உரிமைக்கு அங்கீகாரம் தமிழரின் உரிமையை நிராகரிப்பது எப்படி? – கேள்வி எழுப்புகிறார் ஹக்கீம்


hakeem_.jpgபலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கத்தினால் எப்படி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை நிராகரிக்க முடியுமெனக் கேள்வியெழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதன் போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டுமென தமிழ், முஸ்லிம் மக்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டது. இதனால், சில இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலாத்காரத்துக்கு அடிபணிந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டிவந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மீது ஒரு போதும் பலாத்காரமாக நாட்டுப் பற்றை திணிக்கக் கூடாது. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் அவர்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசினால் தமிழ் மக்களின் சுய ஆட்சிக் கோரிக்கையை, உரிமையை எவ்வாறு நிராகரிக்க முடியும்?

உங்கள் கருத்து
 1. Logan on January 8, 2009 12:51 pm

  ஹக்கீம் சார்!
  பெண்ணுருமை தொடர்பாக பேசக் கூப்பிட்டால் பாராட்டில் மகுடம் பதித்து வந்துவிடலாம். மனைவிக்கோ நம்மால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ நாம் பேசியது போல நடக்கமுடிகிறதா? அணசும் அது போலத் தான்!

  வெற்றிக் கொண்டாட்டம் தெற்குக்கும் வடக்குக்கும் இடையானதல்ல / அல்லது வேறொரு நாட்டை வென்றதுமல்ல தமிழ் / இஸ்லாம்/ சிங்கள ஒட்டுமொத்த இலங்கையைப் பிடித்த சனியனின் அழிவில் வெற்றி அதிலஇ கொண்டாட வேண்டியவர்கள் நாம் இருவருமே!

  இதில் தமிழ் மக்களின் சுயமாpயாதைக்குப் பங்கம் ஏற்படுவதாக ஒரு பாங்காகக் கூறுவதன் கிண்டல் கலந்த அனுதாபம் இருக்கிறதே. இது கடந்தகாலத்தின் உங்கள் அரசியல் முத்திரை!

  சிங்கள அரசியல் வாதிகள் செய்யும் இனவாத செயல்களையே நீங்களும் திரும்பச் செய்ய விளைகிறீர்களே தவிர!

  நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்! அவரவர் இலங்கைக்கு வந்தது காலையா மதியமா அந்தியா என்ற ஆய்வுகள் அவசியமல்ல நாங்கள் இலங்கையின் இறைமைக்குட்பட்ட குடிமக்கள் . எம்மை எந்த நாட்டு சட்டமும் வெளியேற்ற முடியாது என்று சொல்லிவிட்டு பேசாமலிருங்கள்!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு