தமிழின் ஆங்கில மயம்


தமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா? அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா? ஆங்கில வார்த்தைகள் கிரமமாக தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன.

“மற்றர்” “சஸ்பென்ட்”, “கட்”, “ரெடி”, “நைட்”, “பவர்”, இச்சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் (இந்தியாவில்) அதிகளவுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வமற்ற உரையாடல்களில் காணப்படும் தமிழ்மொழியின் ஆங்கில மயமாக்கலானது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக உருவாகி வந்திருக்கிறது. மாநில அரசாங்கமானது பல நூறு கோடி ரூபாவை உலக செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக செலவழித்துள்ளது. செம்மொழித் தமிழ் குறித்து அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சகல பேச்சாளர்களுமே தொண்டை வரளும் அளவுக்குப் பேசினார்கள். தமிழின் மேன்மைத்தன்மையை அவர்கள் எடுத்துரைத்தனர். ஆனால், எழுத்திலோ வேறுபட்ட தன்மை காணப்படுகிறது. தமிழானது ஆங்கிலச் சொற்களுடன் இணைந்து எழுதப்படுவது தொடர்கிறது.

அத்துடன், மொழியானது ஆக்ரோஷமான விதத்தில் ஏனைய வழிகளிலும் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு முன்னர் சென்னைக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தலொன்றை விடுத்திருந்தது. சகல வர்த்தக நிறுவனங்களும் பெயர்ப்பலகையை தமிழில் எழுத வேண்டுமென்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தந்திரோபாயம் தமிழ்மொழியைப் பொறுத்தவரை வெற்றிபெற்றதாக காணவில்லை. தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கில மொழியின் செல்வாக்குக் காணப்படுவதாக சில நிருபர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாடல்கள், உரையாடல்களில் ஆங்கில மொழி தாராளமாகப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆனால், வாசகர்களுடன் இதன் மூலம் சுலபமாக தொடர்புகொள்ள முடியுமென சிலர் நியாயப்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகையொன்றின் நிருபரொருவர் அதிரடி,சஸ்பென்ட்,ஆலோசனை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். நாங்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லர். தூய்மையான மொழியை பயன்படுத்துவது பத்திரிகை ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர் கூறுகிறார். தினம் என்பதற்குப் பதிலாக டெய்லி என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு மற்றொரு நிருபர் முன்னுரிமை கொடுக்கிறார்.அது அவரின் பத்திரிகையை குறிப்பதாக அமைகிறது. கிராமவாசிகள் கூட சஸ்பென்ட் என்ற வார்த்தையை இலகுவாக புரிந்துகொள்வார்கள் என்று அவர் கூறுகிறார். தற்காலிக பணி நீக்கம் என்ற இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது கஷ்டம் என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், சகலருமே பத்திரிகை ஆசிரியர்களே இந்த விடயத்தை சீரமைக்க முடியுமென்ற ஏகோபித்த அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். கால ஓட்டத்தில் தமிழ்ச் சொற்களை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அறிமுகம் செய்ய முடியும் என அதாவது அடிக்கடி அச்சொற்களைப் பயன்படுத்துவதால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் மாற்றியமைக்க முடியுமென அந்த அபிப்பிராயம் காணப்படுகிறது.

தியாகராஜர் கலைக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் கூறுகையில்;

சரியான தமிழ்ச்சொற்கள் இல்லாவிடில் இது சரியான விடயம். (ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துதல்) ஆனால், கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது தமிழை கேலிக்கூத்தாக்கும் விடயமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜக்கிஷான் தமிழ்பேசுகிறார். (ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழ்வடிவம்) தமிழ் நடிகர் சூர்யா தமிழ்ப் படங்களில் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவர் குறிப்பிட்டதாக எக்ஸ்பிரஸ் புஷ் தெரிவித்திருக்கிறது.

 நன்றி தினக்குரல்

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து
 1. நந்தா on September 30, 2010 7:19 am

  //சரியான தமிழ்ச்சொற்கள் இல்லாவிடில் இது சரியான விடயம். (ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துதல்)/

  இந்த வரிகளே உண்மையில் பின்பற்ற வேண்டியவை ஆகும்!

  ஐஸ் கிரீம் என்பதனை “குளிர் களி” என்று எழுதினால் எப்படி எல்லோருக்கும் புரியும்?

  ஆனால் “கொஞ்சம் திங்க்” பண்ணுங்க என்பதுதான் அபத்தம்!


 2. THAMILMARAN on September 30, 2010 11:07 am

  ஐஸ் கிரீம் தமிழ் உணவு அல்ல அதை அப்படியே சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால் பணியை டூட்டி என்பது சரியா? தமிழை வாழ்வித்துக் கொண்டிருப்பது யார் என்ற வாதங்களை விடுத்து தமிழை நீங்களாவது பேசி வாழ வையுங்கள். நன்றி


 3. மாயா on September 30, 2010 11:57 am

  சும்மா பகிடி விடாதேங்கோ? தமிழை திணிக்கப் போய் குமட்டிய அளவு , வெறுக்க வைத்த அளவு கொடுமை வேறெதுவும் இல்லை. உந்துருளி, தொடருந்து …….. இப்படியெல்லாம் திணிக்கப் போய், தலைதான் பலருக்கு சுத்தியது. தெரிந்த தமிழும் வெறுத்துப் போனது. ஒவ்வொரு பொருளையும் கண்டு பிடித்தவன் பெயரில் அந்த பொருளுக்கு பெயர் கொடுக்கப்பட்டிருந்தது, இது மேலத்தேய மக்கள் அதைக் கண்டு பிடித்தவருக்கு வழங்கும் கௌரவம். நம் தமிழரோ கண்டு பிடித்தவனையே மறக்கடிக்க , அதை தமிழில் மொழி பெயர்த்து திணித்ததெல்லாம் கொடுமையிலும் கொடுமை.


 4. பல்லி on September 30, 2010 11:58 am

  எமக்கு தமிழ் மிக முக்கியமாக தேவைபடும்; (எமது மொழியென்பதுக்கு அப்பால்) காரணம் நாம் இன்று பல நாடுகளில் இருக்கிறோம் பல பாஸை பேசுகிறோம்; இதில் குழந்தைகள் அந்த நாட்டுமொழி மட்டும் பேசுவதை பல பெற்றோர் பெருமையாக பார்க்கின்றனர், சித்தப்பாவை அங்கிள் என்றும் பெரியம்மாவை அன்ரி எனவும் ஆக ஆண்பாலாயின் அங்கிள் பெண்பாலாயின் அன்ரி என உறவுமுறைகளையே சுருக்கி விட்டனர்; இதுக்கு முக்கிய காரணம் பெற்றோரே, எமது அப்பா அம்மாவுடன் கூட புலம்பெயர் தேச மக்கள் பலர் நந்தா சொன்னது போல் அவசியமில்லாமல் ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழியை கலப்பதனால் நாம் சொல்லுவது அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை, உதாரனத்துக்கு இதேதேசத்தில் அவரவர் வாழும் நாட்டு மொழியில் அவரவர் எழுதினால் யாருக்கு என்னதான் புரியும்; மொழி பல தெரிந்திருப்பது பெருமைதான், ஆனால் தமிழ்மொழி மறப்பது மடமையல்லவா?? ஆரம்பத்துக்கே வருகிறேன் ஏன் தமிழ்மொழி அவசியமெனில் தமிழ்மொழி தாய் மொழி மாறி பொது மொழியாக வலம்வரும் சூழல் உருவாகி விட்டது, அனைவரும் தமிழ்மொழி தெரிந்திருந்தால் நாடு விட்டு நாடு போகும் போது கூட பேச வாய்ப்பாக இருக்கும்; இது தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத பின்னோட்டமாயினும் இந்த தலைப்பின் தமிழ் ஆங்கில மயம் மாறி ஆங்கிலத்தில் இடையிடையே தமிழ் உருவாகும் நிலை (ஆங்கிலத்தில் தமிழ் மயம்) என்பது தவிர்க்க முடியாது; இடையில் வந்த நாமே தமிழை தவற விடும்போது இங்கே பிறப்பவர்கள் தமிழை தாங்குவார்களா?? ஆகவே தாய் மொழியை சுவாசிப்போம்: வாழும் மொழியை நேசிப்போம்;


 5. BC on September 30, 2010 2:25 pm

  தமிழ்மாறன் கூறுவது சரியானதாகும் “ஐஸ் கிரீம் தமிழ் உணவு அல்ல அதை அப்படியே சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால் பணியை டூட்டி என்பது சரியா”. தமிழ்நாடு தான் இதில் மோசமான நிலையில் உள்ளது.
  //தமிழ் நடிகர் சூர்யா தமிழ்ப் படங்களில் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவர் குறிப்பிட்டதாக எக்ஸ்பிரஸ் புஷ் தெரிவித்திருக்கிறது. //
  சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் என்ற படம் பார்த்தேன். ஆங்கிலம் தெரிந்தால் தான் அந்த படம் பார்க்கலாம் என்ற அளவுக்கு ஆங்கில மயம். அதற்க்கு காரணம் சூர்யா அல்ல படத்தின் இயக்குனர் தான். இந்த இயக்குனரை கொண்டு தான் எழுதிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல் காட்சியை கருணாநிதி இயக்குவித்ததார்.தமிமீழம் தேவை என்று வேண்டும் என்று இலங்கையர் சிலர் தமிழ் இணையதளத்தில் ஆங்கிலத்தில் தட்டுவதும் நல்ல கொமடி.


 6. Kusumpu on September 30, 2010 9:54 pm

  தமிழ்தெரியா பிள்ளைகளின் பெற்றோர் தமிழீழத்துக்காகப் போராடுகிறார்கள். தமிழ்தெரியா தமிழ்ஈழம்: தமிழ்தெரியா தமிழ்படம். நடிக்கத்தெரியாத நடிகர்கள். தமிழ்தெரியாபாடகர்கள் இதுதானையா ஸ்ரையில். எதிர் எவருக்குத் தேற்சியில்லையோ அதில் பட்டம் வாங்குவதுதானே பெருமை. கரசின் தமிழ் லெப்ட சைறைட் தமிழ் எல்லா மொழிகளும் செம்மொழியாம் தமிழ்மொழிக்குள் அடக்கம். சிங்கப்பூர் இங்கிலத்தை (இங்கிலிசை) சிங்கிலிஸ் என்கிறார்கள். மதுரைத்தமிழ் மாந்தரத்தமிழ்; கோவைத்தமிழ் கொஞ்சு தமிழ் இலங்கைத்தமிழ் இலக்கியத்தமிழ் சென்னைத்தமிழ் கொன்னைத்தமிழா?


 7. மாயா on September 30, 2010 10:31 pm

  // தமிமீழம் தேவை என்று வேண்டும் , இலங்கையர் சிலர் தமிழ் இணையதளத்தில் ஆங்கிலத்தில் தட்டுவதும் நல்ல கொமடி. – BC //
  அப்படி போடுங்க. இதுதான் ….. அது.


 8. லோகநாதன் on October 3, 2010 11:24 pm

  தமிழிலே ஆங்கிலச் சொற்கள் மட்டும் கலக்கவில்லை. அதன் தாக்கமும் அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டிலும் ஏனைய தமிழர் வாழும் நாடுகளிலும் அண்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குப் பதிலாக மற்றும் என்ற சொல்லை உபயோகிக்கிறார்கள் தமிழிலே உம்மைத் தொகை எதற்கு இருக்கிறது?
  அவரும் இவரும் என்பதை அவரும் மற்றும் இவரும் என்று எழுதுவது எவ்வளவு மடைமை?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு