை எழுதியும் உள்ளேன், ஆனால் அவரது பாசையில் இந்த விடயத்தில் அவர்மீது எந்த கொம்பனாலும் தவறு சொல்ல முடியாது;

    Reply
  • பல்லி
    பல்லி

    //மேற்கொண்டு இப்பிரச்சினையில் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்.//
    இந்திய தமிழனுக்காய் இலங்கை தமிழனுக்கு பிரியாவிடை கொடுக்கிறது ம க இ கழகம்; பலே பலே; இதுவரை நான் அறிந்தவரை இவர்களது கருத்தை றயாகரன் பரப்பினாரே தவிர றயாகரனின் தனி கருத்துக்களை ம க இ கழகம் ஏற்றுகொள்ளவில்லை என்பதில் வெளிப்பாடே இந்த மிரட்டலான விலகல்; கண்டிப்பாக றயாகரன் இதுக்கு பயபடவோ அல்லது தாழ்ந்தோ போகமாட்டார் என அவரது கடந்தகால எழுத்துக்களை வைத்து சொல்லுகிறேன், ஆனால் ம க இ கழக பல குப்பைகள் இனி அம்பலம் ஆவது உறுதி,

    Reply
  • Mohan
    Mohan

    மேலே நிலா என்பவர் கேட்டுள்ள கேள்விகளுக்கு முதலில் சபா நாவலன் பதில் சொல்லட்டும். அவர் பதில் சொன்னால் அதற்குப்பின்னர் சென்னையில் விசாரணை பற்றி பேசுவோம். முடிந்தால் இங்கே பின்னுட்டம் விடுபவர்கள் சபா நாவலனிடம் பதிலைப்பெற்றாவது சொல்லுங்கள்.

    நிலாவின் இந்த மடல் இனியொருவிலும் பின்னூட்டம் விடப்பட்டிருந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே அது சபா நாவலனால் அகற்றப்பட்டுவிட்டது. துணிவிருந்தால் முதலில் அதனை வெளியிட்டு அதற்குப் பதிலை சபா நாவலன் எழுதவேண்டும். அதைவிடுத்து தமிழகத்திலுள்ள ஒரு அமைப்பினூடாக பேசவேண்டியதில்லை.

    Reply
  • indiani
    indiani

    //கருணாநிதிஇ ஜெயலலிதா; மகமோகன்சிங் மீது பாட்டு பாடுங்கள் அதுவே உங்கள் சமூக சிந்தனையாக இருக்கட்டும்; நாவலனையும் அருள் சகோதரர்களையும் காக்க தான் ஒரு அமைப்பாயின் அந்த அமைப்பையும் நாம் விமர்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறோம்இ சாப்பாடு என்றால் செமிக்க வேண்டும்இ மார்க்ஸ்சியம் என்றால் குளப்பவேண்டும் என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக நாம் குழம்ப மாட்டோம்//

    நன்றி பல்லி உங்களுடன் நானும் உடன்படுகிறேன் இந்த மாக்சீயக்கட்சி பற்றி நாம் தேசத்தில் ஆராய வேண்டியுள்ளது முக்கியமாக இந்த மாக்சிய அமைப்பு என்ன வகையான மாக்சீயத்தை முன்வைக்கிறது என்று இது போன்ற அமைப்புக்களால் தான் மாக்சியத்தின் மீது மக்கள் அக்கறையற்றுப்போனது உதாரணம் நாவலன் இரவு பெண்ணுக்கு போன் எடுத்து பேசிய விடயத்தில்….. இனிமேல் இவர்கள் பெண்ணியம் என்பார்கள் இவர்கள் போன்றவர்களால் மாக்கீயத்துக்கு இழுக்கு இதுபோன்ற காரணங்களே மக்கள் மாக்சீயம் என்றால் ஒடுவதற்கான காரணங்கள் தொடர்ந்தும் இந்த மாக்சீயவாதிகளை விமர்சிப்போம்.

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    குகநாதனும் ரயாகரனும் நாவலனும் வீட்டிலிருந்து விசில் அடித்துக்கொண்டிருக்க, இங்கு வந்து பலர் பக்கம் பக்கமாக பின்னூட்டம் விட இதனால்தான் அடிக்கடி தேசம் நெற் நிக்குதோ தெரியவில்லை.
    இதுவெல்லாம் தேவையில்லாத வேலை. எல்லோரும் கடைசியில் நன்றி வணக்கம் சொல்லி ஓடிவிட தயவு செய்து இதை நிற்பாட்டி 4 தேவாரத்தையாவது எழுதுங்கள்.- ஜெயா பிரான்ஸ்

    Reply
  • kamal
    kamal

    //மேற்கொண்டு இப்பிரச்சினையில் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்//

    இப்படியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் ஓடி ஒளிக்க முடியாது இது நாவலனின் காசுக்காக வேலை செய்யும் கட்சியாகவே எனக்கு தெரிகிறது.

    இனிமேல்தான் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்க்கு ஈழத்தமிழர்களின் விமர்சனகளம் என்ன என்பது புரியப்போகிறது.

    Reply
  • Nila
    Nila

    2005ம்ஆண்டு குகநாதன் தன்னை சத்தியமூர்த்தி என்ற பத்திரிகையாளர் மூலம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தார் என்று சொல்லும் அருள் செழியன் அதற்கு எதிராக இன்னுமொரு கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு ஐந்து வருடங்கள் காத்திருந்திருக்கிறார். இந்த ஐந்து வருடங்களில் சில வருடங்கள் குகநாதனே சென்னையில் அலுவலகத்தை வைத்து இயங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அடிக்கடி சென்னை சென்றும் வந்திருக்கிறார். அப்படியிருக்கையில் தன்னைக் கட்டப்பஞ்சாயத்து செய்த அதே பொலிஸ் அதிகாரிகள், அதிகார வர்க்கம் தற்போதும் அதிகாரத்திலிருக்கும் நிலையில் குகநாதனை சென்னை வந்து பொலிசாரின் கட்டப்பஞ்சாயத்து குறித்து பகிரங்க கூட்டம் போடுங்கள் என்று அழைப்பது சரிதானா? தன்னை பொலிசார் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள் என்பதை சொல்லுவதற்கு ஒரு இந்தியரே ஐந்து வருடங்கள் காத்திருந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை முதலில் இந்த ம.க.இ.க. அருள் செழியனிடம் கேட்டுத் தெரிந்து சொல்லட்டும். அதற்குப் பிறகு ஒரு இலங்கைத் தமிழர் சென்னை வந்து பொலிசாருக்கு எதிராக கூட்டம் போடுவார்.

    Reply
  • மாயா
    மாயா

    //குகநாதனும் ரயாகரனும் நாவலனும் வீட்டிலிருந்து விசில் அடித்துக்கொண்டிருக்க….//

    எடுத்தவன் மகிழ்வான். தப்பினவன் போதுமடா சாமி என்று இருப்பான். இடையில் அகப்பட்டவன் கதை கந்தலாகிக் கொண்டிருக்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் கோட்டுக்கு போகாமல் குரல் கொடுத்தவனை தண்டிக்க சமன் விட்டுக் கொண்டிருப்பது இந்த வருடத்தின் சிறந்த காமடி?

    Reply
  • aathav
    aathav

    அவதூறு பரப்பும் இரயாகனிடம் இருந்து விலகிக்கொள்கின்றோம்!
    அதுசரி உந்த ம.க.இ.இவ்வளவு காலமும் இரயாகரன் தலைமையில்தான் இயங்கியது! அவர் அவதூறு பரப்ப இவர்கள் பிரிந்து விலகிக் கொள்கின்றார்கள்!? அப்போ> இரயாகரன் இப்பவும் தன்தமையில்–கொள்கையில்–உங்களைவிட பலமாகத்தான் உள்ளார்??… ஓர் சர்வதேச நீதிமன்றம் அமைத்து> அதில் இரயாகரனை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி>பல புகழ்பெற்ற இலங்கைச்-இந்தியச் சட்டவல்லுனர்களை ஏற்படுத்தி> புதிய ஐனநாயகக்கட்சி-நாவலன்-உட்பட பல பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியமளித்த-இந்த “டயல் அட்பார்” வழக்கின் தீர்ப்பு> பாபர் மசூதி வழக்கு தீர்ப்பைவிட கோமாளித்தனம் கொண்டதே! இதற்குத்தான் மணி என்ற ஒருவர் இந்தக் கும்மாளம் போட்டாரோ? நான் ஏற்கனவே சொன்னேனே இது ஓர் உரிச்ச வெங்காய வழக்கென்று!

    Reply
  • மோகன்
    மோகன்

    இன்னுமா இந்த ஊர் என்னை நம்புது-மோகன் ஜெயக்குமார்

    புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இதழ்களை அவற்றின் முதலாவது இதழ்களில் இருந்து இன்று வரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான். சில விடயங்களில் இவற்றில் வரும் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கின்றது. ஆனால் அக்கடடுரைகளில் அவர்களின் பக்கத்து, நியாயமும் நேர்மையும் தர்க்க ரீதியாக இருந்திருக்கின்றது. ஆனால் குகநாதன் கடத்தல் விவகாரத்தில் அவர்கள் தீர்ப்பை மாற்றிச் சொல்லும் நாட்டாமைகளாக ஒரு அறிக்கை எழுதியிருப்பதனை வாசித்த போது இவ்வளவு காலமும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும் மண்ணாகிப் போய் விட்டது. இந்த அறிக்கை எழுதுவதற்காக தேசம் நெற்றினை அடிக்கடி பார்த்திதிருப்பார்களோ?. ஏனெனில் ம க இ க இன் வினவில் வந்த அறிக்கை தேசம் நெற்றில் வெளிவரும் கட்டுரைகள் போல் வந்திருக்கின்றது.

    இந்த பிரச்சினையில் குகநாதன் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறும் ரயாகரன் என்று அறிக்கை சொல்கிறது. குகநாதன் தரப்பில் நியாயமிருப்பதாக ரயா எங்கே எழுதியிருந்தார் என ரயாவின் கட்டுரையை மறுபடியும் ஒருமுறை படித்து விட்டு சொல்லட்டும். குகநாதன் கடத்தப்பட்டார் என்றே ரயாவின் கட்டுரை சொல்கின்றது. ஏங்களது நாடுகளில் பொலீஸ் தான் ரவுடிகளை மிஞ்சிய ரவுடிகள் என்பதும் தமிழ்நாட்டுப் பொலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்பதும் ம க இ க விற்கு என்ன தெரியாத விடயமா?. சங்கராச்சாரியை கைது செய்த பிரேம்குமார் என்ற பொலீசு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நல்லகாமனுக்கு செய்த கொடுமைகளை பக்கம் பக்கமாக புதிய ஜனநாயகத்தில் படித்து இருக்கிறேன்.

    குகநாதன் சொல்வதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஜயம் கூட ரயாவிற்கு ஏற்பட்டதாக தெரியவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகின்றது. குகநாதன் உத்தமபுத்திரன் சத்தியவான் என்று எங்காவது ரயா எழுதியிருக்கின்றாரா?. ம க இ க திடீர் நம்பிக்கை வைத்திருக்கும் அருட்செழியன் கொடுத்த புகாரின் பேரில், தர்மபுரியில் தோழர்களைக் கொலை செய்த தேவாரம் போன்ற காவல் நாய்களை கொண்டுள்ள தமிழ் நாட்டுப் பொலிசாரால் குகநாதன் கைது செய்யப்பட்டார். அவர்களின் கட்டப்பஞ்சாயத்தினால் பணம் கொடுத்து வழக்கு ஏதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டார். இதில் அருள்எழிலன் நாவலன் பங்குகள் என்ன என்பதனைத் தான் ரயா கேட்டிருந்தார். அருள்செழியனுக்கும் குகநாதனிற்குமான பிரச்சினைக்கோ யார் உண்மை சொல்கின்றனர் என்ற ஆய்வுக்கோ ரயா போகவில்லை. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கட்டப்பஞ்சாயத்தில் ஏன் நாவலன் தலையிட வேண்டும். அது தான் இங்கு கேட்கப்படும் கேள்வி.

    அருள்எழிலன் காவல் நிலையத்தில் நிற்கிறார் சரியாக அதேநேரத்தில் நாவலன் தற்செயலாக தொலைபேசியில் அழைக்கிறார். அருள்எழிலன் பேசிவிட்டு “இந்தாங்க பக்கத்திலே நம்ம மச்சான் ஒருத்தர் நிற்கிறார். அவன் கிட்டேயும் பேசுங்க” என்பது மாதிரி தடுப்புக்காவலில் இருக்கும் குகநாதனிடம் பேசக் கொடுக்கின்றார். தடுப்புக் கைதியிடம் எதற்காக அருள்எழிலன் நாவலனை பேசச் சொல்ல வேண்டும்.?. இலங்கை அரசின் கைக் கூலி குகநாதன் என்று இன்று எழுதித்தள்ளும் நாவலன் எதற்காக அவரிடம் பேச வேண்டும்?. ஒரு அப்பாவி பொலிஸின் கட்டைப்பஞ்சாயத்தில் சிக்கியிருந்தால் அவரை காப்பாற்றுவதற்காக பேசியிருந்தால் நல்ல முயற்சி என்று சொல்லலாம். இலங்கை அரசின் கைக் கூலி பலரிடம் மோசடி செய்த பேர்வழியான குகநாதனிடம் எதற்காக பேச வேண்டும்?. இன்றைக்கு தனக்கும் நாவலனிற்கும் இச் சம்பவத்துடன் தொடர்பில்லை என்று விளக்கம் சொல்லும் அருள்எழிலன் எதற்காக காவல் நிலையம் செல்ல வேண்டும். ஒரு தடுப்புக் கைதியிடம் அந்த புகாரிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லாத ழூன்றாவது பேர்வழி பேசமுடியுமா?. போராட்டங்களில் கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லப்பட்டதும் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கிடைக்காமல் மயங்கி விழுந்ததும் தோழர்களிற்கு இந் நேரத்தில் ஞாபகம் வரவில்லையா?.

    புலிகள் பற்றிய அபிப்பிராயத்திற்கும் அருள்எழிலன் நேர்மைக்கம் சின்னப்பிள்ளைத்தனமாக முடிச்சு போடக் கூடாது என்று அறிவுரை கூறப்படுகின்றது. அருள்எழிலன் ஒரு தொழில்முறை பத்திரிக்கையாளன். தமிழ் நாட்டில் உள்ள ஒரு கைப்பிள்ளை புலிகளை ஆதரித்தார் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஜனநாயக மறுப்பு பாசிசம் கடைசி நேரத்தில் கூட தங்களின் பாதுகாப்பிற்காக மக்களை பலி கொடுத்தமை போன்றவைகளை செய்த புலிகளை மனச் சாட்சியுள்ள எந்த மனிதனால் ஏற்றக் கொள்ள முடியும். ஈழமக்களை கொலை செய்த ராஜீவின் மரணத்தின் போது தமிழ் நாட்டில் வாழ்ந்த ஈழமக்களை காங்கிரஸ் அ.தி.மு.க குண்டர்களிடமிருந்து காப்பாற்றிய ம.க.இ.க மேல் கிட்டு பழி போட்டதனை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை.

    நல்லவர் வல்லவர் என்று ம.க.இ.க வால் சொல்லப்படும் அருள்எழிலன் எழுதுகின்றார் தனது நண்பர் ஒருவர் சொல்கின்றாராம் ரயா மனநிலை சரியில்லாதவர் என்று. மனநிலை சரியில்லாத ஒருவர் தானா ம.க.இ.க வின் அரசியலை இன்று வரை ஏற்று வந்திருக்கின்றார்?. மனநிலை சரியில்லாத ஒருவர் எழுதியதற்கு ஏன் அருள்எழிலன் வேறு வேலை இல்லாமல் காலத்தை விரயம் செய்து மறுமொழி எழுத வேண்டும். அவரின் இன்னொரு நண்பர் சொன்னாராம் ரயா கட்டுரை எழுதி விட்டு தானே பத்து பின்னோட்டங்களையும் எழுதி விடுவார் என்று. ரயாவின் கட்டுரைக்கு பெரும்பாலும் பின்னூட்டங்கள வருவதில்லை. அப்படி வந்தாலும் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. ம.க.இ.க வின் நாட்டாமை தீர்ப்பு பற்றிய கட்டுரைக்கு தான் ஒருவரிற்கு அருள் வந்து சாமியாடி மணி அடித்து பின்னூட்ட மழை பொழிகின்றார்.

    மருதையனின் சூரியோதயம் வானொலி நிகழ்ச்சியின் போது நூற்றுக்கணக்கான கேள்விகள் வந்துள்ளன என நாவலன் மருதையனை சந்தோசப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பொய்க் கணக்கு சொன்னார். புpன்பு வினவுதளத்தில் இதைப் பற்றி கேட்ட போது நேர்மையாக ஒத்துக் கொள்ளாமல் தோழர்கள் கூறியதைத் தான் நான் சொன்னேன் என்று மேலும் ஒரு பொய் கூறி தன் சக தோழர்களின் மேல் பழியினைப் போட்டார். இந்த சின்ன விடயத்திற்கே பொய் சொல்பவரின் வாக்குமூலத்தை நம்பித் தான் ம.க.இ.க தீர்ப்பு எழுதியிருக்கின்றது.

    தான் தனிப்பட்ட தாக்குதல்களில்; ஈடுபடுவதில்லை என்று அகிம்சை பேசும் நாவலன், ரயா வங்கிக் கொள்ளை காசை மடக்கி விட்டார் என்று அசோக் எழுதிய அவதூற்றினை எப்படி இனியொருவில் வெளியிட்டார். NLFT – PLFT பிரிந்த போது பணம் ஆயுதங்கள் என்பன அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டன. ஈழப் போராட்ட இயக்கங்களின் ஒரே ஒரு ஜனநாயக பூர்வமான பிரிவு இது என்றே கூறலாம். இச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரயா காசை களவாடி இருந்தால் ஏன் ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. NLFT இன் நிதிப் பொறுப்பாளராக இருந்தவர் இனியொருவுடன் தொடர்பில் தானே இருக்கின்றார். அவரிடம் இது பற்றி அறிய முடியும் என கருதுகின்றேன். சமர் பத்திரிக்கை பிரான்ஸிலிருந்து வந்தபோது நாவலனும் ஆசிரியர் குழுவில் ரயாவுடன் இருந்தவர் தானே. அப்போது இந்தக் கேள்வி ஏன் நாவலனிற்கு எழவில்லை?.

    குகநாதன் பிரச்சினையில் நாவலன் அசோக் இருவரும் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள். குகநாதன் இலங்கை அரசின் கைக்கூலி என்பதால் தன் மீது தேசம்நெற்றில் அவதுர்று செய்துள்ளார் என நாவலன் சொல்கின்றார். அசோக்கும் தமிழ் தேசியவாதி இலங்கை அரசினை எதிர்ப்பவர். ஏன் அவரை குகநாதன் அவதூறு செய்யவில்லை?. முன்னர் பின்னர் தெரியாத நாவலனின் மீது மட்டும் குகநாதன் பழி சொல்லும் காரணங்கள் தான் என்ன?.

    ரயாவும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர் என்று ஒரு வசனம் வருகின்றது. ரயா இடதுசாரி நிலையிலிருந்து கேட்ட கேள்விக்கும் ஜெயபாலன் தன்னுடைய இலங்கை அரசு சார்பு நிலையிலிருந்து கேட்கும் கேள்விகளிற்கும் ஏன் முடிச்சுப் போடுகின்றீர்கள். ரயாவும் ஜெயபாலனும் கூட்டாக இந்த கட்டுரைகளை எழுதினார்களா?. 2008 இல் நாவலனை அவதூறு செய்த தேசம்நெற்றினை மறுத்து நாவலனிற்கு நற்சான்றிதழ் கொடுத்தீர்கள். நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது. இப்ப என்ன வந்தது என்று கேட்கிறீர்கள். ரயா நாவலனிற்கு சான்றிதழ் கொடுத்தது நாவலனின் இலங்கை அரசிற்கு எதிரான கருத்துக்களிற்காகவே. அரசசார்பு தேசம்நெற் நாவலனை விமர்சிக்க எந்தவிதமான தகுதியும் அற்றது என்பதற்காகவே. ரயா நாவலனை அல்ல மாறாக நாவலன் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டின் சரியான கூறுகளை தூக்கிப் பிடித்திருந்தார்.

    புதிய திசைகள் – ம.க.இ.க இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்தினை சீர்குலைப்பதற்காக ரயா முயற்சித்ததாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று ரயா எழுதி இருக்கின்றார். அத்தகைய கருத்து எதனையும் எம்மிடம் நாவலன் கூறியதில்லை என்று எழுதி இருக்கின்றீர்கள். ரயாவும் அதைத் தானே கூறியிருக்கின்றார். ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ரயாவோ அன்றி அவருடன் இணைந்துள்ள தோழர்களோ ம.க.இ.ம் விடம் பேசவில்லை. நாவலன் தான் தன்னிடம் ம.க.இ.க வினர் தங்களிற்கு ஜரோப்பாவிலிருந்து வந்த தொலைபேசியில் இது புலிகளின் பினாமி அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் என எச்சரித்திருந்ததாக கூறியதாக புதியதிசைகள் அமைப்பினரிடம் கூறியதுடன் இது நிச்சயமாக ரயாவாகத்தானிருக்க முடியும் எனவும் கூறியிருந்தார். உங்களிற்கு தெரிந்த புதிய திசைகள் அமைப்பினரிடம் இதைப் பற்றி விசாரிக்கலாம். புதிய ஜனநாயக மக்கள் முன்னணியையும் புதிய திசைகளையும் எதிர்நிலைகளில் வைத்திருப்பதற்கான நாவலனின் கட்டுக்கதைகள் தாம் இவை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உங்கள் மூலமே இது வெளி வந்து விட்டது.

    ரயாகரனிற்கு அரசியல் இல்லை. தனிமனித தாக்குதல்கள் தான் தெரியும் என்கின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை போன்றதொரு கட்டுரையை ஊஐயு இனாலும் எழுத முடியும். ஆனால் எழுதுபவர்களின் அரசியல் நேர்மையும் தனிப்பட்ட நேர்மையும் தான் நாங்கள் வேண்டுவது. ஈழப் போராட்ட வரலாற்றில் விமர்சனங்கள் சுயவிமர்சனங்கள் என்பன இல்லாமல் போனதால் தான் எம் மக்கள் ஆயிரக்கணக்கில் இயக்கங்களினால்; படுகொலைகளுக்கு உள்ளாகினர்.

    ரயாவுடன் NLFT இல் இருந்தவர்கள் சமர் பத்திரிக்கையில் இருந்தவர்கள் இன்றைக்கும் அவருடன் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். பல புதியவர்களும் இணைந்து செயற்படுகின்றார்கள். ஆனால் நாவலனுடன் TELO இல் இருந்தவர்கள் சமரில் இருந்தவர்கள் எவரும் இன்று கூட இல்லை. இணையத்தள எழுத்துக்களில் இருந்து ஒருவரை மதிப்பிட முடியாது. நடைமுறை இல்லாத தத்துவம் படுகுழியில் தள்ளும் என்பது ம.க.இ.க வினரிற்கு தெரியாதா?. ம.க.இ.க வுடன் தொடர்பில் இருக்கும் ஈழத்தினை சேர்ந்த தோழர்களிடம் நாவலனின் தனிப்பட்ட நேர்மையையும் நடைமுறையையும் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    Reply
  • singam
    singam

    ம.க.இ.க வின் அறிக்கை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இங்கு ம.க.இ.க வரை பாய்ந்துவிட்டதோ என எண்ணத் தூண்டுகிறது. ஒரு புரட்சிகர இயக்கம் எதற்காக “அருள்” சகோதரர்களுக்கும் நாவலன் போன்றோருக்கும் வக்காலத்து வாங்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்களையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர். நான் அறிந்தவரையில் செய்தி வெளியிட்ட ஒரு ஊடகத்தை, அதன் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்த ஒரே புரட்சிகர அமைப்பு என்ற பெருமை ம.க.இ.க க்கே சேரும்.

    இன்று “தேசத்தை” அரசின் கை;ககூலி என்றும் கம்சாவின் செல்வாக்கில் இயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டும் ம.க.இ.க வானது 2005ம் ஆண்டு இதே தேசம் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (நன்றி- தேசம் சஞ்சிகை மே05-யூலை05)

    “தேசம் ஏப்ரல் இதழில் ஸ்டாலின் பற்றிய கருத்துக்களை அவதூறுகளுக்கு எதிராக எஸ.பாலச்சந்திரன் வைத்துள்ளார். விவாதம் தொடரும், ஆதரவு மற்றும் எதிரான கருத்துக்களை அனுப்பலாம் என்று கூறியிருந்தீர்கள். எதிரானவை என்றால் கெர்ஸ்ட் பரம்பரைகளின் அவதூறுகள்தான் வந்து நிற்கும். எனவே தயவு செய்து மீண்டும் ஸ்டாலின் மீதான அவதூறுகளை பிரசுரிக்காதீர்கள்.

    இங்கு தமிழகத்தில் மதன் என்கிற விசித்திர ஜந்து தோழர்.ஸ்டாலின் அவர்களை வக்கிர முறையில் அவதூறு செய்து எழுதியிருந்தார். அச் சமயம் எமது புரட்சிகர அமைப்புகளின் சார்பாக ஜீனியர்விகடன் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் மக்களிடம் “மதன்மாமா”வை அம்பலப்படுத்தி சுவரொட்டியும் ஒட்டினோம். புதிய ஜனநாயகத்தில் நவ-2004இலும் புதிய கலாச்சாரத்தில் மார்ச்-2000 முதல் யூன்-200 வரையிலும் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகளை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவற்றை மறுபிரசுரம் செய்வதன் மூலம் அவதூறுகளை அம்பலப்படுத்தவும் அவதூறுகளை உண்மையென்றெண்ணியவர்களை தெளிவுபடுத்தவும் இயலும் என்று நம்புகிறோம்.”

    இங்கு இந்த வரிகளை சுட்டிக்காட்டுவதன் நோக்கம் ம.க.இ.க வை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதல்ல. மாறாக இந்த அருள் சகோதரர்களின் விடயத்தில் அவர்கள் எந்தளவு தலை கீழாக செயற்பட்டுள்ளார்கள் என்பதை இனம் காண்பதற்கே. அன்று தேசம் ஆசிரியர் தொடர்பு கொள்ளப்படுகிறார். இன்று அருள் சகோதரர்களுக்காக அதே தேசம் ஆசிரியர் கம்சாவின் ஆளாக இனம் காணப்படுகிறார். என்னே “அருள்” சகோதரர்களின் மகிமை! ஏப்படியெல்லாம் ம.க.இ.கவை மாற்றி பேசவைக்கிறது!! வாழ்க “அருள”; சகோதரர்கள!! இன்னும் என்னென்ன அதியம் நிகழ்த்தப் போகிறார்களோ?

    ம.க.இ.க வானது இந்த விடயத்தை ஏதோ நாவலன் மற்றும் ரயாகரன் என்ற இருவருக்கிடையிலான பிரச்சனையாக சுருக்கிறது. சரி அப்படியே பார்த்தாலும் ரயாகரன் தான் மார்க்சிச லெனிச மாவோசிச வழிகாட்டலில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க விரும்புவதாக கூறுகிறார். ஆனால் “அருள்” சகோதரர்கள் அவர்கள் தங்களுக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனர். அத்துடன் பணத்திற்காக புலிகளுடனும் புலிகளுக்கு எதிரான குகநாதனுடனும் ஒரே சமயத்தில் உறவு வைத்து செயற்படுவதே தமது பாதை என்கின்றனர். நாவலனோ மாக்சியமே தவறு என்றும் தமிழீழத்திற்கான புதிய மாக்சியம்(நாவலனிசம்!) படைக்க வேண்டும் என பகிரங்கமாக கூறி வருகிறார். இங்கு ம.க.அ.கவானது 20வருடம் தங்களுடன் தொடர்பில் இருந்த புரட்சிவாதியான ரயாகரனை நம்பவில்லை. மாறாக “அருள்” சகோதரர்களை நம்புவதுடன் அவர்களுக்காக வக்காலத்து வேறு வாங்குகிறது. இதனால்தான் ம.க.இ.கவின் அறிக்கை ஆச்சரியம் கொடுக்கிறது என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.

    இங்கு ம.க.இ.க வானது நடுநிலையுடன் செய்தி வெளியிட்ட தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்களையும் விமர்சனம் செய்வதோடு விசாரணைக்கு வரும்படி அழைக்கின்றனர். அவர்களின் இந்த முட்டாள்தனமான அறிக்கைக்கு தேசம் ஆசிரியர் நிச்சயம் நல்ல பதில் கொடுப்பார் என நம்புகிறேன்.

    Reply
  • BC
    BC

    2005ம் ஆண்டு தேசம்நெற் இருந்தது தெரியாது. புலிகளின் பொய்யை தான் தட்டி பார்ப்போம். சொந்த பகுத்தறிவு, தேனி, உறவினர்கள் தகவல்கள் மட்டும் தான் உதவியாக இருந்தது. மகஇக புலி ஆதரவாளரை கொண்டு கட்டுரை எழுதிய போதே அவர்களை பற்றி விளங்கிவிட்டது. தகவலுக்கு நன்றி சிங்கம்.

    Reply
  • senthooran
    senthooran

    சிறப்புமுகாம் -ஒரு
    மூடாத கல்லறை
    அப்படியானால் அகதிகள்?
    அவர்கள்
    உயிரோடு இருக்கும்
    பிணங்கள்!!

    மத்திய அரசின் தவறா?
    மாநில அரசின் தவறா?
    என்பதை நாமறியோம்.
    சிறப்புமுகாமில் வாடும்
    நாம் அறிந்ததெல்லாம்
    முகாம் சுவர் வலிது!

    சிறப்புமுகாமின்
    சித்திரவதைகளினால்
    ஒவ்வொரு நாளும்
    ஆண்டாய் கழியும்
    அவ் ஆண்டின் நாட்களோ
    நீண்டு தெரியும்!

    சிறப்புமுகாம்
    ஒரு மூடாத கல்லறை
    அப்படியானால்
    அகதிகள்?
    அவர்கள்
    உயிரோடு இருக்கும் பிணங்கள்!
    (இந்த கவிதை 1995ம் ஆண்டு துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த தோழர்.பாலனால் எழுதப்பட்டது. நன்றி- தேசம் சஞ்சிகை)

    இந்த கவிதை வரிகளைப் படிக்கும்போது சிறப்புமுகாம் கொடுமைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டு பொலிஸ் மூலம் குகநாதனைக் கடத்தி பொலிஸ் கமிஸனர் அலுவலகத்தில் வைத்து வீடியோ படமும் பிடித்து பணத்தையும் பெறும் அளவுக்கு செல்வாக்கு படைத்த “அருள்” சகோதரர்கள் இந்த சிறப்புமுகாம் அகதிகளுக்காக ஒரு முறை தன் செல்வாக்கை பிரயோகித்தால் என்ன?

    குகநாதனைக் கடத்தினால் 15 லட்சம் பணம் கிடைக்கும். இந்த அகதிகளுக்காக கதைத்தால் என்ன கிடைக்கும் என்று ஒருவேளை “அருள்” சகோதரர்கள் சிந்திப்பார்களேயானால் அதைவிட அதிக பணத்தை புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து பெற்றுத் தரமுடியும்.

    அவரிடம் நான் மிகவும் மன்றாட்டமாக கேட்பது என்னவெனில் தயவு செய்து உங்கள் செல்வாக்கில் ஒருசிறிதளவை பாவித்து இந்த சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெற வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    ஆள்கடத்தலும், பணம்பறிப்பும், தீர்ப்பும்

    இக்கடத்தல் விவகார நாடகத்தில் இப்போது நடைபெறுவது தீர்ப்பு வழங்கும் காட்சியாகும். இந்தியாவில் மார்க்சிய இயக்கமான மக்கள் கலை இலக்கிய கழகம், (மகஇக) இலங்கை சேர்ந்த குகநாதனை கடத்தி பணம் வசூலித்ததாக அறியப்பட்ட நாவலன், அருள்எழிலன், அருள்செழியன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என தனது அறிக்கையில் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    அவர்களின் தீர்ப்பில்:

    “நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம்நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம” என்று கூறுகின்றனர்.

    மேலும் தனது தீர்ப்பில் மகஇக இதை புலம்பெயர் தளத்தில் அம்பலப்படுத்திய ராஜாஹரன், மற்றும் ஜெயபாலனை இந்தியாவுக்கு விசாரணைக்கு வருமாறும், இவர்களுடன் ராஜாஹரன் குகனாதனையும் கூட்டி வரவேண்டும் என்று கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தது.

    “எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
    …………..குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.”

    இந்த பெரியண்ணன் தனமான அழைப்புக்கும் தீர்ப்புக்கும் இடையில் “எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.” என்றும் தமது தலையீட்டுக்கான புரட்சிகர காரணத்தை கூறுகிறது மகஇக. இதற்கு ஜெயபாலன் பதிலளிக்கவில்லை.

    ஆனால் ராஜாஹரன்; இந்தக் கடத்தல் நாடகத்தில் நாவலனும் ஏதோ விதத்தில் பங்ககெடுத்துள்ளார் என்றும், அதை நாவலனும், அக்கடத்தலில் பங்கு கொண்டோரும் பகிரங்கமாக அவர்கள் எழுதிய கட்டுரைகளில் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார். அத்துடன் தான் இந்தியா வர முடியாதநிலை தெரிந்திருந்தும் மகஇக இவ்வாறு அழைப்புவிடுவது யதார்த்த சூழ்நிலைக்கு மாறான “தன்னிச்சையான எம் அபிப்பிராயமின்றி வரைமுறை மீறிய தீர்ப்பு. நாங்கள் இதில் பங்குபற்றுவதாக இருந்தால் கூட, நான் அங்கு வரமுடியுமா என்ற எதார்த்தத்தை, இந்த விசாரணை அரசியல் கருத்தில் எடுக்கவில்லை” என ராஜாஹரன் பதிலளித்தார்.

    இந்நிலையில் தற்போது மகஇகவின் இரண்டாவது தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதில் “நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளனர்.

    மகஇகவும், தனிமனிதர்களும் புரட்சி அரசியலும்

    இந்தக் கடத்தல் விவகாரத்தில் நடந்துள்ளதென்னவென்றால், இந்தியாவை சேர்ந்த மக்கள் பேரியக்கமான மகஇக, தனிமனிதர்களான அருள் சகோதரர்கள்; குகனாதனிடமிருந்து பணத்தைப் பெற இந்தியப் போலிசின் உதவியுடனும் நாவலன் மற்றும் அசோக் உதவியுடனும் நடத்திய தர்பாரை நியாயப்படுத்தி அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர்களுக்கு பகிரங்க அங்கீகாரம் கொடுத்ததுடன், இதை அம்பலப்படுத்திய ராஜஹரன் உடன் தமக்கு இனி எது வித உறவுமில்லை என அறிவித்துள்ளனர்.

    நான் ஒரு சாராசரி தமிழ் பேசும் மனிதன் என்ற அளவில் சிலவற்றை விளங்கி கொள்ள முடிந்தாலும், இந்தியாவை சேர்ந்த மக்கள் பேரியக்கமான மகஇக ஏன் சில தனிநபர்களுக்கு வக்காலத்து வாங்கியபடி, தம்முடன் நீண்ட கால உறவில் இருந்த மற்றுமொரு தனிமனிதருடன் பகிரங்கமாக உறவை முறித்து கொள்கிறது என்ற விபரத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.

    ரஜாவாக இருந்தால் என்ன, நாவலனாக இருந்தால் என்ன இந்த தனிமனிதர்கள் ஒரு மாபெரும் இயக்கம் தலையிடும் அளவுக்கு என்ன முக்கியமானவர்களோ??? எனக்கு தெரிந்த தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் தனிமனிதன் ராஜஹரன் எந்தவிதத்திலும் முக்கியமான ஒருவரல்ல. அவரது முக்கியத்துவம் அவர் சார்ந்த அரசியல் நடத்தை, அதன் அடிப்படையிலான தனிமனித வாழ்வு, இவையிரண்டும் இணைந்த கட்சி அல்லது அமைப்பு சார்ந்த செயற்பாடு போன்றவை ஊடாகவே வெளிப்படுகின்றது. இதன் அடிப்படையில் அரசியல் நடத்தை, அதன் அடிப்படையிலான தனிமனித வாழ்வு, இவையிரண்டும் இணைந்த கட்சி அல்லது அமைப்பு சார்ந்த செயற்பாடு போன்றவற்றில் அவர் என்.எல்.எப்.ரி யில் இருந்தகாலத்தில் இருந்து இன்றுவரை இடதுசாரி அரசியல் தர்மத்துக்கு தக்கதாகவே நடந்து வருகிறார்.

    ரஜாவை சேர்ப்பதும், விலகுவதும் மகஇகவின் தெரிவு. ஆனால் ராஜஹரனை தமது அரசியல் உறவில் இருந்து விலக்கி விட்டோம் என மகஇக சொன்னாலும், யதார்த்தத்தில் இதன் அர்த்தம், வேலைத் திட்டத்தில் செயற்படும் பல தோழர்களையும், வளர்ந்து வரும் ஒரு இடதுசாரி முன்னணியையும் அரசியல் ரீதியாக வெட்டி விடும் வேலையையே மகஇக செய்துள்ளது. ஆனால் நாவலனின் செயல்பாட்டை அப்படி கூற முடியாது.

    இலங்கையில் அவர் சார்ந்த அரசியல், சமூக தனிமனித நடத்தையை, விட்டு விட்டு புலத்தில் எவ்வாறு அவர் அரசியல் நடத்தை, அதன் அடிப்படையிலான தனிமனித வாழ்வு, இவையிரண்டும் இணைந்த கட்சி அல்லது அமைப்பு சார்ந்த செயற்பாடு இருந்து வருகிறது என்று பார்த்தால், நான் ஆரம்பத்தில் எழுதியது போல இடுப்பில் சலங்கைகளை கட்டி கூத்தாடுபவன் நிலை போலவே உள்ளது. இதன் அடிப்படையில் பலகாலமாக அவர் மீது ஆதாரத்துடன் கூடிய விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தன்னை ஜனநாயகவாதி என்றும், புதிய அமைப்பை உருவாக்கி இலங்கையில் தேசிய மற்றும் வர்க்க விடுதலையை பெற போராடுவதாகவும், கடந்த இருவருடங்களாக எழுத்து மூலமும்; ரேடியோ, தொலைக்காட்சி மூலமும் தன்னை பிரபலப்படுத்திய நாவலனை பற்றி புலம்பெயர்ந்த மக்களாகிய நாங்களும், எமது இலங்கை உறவுகளும் தெரிந்திருக்க வேண்டுமென்பது தவறான எதிர்பார்ப்பல்ல.

    ஒரு சமூக இயக்கத்துக்கு தனிநபர்கள் தம்மை முக்கியமானவர்கள் என காட்டியபடி சமூக தளத்தில் வலம் வரும்போது அவர்கள் பற்றி மக்களும் சமூகமும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்பது குறைந்த பட்ச ஜனநாயக விதி.

    இதன் அடிப்படையில் தமிழ்அரங்கத்தில், ராஜஹரன் இந்த கடத்தல் விவகாரத்தை வெளி கொணர்ந்தது தவறல்ல.

    ராஜஹரன் பல தடவைகள் இலங்கை அரசியல்தளத்தில் இயங்கியவர்கள் சிலரை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அப்போதெல்லாம் காரசாரமான விமர்சனங்கள், அவதூறுகள் கலந்த தாக்குதல்கள் அவர் மீது நிகழ்த்தப்பட்டது. முக்கியமாக தனிமனிதர்களை அவர் விமர்சிக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது செய்யப்ப்பட்டது. அதற்கு அவர் இன்றைய இலங்கை தமிழ் அரசியல் சூழ்நிலை பலம் வாய்ந்த அமைப்புகள் இல்லாத நிலையில் பணம், பதவி, கல்வி, சமுக அந்தஸ்தை கொண்ட தனிநபர்களாலேயே தீர்மானிக்கப்படுவதால் தனது விமர்சனம் சரியானதென பதில் அளித்தார்.

    ஆனால் இன்று “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று தெரியாமல் தனிமனிதர்களை அவர் விமர்சிக்கிறார் என்று விமர்சனம் செய்யும் மகஇக, அருள்-சகோதரர்கள், நாவலன் போன்ற தனிமனிதர்களை பாதுகாக்க முயற்சிகளை செய்துவருகின்றது. ஆகவே இவர்களின் அரசியல் ரீதியான சமூக செயற்பாடு மகஇக வுக்கு முக்கியமானதென தெரிகின்றது. இதன் அடிப்படையில் ரஜா சொல்வது போன்று இன்றைய இலங்கை தமிழ்அரசியல் சூழ்நிலை பலம்வாய்த்த அமைப்புகள் இல்லாத நிலையில் பணம், பதவி, கல்வி, சமுக அந்தஸ்தை கொண்ட தனிநபர்களாலேயே தீர்மானிக்கப்படுவதால் அவர்கள் மீது விமர்சனம் வைப்பது தவறல்ல.

    மேலும் இன்று “ரயாகரனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அபாண்டமானவை” என்று அருள் எழிலன், அருள் செழியன், சபா நாவலன் ஆகியோர் கூறுகின்றனர். ரயாகரன் எழுப்பியிருப்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் அது தங்களது தொழில், சமூக வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றை பாதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்” என்று மகஇக தனது இரண்டாவது தீர்ப்பு மடலில் குறிப்பிட்டுள்ளது. அப்படியாயின் கடந்த பலவருடங்களாகவும், குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகவும்; ராஜஹரன் வங்கிக்கொள்ளை பணத்தை அபகரித்தார் என்ற அவதூறை பின்னூட்டங்கள் மூலமும், புனைபெயரில் கட்டுரைகள் வழியாகவும்; பலர் எழுதிய கட்டுரைகளுக்கு தகவல் வழங்கியாகவும் சபாநாவலன் செயற்பட்டுள்ளார். இதற்கும் ஆதாரம் உள்ளது. அப்படியானால் ராஜஹரனுடன் பல வருட உறவை கொண்டிருத்த மகஇக ஏன் ராஜஹரன் மீதான நாவலின் அவதூறை தட்டிக் கேட்கவில்லை???

    ஒரு சமூகத்தின் பணத்தை, ஒரு இயக்கத்தின் பெயரால் ஒருவர் அபகரிப்பாரானால் ஒப்பீட்டளவில், ஒருவரை சட்டத்திற்கு வெளியில் கடத்தி பணம் வசூலிப்பது பெரிய தவறல்ல. அப்படி இருக்க அவதூறுக்கு உள்ளாக்கப்பட்ட ராஜாவுடன் மகஇக உறவாடும் போதும், அவ் அவதூறை காவித்திரிந்த நாவலனுடன் நெருக்கமாக இருந்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மகஇக எடுக்கவில்லை. நாவலன், வங்கிப் பணம் சம்பந்தமான ராஜஹரன் மீதான அவதூறை, இணையத்திலும், தனிப்பட்ட முறையிலும் காவிய போது, அன்று பின்னூட்டத்திலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் , ராஜாவுடன் மகஇக உறவாக இருந்ததாலும், தமிழ் அரங்கம் மகஇகவின் வெளியீடுகளை பிரசுரித்தாலும் மகஇக பற்றியும் சில புறம்போக்குகள் பின்னூட்டம் விட்டார்கள் அவதூறு கதைத்தார்கள். அப்போது ஏன் மகஇக விசாரணைக்கு அழைப்பு விடவில்லை!!!! அப்படியானால் ஒரு சமூகத்தின் பணத்தை, ஒரு இயக்கத்தின் பெயரால் ஒருவர் அபகரித்தார் என்ற விடயத்தை பொருட்படுத்தமுடியாத விடயமாகவும், ஒருவரை சட்டத்திற்கு வெளியில் கடத்தி பணம் வசூலிப்பது பாரதூரமான விடயமாகவும் பார்க்கின்றதா மகஇக? இதன் அடிப்படையில் தமது கூட்டாளிகளின் மீது கடத்தல் பழி விழுந்துள்ளபடியால், அவர்களை பாதுகாக்க முயல்கின்றதா மகஇக????

    மேலும் “அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்” எனவும் தாம் தலையிட்ட காரணத்தை மகஇக கூறுகிறது. ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் தமிழ் அரங்கத்தில் வெளிவந்த ஒரு பின்னூட்டத்தினாலும், தேசத்தில் வெளிவந்த மூன்று பின்னூட்டத்தினாலும் இக்கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நபர்களுக்கு வக்காலத்து வாங்குவதென்பது ஒரு சாதாரண அரசியல் தெரியாத மனிதத்தாலேயே நம்ப முடியாதது. ஆகவே இங்கு மகஇகவின் அரசியல், பொருளாதார, பிரச்சார தேவையே, இவர்கள் இக்கடத்தல் நாடகத்தில் தீர்ப்பு கூறி சில தனி நபர்களை தப்பவைக்க முக்கிய காரணியாக உள்ளது. அதாவது ஒரு வகை சந்தர்ப்பவாத அரசியலே இன்று மகஇகவை இந்த ஆள்கடத்தல் விவகாரத்தில் தலையிட வைத்துள்ளது.

    மகஇக வுக்கு புலிகளின் சாவின் முன் ராஜஹரனின் அரசியல் போக்கு சரியாக இருந்தது. அத்துடன் சில தேவைகளுக்கு அவர் தேவைப்பட்டார். ஆனால் இன்று மகஇக வின் இலங்கை சார்ந்த அரசியல்பார்வை மாறியுள்ளது. அதன் அடிப்படையில்; ராஜாவின் நிலைப்பாட்டுடன் மகஇக வின் அரசியல் நிலைப்பாடு முரண்படுகின்றது. அதேவேளை புலியில் அழிவின் பின் அரசியலில் ஸ்டார் அந்தஸ்துடன் இலங்கை அரசியல்மேடைக்கு வந்துள்ள நாவலனின் அரசியல் நிலைப்பாடும், அவரின் “சேவையும்” மகஇக வின் அரசியல் மற்றும் பிரச்சார தேவையை பூர்த்தி செய்வதாகவுள்ளது. இந் நிலையில் அரசியல்விவாதங்கள் இல்லாமல் ராஜஹரனுடன், அவர் சார்ந்த அமைப்பு, மற்றும் தோழர்களுடன், உறவை முறித்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக் கடத்தல் கூத்தை பாவித்துள்ளது மகஇக.

    தனி மனிதர்களின் இயங்கு சக்தி இல்லாமல் சமூகம் இயங்க முடியாது. ஆனால் அந்த தனிமனிதர்களின் சுயநல தேவைகளே சமூகத்தின் தேவையாக மாற்றப்படும் போது பாசிசத்திற்கு வழிபிறக்கின்றது. செத்துப்போன தமிழ் குறும்தேசியத்தின் கல்லறையில் இருந்து இடதுசாரி முகமூடியுடன் இன்று சில தனிமனிதர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய அரசியல் நாடகம் நடத்த தொடங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடுதான் நாவலன், அருள்-சகோதரர்கள், மகஇக கூட்டு. இந்த கூட்டின் அரசியல் சதிக்கு நமது தேசத்தில் மக்கள் விடுதலையில் நம்பிக்கையுள்ள சக்திகள் அடி பணியாது, ஒன்று சேர்ந்து நிற்பதே இன்றைய தேவை.

    thanks: tamilcircle.net

    Reply
  • sakthi
    sakthi

    ம.க.இ.க மருதையனுக்கு ஒரு மனு பெறுநர்:
    மருதையன் அவர்கள்
    மாநிலப் பொதுச் செயலாளர்
    மக்கள் கலை இலக்கியக் கழகம்
    தமிழ்நாடு

    அனுப்புனர்:
    ஷோபாசக்தி
    25, Rue D’ Enghien
    93600 Aulnay Sous Bois
    பிரான்சு.

    அய்யா,

    தற்போது இணையத்தளங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் DAN தொலைக்காட்சி அதிபர் குகநாதன் x அருள் சகோதரர்கள் குறித்த விவாதங்களில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலையீடு செய்து ஒரு பகிரங்க விசாரணையைக் கோரி ‘வினவு’ இணையத்தளத்தில் முன்வைத்த கருத்துகளில் நான்கு புள்ளிகள் மிகமிக முக்கியமானவை என்றே நான் கருதுகிறேன்.

    அந்த நான்கு புள்ளிகள் வருமாறு:

    1. ஒரு குற்றத்தைக் குறித்து இவ்வாறான இணைய விவாதங்கள் வெறும் வதந்திகளையும் அரட்டைகளையும் மட்டுமே உருவாக்குவதற்கு மேலாக வேறெதையும் சாதிக்க வக்கற்றவை.

    2. எனவே ம.க.இ.க இது குறித்து ஒரு பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறது. விசாரணையின் முடிவில் குற்றமிழைத்தவர்கள் மீது ம.க.இ.கவே முன்னின்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும்.

    3. குற்றம் சாட்டியவருக்கே குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

    4. குற்றம் சாட்டியவருக்கே குற்றத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபரை அல்லது நபர்களை பகிரங்க விசாரணைக்கு அழைத்துவர வேண்டிய கடப்பாடு உள்ளது.

    ஒரு சர்ச்சைக்குரிய விவகாரத்தில் நீதியான தீர்வொன்றைக் காண்பதற்கு இதைவிடச் சிறந்த வழிமுறைகள் இருக்க முடியாது என்பதே எனது கருத்தாகவுமுள்ளது. இந்த நான்கு புள்ளிகளிலும் நான் ம.க.இ.கவினரோடு முற்று முழுவதுமாக உடன்படுகிறேன். இந்தியா வருவதற்கான விசா, மற்றும் பாதுகாப்புக் காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால் உங்களது பகிரங்க விசாரணைக்கான அழைப்பு மிக நீதியானதும், குற்றமிழைத்தவர்களை அல்லது அவதூறு செய்பவர்களை அடையாளம் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமான வழியெனவும் கருதுகிறேன்.

    தவிரவும் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றத்தில் அல்லது குற்றமின்மையில் உங்களுக்கு நேரடியான தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்தும் கூட நீங்கள் பிரச்சினையில் தன்னார்வமாகத் தலையீடு செய்து அதற்குத் தீர்வு காண்பதற்கான வழியையும் முன்வைத்ததையிட்டு உங்களை உள்ளபடியே பாராட்டவும் நான் கடமைப்பட்டுள்ளேன். “படாடோபமான வாய்ச்சொற்களை எடுத்து வீசுவது வர்க்கத் தன்மை இழந்த குட்டி முதலாளித்துவப் படிப்பாளிகளின் குணமாகும்” என்பார் லெனின் ( பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் – பக்:294). மாறாக நீங்கள் உறைப்பான சொற்கள் மூலம் ஒரு பகிரங்க விசாரணைக்கு, அதாவது செயலுக்கு அழைத்திருப்பது சிறப்பானதாகும்.

    இப்போது எனது மனுவின் மையக் கருத்திற்கு வருகிறேன்.

    அய்யா! எனது மனு யாரோ யாருக்கோ இழைத்த குற்றங்களிலும் அவதூறுகளிலும் உங்களைத் தன்னார்வமாகத் தலையீடு செய்யக் கோரும் மனுவல்ல. நீங்களே, அதாவது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணையத்தளமான ‘வினவு’ இணையத்தளம் என்மீது சுமத்திய அநீதியான குற்றச்சாட்டுகள் குறித்தே எனது மனுவைத் தங்கள் முன்னே சமர்ப்பிக்கின்றேன்.

    வினவு இணையத்தளம் கடந்த 2010 ஜனவரி மாதம் முதலாக ஏப்ரல் மாதம் வரையிலுமாக என்மீது இரண்டு பாரிய குற்றச்சாட்டுகளைப் பரப்பிக்கொண்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளாவன:

    1. நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன். (பார்க்க: ‘எங்களது எதிர்ப்புக்கு கவிதையென்று பெயர் வை’ என்ற வினவு கட்டுரை).

    2. நான் ‘செங்கடல்’ திரைப்படப் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன். ( ஜனவரியிலிருந்து ஏப்ரல்வரை இது குறித்து என்மீது குற்றம் சுமத்தி வினவுவில் ஆகக் குறைந்தது மூன்று கட்டுரைகளாவது வெளியாகியுள்ளன).

    அய்யா நான் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்று முழுவதுமாக மறுக்கிறேன். இவை வெறும் அவதூறுகள் என்கிறேன். வினவுவில் இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து நான் எனது மறுப்புகளையும் எனது தரப்பையும் எனது வலைப்பக்கத்தில் எழுதினேன் (பார்க்க: ‘உனது கேள்விக்குக் காவாலித்தனம் என்று பெயர் வை’, ‘பழி நாணுவார்’ ஆகிய கட்டுரைகள்). இந்தக் குற்றச்சாட்டுகளை உங்களால் நிரூபிக்க முடியுமா எனக் கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் வினவுக் கோஷ்டியினர் பம்மிவிட்டார்கள் அய்யா.

    நான் ஏப்ரலில் ‘நிரூபிக்க முடியுமா?’ என எழுப்பிய கேள்விக்கு ஆறு மாதங்களாகியும் அவர்களால் பதில் சொல்லவோ, அவர்களது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளை அவர்களால் நிரூபிக்கவோ முடியாமலேயே உள்ளது.

    நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன் என்ற குற்றச்சாட்டு அருள் சகோதரர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விடப் பாரதூரமானது. நான் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்பது குகநாதன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விடவும் பாரதூரமானது.

    நான் ஏற்கனவே எனது மறுப்புகளை விரிவாகவும் பக்கம் பக்கமாகவும் பொயின்ட் ரூ பொயின்டாகவும் எனது வலைப்பக்கத்தில் எழுதியிருந்தபோதும் இம் மனுவிற்காக அந்த மறுப்புகளைச் சுருக்கமாகக் கீழே தர நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.

    1. டக்ளஸ் தேவானந்தாவை நான் என் வாழ்நாளில் நேரில் சந்தித்ததோ, தொலைபேசியில் உரையாடியதோ, மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டதோ கிடையவே கிடையாது. அவரை ஆதரித்து ஒரு சொற்கூட நான் எழுதியதோ, பேசியதோ கிடையாது. ஆனால் அவரைக் கடுமையாக விமர்சித்துப் பல பத்துப் பக்கங்களை நான் எழுதியுள்ளேன் (எ-டு: அல்லைப்பிட்டியின் கதை, எம்.ஜி.ஆர். கொலைவழக்கு). டக்ளஸ் தேவானந்தவின் EPDP கட்சியோடும் எனக்கு எந்தவிதமான அரசியல் உறவுகளோ கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. இவ்வாறு உண்மை இருக்கையில் நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன் என மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் என்மீது குற்றம் சுமத்தியது எந்த வகையில் நியாயமானதும் புரட்சிகரமானதும்? இந்தக் குற்றச்சாட்டை ம.க.இ.கவால் நிரூபிக்க முடியுமா?

    2. ‘செங்கடல்’ திரைப்படத்தில் நான் எழுத்தாளராகப் பணிபுரிவதால், தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்ற வகையில் ‘செங்கடல்’ திரைப்படம் எடுக்கப்பட்டுவருவதாக ஒரு வதந்தியை – கொஸிப்பை வினவு இணையத்தளம் எழுதியது குறித்த பஞ்சாயத்துக்கு நான் இப்போது வரவில்லை. அந்தப் பஞ்சாயத்தைப் படம் வெளியானதும் வைத்துக்கொள்வோம்.

    செங்கடல் திரைப்படத்தின் இயக்குனர் ஒரு கோடி ரூபாயை சமுத்திரக்கனியிடம் பெற்றுக்கொண்டார் என நீங்கள் எழுதிய அப்பட்டமான வதந்தியும் திரைப்படத்தின் இயக்குனர் இராமேசுவரப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார் என நீங்கள் எழுதிய அட்டகாசமான கட்டுக்கதையும் எனது இந்த மனுவோடு நேரடியாகத் தொடர்புடையவையல்ல எனினும், நீங்கள் என்னமாதிரியான கொஸிப் மனநிலையிலிருந்து என்மீது குற்றஞ்சாட்டிய அந்தக் கட்டுரையை வனைந்துள்ளீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே நான் மேலுள்ள வதந்திகளைச் சுட்டிக்காட்ட நேர்ந்தது.

    ஊதியம் கேட்ட தொழிலாளர்களை நான் தாக்கினேன் என்பது வினவுவின் குற்றச்சாட்டு. அவ்வாறு ஊதியப் பிரச்சினை எதுவுமில்லை, படச்சுருள்கள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்பட்டதால் நடந்த தகராறில் நான் என்னோடு பணிபுரிந்த உதவி இயக்குனரைத் தாக்கியதுதான் உண்மையில் நடந்தது என்பதை நான் விளக்கிச் சொல்லி, ஊதியப் பிரச்சினை என உதவி இயக்குனர் சொல்வது பொய் என்று அவரது வாக்குமூலத்திருந்தே நிரூபித்துக்காட்டி (பார்க்க: shobasakthi.com ல் 21.04.2010 அன்று வெளியாகியிருக்கும் கட்டுரை ) “நடந்தது வினவு எழுதியதுபோல பேட்டா – ஊதியப் பிரச்சினைதான் என வினவுவால் நிரூபிக்க முடியுமா?” எனக் கேட்டிருந்தேன். ஆறுமாதங்களாகிவிட்டன, ஏன் அதை வினவுவால் நிரூபிக்க முடியவில்லை?

    பார்த்தீர்களா அய்யா! வினவு எழுத நான் எழுத மறுபடியும் வினவு எழுத மறுபடியும் நான் எழுதப் பிரச்சினைகள் நீண்டு செல்கின்றனவே தவிர பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வு கிட்டமாட்டேனென்கிறது.

    இந்த இடத்தில்தான் “இவ்வாறான இணைய விவாதங்களால் வதந்திகளையும் அரட்டைகளையும் தவிர வேறெவெற்றையும் சாதிக்க முடியாது, ஒரு பகிரங்க விசாரணையே இதற்கான தீர்வு” என்ற உங்களது கருத்து வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

    எனவே நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன் மற்றும் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்ற என்மீதான வினவுவின் இரு குற்றச்சாட்டுகள் குறித்தும் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்து நடத்த வேண்டுமென நான் பணிவுடன் மக்கள் கலை இலக்கியக் கழகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். அதாவது குகநாதன் – அருள் சகோதரர்கள் விவகாரத்தில் நீங்கள் ஏற்பாடு செய்யத் தயாராகயிருப்பதாகச் சொன்ன அதே மாதிரியான ஒரு பகிரங்க விசாரணையை எனது – வினவு விவகாரத்திலும் நீங்கள் கருணைகூர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

    குற்றம் சாட்டியவரே குற்றத்தை நிரூபிக்கக் கடமைப்பாடு உள்ளவர் என்ற உங்களது கூற்றுப்படி நீங்களே குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அந்தப் பகிரங்க விசாரணைக்கு நான் சமூகமளிப்பேன் என உறுதி கூறுகிறேன். அதேபோன்று ஊதியப் பிரச்சினையால் என்னால் தாக்கப்பட்டாதாகக் கூறப்படுபவர்களையும் நீங்களே அழைத்து வரவேண்டியிருக்கும். ஏனெனில் குற்றம் சாட்டுபவருக்கே குற்றத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபர்களை அழைத்துவர வேண்டிய கடப்பாடு உள்ளதென நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

    என்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ம.க.இ.கவினரே என்மீது பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். நான் அதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என இத்தால் உறுதி கூறுகின்றேன்.

    வினவு இணையத்தின் பின்னூட்டப் பகுதியில் மணி என்ற தோழர் “நிரூபிக்கும்வரை அது குற்றச்சாட்டுத்தான், நிரூபிக்க முடியாவிட்டால் அது அவதூறு” என்றொரு அருமையான சொலவடையைச் சொல்லியிருந்தார். என்மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத பட்சத்தில் அவை வெறும் அவதூறுகளே என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    குகநாதன் – அருள் சகோதரர்கள் பிரச்சினையில் அவதூறுக்கு உள்ளானவர்களது தொழில், பொது வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். நான் மட்டும் என்ன ஷங்கரின் ரோபாவா? எனக்கும் ம.க.இ.கவினரின் அவதூறுகளால் – குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவோடு முடிச்சுப்போடும் அவதூறு – இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

    முன்பு ஒருமுறை ‘நிதர்சனம்’ இணையத்தளத்தில் நான் ராஜஸ்தான் சென்று வரதராஜப்பெருமாளோடு சதியாலோசனை செய்ததாகப் பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இன்னொரு புலிகள் ஆதரவு இணையம் எனது நிழற்படத்தை வெளியிட்டு என் கையில் இரத்தம் வடியும் ஒரு பெரிய கத்தியையும் கிராபிக்ஸ் செய்து ஒட்டவைத்து என்னைக் கருணாவின் அடியாள் எனச் செய்தி வெளியிட்டது. அண்மையில் இலங்கையின் புகழ்பெற்ற சிங்கள மொழித் தினசரியான ‘திவயின’ பத்திரிகை என்னை விடுதலைப் புலிகளின் சூத்திரதாரிகளில் ஒருவர் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் என்றும் எழுதியது. இவைகளை ஒத்த கேவலமான அவதூறுதான் ம.க.இ.க. என்மீது சுமத்திய டக்ளஸ் தேவானந்தாவிடம் நான் பணம் பெறுகிறேன் என்ற குற்றச்சாட்டு.

    செங்கடல் படப்பிடிப்புத் தகராறில் என்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனரை நான் தாக்கினேன் என்பதை நான் எனது வலைப்பக்கத்திலும் ஒப்புக்கொண்டுள்ளேன். பொலிஸ் விசாரணையிலும் ஒப்புக்கொண்டேன். நீதிமன்ற விசாரணையிலும் ஒப்புக்கொண்டேன். அதற்காக நான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டேன். படப்பிடிப்புக் கருவியை வாடகைக்குக் கொடுத்திருந்த முதலாளியின் உத்தரவின்பேரில் படச்சுருள்கள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்பட்டதால் நடந்த தகராறே அது. வினவு எழுதியது போல அங்கே பேட்டா – ஊதியப் பிரச்சினைகள் ஏதுமில்லை என்பதே எனது தரப்பு. அதுவே உண்மையும் கூட. இப்போது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இருந்தாலும் பகிரங்க விசாரணையின் முடிவில் நான் சொல்வதே உண்மை என அவர்கள் தெரிந்துகொள்வார்கள். அதற்காகவே நான் பகிரங்க விசாரணையைக் கோருகிறேன்.

    அய்யா! நீங்கள் என் மீதான வினவுவின் குற்றச்சாட்டுகள் குறித்து இவ்வாறான ஒரு பகிரங்க விசாரணைக்கு ஏற்பாடு செய்யும் பட்சத்தில்தான் குகநாதன் – அருள் சகோதரர்கள் விடயத்தில் பகிரங்க விசாரணையைக் கோரும் உங்களது நிலைப்பாடு நியாயம் எனக் கொள்ளப்படும். அதேபோல ‘குற்றம் சுமத்தியவருக்கே குற்றத்தை நிரூபிக்கும் கடப்பாடு உள்ளது’ என்ற உங்களது வார்த்தையையும் நீங்கள் கோழைத்தனமாக வாபஸ் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஆளுக்கொரு நீதி சொல்வது ஆளும் வர்க்கத்தினருக்குச் சாதாரணம். ஆனால் புரட்சியாளர்களிற்கோ அது அவமானம்.

    எனவே எனது இந்த மனுமீது நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன். எனக்கு இந்தியா வருவதற்கு விசா, பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏதுமில்லை. எனினும் பயண ஏற்பாடுகளைச் செய்யவும் விமானச் சீட்டுக்கான பணத்தைத் திரட்டவும் எனக்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனவே பகிரங்க விசாரணை நாளுக்கு இரண்டு மாதங்களிற்கு முன்பாகவே நீங்கள் எனக்கு இது குறித்து உறுதிப்படுத்துவது நலம்.

    அய்யா! மறுக்கப்பட்ட நீதியிலும் தாமதிக்கப்பட்ட நீதி ஒன்றும் மோசமானதல்ல. பகிரங்க விசாரணைக்கான உங்களது அழைப்புக்காக நான் காத்திருக்கிறேன்.
    thanks shobasakthi.com

    Reply